தொகுப்புகள்

செவ்வாய், 18 மார்ச், 2014

மாங்காய் இஞ்சி....



எனக்கு புளிப்பா எதாவது சாப்பிடணும்போல இருக்குங்க!என்று கல்யாணமான பெண் ஒரு சில மாதங்கள் கழித்து சொல்லும்போது அடிக்கள்ளி என் கிட்ட சொல்லவே இல்லையே....  எத்தனை மாசம்?என்று கேட்பதை அடிக்கடி கேட்டிருக்கிறோம். அப்படி ஒரு கேள்வியை என்னைப் பார்த்து யாராவது கேட்டு விடுவார்களோ என்று பயமிருந்தாலும் உங்களுடன் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன்....  அதான் சொல்லி விடுகிறேன் –

‘எனக்கு மாங்கா இஞ்சி சாப்பிடணும்போல இருக்கு!



சென்ற முறை தமிழகம் சென்றபோது திருவரங்கத்தில் மாங்கா இஞ்சி விற்றுக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர். அப்போது சொன்னது தான் இது! உடனே கால் கிலோ வாங்கிக் கொண்டார் தர்மபத்தினி..... வீட்டிற்கு வந்து ஃப்ரிட்ஜில் வைத்து மறந்தும் போனார்!  தில்லி வந்த பிறகு தான் மாங்காய் இஞ்சியை சாப்பிடாமலே வந்து விட்டோமே என்று தோன்றியது. இங்கே தில்லியில் சாதாரணமான இஞ்சி தான் கிடைக்கும் மீண்டும் மாங்காய் இஞ்சி வேண்டுமென்றால் தமிழகத்திற்குத் தான் போக வேண்டும்! சரிடா உனக்கு வாய்த்தது அவ்வளவு தான்! அடுத்த பயணம் வரை சப்புக்கொட்டிட்டு இருடா!என மனதைத் தேற்றிக் கொண்டேன்.

மாங்காய் இஞ்சி வாங்கி சாப்பிடதான் இல்லை, கண்ணார பார்க்கவாது செய்யலாம்ன்னு கூகிள்-ல தேடினா நிறைய பதிவர்கள் மாங்காய் இஞ்சி வைத்து என்னென்ன செய்யலாம்னு எழுதி இருக்காங்க! இது ஏற்கனவே பசியோட இருக்கவறன் கிட்ட ஒரு பெரிய விருந்துக்கு போய்ட்டு வந்து அதோட சிறப்பையும், அங்கே அவர் ருசிச்சு சாப்பிட்ட சாப்பாடு பத்தியும் சொல்லி வெறுப்பேத்தினா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு! ஆனாலும் அத்தனையும் ஒரு பக்கத்திலே சேர்த்து வைச்சுருக்கேன்! அடுத்த முறை ஊருக்கு போகும்போது இருக்கு! மாங்காய் இஞ்சி.....  Here I come!” அப்படின்னு கத்தி கூப்பாடு போட்டுக்கிட்டே தான் போகப் போறேன் ஊருக்கு!



நம்ம காமாட்சிம்மா மாங்காய் இஞ்சி பிசறல்அப்படின்னு ஒரு பதிவு எழுதி இருக்காங்க! என்ன மாதிரி ஆளுக்காகவே செஞ்சது போல இருக்கு! பாருங்களேன்! பார்க்கவே எவ்வளவு வண்ணமயமாக இருக்கிறது இந்த பிசறல்! ம்ம்.....  ஹார்லிக்ஸ் விளம்பரத்துல வர மாதிரி விட்டா நான் அப்படியே சாப்பிடுவேன்!ந்னு சொல்லத் தோணுது!

இந்த மாதிரி ஆளுக்கு மாங்காய் இஞ்சி ஊறுகாய் கிடைச்சா என்னாகும்! சனிக்கிழமை காலை வீட்டின் அருகில் இருக்கும் தால்கடோரா பூங்காவில் நண்பருடன் Walking சென்றேன். திரும்பி வரும்போது ஊர்லேருந்து சொந்தக்காரர் ஒருத்தர் ஊறுகாய் கொண்டு வந்தார், இந்தாங்க உங்களுக்கு ஒரு பாட்டில்எனக் கொடுத்தார் – கொடுத்தது மாங்காய் இஞ்சி ஊறுகாய்! கொடுத்தது இந்த சனிக்கிழமை. இன்று செவ்வாய் கிழமை.. அதாவது நான்கு நாட்கள் கூட ஆகவில்லை! அதற்குள் அரை பாட்டில் காலி!



விரைவில் தீர்ந்து விடும் ஆபத்து இருக்கிறது! போக வர ஒரு ஸ்பூன் மாங்காய் இஞ்சி ஊறுகாய் சாப்பிட்டால் தீராமலா இருக்கும்! நண்பரிடமும், “Excuse me….  இன்னொரு பாட்டில் மாங்காய் இஞ்சி ஊறுகாய் கிடைக்குமா?என்று கேட்கமுடியாது! அதனால தமிழகத்தில் இருக்கும் எல்லா பதிவர்களுக்கும் ஒரு வேண்டுகோள்! ஆளுக்கு ஒரு அரை கிலோ மாங்காய் இஞ்சி வாங்கி தில்லிக்கு அனுப்ப முடியுமா?

சரி சரி.....  மதுரைத் தமிழன் கோபத்தோடு வந்து “ஏன் உங்களுக்கு இந்த கொலவெறி.... காலங்கார்த்தாலே உங்க ஆசையைச் சொன்னதோடு எனக்கும் ஆசை வரவைக்கறீங்க!அப்படின்னு கேட்டுடப் போறார்.... அதுனால, தில்லிக்கு அனுப்பற மாங்காய் இஞ்சில ஒரு பர்சண்ட் அமெரிக்காவிற்கும் அனுப்பி வைக்க உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்!

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை..... 

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.



66 கருத்துகள்:

  1. //மதுரைத் தமிழன் கோபத்தோடு வந்து “ஏன் உங்களுக்கு இந்த கொலவெறி.... காலங்கார்த்தாலே உங்க ஆசையைச் சொன்னதோடு எனக்கும் ஆசை வரவைக்கறீங்க!”// எனக்கு தலைப்பை பார்த்ததுமே அதுதான் தோணுச்சு!! இதோ இப்பவே போய் வாங்கபோறேன். but ஒரு health அட்வைஸ் ஊறுகாய் அதிக உப்பு,எண்ணெய் கொலஸ்ட்ரால். so சகோ //போக வர ஒரு ஸ்பூன் மாங்காய் இஞ்சி ஊறுகாய் சாப்பிட்டால் தீராமலா இருக்கும்!// சரியா ? சிந்திக்கவும். தப்புனா மன்னிக்கவும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிவுரைக்கு நன்றி மைதிலி...... தப்பாக நினைக்கவில்லை! அதிகம் சாப்பிடுவதில்லை இப்போது. :))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ஹாஹாஹா, மாங்காய் இஞ்சி, இஞ்சி, காரட், மாங்காய் சேர்த்து ஊறுகாய் போடலாமே! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  3. //ஆளுக்கு ஒரு அரை கிலோ மாங்காய் இஞ்சி வாங்கி தில்லிக்கு அனுப்ப முடியுமா?

    வாங்கி அனுப்ப நாங்கள் தயார். அரை கிலோ போதுமா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பிற்கு நன்றி.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.....

      நீக்கு
  4. இது என்னடா வம்பாபோச்சு ,நமக்கே இஞ்சி மாங்காய்க்கு வழியில்லே இவர் வேறு என்று காலை யிலேயே இஞ்சி தின்ன ..........மாதிரி முழிச்சிகிட்டு வைச்சிட்டீங்களே!
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  5. மதுரைத் தமிழன் கண்டிப்பாக கேட்பார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. என் கணவரும் மாங்காய் இஞ்சி பிரியர். அதனால் காய்கறிக்காரர் கொடுத்த 200 கிராம் மாஇஞ்சியை (அவரிடம் அவ்வளவுதான் இருந்தது)தினம் ஒன்று வெட்டி ஊறுகாய் போட்டு தருகிறேன்.

    காமாட்சி அக்கா மாங்காய் இஞ்சி பிசறல் பார்க்கிறேன். படம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

      நீக்கு
  7. நேத்துதான் - மாங்காய் இஞ்சி ஊறுகாய் வாங்கி வந்தேன்...
    அதற்குள் - பதிவுலகில் படத்தோடு வந்து விட்டது!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ....

      நீக்கு
  8. ஒரு டிப்ஸ்.. மாங்காய் இஞ்சியுடன் தவறாமல் மிளகு காயாக கலந்து சாப்பிட்டால், மாங்காய் இஞ்சியின் பித்தம் ஓடிவிடும்.. இல்லையேல் உடம்புக்கு ஆகாது!

    சுவையும் நன்றாக இருக்கும். பல வருடங்களாகிவிட்டது சாப்பிட்டு.. ஞாபகப் 'படுத்தி' விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பந்து ஜி!

      தாங்கள் தந்த கூடுதல் தகவலுக்கும் நன்றி!

      நீக்கு
  9. அலாதி ருசி என்றாலும் அளவோடு ஊறுகாய் எடுத்துக் கொள்வதன்றோ நலம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் இரண்டு நாட்கள் அதிகமான ஆசை இருந்தது. இப்போது அளவோடு தான் உண்கிறேன்! தங்களது அன்பிற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  10. நான், கணேஷ் அண்ணா, ரூபக், சீனு, ஆவி, ஸ்பை, மனோ, விக்கி அண்ணா, ஆஃபீசர் சார், அரசன், சிவக்குமார், சசிகலா, ரிசபன் சார், கிரேஸ், மதுரை தமிழன்னு ஆளுக்கொரு அரைக் கிலோ பாட்டில் வாங்குனாலும் குறைஞ்சது 25 கிலோ ஊறுகாய் பாட்டில் வரும். இது போதுமா உங்க ஆசைக்கு!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ரொம்ப ஓவர் ஆசை.. இருந்தாலும் எல்லோரும் ஒரே சமயத்தில் அனுப்பாமல், மாதத்திற்கு ஒருவராக அனுப்பலாம்! யார் எந்த மாதம் அனுப்புவது என்ற அட்டவணையை நீங்களே போட்டுக் கொடுத்துவிடுங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  11. நல்ல தகவல் சுவைத்துபார்க்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இன்றையவானம்.

      நீக்கு
  12. மாங்காய் இஞ்சிக்கே ஒரு பதிவா.? எப்பவாவது சாப்பிட்டால் ருசி தனிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்......

      நீக்கு
  13. மாங்காய் இஞ்சி மகாத்மியம் அருமை..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகாத்மியம்! :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  14. “Excuse me…. இன்னொரு பாட்டில் மாங்காய் இஞ்சி ஊறுகாய் கிடைக்குமா?”

    Sure !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.

      நீக்கு
  15. மாங்கா இஞ்சியின் மேல் இத்தனை பிரியமா?
    அதன் வாசனையே அலாதி தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா..

      நீக்கு
  16. ஆகா ...உண்டது போதாமல் வாயில் எச்சில் ஊறும் அளவிற்கு
    ஆக்கம் வெளியிட்ட அன்புச் சகோதரர் இல்லை இல்லை அன்பே இல்லாத
    இந்தச் சகோதரருக்குத் தக்க தண்டனையை நிறைவேற்று மாறு எங்கள்
    பதிவுலக சொந்தங்களுக்கு உத்தரவிடுகின்றேன் ! (:)))) )

    வாழ்த்துக்கள் சகோதரா ஆசை யாரைத் தான் விட்டது முடிந்தால் சுவிஸ்
    நாட்டில் இருந்து இஞ்சி வாங்கி அனுப்புகின்றேன் பெற்றுக் கொள்ளுங்கள் :)
    த.ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட தண்டனை வேறா..... சரி தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

      நீக்கு
  17. ரா.ஈ. பத்மநாபன்18 மார்ச், 2014 அன்று 2:03 PM

    இந்த மாதிரி உங்களுக்கு ஆசை வரும் என்று எதிர்பார்த்தேன். அப்படியே அண்ணன் திருப்பதி அவர்களுக்கும் ஒரு பாட்டில் ஒதுக்கி வையுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணன் திருப்பதி! அது யாரப்பா?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி!

      நீக்கு
  18. மாங்காய் இஞ்சி! எங்கள் ஊரிலும் இப்போது கிடைப்பதில்லை! திருச்சி பக்கம் வரும்போது பிடிச்சிட்டு வந்துர வேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  19. மாங்கய் இஞ்சி,எலுமிச்சம்பழம்,பச்சை மிளகு கூட்டணீ வாய்க்கு மிக ஆரோக்கியம். ஃப்ரிட்ஜில் தான் வைக்கணும். எனக்கு மகன் லண்டனில் இருந்து வாங்கி வந்திருந்தான். ஒரு கிலோவையும் இங்க இருக்கிற பெண்ணின் தோழிகளுக்குப் பிருத்துக் கொடுத்து விட்டேன். கண்டேன் கண்டேன் என்று கொண்டு போனதுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

      நீக்கு
  20. நானும் இந்தியா வந்திருந்த போது மாங்காய் இஞ்சி ஊறுகாய் வாங்கிவந்து
    ஆசையுடன் திறந்து சாப்பிட்டேன்.. நல்லாவே இல்லை.
    அம்மாவிடம் கொடுத்து ருசி பார்க்கச் சொன்னேன். கடைசியில்
    அது மாஞ்காய் இஞ்சி ஊறுகாய் இல்லையாம்.
    அது மாங்காயையும் இஞ்சியையும் தனித்தனியாகத் துருவி செய்ததாம்.

    ஒரே இஞ்சி காரம்.

    ஆமாம்.... மாங்காய் இஞ்சியில் எப்படி மாங்காய் வாசனை வருகிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  21. எனக்கு மிகவும் பிடித்த மாங்காய் இஞ்சியை புதுவையில் தேட ஆரம்பித்துவிட்டேன்! நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  22. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  23. என்னோட தோழி ஒருவர் வருடாவருடம் மோரில் போட்ட மா இஞ்சி செய்து தருவார்... தயிர் சாப்பாட்டிற்கு செம காம்பினேஷன்... அவருக்கு உடல் நிலை சரியில்லாததால் இப்ப இரண்டு வருடமா கிடைப்பதில்லைன்னு வருத்தமா இருக்கேன் நீங்க வேற ஞாபகப்படுத்திட்டீங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

      நீக்கு
  24. ஆகா
    அரை கிலோ என்ன, அரை மூட்டையே அனுப்ப ரெடி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா...

      நீக்கு
  25. பதில்கள்
    1. தமிழ் மணம் ஒன்பதாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  26. மாங்கா இஞ்சி பார்த்தாலே சாப்பிடத் தோன்றுகிறது.எப்படியோ ஸ்ரீரங்கத்தில் விட்ட மங்கா இஞ்சி டெல்லிக்கு துரத்திக் கொண்டு ஊறுகாயாய் வந்து விட்டதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

      நீக்கு
  27. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  28. அண்ணே !
    பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  29. சுவையான பகிர்வு!

    மாங்கா என்று தமிழில் வசைச் சொல் உண்டு! அதே போல இஞ்சி (சுக்கு) என்று மலையாளத்தில் வசைச் சொல் உண்டு. (சம்பந்தமில்லாமல் நினைவு வந்தது!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  30. நம்ம காமாட்சி அம்மா அப்படியே மனம் நெகிழ்து விட்டது. உடல் நலம் ஸரியில்லை. சென்னை வந்திருக்கிறேன். மிக்க நன்றி. ஆதிக்கும் சொல்லுங்கள். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடல் நலத்தினைப் பார்த்துக் கொள்ளவும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா...

      நீக்கு
  31. ஆஹா, நான் தமிழகத்தில் இருக்கும்போது, உங்கள் பதிவையாவது பார்த்திருக்கணும் போல, மிஸ் பண்ணிட்டேனே !!!!!
    அதனால, அடுத்த தடவை, நீங்க தமிழகம் போய் வாங்கும்போது, எனக்கு ஒரு பாட்டில் பார்சல்.... பண்ணிடுங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பாட்டில் பார்சல் பண்ணா போதுமா சொக்கன் சுப்ரமணியன் - இரண்டாகவே அனுப்பி வைக்கிறேன்!

      நீக்கு
    2. இவ்வளவு நல்ல மனசா உங்களுக்கு!!!. இப்போதைக்கு இந்த மாங்காய் இஞ்சி ஒரு பாட்டில் போதும், வேற ஏதாவது ரொம்ப விலை உயர்ந்ததா இருந்தா ரெண்டு இல்ல மூன்று அனுப்பிவிடுங்க.

      நீக்கு
    3. ஓகே... என்ன வேணுமோ சொல்லுங்க! நமக்கு கொஞ்சம் விசாலமான மனசு! :))))

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....