வியாழன், 27 பிப்ரவரி, 2014

ஆவி எழுதிய கவிதை



ஆவி எழுதிய கவிதையா? என்னது வெங்கட், இப்படி தலைப்பில் பயமுறுத்தறீங்களே? ஏற்கனவே கொஞ்ச நாள் முன்னாடி தான் “தொடர்ந்து வந்த பேய்அப்படின்னு ஒரு பதிவு எழுதி எங்களை பீதியாக்கிட்டீங்க. இப்ப ஆவி கவிதை எழுதுச்சுன்னு சொல்றீங்க. தமிழ் கூறும் நல்லுலகில் கவிஞர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா.  ஆவி வேற கவிதை எழுதி இருப்பதாச் சொல்றீங்க! நாங்கல்லாம் நல்லா இருக்கறது உங்களுக்குப் பிடிக்கலையா!என்று சிலர் பயப்படுவது தில்லி வரை தெரிகிறது.



அட பயப்படாதீங்க நண்பர்களே! நம்ம சக பதிவர் கோவை ஆனந்த விஜயராகவன் எனும் கோவை ஆவி எழுதி வெளியிட்டு இருக்கும் “ஆவிப்பா பற்றி தான் இன்றைக்குப் பார்க்கப் போகிறோம். சமீபத்தில் தமிழகம் வந்திருந்தேன். சில புத்தகங்களை வாங்கி வைத்திருக்க நம்ம வாத்யார் பால கணேஷிடம் சொன்னேன். அதில் “ஆவிப்பாவும் ஒன்று. தில்லி திரும்பும் முன் சென்னையில் வாத்யாரைச் சந்தித்து அந்த புத்தகங்களை வாங்கிக் கொண்டேன்.

அட்டையையும் சேர்த்து மொத்தம் 68 பக்கங்கள் – அதில் 11 பக்கங்கள் தவிர்த்து மற்ற 57 பக்கங்களில் நஸ்ரியா நல்லாட்சி புரிகிறார் – இந்த ஆவிப்பாவிற்கும் நஸ்ரியாவிற்கும் என்ன தொடர்பு என சிந்தித்து அட்டையைப் புரட்டினால், “புலி மார்க் சீயக்காய்த் தூளுக்கும் புலிக்கும் எவ்வளவு தொடர்போ அவ்வளவே தொடர்பு நஸ்ரியாவுக்கும் இத்தொகுப்பிலுள்ள கவிதைகளுக்கும்! நஸ்ரியா ஒரு மாடல் மட்டுமே!என்று எழுதி இருக்கிறார்.



மஞ்சுபாஷிணி அவர்களின் அணிந்துரை மிகச் சிறப்பாக ஆவியின் பல கவிதைகளைப் பற்றிச் சொல்கிறது. அவரது அணிந்துரை படிக்கும்போதே பக்கங்களைப் புரட்டி அவர் சிலாகித்த கவிதைகளைப் படிக்கத் தோன்றியது. ஆனாலும் ஒரு சிறப்பான அணிந்துரையை முழுதும் படித்தபின் கவிதைகளைப் படித்தால் இன்னமும் கவிதைகளில் முழுதாகத் திளைக்கலாம் என்று தோன்றியது.

பல கவிதைகள் படிக்கும்போதே முகத்தில் ஒரு புன்சிரிப்பை வரவழைத்தது. உதாரணத்திற்கு ஒன்று கீழே....

கடவுளும் காதலியும்
ஒரு சேர என் முன்னே...
லெட்ஸ் கோ! என்றேன் அவளிடம்
கொஞ்சம் வெயிட் ப்ளீஸ்...
என்றேன் அவரிடம்!

அதானே காதலியும் கடவுளும் ஒன்றாக வந்தால் காதலிக்குத் தானே முதலிடம்!

இந்தப் பெண்கள் செல்பேசியில் பேசும்போது கேட்டதுண்டா நீங்கள்? வெகு அருகில் நின்றால் கூட அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்காது. பல சமயங்களில் அலைபேசியில் யாரிடம் பேசுகிறார்களோ அவருக்காவது கேட்குமா எனத் தோன்றும் எனக்கு [நீங்க ஏன் அடுத்தவங்க பேசும்போது கேட்கப் போனீங்க? இருந்தாலும் ராஜா காது கழுதைக் காது பகுதிக்காக இப்படி இருக்ககூடாது என்று சிலர் சொல்வது புரிகிறது!] இங்கே பாருங்களேன் அதை ஆவி அழகிய கவிதையாக எழுதி இருக்கிறார்.

அம்மாவுக்கு பயந்து,
அப்பாவுக்கு தெரியாமல்,
அண்ணனிடம் சண்டையிட்டு,
காற்றுக்கும் எனக்கும் மட்டுமே
கேட்கும் வண்ணம்
மெல்லிய தொனியில்
நீ பேசும் பேச்சுகளை
திருடிக்கொள்கிறதே
இந்த செல்பேசி!

ஒரு படம் – பக்கம் பதினேழு என நினைக்கிறேன் – ஒரு வாகனம் நின்று கொண்டிருக்க, மாடல் நஸ்ரியா காத்திருக்கிறார். அப்பக்கத்தில் இருக்கும் கவிதை.....

கண்ணே,
கலங்காது காத்திரு...
கண்ணிமைக்கும் நேரத்தில்
காற்றாய் வந்து
கவர்வேன் உன்னை...!
காதலொன்றும்
கலிங்கத்துப் பரணியல்லவே?
கஷ்டப்பட்டு சாவதற்கு?

இப்படி பல கவிதைகள் மனதைத் தொட்டன.  இருக்கும் கவிதைகள் அத்தனையும் பிடித்தது என்று இங்கேயே எழுதி விட்டால் நீங்கள் வாங்கிப் படிக்க வேண்டாமா? அதனால் நான் ரசித்த இன்னுமோர் கவிதையோடு இங்கே நிறுத்துகிறேன்....



திரிகூடராசப்ப கவிராயனும்
வாயடைத்துப் போவான்....
என் குற்றாலமே நீ
துள்ளியோடி வரும்போது!



இப்படி இருக்கும் அத்தனை கவிதைகளுமே மிக அருமையாக வந்திருக்கின்றன. ஒரு கவிதையில் மட்டும் காதலை மீறி காமம் [மழையில் நனைவது பிடிக்குமென்றாய் எனக்கும்தான்.... நீ நனைவது] இருப்பதாய்த் தோன்றியது!

ஒவ்வொரு பக்கத்தினையும் வண்ணமயமாகவே அச்சடித்து படிப்பவர்களின் கைகளில் ஒரு புகைப்படக் கோப்பாக தவழ வைத்திருக்கிறார் கோவை ஆவி. மிகச் சிறப்பான நூலழகு செய்திருப்பவர் நமது பதிவுலக வாத்யாரான பால கணேஷ். வெளியிட்டோர்கள் விவரம் கீழே:



இந்திரா ப்ரியதர்ஷினி பப்ளிகேஷன்ஸ்,
ஆச்சிப்பட்டி, பொள்ளாச்சி.
தொடர்பு எண்: 89033 30055.
பக்கங்கள்: 64
விலை: ரூபாய் 100 மட்டுமே.

சமர்ப்பணம்

“என் முதலாம்....
இரண்டாம்....
மற்றும்
எல்லாக் காதலிகளுக்கும்

என்று அச்சடித்த பக்கத்தில்

“புன்னகைகளுடன்,
கோவை ஆவி

என்று கையெழுத்திட்டு கொடுத்த நூலாசிரியர் கோவை ஆவி அவர்களுக்கு நன்றி [இப்பல்லாம் அலைபேசி இருக்கோ இல்லையோ இவர் கையில் நிச்சயம் பேனா இருக்கிறது!]


கோவை ஆவி

கவிதை பிடித்தவர்களுக்கு மட்டுமல்ல, பிடிக்காதவர்களுக்கும் கூட கோவை ஆவியின் “ஆவிப்பாபிடிக்கும்.  ஆவிப்பாவுடன் நிறுத்திவிடாது மேலும் பல சிறப்பான புத்தகங்களை தொடர்ந்து வெளியிட நண்பர் கோவை ஆவி அவர்களுக்கு வாழ்த்துகள்.

மீண்டும் வேறொரு வாசிப்பனுபவத்துடன் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

54 கருத்துகள்:

  1. பதிவில் சொல்லப்பட்ட (ஜாலியான) வரிகளும் சூப்பர்...

    இனிய நண்பர் ஆவிக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி DD.. வாழ்த்துகளுக்கும் , பதிவைப் பற்றி அறிவித்ததற்கும்.. :)

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. முக நூலில் அவர் கவிதைகள் பலவற்றை வாசித்திருக்கிறேன்... இன்னம் புத்தகமாய்ப் படிக்கவில்லை... ஆவிக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. மேலும் பல சிறப்பான புத்தகங்களை தொடர்ந்து வெளியிட
    கோவை ஆவி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் அம்மா.. உங்க ஆசிர்வாதங்களுடன்..

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  4. வெங்கட் ஸார்.. பிரமாதமான இன்ட்ரோவுக்கு நன்றி.. (இதுல போடத்தான் போட்டோ எடுக்கறீங்கன்னு சொல்லியிருந்தா கொஞ்சம் மேக்அப் எல்லாம் போட்டிருப்பேனே ;-) )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னா மேக்கப் போட்டாலும் ஆவி ஆவி தாம்லே!

      நீக்கு
    2. ரசித்த விஷயங்களை படிக்கிறவர்களும் ரசித்து, புத்தகம் வாங்கணுமேன்னு நினைக்கிற அளவுக்கு அழகாச் சொல்லியிருக்கீங்க வெங்கட். புத்தகத்தின் வடிவமைப்பை நீங்கள் உட்பட பலர் பாராட்டுவதைக் கேட்கும் போது, என் புத்தகம் வெளியாகி விற்பனையானதைவிட அதிக மகிழ்ச்சி அடைகிறேன் நான். மனம் நிறைந்த நன்றி!

      நீக்கு
    3. //என் புத்தகம் வெளியாகி விற்பனையானதைவிட அதிக மகிழ்ச்சி அடைகிறேன்// இப்படி ஒரு குருஜி கிடைக்க கொடுத்து வெச்சிருக்கோனும்...

      நீக்கு
    4. ஆவி சார், உங்களை என்ன பொண்ணு பார்க்கிறதுக்காகவா அவர் போட்டோ எடுத்தாரு???

      நீக்கு
    5. //இப்படி ஒரு குருஜி கிடைக்க கொடுத்து வெச்சிருக்கோனும்...// நிச்சயமா.. :)

      நீக்கு
    6. படம் எடுக்கும்போது புத்தகம் பற்றி எழுதவே யோசிக்கவில்லை! :))))

      இருந்தாலும் அழகாய்த் தான் இருக்கீங்க!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

      நீக்கு
    7. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.

      உங்கள் நூலழகு மிகச் சிறப்பாக இருந்ததில் எனக்கும் மகிழ்ச்சி....

      நீக்கு
    8. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கலாகுமரன்.

      நீக்கு
    9. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  5. ஆவிக்குப் பாராட்டுகள். கணேஷுக்குப் பாராட்டுகள். உங்களுக்கும் பாராட்டுகள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம் ஸார்..

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு

  6. ஆவிப்பாவின் கவிதைகள் பற்றிய தங்களின் கருத்துக்கள் அந்த நூலை வாங்கிப் படிக்கத் தூண்டுகிறது. நல்ல திறனாய்வு. வாழ்த்துக்கள்!

    //“புலி மார்க் சீயக்காய்த் தூளுக்கும் புலிக்கும் எவ்வளவு தொடர்போ அவ்வளவே தொடர்பு நஸ்ரியாவுக்கும் இத்தொகுப்பிலுள்ள கவிதைகளுக்கும்!//
    என்ற உங்களின் கருத்தில் வழக்கம்போல் குறும்பு கொப்பளிக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா....

      அந்த வரிகளுக்குச் சொந்தக் காரர் - கோவை ஆவியே தான்!

      நீக்கு
  7. சகோதரர் ஆவிக்கு வாழ்த்துக்கள் அவரின் ஆக்கத்தைப் பாராட்டிப்
    பதிவிட்ட தங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

      நீக்கு
  8. ஆவி சாருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  9. கவிதையில் காதல் பற்றி எழுதுவது அதை சிலாகிப்பது எல்லாம் வாழ்த்தப்பட வேண்டும் வாழ்த்துக்கள். ஆவிக்கும் பாலகணேஷுக்கும் உங்களுக்கும். புத்தகத்தின் பாதி இடத்தை மஞ்சுபாஷிணியின் மதிப்புரை ஆக்ரமித்திருக்குமே.....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹா.. அவங்க எழுதிக் கொடுத்த போதே சொன்னாங்க, இப்படியெல்லாம் விமர்சனம் பண்ணுவாங்கன்னு.. :) :)

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்....

      நீக்கு
  10. ஆவியின் சமர்ப்பணம்.... சூப்பர்.

    படிக்கத் துர்ண்டும் விதத்தில் அருமையான விமர்சனம்.
    வாழ்த்துக்கள் நாகராஜ் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  11. ரா.ஈ. பத்மநாபன்27 பிப்ரவரி, 2014 அன்று 5:04 PM

    அருமையான யதார்த்தக் கவிதைகள். அழகான கவிதைப் புத்தக அறிமுகம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிங்க பத்மநாபன்..

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரா. ஈ. பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  12. Kadvulum Kadhaliyum ... matrum Thirikoodarasappar kutralam... kavidhaigal yenakku pidiththirundhadhu. vazhththukkal asiriyarukku.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்துப் படித்ததற்கு நன்றிகள் பல.. :)

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  13. ஆவிக்கு வாழ்த்துக்கள். சுட்டிக் காட்டிய கவிதைகள் சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  14. ஆஹா! ஜாமாய்ச்சுட்டீங்க ஒரு அழகான "ஆவிப்பா" விமர்சனம் எழுதி! ரொம்ப நல்ல எழுதிருக்கீங்க நண்பரே! கற்ற்குக்கொள்ள வேண்டும் நிறைய!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்றுக்கொள்ள வேண்டும் நிறைய....

      ஆமாம் நண்பரே.... நான் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் உலகளவு.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்.

      நீக்கு
  15. ஆனந்த் எழுதிய ஜில்லென்ற காதல் கவிதைகளை ரசித்து வாசித்தேன். ஒவ்வொன்றுமே ஆனந்தின் கைவண்ணத்திலும் நஸ்ரியாவின் அழகுச்சிரிப்பிலும் கொள்ளைக்கொண்டதுப்பா..

    ரொம்ப அருமையா ரசிச்சு எழுதி இருக்கீங்கப்பா வெங்கட்.

    அன்பு நன்றிகள்பா...

    த.ம.9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி.

      நீக்கு
  16. இந்த நூலை நஸ்ரியாவுக்கு சமர்ப்பணம் செய்து இருப்பார் போலிருக்கிறதே !
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  17. விமர்சனம் அருமை நண்பரே வாழ்த்துகள்
    தமிழ் மணம் வாக்கு இட முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசித்து கருத்துரைத்தமைக்கு நன்றி கில்லர்ஜி.....

      பழைய பதிவுகளில் தமிழ் மண வாக்கு இடமுடிவதில்லை...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....