தொகுப்புகள்

ஞாயிறு, 9 மார்ச், 2014

மதுபனி [MADHUBANI] ஓவியங்கள்




நேற்று நானும் நண்பர் பத்மநாபன் அவர்களும் தில்லியின் ஜன்பத் பகுதியில் இருக்கும் ஒரு கிராமிய கலை மற்றும் உணவு திருவிழா சென்றிருந்தோம். இப்போதெல்லாம் ஏதாவது கண்காட்சி என்று சொன்னால், அதுவும் கிராமிய/பழங்குடிகளின் கண்காட்சி என்று சொன்னால் அத்தனை மக்களை ஈர்க்கமுடியாது என்பதாலோ என்னவோ உணவினையும் தலைப்பில் சேர்த்து விட்டார்கள் போல!

அங்கே சில கிராமிய/பழங்குடி மக்கள் பழக்கத்தில் இருந்த ஓவியங்களை கண்காட்சியாகவும், விற்பனைக்காகவும் வைத்திருந்தார்கள். பல இடங்களிலிருந்து வந்திருந்தாலும், இன்றைக்கு நாம் பார்க்கப்போவது மதுபனி ஓவியங்கள் மட்டுமே. மதுபனி [MADHUBANI] எனும் நகரம் பீஹார் மாநிலத்தில் இருக்கிறது. மிதிலா அல்லது மைதிலி என்ற மொழி பேசும் மக்கள் அதிகம் இருக்கும் இடம் இது. மதுபனி என்பதன் அர்த்தம் தேன் நிறைந்த காடு!

பெரும்பாலான மதுபனி ஓவியங்கள் இந்து கடவுள்களான ராமர், கிருஷ்ணர், சிவன், சரஸ்வதி, துர்க்கை போன்றவர்களையும் இயற்கை அழகினையும் காண்பிப்பவை. பெரும்பாலும் பெண்களால் தான் இந்த ஓவியங்கள் வரையப்படுகின்றன என்றாலும் ஆண்களும் வரைவதில் வல்லவர்கள் தான். முதன் முதலில் இந்த ஓவியங்களை வரைந்தது மிதிலையின் மன்னரான ஜனக மஹாராஜா காலத்தில் என்றும், அவரது மகள் சீதையின் திருமணத்தின் போது இந்த ஓவியங்களை வரைய வைத்தார் எனவும் சொல்வார்கள்.

பொதுவாகவே இந்த ஓவியங்களில் காலி இடங்களே இருப்பதில்லை. முன்பெல்லாம் மண்ணாலான வீடுகளின் சுவர்களில் முழுக்க முழுக்க இந்த ஓவியங்களை வரைந்து வைப்பார்களாம். இப்போதெல்லாம், துணி, காகிதம் போன்றவற்றிலும் வரைகிறார்கள்.  இதில் இன்னுமொரு விசேஷமும் உண்டு. இந்த ஓவியங்களை வரைவதற்கு பயன்படுத்துவது அனைத்துமே இயற்கை வண்ணங்கள் தான் – செடி, பூ, இலைகள் போன்றவற்றிலிருந்து வண்ணங்களை எடுத்து ஓவியங்களை வரைகிறார்கள்.

இந்த ஞாயிறில் சில மதுபனி ஓவியங்களை நாம் பார்க்கலாம்.


கிருஷ்ணரும் கோபிகைகளும்.....


குகனின் படகில் செல்லும் ராமன், சீதை மற்றும் இலக்குவன்.....


தேரோட்டியாக கிருஷ்ணன்....



எவ்வளவு அழகாய் இருக்கிறது இந்த ஓவியம்!
 


அர்த்தநாரீஸ்வரர்
 












 
என்ன நண்பர்களே இந்த ஓவியங்களை ரசித்தீர்களா? அடுத்த ஞாயிறன்று வேறு சில புகைப்படங்கள் பார்க்கலாம்!

தொடர்ந்து சந்திப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

62 கருத்துகள்:

  1. ஓவியங்களை ரசித்தேன். அனைத்தும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்!

      நீக்கு
  3. அற்புதமான ஓவியங்கள்
    பதிவாக்கி நாங்களும் கண்டு களிக்கத்
    தந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  4. மிக மிக அற்புதமாக இருக்கீன்றன இந்த ஓவியங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  6. இதுவரை அறிந்திராத மதுபனி ஓவியம் பற்றிய தகவல்களைத் தந்தமைக்கு நன்றி. ஓவியங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  7. what is the price of these paintings? (just order of magnitude)?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் வரைந்திருக்கும் பொருள் [துணி [அ] பேப்பர்], படத்தின் அளவு போன்றவை பொருத்து ஓவியங்களின் விலை இருக்கிறது. நான் பார்த்த கடையில் 500 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையான ஓவியங்கள் இருந்தன.....

      பெயர் சொல்லா விரும்பாத நண்பரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

      நீக்கு
  10. எவ்வளவு நுணுக்கமான ஓவியங்கள்...!

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  12. எவ்வளவு அழகாய் இருக்கிறது இந்த ஓவியம்! - பதிவும் அழகு..! பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி கஸ்தூரி ரெங்கன்.

      நீக்கு
  14. அத்தனையும் அற்புதம். பகிர்வுக்கு நன்றி.

    /செடி, பூ, இலைகள் போன்றவற்றிலிருந்து வண்ணங்களை எடுத்து / வரையப்பட்ட சீன ஓவியம் ஒன்று வீட்டிலுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  15. ஒவ்வொரு ஓவியமும் கண்ணுக்கு விருந்தாக இருக்கிறது. இத்தனை ஓவியங்களையும் மிக அழகாக படம் பிடித்து பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  16. மிக அருமையான ஓவியங்கள்! இயற்கை வண்ணங்களை கொண்டு வரைந்தார்கள் என்பது ஆச்சர்யமான செய்தி! அழகான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  17. சில ஆண்டுகளுக்கு முன் - தஞ்சையில் நடந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் இந்த மதுபனி ஓவியங்கள் பலவும் இடம் பெற்றிருந்தன. தாங்கள் சொல்லியது போல அப்போது மதுபன் (மது வனம் ) என்றுதான் சொன்னார்கள்..

    மீண்டும் அவற்றை தங்கள் பதிவின் மூலமாகக் காண்பதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  18. மதுபனி பெயரே அட்டகாசமாய் உள்ளது சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

      நீக்கு
  19. ஓவியங்கள் அனைத்தும் அருமையா இருக்கு பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள் சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆர்.வி. சரவணன்.

      நீக்கு
  20. மது பனி ஓவியங்கள் என்று படித்திருக்கிறேன். அதைப்பற்றிய முழு விவரங்கள், ஓவியங்களுடன் பதிவை அசத்தி விட்டீர்கள். மதுபானி ஓவியம் காணக் கிடைத்ததற்கு நன்றி வெங்கட்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

      நீக்கு
  21. அழகு அழகு அத்தனையும் அழகு!

    மதுபனமே ராதிகா நாச்சேஹே.... பாடல் நினைவுக்கு வருது:-))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்....

      மதுபன்மே ராதா நாச்சே.... மிக அழகானதோர் பாடல்.....

      நீக்கு
    2. எனக்கு தெரிந்ததெல்லாம் மாதுரி தீத்ஷித்தின் சோளி கே பீசா .தான் !

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  22. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை.....

      நீக்கு
  23. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  24. என்னவொரு திறமை & நுணுக்கம் !!

    இயற்கை வண்ணங்கள் என்பதால்தான் கண்ணை உறுத்தாமல் இருக்கிறது போலும் ! படங்களைப் பெரிதாக்கி பலமுறை ரசிச்சாச்சுங்க. பகிர்விற்கும் நன்றிங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்......

      நீக்கு
  25. ரா.ஈ. பத்மநாபன்13 மார்ச், 2014 அன்று 10:02 AM

    ஒவ்வொன்றும் எளியவர்கள் உருவாக்கிய அரிய ஓவியங்கள். அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  26. தமிழில் நாம் மதுவனம் என்கிறோமே அதுதான் ஹிந்தியில் மதுபன் என்றாகிறதோ?
    ஓவியங்கள் கண்களை விட்டு அகல மறுக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே தான்......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

      நீக்கு
  27. அற்புதமான பதிவு, முன்பே வாசித்திருந்தால் இந்த விவரங்களையும் நான் சேர்த்திருப்பேன். இந்த பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

      நீக்கு
  28. ஹையோ அருமை ஜி! ஓவியங்கள் சொக்க வைக்கின்றன. நான் நிறைய பார்த்திருக்கேன் எதுக்குன்னா நான் ஒரு ஓவியம் வரைவதற்காக டிசைன் பார்த்தப்ப....இங்கு அத்தனையும் அழகோ அழகு...

    ராஜ்புட் ஆர்ட் அந்த ஃபேமஸ் படம் ஒரு ராணி/பெண் நாடியில் விரலை வைத்திருப்பது போன்ற ஒரு படம் அதைத்தான் நான் ரங்கோலி போட்டிக்குப் போட்டேன் கல்லூரிக் காலத்தில் யுனிவெர்சிட்டி போட்டி...அப்ப ரொம்ப நன்றாக வந்திருந்தும் ப்ரைஸ் மிஸ்ட் காரணம் நான் முழு ஸ்பேசையும் பயன்படுத்தவில்லை...மாக்கோலத்திற்கு முதல் பரிசு கிடைத்தது..

    கீதா

    பதிலளிநீக்கு
  29. ராஜ்புத் - ராஜ்புதன ஓவியங்களும் சிறப்பானவை. ஆஹா... இந்த வகை ஓவியங்களை நீங்களும் வரைவீர்களா? பல்திறமை கொண்ட உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.

    மாக்கோலத்திற்கு முதல் பரிசு - போகிறது விடுங்கள். நாங்கள் தருகிறோம் உங்களுக்குப் பரிசு.

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

    பதிலளிநீக்கு
  30. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம்குமார் ஜி.

      நீக்கு
  31. அருமையான ஓவியங்கள். அர்த்தநாரீஸ்வரரும், ராஸக்ரீடையும் மனதைக் கவர்ந்த ஓவியங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....