எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, February 26, 2014

ஜீரோ கிலோமீட்டர்திருப்பூரிலிருந்து சென்னை எத்தனை கிலோமீட்டர் இருக்கும்? உங்களுக்குத் தெரியுமா? எனக்குத் தெரியாது. சரி தெரிந்து கொள்ளலாம் என்றால் இருக்கவே இருக்கிறது கூகிள். தேடிப் பார்த்தேன். இப்படிக் காண்பித்தது கூகிள்.அதாவது 457.6 கிலோ மீட்டர் தொலைவு. ஆனால் இவ்வளவு தொலைவு கிடையாது வெறும் 0கிலோமீட்டர் தான் – நினைத்த நேரத்தில் நீங்கள் திருப்பூரிலிருந்து சென்னைக்குச் சென்று விட முடியும் என்கிறார் Twilight Entertainments Pvt. Ltd. தயாரித்திருக்கும் Zero Kilometers குறும்படத்தில் –.

அது எப்படின்னு கேட்கறீங்களா? வாங்க கதைக்குள் பயணிப்போம்.

கதையின் நாயகன் உலகநாயகன் தனது நண்பருடன் ஒரு ஜோசியரின் முன் அமர்ந்து இருக்கிறார். உலகத்தையே ஆளும் பெயருடைய உங்களுக்கு பிரச்சனை – அது உங்கள் பூர்வீக சொத்தாக இருக்கும் வீட்டினால் தான் என்று சொல்கிறார் ஜோசியர். அதை விற்று விடவாஎன்று கேட்கும் நாயகனிடம் விற்பது கடினம். முயற்சித்துப் பாருங்களேன்என்கிறார் ஜோசியர்.

ஒரு வட இந்தியரிடம் 12 லட்ச ரூபாய்க்கு தனது பூர்விகமான வீட்டினை விற்றுவிடுகிறார் உலகநாயகன். பிறகு நண்பரும் அவருமாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது வண்டி வழியில் நிற்க, நண்பர் “வீட்டை விற்றாலும் உன் பிரச்சனை தீரலையேஎன்று சொல்கிறார். நின்ற இடத்தில் ஒரு பாழடைந்த வீடு. அதை நோக்கி இயற்கை உபாதையை தீர்த்துக் கொள்ள உலகநாயகன் செல்ல, அந்த வீட்டின் வாசல் நோக்கிச் செல்கிறார்.

அந்த வாசல் வழியே உள்ளே சென்றதும் அவர் சென்னையில் இருக்கிறார்! என்ன அதிசயம் என்று யோசித்து வெளியே வந்து நண்பரையும் அழைக்கிறார்.  தாங்கள் காண்பது கனவா இல்லை நிஜமா என்று கிள்ளிப் பார்த்துக் கொள்ள நிஜம் என்று புரிகிறது. இதையே ஒரு வியாபாரமாக ஒரு நொடியில் சென்னை செல்ல வாருங்கள்என்று செய்ய ஆரம்பிக்கிறார்கள்.  பணம் வெகுவாகப் புரள்கிறது. உலகநாயகனும் அவரது நிறுவனமும் மிகவும் புகழை அடைகிறது – தொலைக்காட்சிகளில் அவரது பேட்டியெல்லாம் வருகிறது.

அப்படி இருக்கும்போது இவரிடம் வீட்டை வாங்கிய வட இந்தியர், ஒரு பழைய சைக்கிளில் வருகிறார் – “உன்கிட்ட வீடு வாங்கிய நேரம் நான் ரொம்பவே அவஸ்தைப் பட்டுட்டேன் – என்னோட சொத்து எல்லாம் போச்சு! நான் எங்க ஊரோட போறேன்!உன் வீட்டை நீயே வச்சுக்கோஎன்று சொல்லி வீட்டின் பத்திரத்தினைக் கொடுத்துச் செல்கிறார். அடுத்த காட்சி.....

அரசு அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இவரிடம் வந்து “உங்கள் நிறுவனம் இருக்கும் இடம் அரசுக்குச் சொந்தமானது. உடனே காலி செய்யுங்கள்என்று இவர்களை அகற்றி விடுகிறார்கள். மீண்டும் சோகமாக தங்களது பூர்வீக வீட்டிற்கு வருகிறார்கள் உலகநாயகனும் அவரது நண்பரும். வீட்டில் இருக்கும் பரணில் எதையோ வைக்கப் போக, அங்கே என்ன நடக்கிறது என்பது தான் கதையின் முடிவு!

சுவையாகச் சொல்லியிருக்கும் இந்த குறும்படத்தினைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன் முடிவு என்ன என்று....

குறும்படத்தினை தயாரித்தவர்களுக்கும், அதில் நடித்தவர்களுக்கும், மற்றும் பங்களித்த அனைவருக்கும் நமது வாழ்த்துகள்.  
என்ன நண்பர்களே, குறும்படத்தினை பார்த்து ரசித்தீர்களா?

மீண்டும் சந்திப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

50 comments:

 1. அருமையான குறும்படம்! முடிவு சூப்பர்! இப்படி நாமும் நம் வீட்டு மாடிஏறி கதவைத் திறந்தால் அமெரிக்கா! ஆஹா என்றிருந்தால்...விசாவுக்கு அலைந்து கஷ்டப்படாமல் ஜஸ்ட் மாடி ஏறிப் பார்த்துவிட்டு, படித்து விட்டு, அப்படியே நம் நாட்டிற்குள் நுழைந்து விடலாம்.....நோ விசா! Problem!

  நல்ல ஹாஸ்யம் இழைந்தோடிய, அதே சமயம் நல்ல கருத்தும் இலை மறை காயாக நிறைந்தப் படம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 2. அடுத்தது அமெரிக்காவா...? இனி பண வேட்டை தான்...

  வித்தியாசமான சிந்தனையுடன் குறும்படம் ரசிக்க வைத்தது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 3. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தமிழ்மணத்தில் இணைத்து வாக்களித்தமைக்கு நன்றி தனபாலன்.

   Delete
 4. அருமையான குறும்படம். முடிவு எதிர்பாராதது மட்டுமல்ல வாய் விட்டு சிரிக்கவும் வைத்தது.நல்ல கற்பனை. பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 5. நேரம் கிடைப்பின் :

  பிரார்த்தனை பண்றதுக்கோ, கடவுளை வணங்குறதுக்கோ ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் செலவழிக்கணும்...?

  இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Prayer-Time.html

  ReplyDelete
  Replies
  1. சில நாட்களாக இணையத்தில் அதிகம் உலாவர இயலவில்லை. எல்லோருடைய பதிவுகளும் படிக்க காத்திருக்கின்றன. உங்களுடையதும் சேர்த்து. படித்து விடுகிறேன் விரைவில்......

   தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. அருமை. உலகம் உருண்டைதானே.. அதனால பசங்களுக்கு மறுபடியும் அதிர்ஷ்டம் கதவைத் திறக்கும் என்றே நினைத்தேன்!.. அதேபோல அட்டகாசம்..
  யார் கிட்டயும் சொல்லிடாதீங்க... நம்ம கைவசம் இதே மாதிரி ஒன்னு இருக்கு!?..
  பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 7. நல்ல வேளை இது படமா போச்சு இல்லேன்னா இந்நேரம் என்னை அடித்து கொல்ல ஒரு பெரும் படையே திரண்டு வந்து இருக்கும் பூரி மற்றும் பேட்டோட.....

  வெங்கட் இப்படியெல்லாம் விடியோ போட்டு என்னை பயமுறுத்தாதீங்க கனவு நிஜமாகிவிடுமோ என்று பயமா இருக்கிறது tha.ma 3

  ReplyDelete
  Replies
  1. அட இந்த காணொளி வழியா உங்களுக்குத் தொல்லைகள் காத்திருப்பது தெரியாமப் போச்சே! :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 8. Yerkanave indha padam paarththirukkiren. Nalla padam.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 9. பரணில் ஏறி அமெரிக்கா!சூப்பர்
  த.ம.5

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 10. சுவாரஸ்யமான கற்பனைதான். பயண அனுபவத்திலும், தூரத்திலும், நேரத்திலும் அனுபவப்பட்டு அலுத்துப் போனவர்களுக்கு வந்த கற்பனை போல!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 11. ஏற்கனவே பார்த்த அருமையான குறும்படம். எப்படித்தான் இப்படியெல்லாம் அவர்களால் யோசிக்க முடிகிறதோ?
  பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 12. வணக்கம்
  ஐயா.
  பதிவை மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்..... குறும் படம் நல்ல கருத்தை சொல்லியுள்ளது... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா
  த.ம 6வது வாக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 13. பயணங்கள் என்றாலே அலுத்துக் கொண்டு, கண்ணை மூடித் திறந்தால் பார்க்க வேண்டிய இடம் வந்தா நல்லா இருக்கும்ல என்று நினைப்பேன்....:))

  என்னைப் போன்றவர்களுக்காக யாரோ ஒரு நல்ல மனிதரின் கற்பனைவளம் வாழ்க!

  ReplyDelete
  Replies
  1. இப்படி ஒரு வசதி இருந்தால் உனக்கு நிச்சயம் லக்கி ப்ரைஸ் அடிச்ச மாதிரி தான்!

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதி.

   Delete
 14. அருமையான குறும்படம் நாகராஜ் ஜி.

  ஆமாம்.... அந்த வீடு இப்போ எவ்வளவாம்...?

  ReplyDelete
  Replies
  1. ஏன் நீங்க வாங்கற ஐடியால இருக்கீங்களா! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 15. இந்த படம் ஏற்கனவே நான் பார்த்தபடம் தான்.
  அட்டகாசமான விதயாசமான சிந்தனையில்லையா ?
  நல்ல பகிர்வு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி கஸ்தூரி ரெங்கன்.

   Delete
 16. ஏற்கெனவே பார்த்த படம்தான் இருந்தாலும் நகைச்சுவைக்காக மீண்டும் ஒரு முறை பார்த்தேன் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 17. மிகவும் ரசித்தோம்
  பதிவாக்கித் தந்தமைக்கு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 18. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 19. உலகநாயகனும் அவரது நண்பரும். வீட்டில் இருக்கும் பரணில் எதையோ வைக்கப் போக, அங்கே என்ன நடக்கிறது என்பது தான் மிகவும் ரசிக்கவைத்தது..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 20. ஏற்கனவே பார்த்திருக்கிறேன், சுவாரஸ்யமான குறும்படம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 21. ஒரு முழு நீளப்பாடம் பார்த்த திருப்தி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகை மகிழ்ச்சி தந்தது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி திரு பிச்சையா.

   Delete
 22. குறும் படமல்ல .குறும்பு படம் !
  த ம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 23. பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 24. அருமையான குறும்படம். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Regan Jones.

   Delete
 25. குறும்படத்தினை பகிர்ந்தமைக்கு நன்றி!
  http://ravikumartirupur.blogspot.in/2011/09/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரவிக்குமார் திருப்பூர்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....