தொகுப்புகள்

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

முகலாயர்கள் கால ஓவியங்கள்-பகுதி-2



முகலாயர்கள் கால ஓவியங்கள் பகுதி-1 இங்கே

சென்ற ஞாயிறன்று “முகலாயர்கள் கால ஓவியங்கள் வெளியிட்டபோது இன்னும் பல ஓவியங்கள் இருப்பதாய்ச் சொல்லி, விரும்பினால் மற்ற படங்களையும் வெளியிடுவதாகச் சொல்லி இருந்தேன். பலருடைய விருப்பத்திற்கு செவி சாய்த்து இந்த வாரமும் முகலாயர்கள் கால ஓவியங்கள் இரண்டாம் பகுதியாக!



ஏப்ரல் 1578 – அக்பர், பஞ்சாப் பகுதியில் வேட்டைக்குச் சென்ற போது, அவருக்கு ஞானோதயம் உதித்தது. சில நிமிடங்கள் வரை அமைதியாக இருந்தபின், வேட்டையாடிய, உணவுக்காக பிடித்திருந்த பல விலங்குகளை சுதந்திரமாக திரிய, அவற்றை விடுதலை செய்துவிடச் சொன்னாராம். அந்த காட்சியை வரைந்திருக்கிறார் மிஸ்கினா எனும் ஓவியர் – வரைந்த ஆண்டு 1595.



இளவரசர் சலீம் – அக்பரின் வாரிசு. 1569-ஆம் ஆண்டு பிறந்தவர். அக்பர் இறந்தபின் பேரரசராக முடிசூட்டிக்கொள்ள துடித்தவர். 1600-ஆம் ஆண்டு தனது தந்தையுடன் மனஸ்தாபம் கொண்டு அலாஹாபாத் நகருக்குச் சென்று தன்னை மஹாராஜாவாக பிரகடனம் செய்து கொண்டார்! 1602-ஆம் ஆண்டு தந்தையின் மிக முக்கிய நண்பரான அபுல் ஃபசலை கொலை செய்ய ஏற்பாடு செய்தவர்! 1604-ஆம் ஆண்டு தந்தையுடன் சமரசம் செய்து மீண்டும் சேர்ந்து கொண்டார். 1605-ஆம் ஆண்டு முதல் 1627-ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தார். ஜஹாங்கீர் [உலகத்தையே கைப்பற்றுபவர்] எனும் பெயர் பூண்டு ஆட்சி புரிந்தார். அவரது இந்த ஓவியம் வரையப்பட்ட ஆண்டு 1620-30க்குள் இருக்கலாம். வரைந்தவர் பெயர் தெரியவில்லை.



1649-ஆம் ஆண்டு லாகூரில் ஷாஜஹான் திவான்–இ-ஆம் [மக்கள் அவை]-ல் அமர்ந்திருக்கிறார்.  இரானியர்களை ராஜ்புத் வீரர்களுடன் சேர்ந்து முறியடித்து விட்டு அதைப் பற்றி ஷாஜஹானிடம் விவரம் சொல்ல வந்து இருக்கிறார் ஔரங்கசீப் [இடது புறத்தில் கைகளை நெற்றியில் வைத்து மரியாதை செய்பவர்].  இதன் பிறகு பத்து வருடங்களில் ஷாஜஹான் உடல் தளர்ந்து விட அவரை ஆக்ரா கோட்டையில் கைது செய்து ஆட்சியைப் பிடித்தார் ஔரங்கசீப்!



ஔரங்கசீப் – முழு போர் உடையில். குதிரைக்கும் இரும்பாலான உடை. கையிலிருப்பது தங்க ஈட்டி. இடுப்பில் கட்டியிருக்கும் அரைக்கச்சில் அம்புகளும், கடர்என்று அழைக்கப்படும் குத்துவாளும் வைத்திருப்பதைக் காண முடிகிறது. வரைந்த ஆண்டு 1660-70க்குள். வரைந்த ஓவியர் யாரென்பது குறிப்பிடப்படவில்லை.



ஃபரூக்சியார் [அமர்ந்திருப்பவர்] மற்றும் ஹுசைன் அலி கான். ஹுசைன் அலி கான் மற்றும் அவரது சகோதரரின் உதவியோடு தில்லியை 1713-ஆம் ஆண்டு கைப்பற்றியவர் ஃபரூக்சியார். இந்த ஓவியம் வரையப்பட்ட ஆண்டு 1713-லிருந்து 1719-க்குள்.



அஹமத் ஷா – அரண்மணைப் பெண்டிருடன் மான்களை வேட்டையாடும் காட்சி. வரையப்பட்ட ஆண்டு – 1750.



மன்னர் இரண்டாம் ஆலம்கீர். வரையப்பட்ட ஆண்டு 1790.



இரண்டாம் அக்பர் – தனது அரச கூடத்தில். வரையப்பட்ட ஆண்டு 1822.



1569-ஆம் ஆண்டு – அக்பரின் தலைமையில் முகலாயப் படைவீரர்கள் ராஜஸ்தான் சூர்ஜன் ஹாடா பூந்தி கோட்டையினை வெற்றி கொண்ட காட்சி இங்கே ஓவியமாகத் தீட்டி இருக்கிறார்கள். வரைந்த ஓவியர் கேம் கரண். வரையப்பட்ட காலம் 1590-95.



பாபரின் தோட்டம் – 1504-ஆம் ஆண்டு காபூலில் பாபரின் மகன் அக்பரால் உருவாக்கப்பட்டது. அத்தோட்டத்தினை ஓவியமாக வரைந்தவர் DHதனு. வரைய வைத்தவர் பாபரின் பேரன் அக்பர்!

என்ன நண்பர்களே, இந்த ஞாயிறில் பகிர்ந்து கொண்ட ஓவியங்களை ரசித்தீர்களா?

மீண்டும் சந்திப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

பின்குறிப்பு: நேற்று வெளியிட்ட, என்னைத் தொடர்பவர்களின் Dashboard-ல் update ஆகாத எனது பதிவு - ஓவியர் கோபுலுவின் நகைச்சுவை. பார்க்காதவர்கள் பார்க்கலாமே :)


52 கருத்துகள்:

  1. முகலாயர்கள் கால ஓவியங்கள்” ரசிக்கவைத்தன..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  2. ஓவியங்களும் வரலாறும் ஒருசேர கிடைத்தது அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

      நீக்கு
  3. ஒவ்வொன்றும் மிகவும் நுணுக்கமான ஓவியங்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. அழகான ஓவியங்கள்.. விளக்க உரையுடன் பகிர்ந்த விதம் நன்று!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  5. ஓவியங்கள் அனைத்தும் அருமையாக இருந்தன. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரீகன் ஜோன்ஸ்.

      நீக்கு
  6. படங்களும் பகிர்வும் அருமை ! வாழ்த்துக்கள் சகோதரா .
    இன்று என் வலையில் .http://rupika-rupika.blogspot.com/2014/04/blog-post_4288.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

      இரண்டு நாட்களாக வலையுலகில் அதிகம் உலவ இயலவில்லை! :) உங்கள் பதிவு பற்றிய தகவலுக்கு நன்றி. படிக்கிறேன்.

      நீக்கு
  7. எல்லாப் படங்களும் விளக்கங்களும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கௌதமன் சார்.

      நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது பக்கத்தில் உங்கள் வருகை. மிக்க மகிழ்ச்சி

      நீக்கு
  8. விளக்கங்கள் ஓவியங்களை இன்னும் ஊன்றிப் பார்க்கத் தூண்டின. அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. மிக அருமையான ஓவியங்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  10. காணக் கிடைக்காத ஓவியங்கள்! கண்டு மகிழ்ந்ததில் நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  11. நானும் கண்டிருக்கிறேன் இருந்தாலும் உங்களின் புகைப்படங்கள் இன்னும் அழகாய் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கண்ணதாசன்.

      நீக்கு
  12. இந்த அபூர்வமான ஓவியங்களை இங்கே வெளியிட்டமைக்கு அன்பு நன்றி! முதலாவது ஓவியத்தில் நுணுக்கமான கோடுகள் நம்மை அசர வைக்கின்றன. ஒளரங்கசீப் குதிரையிலேறி அமர்ந்திருக்கும் ஓவியம் மிக அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  13. Akbarin varalarum, oviyangalin varalarum indha padhivin moolam orusera arindhu kolla mudindhadhu.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  14. Akbarin varalarum, oviyangalin varalarum ondraga ariya mudindhadhu.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  16. அண்ணா..
    ஒவியங்கள் அனைத்தும் அருமை...
    ஓவியம் குறித்த குறிப்புக்களும் அருமை...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  17. #அரண்மணைப் பெண்டிருடன் மான்களை வேட்டையாடும் காட்சி. வரையப்பட்ட ஆண்டு – 1750.#
    வேட்டையாடும்போதும் உடன் பெண்டிர்கள் தானா ?இராஜ வாழ்க்கை என்பது இதுதான் போலிருக்கு !
    த ம 1௦

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜ வாழ்க்கை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  18. Babar garden by his son akbar? Does babar has another son named akbar?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறினைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி சரவணகுமார். ஓவியத்தின் குறிப்பினை எழுதும் போது தவறாக குறிப்பிட்டு விட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  19. 17,18ம் நுற்றாண்டுகளில் வரைந்த ஓவியங்கள் இன்றும் பளபளக்கிறதே! அருமையான ஓவியங்கள். பகிர்விற்கு நன்றி வெங்கட்ஜி.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!.

      தங்களுக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  20. அத்து இன்னாபா... அல்லா மன்னர் தல காண்டியும் ஒயி வட்டம் கீது...? இத்து எதுனா குறியீடா...?

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னரை மட்டும் இப்படி ஒளி வட்டத்துடன் குறிப்பிட்டு இருப்பது எதற்கு? ஓவியங்களைப் பார்க்கும் போது எனக்கும் இந்த சந்தேகம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முட்டா நைனா.

      நீக்கு
  21. அந்நாளை கண் முன் கொண்டு வரும் ஆவணமாக அழகான இந்த ஓவியங்கள். நல்ல பகிர்வு.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      தங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  22. உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

      நீக்கு
  23. பதில்கள்
    1. தமிழ் மணம் பன்னிரெண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  24. அன்பின் இனிய புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  25. அழகான ஓவியங்களை பகிர்ந்தமைக்கு நன்றி சார்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குடந்தையூர் சரவணன்.

      உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  26. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....