தொகுப்புகள்

வியாழன், 6 மார்ச், 2014

சாப்பாட்டுராமி...



 பட உதவி: கூகிள்....

பொதுவா நிறைய சாப்பிடுபவர்களை சாப்பாட்டு ராமன் என்று அழைப்பது வழக்கம் – அது என்னவோ ஆண்கள் மட்டுமே நிறைய சாப்பிட மாதிரி இருக்கே, பெண்கள் நிறைய சாப்பிட மாட்டார்களா? என்று ஒரு கேள்வி சில சமயங்களில் ஆண்களின் மனதில் தோன்றி இருக்கக் கூடும் இல்லையா? ஒரு பெண்ணைக் கூட சாப்பாட்டு ராமி என்று சொல்லி கேள்விப் பட்டதுண்டா?

சமீபத்திய ஒரு பயணத்தில், சென்னையிலிருந்து திருவரங்கம் சென்று கொண்டிருந்தேன். நான் பயணித்தது பல்லவன் விரைவு ரயிலில் – அதுவும் PC1 எனும் பெட்டியில் – அந்த பெட்டியில் பாதியில் உணவகமும் மீதியில் பயணிகள் இருக்கைகளும் இருக்கும். இந்த பெட்டியில் எப்போதும் ஏதாவது ஒரு உணவின் வாசனையோ/நாற்றமோ வந்து கொண்டிருக்கும் – கூடவே சமையலறைக்கே உரிய எண்ணை புகையும்! அந்த பெட்டியில் ஒரு ஜன்னலோர இருக்கையில் கையில் புத்தகத்தோடு நான் அமர்ந்திருந்தேன். ஆனால் படிக்க முடியவில்லை – அதை விட சுவாரஸ்யமான காட்சிகள் இருக்க எங்கே படிப்பது!

எனது எதிர் இருக்கைகளில் ஒரு குடும்பம் – கணவன், மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள். பார்க்கும்போதே நல்ல ஆரோக்யமான குடும்பம் என்று தெரிந்து கொள்ளும்படியான உருவம் – ஹிந்தியில் இப்படி இருப்பவர்களை “அட்டா [G]கட்டாவா இருக்காங்க என்று சொல்வார்கள்.  உள்ளே வரும்போது அவர்களது உடமைகள் தவிர ஒரு கட்டை பை நிறைய நொறுக்குத்தீனி எடுத்து வந்தார்கள் –ஐந்து, ஆறு மணி நேர பயணத்தில் பொழுது போக வேண்டாமா?

எழும்பூரிலிருந்து தாம்பரம் கூட தாண்டியிருக்காது வண்டி – அவர்களின் உணவு வேட்டை ஆரம்பித்தது. சின்னப் பெண் பையிலிருந்து குர்குரே போன்ற எதையோ எடுத்தார், உடனே அவளது அண்ணன் இன்னுமொரு நொறுக்ஸ் எடுத்தார் – உடனே அம்மா பாய்ந்து வந்து, “டேய், அது எனக்கு வாங்கி வைச்ச Flavor.  உன்னோடது ப்ளைன் தான்... அது சாப்பிடு என்னோடது எடுக்காதேஎன்று கையிலிருந்து பிடுங்கி தன் மடியில் வைத்துக் கொண்டார்.

ஐந்து நிமிடங்களில் மூன்று பாக்கெட்டுகள் காலி.... அடுத்து கொஞ்சம் குளிர்பானம். கொஞ்சம் கொஞ்சமாக உணவகத்திலிருந்து, உணவு வகைகளின் உலா ஆரம்பித்திருந்தது – மசால் வடை, பருப்பு வடை, உளுந்து வடை, மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, தோசை, பொங்கல், கேசரி, போளி, ப்ரெட் ஆம்லெட் என எத்தனை எத்தனை விதமான உணவுப் பொருட்களின் உலா தொடர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு பொருள் வரும்போதும், அம்மா தனது பிள்ளைகளிடம் அந்தந்த உணவினை சாப்பிடுகிறாயா என்று கேட்பதும், அப்பா எதுக்கு என்று கேட்பதும், சில பொருட்களை அம்மா ஒரு முறைப்புடன் வாங்குவதும் தொடர்ந்தது.

குழந்தைகளை சாப்பிடுகிறாயா எனக் கேட்டாலும் அத்தனையையும் அவர் சாப்பிட்டு விட்டு தான் குழந்தைகளுக்குக் கொடுத்தார். மகனிடம் கொடுப்பதற்கு முன் பாதியைச் சாப்பிட்டு தான் கொடுத்தார். மகளோ, முழுவதும் எடுத்துக் கொண்டுவிட, அவரிடம் “ஏய், நீயே சாப்பிடறயே, அம்மாக்கு! அண்ணன் பாரு எனக்குக் கொடுத்தான், நீ குடுக்க மாட்ட!என்று சொல்வதோடு மகளின் கையிலிருந்து பிடுங்கி விடுவார் போல இருந்தது. ப்ரெட் ஆம்லெட் சாப்பிடும் போது இந்த போட்டியில் சில துண்டுகள் மற்றவர்களின் மேலும் விழுந்தது!

பொதுவாகவே இந்த ப்ரெட் ஆம்லெட் என்பது இரண்டு ப்ரெட் ஸ்லைஸ்களுக்கு நடுவே ஆம்லெட் வைத்து சாப்பிட வேண்டும்.  ஆனால் இவர்கள் இரண்டு ஸ்லைஸ்களை வைத்து அதன் மேல் ஆம்லெட் வைத்து சாப்பிட, ஆம்லெட் துண்டுகள் அங்கும் இங்கும் இறைந்தபடி இருந்தது! இதில் இழுபறி போட்டி வேறு – சக பயணிகள் வாயைத் திறந்து வைத்துக் கொண்டிருந்தால் நிச்சயம் சில துண்டுகள் அவர்கள் வாயிலும் தானாகவே வந்து விழுந்திருக்கக் கூடும்!

இப்படி உணவு மட்டுமே உண்டு காலத்தினை ஓட்ட முடியுமா? அதற்கு மேலே திரவ உணவும் வேண்டுமே எனத் தோன்றும்போது வண்டியில் வரும் தேநீரை “ஏங்க, ஒரு கப் வாங்கி நம்ம இரண்டு பேரும் குடிக்கலாமா?என்று கேட்டுக் கொண்டிருந்தார் கணவனிடம். இந்த தேநீர் பற்றி சொல்லியே ஆக வேண்டும் – திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ, இந்த தேநீரில் தண்ணீர் கரை புரண்டு ஓடும் – பால் என்ற ஒன்று இதில் சேர்த்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றும்!

இதற்கிடையில் வண்டி விழுப்புரத்தினை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது அந்த பெண் தனது கணவரிடம் கட்டளை இட்டுக் கொண்டிருந்தார் – “நீங்க என்ன வாங்கித் தரீங்களோ இல்லையோ, விழுப்புரத்தில் வண்டி நின்றதும் அங்கே கிச்சடி வாங்கித் தரணும்! போன தடவையே வாங்கித் தரலை” என்று கேட்டுக் கொண்டிருந்தார்! அவரும் கடமை உணர்வோடு விழுப்புரம் ரயில் நிலையத்தில் தொன்னைகளில் உப்புமா/கிச்சடி, கைக்கு ஒன்றாக வாங்கி வந்தார். மீண்டும் ஒரு ஓட்டம் ஓடி இன்னும் இரண்டு தொன்னைகள் வாங்கி வருவதற்குள் முதல் இரண்டு தொன்னை கிச்சடிகள் கபளீகரம் ஆகிவிட்டன!

இப்படியாக சென்னை எழும்பூரிலிருந்து திருவரங்கம் வரை வரும் அத்தனை உணவு வகைகளையும் வாங்கிச் சாப்பிட்டபடியே இருந்தார்கள். உணவகத்திலிருந்து வெளிவரும் அத்தனை விற்பனையாளர்களும் இவர்களிடம் உணவுப் பொருட்களை காண்பித்து “சாப்பிடுங்க!என்று சொல்லும் அளவுக்கு பிரபலமாகி விட்டார்கள் இந்த பயணத்தில்!

இறங்குவதற்கு முன் – அப்பா கேரக்டர் சொன்னார் – வண்டியிலேயே நிறைய சாப்பிட்டாச்சு.... வீட்டுக்குப் போய் தூங்க வேண்டியது தான்!உடனே அம்மா கேரக்டர் சொன்னது தான் ஃபினிஷிங் பஞ்ச் – “என்னத்த சாப்பிட்டோம்..... ஒண்ணுமே சாப்பிடல! போகும்போது இட்லி மாவு வாங்கிக்கலாம் – ஆளுக்கு ஐந்து இட்லி சாப்பிட்டு படுக்கணும்! இல்லைன்னா நடு ராத்திரி பசிக்கும்!

இவரை ஏன் சாப்பாட்டு ராமி எனச் சொல்லக் கூடாது என்று எனக்குத் தோன்றியது – உங்களுக்கு?

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை...... 

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

68 கருத்துகள்:

  1. சரியான பெயர் தான்
    நானும் பல ராமிகள் சாப்பிடுவதைப் பார்த்து
    பிரமித்திருக்கிறேன்
    சுவாரஸ்யமான பதிவு
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  2. பதில்கள்
    1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  3. ஹைய்யோ!!!!! சிரிச்சு மாளலை.

    ரெண்டாவது பாராவில் பல்லவன் விரைவு பேருந்து போட்டு இருக்கீங்க! அதைப் பார்த்துட்டு அட! பஸ்ஸிலும் சாப்பாடு தயாராகுதான்னு பிரமிச்சுட்டேன். அப்புறம் 'விழுப்புரம் ரயில் நிலையத்தில்' என்பதை வாசித்ததும் இது ரயிலுன்னு மனசிலாயி:-)

    இந்த கேட்டரிங் கார் இருக்கும் ரயில்வண்டிகளில் நம்மை சாப்பாட்டு ராம, ராமிகளா ஆக்கிட்டுத்தான் மறுவேலை பார்க்கிறாங்க.

    ஒருமுறை சென்னை -பெங்களூரு ஷதாப்தியில் பயணம் செஞ்சப்ப சாப்பாட்டு வகைகளைப் பார்த்துப் பார்த்தே வயிறு நிறைஞ்சு போச்சுன்னா பாருங்க!

    நானும் இந்த வகையில் ஒரு ராமிதான்! பயணங்களில் (கண்ணால்) தின்னே தீர்த்துருவேன்:-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பிட்டதை பார்த்து மயங்கியதில் ரயிலுக்கு பதில் பேருந்துன்னு எழுதிட்டேன்! :)))

      இப்ப திருத்திட்டேன்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  4. விடுங்க.. போனா.. போகட்டும் .
    ஐந்து இட்லி தானே!...

    தங்களின் கவனம் முழுதும் - அவர்கள் தின்று தீர்த்த தின் பண்டங்கள் மீதே இருந்ததால் -
    இரண்டாம் பாராவில் - // நான் பயணித்தது பல்லவன் விரைவு பேருந்தில் – // என்று இருக்கின்றது.

    அன்புடன் -

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ....

      நீக்கு
  5. // என்னத்த சாப்பிட்டோம்..... ஒண்ணுமே சாப்பிடல! //

    ஐயோ...!

    மேல் உள்ள படத்தைப் பார்த்தால் இது போல் நிறைய வேண்டும் என்பார்கள் ஹா... ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. யாரோ ஒருத்தர் அவங்க சாப்பிடுவதையே வைச்ச கண் மாறாமா பார்த்துகிட்டே இருந்ததால்
    சாப்பாட்டு ராமி வழக்கமா சாப்பிடுவதைவிட மிக குறைவாகத்தான் சாப்பிட்டார்களாம் .பாவம் கொலைப்பட்டினியோட வீடு போய் சேர்ந்தாங்களாம் tha.ma 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க அந்த அம்மா சாப்பிட்டுகிட்டு இருந்ததையே பார்த்துக்கிட்டு இருந்ததுனால அந்த அம்மாவிற்கு வயித்து வலி வந்துடுச்சாம் கேள்வி பட்டேன்.

      நீக்கு
    2. அடடா.... அந்த பழி வேறவா..... :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
    3. ஆஹா.... அவங்க வயிற்றுவலிக்கும் நான் தான் காரணமா! சரிதான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  7. ரயில்ல ஏறி உக்காந்தமா, ஊருக்குப் போனமான்னு இருக்கணும். டில்லியிலிருந்து இதுக்குத்தான் வந்தீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.... இதுக்குன்னே வந்த மாதிரி சொல்லிட்டீங்களே! :))))

      கண்ணில் பட்டதை பகிர்ந்து கொண்டேன் அவ்வளவு தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி கந்தசாமி ஐயா.

      நீக்கு
  8. இதைச் சாப்பிடக் கூடாது, அதைச் சாப்பிடக் கூடாது என்று வாழும் வயிறு கெட்டுப் போனவர்கள் மத்தியில், அந்த அம்மாவுக்கு எல்லாமே சாப்பிட முடியும் என்பதும் ஒரு வரம்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

      நீக்கு
  9. ரா.ஈ. பத்மநாபன்6 மார்ச், 2014 அன்று 10:19 AM

    அப்போ உங்கள் பெட்டி நல்ல காத்தோட்டமாகவும் இருந்திருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

      நீக்கு
  11. பிறர் சாப்பிடுவதைப் பார்த்தால் நமக்கு பசி இருக்காது என்பார்கள்.அந்த சாப்பாட்டுப் பிரியர்களைப் பார்த்த பிறகு நீங்கள் சாப்பிட்டீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் சாப்பிட்டதில் என் பசி அடங்கிவிட்டது! இருந்தாலும் வீட்டுக்கு வந்து தான் சாப்பிட்டேன்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  12. கிச்சடி ரெடியாவதே சாப்பாடு ராமிகளை நம்பித்தானே ?இவர்கள் வரப் போய்தான் ரயில்வே கேண்டீன் ஓடுகிறது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  13. கண் பட்டிருக்கப் போகுதையா.. நல்ல கவனிப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  14. நம்மால தான் இத்தனை வெரைட்டி இப்படி அடுக்கடுக்கா சாப்பிட முடியாட்டியும் அவங்க சாப்பிடறதையாவது ரசிப்போம் வேறென்ன் செய்ய?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்தவங்க சாப்பிடறதையாவது ரசிப்போம்..... :)) அதான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  16. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  17. வாயாடி என்பதற்கு ஆண்பாலாக வாயாடன் என்பது இல்லாதது மாதிரிதான் சாப்பாட்டு ராமன் என்பதும். அது ஆண்களுக்காக ஒதுக்கிட்டாங்க போல! ஆனா நீங்க பாத்த பெண்மணியை சாப்பாட்டு ராஆஆஆஆமின்னுதான் சொல்லணும். யப்பா...! பக்கத்தில் இருப்பவர்கள் கொஞ்சம் வாயைத் திறந்து வெச்சிருந்தா வாயிலயும் விழுந்துருக்கும் என்ற உங்கள் பஞ்ச்சை மிக ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாயாடி - வாயாடன்.... :))) இதுக்குத்தான் வாத்தியார் வேணுங்கறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.

      நீக்கு
  18. ஹா...ஹா...

    இதில் இன்னொன்று... இந்த ரயிலில் பல சாப்பாட்டு ஐட்டங்கள் வாயில் வைக்கவே முடியாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. பார்க்கும்போதே பிடிப்பதில்லை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  19. //அந்த அம்மாவுக்கு எல்லாமே சாப்பிட முடியும் என்பதும் ஒரு வரம்தான்! //

    பதிவைப் படித்ததும் எனக்கும் இதுதான் தோன்றியது. ஹோட்டலுக்குப் போனாகூட அன்லிமிடட் மீல்ஸ் சாப்பிடுபவர்களைப் பொறாமையோடு பார்ப்பேன்!! ஹி..ஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா..

      நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது பக்கத்தில் உங்கள் வருகை. மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  20. Ippadi yellam saappida koduththu vaiththu irukkanum. Idhu Kadavul thandha varam.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுள் தந்த வரம்.... - உண்மை தான்! எல்லோராலும் இப்படி சாப்பிட முடியாது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  21. //சில துண்டுகள் அவர்கள் வாயிலும் தானாகவே வந்து விழுந்திருக்கக் கூடும்!// ஹா ஹா ஹா

    //ஆளுக்கு ஐந்து இட்லி சாப்பிட்டு படுக்கணும்! இல்லைன்னா நடு ராத்திரி பசிக்கும்// அடப்பாவமே.. படிச்ச உடனேயே வயிறு நிறைஞ்சா மாதிரி இருக்கு.. :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

      நீக்கு
  22. கடைசி பஞ்ச் கலக்கல்! சரியான சாப்பாட்டு ராமிதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  23. நாமெல்லாம் வாழ சாப்பிடுகிறோம். இவர்கள் சாப்பிடவே வாழ்கிறார்கள் போலும்.
    இதைவிட பீட்ஸா பற்கர் சாப்பிட்டு மாமீச மாலைப் போல உடலைப் பெருத்துக்கொள்ளும் சாப்பாட்டு ராமிகள் நிறையபேர் உள்ளனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரீகன் ஜோன்ஸ்....

      நீக்கு
  24. நிறைய பேருக்கு...
    சாப்பிட பணம் இல்லையே என்ற கவலை.
    சாப்பிட்டால் உடல் விழுந்திடுமே என்ற கவலை.
    எதையாவது ஆசைப்பட்டதைச் சாப்பிட்டால் செரிக்காது. உடலுக்கு ஒத்துக்கொள்ளாது என்ற கவலை....

    பணம் இருந்தும்..... நன்றாக சாப்பிடுவதற்கும் ஒரு கொடுப்பினை இருக்கனும்.
    அந்த அம்மாவுக்கு இருக்கிறது.

    அவர்கள் சாப்பிட்டதைப் படித்ததுமே எனக்குப் பசி போய் விட்டது நாகராஜ் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  25. கண்ணு பட்டுடுச்சி, அந்த அம்மாவுக்கு சுத்திப் போடணும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாத்து..... பெரிய சுத்தியா போட்டுட போறீங்க! :)))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

      நீக்கு
  26. நீங்கள் சொல்லியிருக்கிற விவரங்களைப் பார்த்து அசந்து பொய் விட்டேன். இவ்வளவா சாப்பிடுவார்கள்? ஆமாம். நீங்கள் அப்பா கேரக்டர் சாப்பிட்டாரா இல்லையா என்று சொல்லவேயில்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

      நீக்கு
  27. //என்னத்த சாப்பிட்டோம்..... ஒண்ணுமே சாப்பிடல! போகும்போது இட்லி மாவு வாங்கிக்கலாம் – ஆளுக்கு ஐந்து இட்லி சாப்பிட்டு படுக்கணும்! இல்லைன்னா நடு ராத்திரி பசிக்கும்!”//

    ஹாஹாஹா.....நல்ல சுவாரசியமாக இருந்திருக்கும் உங்களுக்கு! சரியான பேர்தான்!

    நல்ல நகைச்சுவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  28. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா....

      நீக்கு
  29. அபிராமி கேள்விப்பட்டிருக்கேன்... நீங்க சொல்லித்தான் இந்த ராமி... இதுவும் நல்லாத்தான் இருக்கு. அவங்க சுவைச்சு சாப்பிட்டாங்களோ இல்ல அப்படியே சாப்பிட்டாங்களோ தெரியாது ஆனா நீங்க ருசிக்க ருசிக்க எழுதிட்டீங்க.வயிறு சிரிச்சு சிரிச்சே நிறைஞ்சு போச்சு.ரெண்டு இட்லி கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துநிலவன் ஐயா.....

      நீக்கு
  30. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

      நீக்கு
  31. சாப்பாட்டு ராமி ! மிகவும் பொருத்தமான பெயர் தான் (எனக்கும் )
    ரசித்துப் படித்த பகிர்வுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் சகோதரா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

      நீக்கு
  32. இப்படியுமா இருப்பார்கள்? வீட்டில் எப்படியிருந்தாலும் பொது இடத்தில் கொஞ்சமாவது அடக்கி வாசிக்கவேண்டாமோ? வியக்கவைக்கும் குணாதிசயம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  33. பொது இடத்தில் இப்படியா சாப்பிடுவாங்க!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....