எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, January 6, 2011

மனச் சுரங்கத்திலிருந்து...(ஊஞ்சலாடிய பேய்)நெய்வேலியில் எங்கள் வீட்டின் வாசலிலேயே ஒரு பெரிய புளிய மரம்.  பக்கத்து வீட்டு வாசலிலும் அதை விட பெரிய புளிய மரம் இருந்தது. அதனால் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் நிறைய பேர் வாசலில் புளியமரம் இருக்கு, “காத்து, கருப்பு அண்டும்என்றெல்லாம் சொல்லி பீதியைக் கிளப்பிவிடுவார்கள்.  சுவையான புளியைக் கொடுக்கும் மரமென்பதால் அதை வெட்ட எங்களுக்கு மனமில்லை

அம்மா எப்போதுமே அதிகாலையில் எழுந்து, வாசல் தெளித்து, கோலமிட்டு, பூ பறித்து, கீழே விழுந்திருக்கும் புளியை எடுத்து வீட்டின் திண்ணையில் வைத்துவிட்டு, மற்ற காலை நேர வேலைகளில் ஆழ்ந்து விடுவார்

எனக்கு பள்ளி காலை நேரத்திலே என்பதால் நானும் சீக்கிரமே எழுந்து 10 நிமிட நடைப் பயணத்தில் இருக்கும்  08.00 மணிக்கு ஆரம்பிக்கும் பள்ளிக்கு, 07.15க்கே கிளம்பிவிடுவேன்.  மதியம் 12.10 வரைதான் பள்ளி. அதன் பிறகு இல்லை.  அதனால் மதிய நேரத்தில் தூக்கம், அரட்டை, விளையாட்டு தான்.

எதிர் தெருவானதிருகாணி தெருவில்என்னுடன் படித்த ஒரு பையனின் வீடு இருந்தது.  அவனுடைய  அம்மாஒரு நாள் எங்கள்  வீட்டுக்கு நடுங்கியபடியே  வந்து எங்கள் வீட்டு புளிய மரத்தில்  ஊஞ்சலாடிய பேயின் கதையைச் சொன்னார்.  பேய் கதை என்றதும் நானும் மற்ற நண்பர்களும் ஆர்வத்துடன் கதை கேட்க ஆரம்பித்தோம்

“நட்ட நடு ராத்திரி திடீர்ன்னு  முழிப்பு வந்துடுச்சா , மாடு வேற கத்துது, சரி மாட்டுக்கு பசி போல  வைக்கோல் போடலாம்னுட்டு  வெளியே வந்தேன். வைக்கோல் போட்டுட்டு பார்க்கிறேன், உங்க வீட்டு வாசல்ல வெள்ளையா ஒரு உருவம், கால் இருக்கான்னு பார்க்கிறேன், இல்லை.  மிரண்டு போய், யாரையாவது கூப்பிடலாம்னா, எனக்கோ வாய் குளறுது!  அந்தப் பேய்  உங்க வீட்டுப்  புளிய மரத்திலிருந்து பக்கத்து வீட்டு புளியமரத்துக்கு அப்படியே தாவுது,  கிளையைப்  பிடிச்சு ஊஞ்சலாடுது! அதுக்கு மேலே என்னால நிக்க முடியல, கிடுகிடுன்னு வீட்டுக்குள்ளே போய், ஒரு சொம்புத்   தண்ணியை மடக் மடக்குன்னு  குடிச்சுட்டு நடுங்கியபடியே  டுத்துட்டேன்.  அத்தோட  காலைல அஞ்சு மணிக்கு எழுந்து பார்க்கிறேன், அந்த பேயைக் காணல!” என்றார். 

கதையைக் கேட்ட எங்களுக்கெல்லாம் ஒரே  பயம்,  பேய் ஊஞ்சலாடியதை, உடல் நடுங்க நாங்களும் மனசுக்குள்  படம் ஓட்டிப் பார்த்தோம்.  ஆனா எங்கம்மா சிரிச்சுட்டு இருந்தாங்க.  “அட போங்கடா பயந்தாங்குள்ளிகளா! நேத்து  வீட்டு வாசலில் உள்ள மரத்துக்கும், விளக்குக் கம்பத்துக்கும் கட்டி இருந்த கொடில உங்கப்பா  வேட்டியை காயப் போட்டிருந்தேன், ராத்திரி எடுக்க மறந்துட்டேன். அது இரவு அடிச்ச காத்துல இந்த மரத்துக்கும் அந்த மரத்துக்கும் ஆடிட்டு இருந்துருக்கும். அதிகாலையிலேயே  எழுந்த நான் வேட்டியை எடுத்து மடிச்சு வச்சுட்டேன்! அதான் பேயைக் காணல "என்று சிரித்துக்கொண்டே சொன்னார்

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்"

29 comments:

 1. ஓஹோ... பேய பார்த்தவங்க சொல்வது இப்படித்தான் போலிருக்கு...

  அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பயம்...

  ReplyDelete
 2. பேய், பாம்பு இதெல்லாம் திகிலூட்டும் விஷயங்கள் தான்.

  ReplyDelete
 3. "புளியமரத்து உச்சியிலே நின்னு பேயொன்னு ஆடுதுன்னு சொல்லி வைப்பாங்க" பாடல்தான் நினைவுக்கு வருது

  ReplyDelete
 4. சந்திரமுகி மாதிரி ஒரு திகில் படமாயிருக்குமோன்னு வந்தா, காமெடியா முடிச்சிட்டீங்களே ஐயா! கலக்கலோ கலக்கல்!

  ReplyDelete
 5. அப்ப பேய யாருதான் உண்மையா பார்த்திருக்கா

  ReplyDelete
 6. ஒரு மாதிரி கலங்கலா வேட்டிய பேய் ந்னு நினைச்சு பார்த்தவங்க.. அந்த கலங்கல் உருவத்துல காலமட்டும் தேடிக்கண்டாபிடிச்சிரமுடியும்:))

  ReplyDelete
 7. இருந்தாலும் சில சமயம் பேயறைஞ்ச மாதிரி ஆயிடறோம் தான்!

  ReplyDelete
 8. சிறு வயதுக்கே உரிய பயம் ...அதெல்லாம் இருந்தால் தான் சுவாரசியம் ...அம்மா சொல்லிட்டாங்க ..சில அம்மாக்கள் அதை வைத்து பையன் ராத்திரி வெளியில் சுத்தறதை கண்ட்ரோல் பண்ண பயன் படுத்திப்பாங்க

  ReplyDelete
 9. பேயா அலையறான்னு சில பேரைத் திட்டுவாங்க.. பேய் எப்படி அலையும்னு தெரியல.. நீங்களாச்சும் சொல்லப் போறீங்கன்னு வந்தா இப்படி ஏமாத்திட்டிங்களே..

  ReplyDelete
 10. கண்ணால் காண்பதும் பேய்.... காதால் கேட்பதும் பேய்.... தீர விசாரிப்பதே மெய்.....!!!! ரைட்டு!

  ReplyDelete
 11. இதுவும் மனப்பேய்தானா? நிஜப்பேயைக் கண்டார் யாருமே இல்லியா அப்ப?

  ReplyDelete
 12. மறு நாள் இரவு வேட்டி காயப் போடாமல் பேய் வருகிறதா என்று கொட்ட கொட்ட முழித்துக்கொண்டு பார்த்து ஒரு முடிவிற்கு வந்திருக்கலாம் என்பது அடியேனின் தாழ்மை அபிப்பிராயம் ! இப்பொழுதும் அந்த புளிய மரம் இருக்கும் பட்சத்தில் 'ஒய் நாட் ஒன் மோர் ட்ரை ?'

  ReplyDelete
 13. என் சிறு வயதிலும் இதுபோல் நடந்தது. அப்புறம் புளியமரத்துல முடிய வச்சு ஆணி அடிச்சாங்க...

  ReplyDelete
 14. பேய்க்கதைகளுக்கு ஈடான பயம் கலந்த சுவாரசியம் வேறெங்கும் இல்லை..

  அடுப்பிலே விறகுக்குப் பதிலா காலை நீட்டி வச்சு எரிக்கும் பேய் பற்றி அக்கா சொல்லும் போது...............ஊஊஊஊஊஊ

  பதிவு அருமை.

  ReplyDelete
 15. பேய் கதை அருமை.

  ஊஞ்சாலடும் பேய் கடைசியில் அப்பாவின் வேட்டி.

  குழந்தை பருவம் கதை கேட்கும் பருவம்.

  எவ்வளவு கதைகள் கேட்டு ரசித்து இருப்போம்.

  ReplyDelete
 16. சிறு வயது பேய் கதை நல்லா இருக்குங்க.நகைச்சுவையா சொல்லி இருக்கீங்க.

  ReplyDelete
 17. நல்லாத்தான்யா கிளப்பறாங்க பீதிய.

  (”திருகாணி தெரு” you mean "Screw Street" நெய்வேலியில் “கடப்பாரைத் தெரு” போயிருக்கிறேன். திருகாணி தெரு இப்பதான்யா கேக்குறேன்”)

  ReplyDelete
 18. @@ இராகவன் நைஜிரியா: வருகைக்கு நன்றி. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்... அதனால் பயம்... :)

  @@ அமுதா கிருஷ்ணா: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  @@ எல்.கே.: ஆகா, பழைய பாடல் தானே... நன்றி.

  @@ சேட்டைக்காரன்: சந்திரமுகி அளவுக்கு இருந்ததா? அது சரி சேட்டை, இந்த “ஐயா” எதுக்கு? வெங்கட் போதுமே! [Chalega]

  @@ தினேஷ்குமார்: முதல் வருகை? நன்றி. நான் பேயை நிச்சயமாய் பார்த்ததில்லை!!

  ReplyDelete
 19. @@ முத்துலெட்சுமி: வருகைக்கு நன்றி. :)

  @@ கே.பி.ஜனா: :)) மிக்க நன்றி.

  @@ பத்மநாபன்: எங்க அம்மா கூட சில சமயம் பயமுறுத்தி இருக்காங்க! அது ஒரு தனி கதை. வேறு ஒரு சமயம் எழுதுகிறேன்...


  @@ ரிஷபன்: பேயாய் அலைந்த பெண்! அப்படின்னு எழுதி வைத்து இருக்கிறேன்... பிறிதொரு சமயம் பகிர்கிறேன்....

  @@ சித்ரா: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  @@ ஹுசைனம்மா: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. எனக்குத் தெரிந்து நான் பார்த்ததில்லை....

  January 7, 2011 5:37 PM

  ReplyDelete
 20. @@ லக்ஷ்மிநாராயணன்: மிக்க நன்றி எல்லென் சார். பார்த்திருக்கலாம். காலம் கடந்து விட்டது - நெய்வேலி விட்டு வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. அடுத்த முறை நெய்வேலி சென்றால் நிச்சயம் பார்க்கத்தோன்றும்!

  @@ கலாநேசன்: மிக்க நன்றி சரவணன். யார் முடியை ஆணி வைத்து அடித்தார்கள்?

  @@ துளசி கோபால்: உங்களது முதல் வருகை! மிக்க நன்றி. ஜகன்மோகினி! ஒரு பாடல் கூட பேய் பாடும் - “அவன் போனா போறாண்டி, வேற எவனாவது கிடைப்பாண்டி!” :)

  @@ கோமதி அரசு: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. பல கதைகள் கேட்பதற்கென்ற நாங்கள் விழித்து இருந்து இருக்கிறோம்... இனிய நினைவுகள் :)

  @@ ஜிஜி: மிக்க நன்றி.

  @@ ஈஸ்வரன்: அண்ணாச்சி, உங்களுக்குத் தான் நெய்வேலி தெருவிற்கு வைக்கும் பெயர்கள் பற்றித் தெரியுமே? - நன்றி...

  ReplyDelete
 21. பேய்களா பூதமா.. அப்டின்னு வந்து பார்த்தா வேஷ்டிப் பேய்... நடுவில அந்தம்மா சொல்றா மாதிரி எழுதியிருக்கிறது நல்லா இருக்கு.. ;-)

  ReplyDelete
 22. வேட்டி பேயாய் மாறிய கதை அருமை. அம்மா சொல்லாம விட்டிருந்தான்னா பேய் இந்நேரம் குட்டி போட்டு பேரன் பேத்தி எடுத்திருக்கும்.

  ReplyDelete
 23. suuper!

  :D

  enakku pei kathakal-naa romba pidikkum.. :D nirayaave pei katha kettirukken.. this is sooper-dooper! :D

  nice blog!

  ReplyDelete
 24. நானும் இது மாதிரி பயந்ததுண்டு,என்னனு யோசிக்காம,அப்புறம் இவ்வளவு தானான்னு ஆயிடும்.

  ReplyDelete
 25. @@ RVS: பேய்களா, பூதமா? இங்கும் ஒரு பாடல் :) உங்கள் பாராட்டு - மகிழ்ச்சி.

  @@ சிவகுமாரன்: நிச்சயம் பேரன் பேத்தி வந்து இருக்கும் :)

  @@ Matangi Mawley: உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  @@ ஆசியா உமர்: :) இது போன்ற நிகழ்வுகள் எல்லோர் வாழ்விலும் இருந்திருக்கிறது என்பது உண்மைதான்.

  ReplyDelete
 26. நானும் இது போல் சின்னதில் சின்னதா ஒரு துணி அசைந்தால் கூட கற்பனை எங்கெல்லாமோ போகும்

  ReplyDelete
 27. @@ ஜலீலா கமல்: ஓ.. எல்லோருமே இது போலத்தான் போல... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 28. குபீரென சிரித்தேன் வெங்கட்... இவர் வேலையிலிருந்து வரட்டும். திருகாணித்தெரு எந்த பிளாக் என விசாரித்து போய் பார்த்துவர முயற்சிக்கிறேன்-அந்தப் புளிய மரத்தை! பேய், பூதம், நொள்ளைக் கண்ணன், நாய், பூனைக்கெல்லாம் பயந்து நடுங்கிய சின்னவயசுக்கு காலயந்திரமின்றி பயணிக்க வைத்தது பதிவு. தாய்மை சுமக்கும் பெண் முகமாய் பொலிவு ஏறிக்கொண்டிருக்கிறது உங்கள் பதிவுகளுக்கு!!

  ReplyDelete
 29. @@ நிலாமகள்: திருகாணித் தெரு வட்டம்-11-ல் இருக்கு! எங்கள் வீடு திருச்சி சாலை [தற்போதைய சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் சாலை] அந்த இரண்டு புளிய மரங்களும் இப்போதும் இருக்கிறதா தெரியவில்லை! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....