வியாழன், 27 ஜனவரி, 2011

மறக்க முடியுமா இந்த கல்லூரி சுற்றுலாவை ஆயுசுக்கும்?நெய்வேலி ஜவஹர் அறிவியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது இரண்டு சுற்றுலாக்கள் சென்றோம்.  முதலாவது சுற்றுலா திருச்சிக்கும், இரண்டாவது சுற்றுலா பொள்ளாச்சி, ஆழியார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சி, திருமூர்த்தி ஹில்ஸ், பழனி போன்ற இடங்களுக்கும்.

முதலாவதை விட இரண்டாவது மறக்க முடியாத விதத்தில் அமைந்தது.  எங்களது கணிதத்துறை பேராசிரியர் திரு தங்கராஜ் அவர்களின் திருமணம் பொள்ளாச்சியில் நடக்க ஏற்பாடாகியிருந்தது.  அங்கு செல்லும் போது அருகில் உள்ள மற்ற இடங்களையும் பார்க்க ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்து, நெய்வேலியில் தனியார் பேருந்துகள் இல்லாததால், பாண்டிச்சேரியில் இருந்து பேருந்து எடுத்துச் சென்றோம்

முதல் மூன்று நாட்கள் தொந்தரவு ஏதுமின்றி பாட்டு, கூத்து, கும்மாளம் என அருமையாக கழிந்தது.  பழனி வழியாக நெய்வேலி திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் தெரிந்தது சதாம் ஹுசைன் குவைத்தை தன்னகப்படுத்தியதன் காரணமாக தமிழகமெங்கும் பெட்ரோல், டீசல் கடுமையான தட்டுப்பாடு என்று.

பழனி அருகே ஒட்டன்சத்திரத்தின் அருகில் வரும்போது எங்கள் பேருந்தின் ஓட்டுனர் டீசல் அங்கேயே வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லி மலைப்பாம்பு கிடப்பதைப் போன்ற வண்டிகளின் வரிசையில் நிறுத்தியபோது இரவு பன்னிரண்டு மணி.  நீண்டு நெளிந்து சென்ற வரிசையில் எங்கள் பேருந்து இருந்தது பெட்ரோல் நிலையத்திலிருந்து சுமார் இருபது கிலோ மீட்டருக்கு அப்பால்.  பேருந்து நின்று கொண்டிருந்த இடமோ ஆள் அரவமில்லாத அத்வான காடு போல இருந்தது.  பேருந்து முழுவதும் பத்து மாணவர்களும், முப்பது மாணவிகளும்.  கண்களில் பயம் தெரியாமல் இருந்தாலும் நெஞ்சு முழுக்க திக்..திக்..திக்

அங்கே திருட்டுத்தனமாக பதுக்கல் டீசல் வியாபாரமும் கன ஜோராக நடந்து கொண்டிருந்தது.  தோழர் ஒருவர் பதுக்கல் காரர்களுடன் தனியாக டீசல் வாங்கச் சென்று, டீசல் கிடைக்காமல், ”தலை தப்பியது தம்புரான் புண்ணியம்என சாகசமாக தப்பி வந்தது தனிக் கதை

பிறகு மண்ணெண்ணையும் என்ஜின் ஆயிலும் கலந்து டீசலுக்கு பதிலாக ஊற்றி கரும்புகையை கிளப்பியபடி ஒருவழியாக நான்காம் நாள் இரவு நெய்வேலி வந்து சேர்ந்தோம்.

எல்லா நண்பர்களும் மிகவும் சோர்ந்து விட்டதால் அனைவரையும்  அவரவர் வீட்டில் இறக்கி  விட்டுவிட்டு,  நான் மட்டுமே அப் பேருந்திலேயே பாண்டி சென்று கணக்கை முடித்த போது இரவு இரண்டு மணி.   

பின்னர் பாண்டிச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் பேருந்தில் அமர்ந்து பயணச்சீட்டு வாங்கியபின் (கைப்பையில் நிறைய பணத்துடன்) அசதியில் நன்றாக தூங்கி விட்டேன்.  பேருந்திலிருந்த பயணிகளை கடலூர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்ட பிறகு பஸ் டிப்போவில் பேருந்தினை விட்டு விட்டுச் சென்றுவிட்டார்கள் போலிருக்கிறது நடத்துனரும் ஓட்டுனரும்நான் பேருந்தினுள் ஒரு மூலையில்  அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது தெரியாமல்.  நான்கு மணி சுமாருக்கு ஏதோ சத்தம் கேட்டு விழித்தால் நான் இருந்த  பேருந்தினை சுத்தம் செய்து கொண்டிருந்தார் ஒருவர்

தமிழ்த் திரைப்படங்களில் ஹீரோ-ஹீரோயின்கள் கேட்பது போலநான் எங்கே இருக்கேன்? எனக் கேட்டதற்கு, அந்த சுத்தம் செய்து கொண்டிருந்த தொழிலாளி சொன்னது இன்னும் காதில் ரீங்காரித்துக் கொண்டிருக்கிறது.  “என்னதான் பாண்டிச்சேரியில தண்ணி விலை குறைவா இருந்தாலும் இப்படியா தம்பி தண்ணி அடிக்கிறது?  இதிலே நான் எங்க இருக்கேன்னு கேள்வி வேற! சீக்கிரம் இறங்குய்யா, வண்டி எடுக்க நேரமாச்சு"--ன்னு சத்தமாகச்  சொன்னார்”.


[இந்த புகைப்படம் 2009-ல் குரங்கு நீர்வீழ்ச்சி சென்ற போது எடுத்தது] 

"சரி இன்னிக்கி நாம முழிச்ச நேரம் சரியில்லே போல" என்று மனதில் வருந்திக்கொண்டே வெளியே வந்து ஒரு சோடா வாங்கி, அதில் ஒரு சொட்டைக் கூட  குடிக்காமல் அதாலேயே   முகம் கழுவிக்கொண்டு நெய்வேலி பேருந்து பிடித்து, கண்ணை அகல விரித்துப் பிடித்தபடியே  வீடு வந்தபோது நன்றாக விடிந்து விட்டிருந்தது.


இருபது வருடங்கள் ஆனாலும், இப்போதும் அப்பயணம் நினைவில் நிற்கிறது

31 கருத்துகள்:

 1. நல்ல பகிர்வு.கல்லூரி சுற்றுலா என்றாலே மிகவும் உற்சாகமான ஒன்று தான்

  பதிலளிநீக்கு
 2. சுத்தம் செய்யும் தொழிலாளி உங்களைச் சத்தம் போட்டது தான் ஹைலைட்டான விஷயம், அந்த சுற்றுலாவை விட.

  பதிலளிநீக்கு
 3. நல்ல நினைவலைகள். அருமையாக எழுதியுள்ளீர்கள்..

  பதிலளிநீக்கு
 4. பஸ்டிப்போ திட்டு உங்களை சோடா கூட குடிக்க விடாம செஞ்சிடிச்சு போல இருக்கே!!

  ஃபீலிங்க்ஸ் ஆஃப் காலேஜுன்னாலே ஒரு சுகம்தான்.

  பதிலளிநீக்கு
 5. @@ உயிரோடை: மிக்க நன்றி லாவண்யா. மிகவும் ரசித்த ஒரு சுற்றுலா அது.

  @@ வை. கோபாலகிருஷ்ணன்: மிக்க நன்றி சார். உண்மைதான். இப்போது கூட பஸ்ஸில் பயணம் செய்யும்போது அந்த திட்டும் காட்சி மனதுக்கள் தானாகவே ரீவைண்ட் ஆகி ஓடிக்கொண்டு இருக்கும்.

  @@ அன்புடன் மலிக்கா: வருகைக்கு மிக்க நன்றி.

  @@ புதுகைத் தென்றல்: மிக்க நன்றி சகோ. அது கேட்ட பிறகு வீட்டிற்கு வந்து காப்பி குடிக்கும்போது கூட குமட்டிக்கொண்டு வந்தது அந்த நினைவு :)

  பதிலளிநீக்கு
 6. @வெங்கட்
  எல்லாம் சரி . தங்கமணிகிட்ட மாட்டமா இருக்கதான சோர்வில் தூக்கம்ன்னு சொன்னீங்க ?? நிஜமாவே பாண்டிச்சேரி சரக்கு செஞ்ச வேலைதானே ??

  பதிலளிநீக்கு
 7. @@ எல்.கே.: அடடா... இந்த உலகம் நம்பள நம்பலையே... :( பாண்டிச்சேரி போனவங்க எல்லாமே தண்ணி அடிச்சுட்டா வருவாங்க! :)))

  பதிலளிநீக்கு
 8. பாண்டிச்சேரிக் காற்றை சுவாசித்ததுமே ஃப்ளாட் ஆன ஆளை நாங்க நிறையப் பாத்துருக்கோம்ல. அது கிடக்கட்டும் கழுத, வுடுங்க.

  எங்களையும் மலரும் நினைவுகளுக்கு இட்டுச் சென்றதற்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 9. நல்ல பகிர்வு சார் ..
  உங்கள் பதிவை வாசிக்கும் போது
  எந்த இடத்திலும் அலுப்புத்தட்டவில்லை
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. வெங்கட் பணம் பத்திரமாய் இருந்ததா?

  எந்த நிகழ்வையும் பொறுப்பேற்று செய்தபின் வரும் நிம்மதி கலந்த அலுப்பிருக்கிறதே....அதன் சுகமே தனி தான்.

  பதிலளிநீக்கு
 11. @@ ஈஸ்வரன்: மிக்க நன்றி அண்ணாச்சி! நீங்களுமா, நடத்துங்க நடத்துங்க!!

  @@ கனாக்காதலன்: மிக்க நன்றி நண்பரே.

  @@ தேவராஜ் விட்டலன்: உங்கள் வாழ்த்துகள் என்னை மகிழ்வித்தது. மிக்க நன்றி விட்டலன்.

  @@ ஸ்வர்ணரேக்கா: வடிவேலு குரல்ல, ரொம்ப டெரர்ரா இருக்கு! என் குரலிலேயே படிச்சுட்டேன் :) மிக்க நன்றி!

  @@ கலாநேசன்: பணம் பத்திரமாக இருந்தது! அந்த மகிழ்ச்சியில் திட்டு வாங்கினது அவ்வளவு வலிக்கவில்லை! மிக்க நன்றி கலாநேசன்.

  பதிலளிநீக்கு
 12. உங்களின் பதிவின் தலைப்பும் அனுபவமும் எல்லோருக்குமான பொது உண்மையைச் சொல்லுகிறது! எத்தனைக் காலம் கழிந்தாலும் இள‌மைப்பருவத்து கல்லூரி நினைவுகளை மறக்க இயலுமா?

  பதிலளிநீக்கு
 13. பொறுப்பான ராஜ்.சோடாவில் முகம் கழுவினீங்களா.ஒரு நாள் கழுவி பாக்கணும்.

  பதிலளிநீக்கு
 14. @@ மனோ சாமிநாதன்: மிக்க நன்றி சகோ. எல்லோருக்கும் இருக்கும் இந்த மறக்கமுடியாத சுற்றுலா அனுபவம்.

  @@ அமுதா கிருஷ்ணா: சோடாவில் முகம் கழுவும் பழக்கம் ஆந்திராவில் கற்றுக் கொண்டது. சிறு வயதில் அங்கே சென்றபோது பார்த்திருக்கிறேன் - 25 பைசாவுக்குக் கோலி சோடா வாங்கி, பாதியில் முகம் கழுவி, பாதி குடிப்பார்கள் நல்ல வெயில் காலத்தில் :) மிக்க நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 15. இது மனச்சுரங்கத்தில் அடங்காதா?
  கல்லூரிச் சுரங்கமா?
  டூர் பேரா. கல்யாணத்திற்கு முன்னா இல்லை பின்னா?
  நிஜமாகவே பாண்டியில் எதுவும் நடக்கலையா?
  ;-) ;-) ;-)
  (ச்சே.. எவ்வளவு கேள்விகள்.. ப்லோகை படிச்சோமா பகிர்வுக்கு நன்றி போடுவோமான்னு இல்லாம.... )

  பதிலளிநீக்கு
 16. பனை மரத்துக்கடியில நின்னு பால் குடிச்சாலும் கள்ளு தான் அது சொல்றமாதிரி .....பாண்டிச்சேரின்னாலே தண்ணி தான் ஞாபகம் வரும் ... சுற்றிய ஊர்கள் அனைத்தும் சுகமானவை ...ஆழியாரும் குரங்கு நீர்விழ்ச்சியும் விட்டு வரவே மனம் வராது ...

  பதிலளிநீக்கு
 17. தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று குறிப்பிடுவது போல் உள்ள கும்பிடும் படம் அற்புதம்.

  கை பை நிறைய பணம் பத்திரமாய் இருந்தது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

  ஆயுசுக்கும் மறக்க முடியாத பயணம் தான் வெங்கட்.

  பதிலளிநீக்கு
 18. @@ RVS: ஆஹா எத்தனை கேள்விகள். “எனக்குக் கேட்க மட்டும்தான் தெரியும்”னு திருவிளையாடல் நாகேஷ் சொல்றமாதிரி.

  1. மனச்சுரங்கத்திலிருந்து எழுதுவதற்கு முன்பே இது எழுதி வைத்தது. நேற்று தான் பதிவேற்றினேன்.

  2. கல்லூரிச் சுரங்கத்திலிருந்துன்னு இன்னொரு சுரங்கமா? தாங்காதுன்னு நிறைய பேர் ஓட அணியம்!

  3. கல்யாணத்திற்கு முன்னர் தான் [நீங்கள் கல்யாணம் ஆனபிறகுதான் கல்லூரியில் படித்தீர்களா?]

  அய்யய்யோ எத்தனை கேள்வி, எத்தனை பதில்....

  பதிலளிநீக்கு
 19. @@ பத்மநாபன்: மிக்க நன்றி நண்பரே.. மிக நல்ல ஊர்கள் எல்லாமே. இனிய நினைவுகள் மனதிலே....

  @@ கோமதி அரசு: மிக்க நன்றிம்மா. சுற்றுலாவில் கிடைத்த மகிழ்ச்சி போலவே பணப்பை பத்திரமாய் இருந்ததிலும் இரட்டிப்பு மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 20. மறக்கமுடியாத இனிய பள்ளிச் சுற்றுலா.

  பதிலளிநீக்கு
 21. நான் கேட்டது பேராசிரியரின் கல்யாணத்திற்கு முன்பு டூர் அடித்தீர்களா அல்லது அட்டென்ட் செய்துவிட்டு ஊர் சுற்றினீர்களா என்று.. கல்யாணத்திற்கு அப்புறம் எங்கே படிப்பது? என்ன படிப்பது? என்று நீங்கள் சொல்லிக்கொடுத்தால் அடியேன் படிப்பேன்!!! ;-))))) LOL ......

  பதிலளிநீக்கு
 22. @@ மாதேவி: மிக்க நன்றி சகோ. அது பள்ளிச் சுற்றுலா அல்ல :) கல்லூரியில் படித்த [!] போது சென்ற சுற்றுலா.

  @@ RVS: டூர் - கல்யாணம் - டூர் என தொடர்ந்தது! நன்றி. கேள்வியெல்லாம், புரியற மாதிரி சரியா கேட்கணும்! சரியா...

  பதிலளிநீக்கு
 23. //@@ RVS: டூர் - கல்யாணம் - டூர் என தொடர்ந்தது! நன்றி. கேள்வியெல்லாம், புரியற மாதிரி சரியா கேட்கணும்! சரியா...//

  இதே கேள்விய பரீட்சையில கேட்க முடியுமா? சும்மா.. டென்ஷன் ஆகாதீங்க.. ஹி ஹி ஹி ....... ;-) ;-)

  பதிலளிநீக்கு
 24. அட இப்பதான் பார்க்கிறேன்,ரசித்த பாடல் கேட்டுட்டு இதை விட்டுட்டேன் போல..அருமையான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 25. நல்லாயிருக்கு வெங்கட்... உங்க அனுபவங்கள் எங்களுக்கெல்லாம் இலவச(பயனுள்ள) பாடம்! அணில் வணக்கம் வெகு அழகு!

  பதிலளிநீக்கு
 26. @@ நிலாமகள்: நம் எல்லோருக்குமே விதவிதமான அனுபவங்கள்! அவை எல்லாமே பாடங்கள்தானே! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....