புதன், 19 பிப்ரவரி, 2014

உள்பெட்டி [INBOX].....


இன்றைக்கு ஒரு குறும்படத்தினைப் பார்க்கலாமா? நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் வந்த ஒரு குறும்படம் தான் இன்றைக்குப் பார்க்கப் போகிறோம். படத்தின் தலைப்பு “INBOX” அதாவது உள்பெட்டி [நன்றி “எங்கள் பிளாக்”].  இதில் வசன்ங்களே கிடையாது – அதாவது மௌனப் படம்!

கதை ஆரம்பிப்பது ஒரு கடையில். நாயகி தனக்குப் பிடித்த ஒரு கரடி பொம்மையையும் வேறு சில பொருட்களையும் வாங்குகிறார். கடையின் கொள்கைப் படி நெகிழி கொடுப்பதில்லை. அதனால் அங்கே வைத்திருந்த காகிதப் பைகளில் ஒன்றை விலைகொடுத்து வாங்கி தனது பொருட்களை எடுத்துச் செல்கிறார். அந்தப் பை இன்னொரு பையுடன் ஒட்டியிருந்ததை இரண்டாகப் பிரித்து தான் எடுத்துச் செல்லமுடிகிறது.

சற்று நேரம் கழித்து கதையின் நாயகன் உள்ளாடை வாங்கிக் கொண்டு மேலே பார்த்தால் நெகிழி கொடுக்கமாட்டோம் எனும் பதாகை. சரி என மீதமிருந்த மற்றொரு காகிதப் பையை வாங்கிக் கொண்டு உள்ளாடையை எடுத்துச் செல்கிறார். வீட்டிற்கு வந்து குளித்து துண்டுடன் பையைத் திறந்தால் அதிர்ச்சி – இவரது உள்ளாடைக்குப் பதில் நாயகி வாங்கிய கரடி பொம்மையும் மற்ற பொருட்களும் இருக்கின்றன.

பின்புலத்தில் மெல்லிசை மட்டும் ஒலிக்க, அதே சமயத்தில் அந்தப் பக்கம் நாயகி முகப்புத்தகம் போரடிக்க, தான் வாங்கிய கரடி பொம்மையை எடுக்க பையை எடுத்தால் அவளுக்கும் அதிர்ச்சி. அங்கே நாயகன் வாங்கிய உள்ளாடை.....  ஒரு வித அருவருப்புடன் பையின் உள்ளே அதைப் போட அது காணாமல் போகிறது. அது கிடைக்குமிடம் கதாநாயகன் வைத்திருக்கும் பையில்!  

ஒட்டி இருந்த இரண்டு பைகளில் ஒன்றில் ஒரு பொருளைப் போட்டால் அது தானாகவே அடுத்த பையில் கிடைக்கிறது. இதை வைத்துக் கொண்டு நாயகனுக்கும் நாயகிக்கும் இடையில் சின்னச் சின்ன காகிதங்களில் பரிமாற்றங்கள் நடக்கிறது. அப்போது நடக்கும் விஷயங்களை சுவாரசியமாகத்தான் சொல்லி இருக்கிறார் இயக்குனர். ஒரு முறை நாயகி வாங்கிய கரடி பொம்மையை அனுப்பி, அதன் கழுத்தில் “நாம் சந்திக்கலாமா?என்று கேட்டு எழுதி அனுப்புகிறார். அதை தனது பையிலிருந்து எடுத்துப் பார்த்த நாயகி, “இதைக் கேட்க இத்தனை நேரமா?என பதில் தருகிறார்.

மகிழ்ச்சியில் நாயகன் அந்த காகிதப் பையை வைத்துக் கொண்டு நடனம் ஆடியபடியே வெளியே வர கதவின் தாழ்ப்பாளில் மாட்டி அவரது பை கிழிந்து விடுகிறது. அதன் பின்னர் கிழிந்த பையில் போடப்பட்ட எந்த விஷயமும் நாயகியின் பைக்குள் செல்லாமல் அங்கேயே தங்கி விட, நாயகியைக் காண முடியாது தவிக்கிறார் நாயகன்.  பை வாங்கிய இடத்திற்குச் சென்று வேறு பை வாங்கலாம் என ஓட, அந்தக் கடை மூடியிருக்கிறது.

வேறு பை வாங்கினாரா? நாயகனும் நாயகியும் சந்தித்துக் கொண்டார்களா? என்பதை, சுமார் எட்டரை நிமிடம் கொண்ட CURIO FILMS தயாரித்திருக்கும் இந்த INBOX படம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாமே! படம் இதோ... 
என்ன நண்பர்களே, குறும்படத்தினை ரசித்தீர்களா? மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

48 கருத்துகள்:

 1. என்னடா, உள்பெட்டினு போட்டிருக்கேனு நினைச்சேன். :)))) எங்கள் ப்ளாகோட தலைப்பைத் தப்பாய்ப் போட்டிருப்பீங்களோனு சந்தேகம்.

  ஓகேஓகே, படம் மத்தியானமாத் தான் பார்க்கணும். :))))

  வந்துண்டே இருக்கோம் அங்கே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 2. வணக்கம்
  ஐயா

  குறும் படம் பற்றிய கருத்தாடல் நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 3. வணக்கம்
  ஐயா.
  த.ம 1வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 5. அட இப்படியெல்லாம் ட்ரான்ஸ்போர்ட் கிடைச்சால் எங்கயோ போயிடும் நம் வாழ்க்கை. மிக அருமை வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   நீக்கு
 7. த.ம.4

  குறும்படம் பற்றி எழுதிய குறிப்பே படத்தை பார்க்க தூண்டுகிறதுப்பா வெங்கட்.

  இந்தக்காலத்து பிள்ளைகள் மனதில் ஒரு தீப்பொறி இருக்கு. எது செய்தாலும் ஒரு வித்தியாசம் புதுமை, மக்களை அது சென்று அடைய அவர்கள் எடுக்கும் முயற்சி எல்லாமே..

  மாலை வந்து படம் பார்த்துவிட்டு மீண்டும் எழுதுகிறேன்பா...

  பகிர்ந்த எங்கள் பிளாக், உங்களுக்கு இருவருக்குமே மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. INBOX என்பதை உள்பெட்டி என்று முதல் முறையாக் எங்கள் பிளாக் பக்கத்தில் தான் பார்த்தது - அதனால் அவங்களுக்கு நன்றி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி.

   நீக்கு
 8. குறும்படமாக ஒரு கவிதை. இரசித்தேன்.பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஜி....

   நீக்கு
 9. இந்த குறும்படம் பார்த்துள்ளேன் சார். கிளைமேக்ஸ் ஒரு திரைபடத்திற்கு நிகரான விறுவிறுப்பு இருக்கும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   நீக்கு
 10. வித்தியாசமான ஃபேன்டஸி கதைக்களமாத் தெரியுதே.... க்ளைமாக்ஸைத் தெரிஞ்சுக்கறதுக்காச்சும் உடனே பாத்துடறேன் வெங்கட். அழகான பகிர்வுக்கு அன்புடன் நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாருங்க கணேஷ்.... உங்களுக்கு பிடிக்கலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.

   நீக்கு
 11. பார்த்துள்ளேன்... வித்தியாசமான குறும் படம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 12. வித்தியாசமான கதையாத்தான் இருக்கு! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்......

   நீக்கு
 13. ஹிஹிஹி... உள்பெட்டி என்று பார்த்து நானும் உடனே வந்தேன். (எப்பவுமே புதுப் பதிவு பார்த்தவுடனே வந்துடுவேன்!) பெயருக்கு காப்புரிமை மாதிரி நன்றி எங்கள் ப்ளாக்குக்கா... ஹிஹிஹிஹி...!

  கு.ப சுவாரஸ்யமான கற்பனைதான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   உள்பெட்டி எனும் வார்த்தையை உங்கள் பக்கத்தில் படித்ததால் உங்களுக்கும் ஒரு நன்றி! :)

   நீக்கு
 14. இந்தப் படம் பார்த்துள்ளோம்! நல்ல விதத்தில் பலமாக்கப்பட்ட ஒரு குறும்படம்!

  பகிர்வுக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 16. பார்த்தேன், நல்ல படம். எடுக்கப்பட்டிருக்கும் விதம் அருமை. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 17. சிறப்பான பகிர்வு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.....

   நீக்கு
 18. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.

   நீக்கு
 19. சில மாதங்களுக்கு முன்பே பார்த்திருந்தேன். மிகவும் ரசனையான முறையில் எடுத்திருப்பார்கள். பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   நீக்கு
 20. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   நீக்கு
 21. உங்களுடைய எழுத்து அந்த குறும்படத்தை பார்த்தே தீர வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டேன். படமும் நன்றாக இருந்தது. பார்க்க தூண்டிய விதமாக நீங்கள் எழுதிய இந்தப்பதிவும் நன்றாக இருந்தது.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 22. நான் இந்த குறும்படத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். கதைச் சுருக்கத்தை மிக அழகாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி.

   நீக்கு
 23. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   நீக்கு
 24. அருமையான குறும்படம் .. வசனங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட விதம் அருமை... நடித்தவர்களும் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....