எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, January 31, 2011

[G]கூமர் நடனம்சில மாதங்களுக்கு முன் ”கத்புத்லி” என்ற இடுகையில் ராஜஸ்தானிய நடனமான ”[G]கூமர் நடனம்” பற்றி பின்னர் எழுதுகிறேன் என்று எழுதியிருந்தேன். அதற்கு இப்போது தான் வேளை வந்திருக்கிறது! [”சோம்பேறித்தனம் என்று சொல்லாமல் இப்படி ஒரு சமாளிப்பு தேவையா?” என்று யாரோ முணுமுணுப்பது கேட்கிறது!]

”[G]கூமர் நடனம்” என்பது ராஜஸ்தானிய பெண்களால் அவர்கள் ஊரில் நடக்கும் திருவிழா, கண்காட்சி போன்ற இடங்களில் ஆடப்படும் ஒரு வகை நடனம். இதை ஆடும் பெண்கள், பல சுருக்கங்கள் வைத்து, கண்ணாடி வேலைப்பாடு செய்த நீண்ட பாவாடையும் சட்டையும் [Ghagra-Choli] போட்டுக் கொண்டுச் சுற்றிச் சுற்றி ஆடுவார்கள். தாளத்திற்கு ஏற்ப அவர்கள் அப்படி ஆடும்போது அவர்கள் காட்டும் வேகம் சில சமயங்களில் சுழல் காற்றைப் போல இருக்கும். YOUTUBE-ல் கிடைத்த ஒரு [G]கூமர் நடனத்தின் காணொளி கீழே.


எந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடுகிறார்களோ அதற்கு ஏற்றார்ப் போல அவர்களது கால்கள் இடும் தாளங்களும் மாறுபடும். கைகளைச் சுற்றியும், நடுநடுவே கை கொட்டியும், தலையின் மேலே மூன்று-நான்கு மண்பானைகளை வைத்தவாறும் ஆடும் இந்த ஆட்டம் மாலையில் ஆரம்பித்து சில சமயங்களில் நடுநிசி வரை கூட நடக்குமாம்! சமயங்களில் தரையில் இரு குவளையை வைத்து அதன் மேல் இரு கால்களை வைத்து நின்றபடி கூட ஆடுகின்றனர்.

அவர்களுடைய ஆட்டம் காண்பவர்களையும் ஆடத்தூண்டும் விதமாக இருக்கும். சில விழாக்களில் நான் இந்த நடனத்தினைக் கண்டு களித்திருக்கிறேன். ஒரு ஜெய்ப்பூர் பயணத்தின் போது மாலை வேளையில் நடந்த இந்த நடனத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு வெளி நாட்டைச் சேர்ந்தவரும் அவர் மனைவியும் இதில் ரொம்பவே மெய்மறந்து அவர்களுடன் ஆட ஆரம்பித்து விட்டனர்.

அந்த வெளிநாட்டுத் தம்பதி ராஜஸ்தானிய நடனக் கலைஞர்களின் ஒவ்வொரு நடன அசைவுகளையும் தொடர முயல, உற்சாகத்தில் கலைஞர்கள் இன்னும் கடினமான நடன அசைவுகளைத் தர, அதையும் இவர்கள் தொடர என உற்சாகமான ஒரு போட்டி நடந்தேறியது. குழுமியிருந்த அத்தனை பேரும் இந்த போட்டி நடனத்தினை ரசித்தனர்.

அந்த நடனத்தினை நான் எடுத்த காணொளி உங்களுக்காய் கீழே. மாலை வேளை, மற்றும் குறைந்த வெளிச்சம் என்பதால், காணொளியில் அவ்வளவாக வெளிச்சம் இல்லை! நீங்கள் நிச்சயம் இந்த நடனத்தினைப் பார்த்து ரசிப்பீர்கள் என நினைக்கிறேன்.


மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கிறேன்.

25 comments:

 1. முதல் விடியோ நளினத்தின் சிகரம்.அந்த நடனத் தாரகையின் அசைவுகளில் வீழ்ந்து கிடக்கிறேன் நாகராஜ்.

  பின்னது ஸ்வாரஸ்யம்.

  பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
 2. ஜாலியா எஞ்சாய் செய்திருக்காங்க அந்த ஜோடி ..

  சபாஷ் சரியான போட்டி..:)

  ReplyDelete
 3. அடடா அருமை. பகிர்வுக்கு நன்றிங்க !

  ReplyDelete
 4. வித்யாசமான அனுபவம் நன்றி வெங்கட்

  ReplyDelete
 5. இண்ட்லியில் 4 வது வோட்டை 5 ஆவதாக மாற்றி விட்டேன். பதிவு மிகவும் அருமையாக, ஆனந்தமாக, என்னையும் ஆடச்செய்யும்படி ஆட்டி வைத்தது. மகிழ்ச்சியைப் பகிர்ந்ததற்கு மகிழ்ச்சி !

  ReplyDelete
 6. இதெல்லாம் டிவியில் ஏதாவது இந்திப்படப் பாடல்களில் பார்த்திருப்பேன் ஐயா. பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 7. டான்ஸ் நல்லான் இருக்குஅடுத்த முறை லைட் போட்டு காடடுங்க

  ReplyDelete
 8. டான்ஸ் பார்த்தாச்சி..
  கூமர் பார்த்தாச்சி அடுத்து என்ன..

  ReplyDelete
 9. நம்மூரு பாசையில சொன்னா , வெள்ளைகார ஜோடி பட்டை கெளப்பிட்டாங்க...

  இதை குதூகலமா பகிர்ந்ததுக்கு நன்றிங்க..

  ReplyDelete
 10. இசைக்கும் ஆட்டத்திற்கும் மயங்காதவர் யார்.. நம்மை அறியாமல் மனசுக்குள் ஜதி கேட்கும்.
  அழகான பதிவு.

  ReplyDelete
 11. அந்த தம்பதி அருமையாய் ஆடுகிறார்கள்.நல்ல பகிர்வு.

  ReplyDelete
 12. அந்த வெ.ஜோடி நடுவில பாம்பு டான்ஸ் மாதிரி எல்லாம் ஆடி... ஹிப் ஹாக் டான்ஸ் ஆடறாங்க.... நம்ம குத்துப் பாடு நடிகைகள் கண்ணுல படாம பார்த்துக்கோங்க சார்! நல்ல ட்ட்ட்டான்ன்ன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!!! ;-)

  ReplyDelete
 13. அருமையான நடனம்.ராஜஸ்தானில் சுற்றுலாத்துறையின் சார்பில் பயணிகளுக்காக மாலை நேரத்தில் நடக்குமாமே.. அப்படியா!!!

  ReplyDelete
 14. சபாஷ் சரியான போட்டி!சரியான பதிவு!
  சுவாரஸ்யமான பதிவுதான்
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 15. இந்தியாவிலேயே, நாம் தெரிந்து கொள்ள வேண்டிய கலைகள் எத்தனை இருக்கிறது!! மிகவும் அருமையான பகிர்வுங்க. நன்றி.

  ReplyDelete
 16. கூமர் நடனம் அருமை. வீடியோவில் காட்டி அசத்திட்டீங்க.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 17. சுழன்று சுழன்று ஆடும் கூமர் நடனம் மிகவும் அருமை.அறிமுகப்படுத்தியமைக்கு மகிழ்ச்சி.
  அந்த வெளி நாட்டி ஜோடி அசத்திட்டாஙக் சகோ.

  ReplyDelete
 18. கூமர் நடனம் அருமை. இசையும் நடனமும் அருமை.

  வெளிநாட்டுத் தம்பதிகளும் அருமையாக ஆடுகிறார்கள்.

  பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
 19. தங்கள் தளத்திற்கு முதன்முதலில் வருகிறேன்.
  கூமர் நடனம் மிகவும் அருமை.அறிமுகப்படுத்தியமைக்கு மகிழ்ச்சி.
  See,
  http://sakthistudycentre.blogspot.com/

  ReplyDelete
 20. @@ சுந்தர்ஜி: தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. உங்கள் கருத்து என்னை மகிழ்வித்தது.

  @@ முத்துலெட்சுமி: மிக்க நன்றி.

  @@ கனாக்காதலன்: மிக்க நன்றி நண்பரே.

  @@ எல்.கே.: உண்மைதான். மிக்க் நன்றி கார்த்திக்.

  @@ வை. கோபாலகிருஷ்ணன்: அந்த நடனம் சுமார் 10 நிமிடங்கள் இருந்தது! குறைவான வெளிச்சம் என்பதால் காணொளி கடைசி சில நிமிடங்கள் மட்டுமே எடுத்தேன். தங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி.

  @@ சேட்டைக்காரன்: நீங்கள் பார்த்திருக்கலாம் :) மிக்க நன்றி!

  #கவிதை வீதி# சௌந்தர்: உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

  @@ பாட்டு ரசிகன்: உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

  @@ பத்மநாபன்: நிஜம்தான் அப்படி ஒரு ஆட்டம்! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  @@ ரிஷபன்: மிக்க நன்றி சார்.

  @@ அமுதா கிருஷ்ணா: மிக்க நன்றி சகோ.

  @@ ஆர்.வி.எஸ்: நம்ம குத்துப்பாட்டு நடிகைகள் கண்ணுல பட்டா அவ்வளவுதான்! அவர்களை விட டைரக்டர்கள் கண்ணில் படக்கூடாது! அவர்களைக் கண்டுபிடித்து குத்துப் பாட்டிற்கு ஆடவிட்டாலும் விடுவார்கள் :) மிக்க நன்றி.

  @@ அமைதிச்சாரல்: ராஜஸ்தான் சுற்றுலாத் துறை அவர்களது கலை பற்றி நிறைய நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். நல்ல நடனம்! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  @@ ராஜி: தங்கள் வருகைக்குக் கருத்திற்கும் மிக்க நன்றி.

  @@ சித்ரா: ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோல பல கலைகள் புதைந்து கிடக்கின்றது. சரியாக அதை விளம்பரம் செய்யத்தான் நமது சுற்றுலாத் துறைக்கு அக்கறை இல்லை. மிக்க நன்றி.

  @@ ஜிஜி: உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  @@ ஆசியா உமர்: ரசித்தமைக்கு மிக்க நன்றி சகோ.

  @@ கோமதி அரசு: மிக்க நன்றிம்மா!

  @@ சே. குமார்: மிக்க நன்றி நண்பரே.

  @@ ஜோஜோ: உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்!!

  இந்த பகிர்வுக்கு இண்ட்லி மற்றும் தமிழ்மணத்தில் வாக்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 21. ராஜஸ்தானின் அருங்கலைகளை அற்புதமாக அறிமுகப்படுத்துகிறீர்கள். வாழ்த்துக்கள். வாழ்க! வளர்க!

  (உங்களை ராஜஸ்தான் சுற்றுலாத் துறையின் அம்பாஸடர்காராக - ஸாரி - அம்பாஸடர்காரராக, அதான் ஸார், தூதுவராக (Brand(y) Ambassador) நியமிக்க பரிந்துரைக்கிறோம்.

  ReplyDelete
 22. @@ ஈஸ்வரன்: அண்ணாச்சி இந்த அம்பாசடர் கார் எனக்குப் பிடிக்காது. அதுனால ஏதாவது புது காரா இருந்தா போட்டுக் கொடுங்க!

  ReplyDelete
 23. பாட்டும் விசிலும் கைதட்டலும் சூழ் இருளும் ... நேரில் கண்டு ரசித்த உணர்வு!! பண்பாடு சற்றும் குலையாத ஆடையலங்காரம் சுழன்றாடிய நடன மாதுக்கு மேலும் அழகு சேர்த்தது... mikka நன்றி வெங்கட்!!

  ReplyDelete
 24. @@ நிலாமகள்: நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் கருத்துரை. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....