எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, February 7, 2014

ஃப்ரூட் சாலட் – 79 – உலக அழகி – புல்லட் புஷ்பா - சிறுவர்கள்இந்த வார செய்தி:

புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு Chemotherapy சிகிச்சை அளிக்கும்போது அவர்கள் தங்களது தலைமுடியை இழக்கிறார்கள்.  கூடவே தங்களது தன்னம்பிக்கையையும்.  பல பெண்கள் இதன் மூலம் வெளியே வரவே வெட்கப்பட்டு வீட்டிற்குள் அடைந்து கிடப்பதைக் கண்டதுண்டு. பணம் படைத்த சிலர் செயற்கை முடி [விக்] அணிந்து கொள்வதுண்டு. ஆனால் சாதாரணமானவர்கள், சிகிச்சைக்கு ஆகும் செலவிற்கே மிகவும் கஷ்டப்படும் நிலையில் ஒரு விக் 8000 ரூபாய் முதல் 10000 ரூபாய் வரை விற்பதால் விக் பற்றி யோசிக்கக் கூட முடிவதில்லை.Green Trends எனும் அலங்கார நிறுவனம் இது போன்ற மக்களுக்காக இந்த மாதம் நான்காம் தேதி கொண்டாடப்பட்ட உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு தன்னார்வம் கொண்ட சிலரிடம் தங்களது தலைமுடியை தானமாகப் பெற முன்வந்தார்கள்.  உதவி மனப்பான்மை கொண்ட பெண்கள் தரும் தலைமுடியிலிருந்து விக் தயாரிக்கப்பட்டு, புற்று நோயால் பாதிக்கப்பட்டு தலைமுடியை இழந்த சில பெண்களுக்கு விக் இலவசமாக தர ஏற்பாடு செய்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிறிஸ்துவ கல்லூரி மாணவிகள் 100 பேர் தங்களது தலைமுடியை தானமாக வழங்கி இருக்கிறார்கள்.  ஒரு விக் செய்ய ஆறிலிருந்து எட்டு பேருடைய தலைமுடி தேவைப்படுகிறது என்று சொல்கிறார் Green Trends நிறுவனத்தின் சார்பில் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தவர்.

புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் தாழ்வு மனப்பான்மையை போக்க இளம்பெண்கள், தங்களது தலைமுடியை மொத்தமாகவோ, இல்லையெனில் 10 அங்குலம் மட்டுமோ தர முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தபோது பல கல்லூரிப்பெண்கள் அதற்கு ஆதரவு தந்திருக்கிறார்கள்.

இந்த நல்ல விஷயத்தில் தங்களது தலையை மொட்டை அடித்துக்கொண்டு மொத்த முடியையும் தானம் செய்த இளம்பெண்களை உலக அழகிகள் என்று சொல்வதில் தவறில்லை!
     
இந்த நல்ல முயற்சியை இளைய சமுதாயத்தினர் வரவேற்று, முடி தானம் செய்ததை பாராட்டுவோம். முடி துறந்தாலும் இவர்கள் உலக அழகிகள் தான்!

இந்த வார முகப்புத்தக இற்றை:

இருள் என்று தெரிந்தும் கண்களைத் திறந்து கொண்டு தான் பயணிக்கிறோம். அது போல தோல்வி என்று தெரிந்தாலும் முயற்சி செய்து கொண்டிருப்போம் வெற்றி காணும்வரை.....

இந்த வார குறுஞ்செய்தி

ALL LIFE IS AN EXPERIMENT. THE MORE EXPERIMENTS YOU MAKE, THE BETTER.

ரசித்த புகைப்படம்: 

நாங்க எதையும் செய்வோம்.....  ஏன்னா என் பெயர் புல்லட் புஷ்பா!ரசித்த காணொளி:

மனதைத் தொட்ட காணொளி....  நிச்சயம் உங்கள் மனதையும் தொடும். வேற்று மொழியாக இருந்தாலும், ஆங்கிலத்தில் Sub-title இருப்பதால் நிச்சயம் புரியும்.  பார்த்துவிடுங்களேன்!
ராஜா காது கழுதை காது:

இந்த வாரம் திருச்சியிலிருந்து தஞ்சை வழியே மயிலாடுதுறை சென்று கொண்டிருந்தேன். ஓட்டுனர் அருகிலேயே இருக்கும் தனி இருக்கையில் அமர்ந்திருந்தேன். தஞ்சையிலிருந்து கும்பகோணம் வரை இருக்கும் குறுகிய சாலையில் பேருந்தினை ஓட்டுவதில் உள்ள சிரமத்தினை கண்கூடாகக் காண முடிந்தது. அந்த குறுகிய சாலையில் இரு இளம் பெண்கள் பின்னால் வரும் வாகனங்கள் பற்றிய கவலை இல்லாது பேசியபடியே சென்று கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து ஓட்டுனர் சொன்னது:

வீட்டுல நிறைய தங்கம் இருக்கு போல! இப்பல்லாம் நல்லா இருக்கற பொண்ணுங்களுக்கே 50 பவுன் 100 பவுன் கேட்கறாங்க! கை கால் போனா 200 பவுன் இல்ல கேப்பாங்க!

படித்ததில் பிடித்தது!:

காவலாளி: நீ எங்கே வசிக்கிறாய்?
சிறுவன்: எங்க அப்பா-அம்மாவுடன்.
காவலாளி: உன் அப்பா-அம்மா எங்கே வசிக்கிறார்கள்.
சிறுவன்: வேறெங்கு, என்னுடன் தான்!
காவலாளி: நீங்கள் எல்லோரும் எங்கு வசிக்கிறீர்கள்?
சிறுவன்: எல்லோரும் சேர்ந்து தான்!
காவலாளி: உங்கள் வீடு எங்கிருக்கிறது?
சிறுவன்: என் பக்கத்து வீட்டுக்குப் பக்கத்தில்!
காவலாளி: சரி, உங்க பக்கத்து வீட்டுக்காரர்களின் வீடு எங்கே இருக்கிறது.
சிறுவன்: நான் சொன்னா, நீங்க நம்ப மாட்டீங்க!
காவலாளி: சொல்லு....
சிறுவன்: எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டில்!

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து...

66 comments:

 1. மேலும் வளர்க! உலக அழகிகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 2. ஃப்ரூட் சாலட்-ஐ ரசிக்கவைத்தது..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 3. உலக அழகிகள் நிச்சயமாக உலக அழகிகள் மட்டுமல்ல இந்த பிரபஞ்ச அழகிகள்!!

  காணொளி நெஞ்சைத் தொட்டு அப்படியே இதயத்தைப் பிழிந்து கண்களில் நீர் வரவழைத்து .... இந்தக் கால இளைஞர்களின் போக்கையும் பெற்றோரின் மனதையும் சொல்லியுள்ள விதம்..... மனதை உருக்கிவிட்டது!! ஃப்ரூட் சலட் with Ice cream!

  சிறு பையனின் குறும்பு தற்போதைய சிறுவர்களைத்தான் நினைவு படுத்துகிறது! ரசித்தோம்!

  மனதில் தில் இருந்தால் எதையும் செய்ய முடியும் என்பதை உணர்த்தும் பாட்டி!

  இந்த வார முகப்புத்தக இற்றை, இந்த வார குறுஞ்செய்தி சூப்பர்! செர்ரி on the top of the salad!  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்.

   ஒவ்வொரு பகுதியையும் ரசித்து கருத்தளித்திருப்பது ஊக்கமருந்து!

   Delete
 4. முடி தானம் செய்ததை பாராட்டுவோம்... அதனின் வேதனை எப்படி என்று - இப்போது சகோதரியின் மூலம்...!

  மற்ற ஃப்ரூட் சாலட்-க்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   அந்த வேதனையை நானும் பார்த்திருக்கிறேன்...

   Delete
 5. ஃப்ரூட் சாலட் - திருப்தியான ப்ரேக்ஃபாஸ்ட்! வாழ்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 6. Mudi Dhanam paarattukkuriya vizhayam. Votunarin Vasagam Arumai (200 Pavun) .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 7. உலக அழகிகளுக்கு முதலில் ஒரு வணக்கம்.

  சிறுவனின் பதிலுக்கு தான் குண்டக்க மண்டக்க பதிலோ?
  அருமையான நகைச்சுவை.
  பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 8. உலகின் தலைசிறந்த அழகி, காணொளி இரண்டும் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது.
  ஃப்ரூட்சாலட் மிக அருமை.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 9. முடி இழந்த அழகியின் தலையில் நிச்சயம் அழகிக்கான கிரீடம் சூட்டலாம் !
  காணொளி கண்டு ரசித்தேன் !
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 10. புல்லட் புஷ்பா - சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 11. முடி கொடுத்த பெண்ணழகி,புல்லட் ஓட்டும் பாட்டி,, கால்கள் கொடுத்த தந்தைஅத்தனையையும் ரசித்தேன் மா. மிக மிக நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 12. முடி தானம் மனதை உருக்கிய விஷயம். நிறைய விழிப்புணர்வு இருந்தால் நலமே!
  பழக் கலவை சுவையாக இருந்தது. நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete

 13. பொதுவாக green trends -ன் எண்ணம் பாராட்டத்தக்கது என்றாலும்......பெண்களிடம் முடிதானம் கேட்க வேண்டுமா.?உண்மையிலேயே அவர்களுக்கு முடி இழந்த நோய்வாய்ப்பட்ட பெண்களுக்கு விக் தானம் செய்ய மனமிருந்தால் திருப்பதியில் அவர்களது தேவைக்கும் மிறிய முடி கிடைக்கும். green trends ஒரு அழகு சாதன நிலையம்/ அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து அவர்க்ள் பெறும் கட்டணம் .....மிகவும் அதிகம். எல்லாம் விளம்பரமென்றே தோன்றுகிறது. இருந்தாலும் தங்கள் முடியைஇழக்க சம்மதம் தரும் பெண்கள் போற்றப் பட வேண்டியவரே. ஃப்ரூட் சலாட் ரசிக்க வைத்தது.

  ReplyDelete
  Replies
  1. Green Trends செய்தது விளம்பரம் என்றாலும் பாராட்டுக்குரியவர்கள் தானம் செய்ய முன்வந்த பெண்கள்.....

   திருப்பதியில் கிடைக்கும் அத்தனை முடியையும் ஏற்றுமதி செய்து காசு சம்பாதிக்கிறார்கள்! :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 14. ஃப்ரூட் சாலட் ரசிக்கவைத்தது. காணொளி, புல்லட் பாட்டி என அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 15. சுவை குன்றாத ஃப்ரூட் சாலட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 16. அருமையான சாலட்! முடிதானம் குறித்த செய்தி மனதை நெகிழ வைத்தது! காணொளி அருமை! பகிர்விற்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 17. முடி தானம் பாராட்டவேண்டிய மிக நல்ல விஷயம். காணொளி அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சத்யா நம்மாழ்வார்.

   Delete
 18. முடி தானம் செய்ய நல்ல மனது வேண்டும். அது இந்த மாணவிகளுக்கு இருக்கிறது. அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்! அண்ட் காணொளி உண்மையில் மனதைத் தொட்டது பகிர்ந்தமைக்கு நன்றி! பழக்கலவை ஜோர்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete

 19. உலகில் பணக்கார சாமியான திருப்பதி பாலாஜி கோவிலில் தினமும் ஆயிரக்கனக்கான மக்கள் முடியை காணிக்கையாக செலுத்துகின்றனர். அந்த முடிகள் எல்லாம் வெளினாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன பணத்திற்காக? அந்த கடவுளுக்கு கூட கேன்சர் நோயாளி மீது இரக்கம் இல்லை. ஆனால் இது போல உள்ள பெண்கள் முடிகளை தானம் செய்யும் போது அவர்கள் கடவுளுக்கும் மேலாகவே இருக்கிறார்கள் எனவே இது போன்ற பெண்களை நாம் வணங்கத்தான் செய்ய வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   திருப்பதியில் செய்யப்படும் முடிதானம் - காசாக அவர்களுக்கு தெரிகிறதே! :(

   Delete
 20. ஆஆஆ....புல்லட் புஷ்பா....!

  முடி கொடுத்த மாணவிகள் சான்சே இல்லை உலக அழகிகளுக்கு மேலான அழகிகள்...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 21. / இவள் தான் உலகின் தலை சிறந்த அழகி!/
  இது தான் உலகின் தலை சிறந்த அழகான வரி! நெகிழ்வாக இருந்தது!

  காணொளி மிக மிக நெகிழ்ச்சியாக, கண் கலங்கச் செய்து விட்டது! எந்த தேசமாக இருந்தாலும் எந்த மொழியாக இருந்தாலும் தந்தையும் தாயும் ஒரே மாதிரி தானே?

  புல்லட் புஷ்பாவின் அழகுப்புன்னகை அற்புதம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி!

   Delete
 22. புல்லட் புஷ்பா அட்டகாசம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 23. விடியோவின் நெகிழ்ச்சி அது என்ன விற்கப் பயன்படுகிறது என்பதை அறியாமலே செய்தது மார்கெடிங் காரர்க்ளின் முட்டாள்தனம் :).

  ReplyDelete
  Replies
  1. ஒருவேளை அது பற்றி ஆங்கிலத்தில் சப் டைட்டில் கொடுக்காது விட்டிருக்கலாம்.... காணொளியில் பேசும் மொழியில் சொன்னார்களா என்பது தெரியவில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 24. green trends கு அது விளம்பர யுத்தி என்றாலும் அந்த பெண்களை பாராட்டவேண்டும்!
  புல்லட் புஷ்பா !!!!!!!!
  காணொளி டச்சிங் !!
  உண்மையை சொல்வதென்றால் ஜோக் மட்டும் சொதபிடுச்சு.
  but,as ever salad is yummy!!

  ReplyDelete
  Replies
  1. அடடா. .... ஜோக் சொதப்பிடுச்சா.... அடுத்த படித்ததில் பிடித்தது வேற எழுதிடலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி கஸ்தூரி ரெங்கன்.

   Delete
 25. முடிதானச்செய்தியை நானும் இதழ்களில் படித்தேன்! கதம்பசோறில் மிஸ்ஸாகிவிட்டது! பகிர்வுக்கு நன்றி! டிரைவரின் நகைச்சுவை ரசிக்க வைத்தது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 26. புல்லட் புஸ்பா சூப்பர் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம்.

   Delete
 27. சரியான கலவை. உண்மையான அழகிகளை அறிமுகப்படுத்தியது அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 28. kaanoli really touched the heart. super.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லதா முரளி ஜி!

   Delete
 29. .திருமணம் செய்யாத பெண் கொடுப்பது நிச்சயம் பாராட்ட வேண்டிய ஓன்று. பாட்டியின் சாகசம் அருமை !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.

   Delete
 30. கூந்தல் தானம் பாராட்டுக்குரிய செயல்.

  நல்ல தொகுப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 31. இங்கும்கூட இதுமாதிரியான உலக அழகிகள் நிறையபேர் உண்டு. ஈடுசெய்ய முடியாத ஓர் அழகு. புல்லட் பாட்டியும் கவர்ந்துவிட்டார்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 32. //இந்த வாரம் திருச்சியிலிருந்து தஞ்சை வழியே மயிலாடுதுறை சென்று கொண்டிருந்தேன்.//

  என்ன அநியாயம்? சொல்லவே இல்லை, தொலைபேசி இருந்திருக்கலாமே! நமக்கு எப்போதும் போல் விருந்தினர் என்பதால் எல்லாப் பதிவுகளையும் பார்க்க முடியறதில்லை. :))))

  ReplyDelete
  Replies
  1. இன்னமும் திருச்சியில் தான். பயணம் அதிகம் இம்முறை! நேற்று இரவு தான் சென்னையிலிருந்து திரும்பினோம். வரும் சனிக்கிழமை தில்லி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 33. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்

  வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - மூன்றாம் நாள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....