தொகுப்புகள்

சனி, 5 ஏப்ரல், 2014

பாரதி சொன்ன சின்னக் கதை








எனக்கு நன்றாய் ஞாபக மிருக்கிறது. 1905-ம் வருஷம் ஒரு நாள் மாலைப் போதில் நானும் பாரதியாரும் எங்கள் காரியாலயத்தி லிருந்து (சுதேசமித்திரன்ஆபீஸிலிருந்து) வெளியே வந்தோம். ஆகா! என்ன சொல்வேன்! பொழுது மலைவாயில் விழுந் தருணம்! இளம் வெய்யிலும் இளந் தென்றலும் வீசுந் தருணம்! உத்தியோக உழைப்பில் அலுத்த பறவைக ளெல்லாம் – காரியாலயமாகிய கூண்டிலிருந்து வெளிப்பட்டுத் தாராளமாய் மூச்சு விட்டுக் கொண்டு செல்லுந் தருணம்! ஆதலால் சென்னை அரண்மனைக்காரத் தெருவின் வழியே உத்தியோகஸ்தர் பலர் கும்பல் கும்பலாக – புத்தீசலெனப் போய்க்கொண் டிருக்கிறார்கள்.



அவர்களைக் கண்டதும் பாரதியார்,  பாரதி, பார்! குழி விழுந்த கண்களும் பொலிவிழந்த முகமும் உடைய சிரசில், முண்டாசென்னும் மூட்டை சுமந்து கொண்டு செல்லும் அடிமைகளை!என்று கூறி, “சிவ!, சிவஎன மந்திரம் ஜபித்து, என்று ஒழியுமோ, இந்த அடிமை வாழ்க்கைஎன்று சொல்லி நடந்தார். நானும் நடந்தேன்.



அழகான கடற்கரையின் அருகே ஒரு புல் தரை.  அங்கே போய் இருவரும் அமர்ந்தோம். அங்கொரு சிறு புழு நெளிந்து நெளிந்து சென்றது. அதைக் கண்ட பாரதியார் என்னைப் பார்த்துச் சொன்னார்:- பாரதி, ஒரு விஷயம் கேள்: இதோ பார்! அழகான புழு ஒன்று நகர்ந்து நகர்ந்து போய்க் கொண்டிருக்கிறது. இதன் உடம்பில் மேடு பள்ளம், கோணல், வளைவு, கொம்பு, மயிர் ஒன்றுமில்லை. இந்தப் புழு சிறந்த ஞானி!



     சென்றது கருதார், நாளைச் சேர்வதுங் கருதார்!



என்ற லக்ஷணப்படி முன் பின் கவலையே இது கொள்வதில்லை. பதறின காரியம் சிதறும்என்று புழுவுக்கு நன்றாய்த் தெரியும். பல சாஸ்திரங்கள் படித்திருக்கிறது-



பாரதியார் இப்படித் தான் பேசுவார். அதுவும் தெற்றித் தெற்றிப் பேசுவார். முடிவில் சபாஷ்!என்று மெச்சும்படி விஷயம் முடியும். ஆதலால் அவர் பேசும்போது நான் குறுக்கே பேசுவது கிடையாது. அவரிடம் எனக்கு மரியாதை கலந்த பக்தி யுண்டு. அது என்னை அறியாமலே அவரிடம் ஏற்பட்டதாகும்.



பாரதியார் மேலும் சொல்கிறார்: -



“அதுவும் தவிர, புழு மிகவும் கீர்த்தி பெற்ற ஜலத்திலே பிறந்தது. இதன் சுற்றத்தார்களில் பலர் நேர்த்தியான இறகுகள் படைத்தவர். வானத்திலே பறந்து ஆகாசத் தத்துவங்களை யெல்லாம் உணர்ந்து புகழ் பெற்றவர். உயர்ந்த மரக் கிளைகளின் மீது சென்று பூக்களிலுள்ள தேனைப் பருகி பிரம்மானந்த மடைந்ததாகச் சரித்திரம் இருக்கிறது.



இந்தப் புழு, பட்டுப் பூச்சி கோத்திரத்தில்,  வண்ணாத்திப் பூச்சி சூத்திரத்தில் பிறந்தது. இத்துடன் இதற்கு ஸத்வ குணம் அதிகம். இது ஆகாரத் திற்காக மற்றோர் உயிரைக் கொலை செய்யாது. அஹிம்சா பரமோ தர்மஎன்ற வேத விதிப்படி நடந்து வருகிறது.



இதோ பார், சிற்றெறும்புகளை! சிற்றெறும்பு கொஞ்சமேனும் அழகில்லாத ஜந்து. உடலிலே சதைப் பற்று சிறிது மில்லாதது. ஓர் உருவமா கணக்கா, எதுவுமில்லை. இதற்கு வித்தையும் ஞானமுமில்லை. ஆனால் எப்போதும் முயற்சி; எப்போதும் சலனம். இப்போது வயிறு நிறைந்த போதிலும் உடனே புறப்பட்டு நாளைக்கு உணவு தேடும். கோடை நாளிலே மாரி காலத்துக்கு உணவு தேடி வைக்கும். எப்போதும் அவசரம்! எப்போதும் அவசரம்!



சிற்றெறும்புகளில் சிலவற்றிற்கு இறகுண்டு.  ஆயினும் அவ்விறகு, வண்ணாத்திப் பூச்சி, பட்டுப் பூச்சி இவற்றின் சிறகுகளைப்போல் அதிக உயரம் பறக்க ஏற்றவை யல்ல. அழகும் சக்தியு மில்லாத இறகுகள். அந்த எறும்புகள் தேனுண்டு பார்த்தவைகள்.



எறும்புக்குக் கோத்திரமுமில்லை, சூத்திரமுமில்லை. தவிர அதற்கு ஸத்வ குணமும் கிடையாது. கோபமும் குரூர விருத்தியும் அதிகம். தன் உணவுக்காக எதையும் கொன்று தின்று விடும்.



இந்தப் புழுவையும், எறும்பையும் பற்றிய விருந்தாந்தம் ஒன்று கூறுகிறேன், கவனி.



ஒரு புழு இப்படித்தான் தன்னிச்சையாகப் போய்க் கொண்டிருந்தது. எறும்பு ஒன்று அதை அணுகியது. புழு, ‘தூர விலகிப் போ. கிட்ட வராதேஎன்றது. ஏன் தெரியுமா? ‘எறும்பு மாம்சந் தின்னும் அசங்கியமான பிராணி. அஞ்ஞானப் பிண்டம்என்று புழு நினைத்துக் கொண்டது, அதனால்.



எறும்பு, புழு சொன்னதை இலக்ஷ்யம் செய்யாமல் அதன் அருகே சென்றது. புழு, ‘எங்கே வந்தாய்? என்று கேட்டது.



‘உன்னைத் தின்னும் பொருட்டுஎன்றது எறும்பு.



‘அட சவமே! (’சவமே, சவமே’ என்று அடிக்கடி பாரதி தம் சம்பாஷணையில் சொல்வது வழக்கம்) நம்முடைய சரீரத்தின் அளவு எத்தனை? உன்னுடைய ஆகிருதி யென்ன? உன்னை ஒரு க்ஷணத்தில் நசுக்கிப் போடுவேன்? என்ன துணிச்சல்! விலகிப் போஎன்று புழு கட்டளையிட்டது.



இதற்குள் எறும்பு புழுவை நெருங்கி அதன் உடலில் ஒரு மத்தியைத் தன் சிறிய பற்களினால் கடித்துப் பற்றிக் கொண்டது.



புழு, ‘சண்டாளப் பயலே! விடடா! விடடா! நீ நாசமாய்ப் போக!என்று கூச்ச லிட்டது; உடலை மாறி மாறி வளைத்தது. (இப்படிச் சொல்லுகையில் பாரதியாரும் தம்முடலை நெளித்துக் கொண்டது நன்றாய் ஞாபகத்துக்கு வருகிறது)



சிற்றெறும்பு ஒன்றையும் கவனிக்கவில்லை. அப்பால், புழு சிற்றெறும்பைக் கெஞ்சத் தொடங்கியது. என் அப்பனே! ரொம்ப நோகிறதடா! உனக்குக் கோடி புண்ய முண்டு! விட்டு விடடா! நோவு பொறுக்க முடிய வில்லையடா!என்று பிரார்த்தனைகள் செய்து பார்த்தது.



எறும்பு இதைக் காதில் வாங்கிக் கொள்ளவே யில்லை. ஆயினும் புழுவைத் தனியே இழுப்பது அதற்குக் கஷ்டமா யிருந்தபடியால் அதை விட்டுப் போய் விட்டது.



உடனே புழு – ‘தொலைந்தான் தாசி மகன்! பிழைத்தோம்என்று சொல்லிக் கொண்டே நகர்ந்து சென்று, ஒரு சிறு செடியின் நிழலை யடைந்து அமைதியாய் பகவானை நோக்கி ஜபம் பண்ணுகிற பாவனையில் இருந்தது.



இதற்குள் நான்கு சிற்றெறும்புகளுடன் பழைய சிற்றெறும்பு அங்கு வந்துவிட்டது.  புழு அதைக் கண்டதும் நடுங்கி ஓடப் பார்த்தது. எறும்புகளுக்குள் ஐக்ய முண்டு. ஒன்றுக்கு நான்கு சகாயமாக வரும். புழுக்களுக்குள் அப்படி யில்லை. ஒரு புழுவை மற்றொரு புழு கவனிக்காது. அவனவன் பாடு தலைக்கு மேலே பாரமா யிருக்கிறது! அவனுக்கு நாம் துணை செய்யப் போனால் நமக்கும் ஏதேனும் துன்பம் வரும். வழியோடு போகிற சனியனை விலைக்கு வாங்கிக் கொள்வதா?என்று ஒவ்வொரு புழுவும் சித்தாந்தம் செய்து கொண்டு சும்மா இருந்து விடும்.



ஆதலால் புழுவுக்கு யாரும் துணை வரவில்லை. ஐந்து சிற்றெறும்புகளாகக் கூடி வந்து அதைக் கொன்று தின்றுவிட்டன.



பாரதி! எறும்பைப் போலிருப்பது நல்லதா? புழுவைப் போலிருப்பது நல்லதா? ஆலோசனை செய்து பார்!என்று கூறிச் சடக்கென் றெழுந்து –



     ஒன்றுபட்டாலுண்டு வாழ்வே – நம்மில்

          ஒற்றுமை நீங்கில் அனைவர்க்குந் தாழ்வே



எனப் பாடிக் குதூகல நடை நடந்தார். நானும் அவருடன் நடந்து, இருவருமாய்த் திருவல்லிக்கேணிக்குப் போய்ச் சேர்ந்தோம்.



பின்குறிப்பு-1: இக்கட்டுரையை எழுதியவர் வரகவி திரு அ. சுப்ரமணிய பாரதி. பாரதியாரின் சமகாலத்தவர். பாரதியாரைப் போலவே இவரும் சிறந்த படைப்பாளி. சுதேசமித்திரனில் பணிபுரிந்தவர். இக்கட்டுரை 1940-ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் வெளிவந்தது.  நன்றி: ஆனந்தவிகடன்.



பின்குறிப்பு-2: இந்தப் பதிவு என்னுடைய வலைப்பூவில் வெளியிடும் 700-வது பதிவு. பொக்கிஷம் என்னும் தலைப்பில் பாரதியார் பற்றிய பதிவாக வெளியிடுவதில் மகிழ்ச்சி.

49 கருத்துகள்:

  1. சிறப்பான பகிர்வு. பாரதி சொன்ன கதை அருமை.இதை வேறு எங்கும் படித்ததாக நினைவு இல்லை.
    700 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  3. 700 வது படைப்புக்கு வாழ்த்துகள். அதுவும் இப்படி ஒரு சிறந்த பகிர்வாக அமைந்திருப்பது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.....

      நீக்கு
  4. வாழ்த்துகள்.700 பதிவுக்கு.பாரதியார் பற்றிய தகவல்கள் புதியது.அறிய வேண்டிய அரிய தகவல்கள்.நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சுபா.

      நீக்கு
  5. புழு பூச்சியைப் பார்த்தாலும் பாரதிக்கு நாட்டுச் சிந்தனைதான் போலிருக்கிருக்கிறது !
    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  6. வரகவி அ.சுப்ரமண்ய பாரதி எழுதிய ராமாயணம் முன்னால் காமகோடி னு ஒரு புத்தகம் வந்தது. அதிலே படிச்சிருக்கேன். இவரைக் குறித்தும் கேள்விப் பட்டிருக்கேன். இரண்டு பாரதிகளும் ஒண்ணாய் வேலை பார்த்ததும் கேள்விஞானம் உண்டு. ஆனால் இந்தக் கட்டுரை முற்றிலும் புதிது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    2. பொக்கிஷமாக மலர்ந்த 700-வது பதிவுக்கு வாழ்த்துகள்..!.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  7. மிக அருமையான அரியதொரு பொக்கிஷம்! தேடி எடுத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! எழுநூறு பல நூறு ஆகி லட்சங்களை கடக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  8. புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படித்துப் பகிர்ந்து கொள்கிறீர்கள். இமாதிரி பொக்கிஷங்கள் நிறையவே இருக்கும் போல் தெரிகிறது.வாழ்த்துக்கள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குப் பிடித்தவற்றை ஸ்கான் செய்து வைத்து இருக்கிறேன். அவற்றில் சிலவற்றை இங்கே அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  9. அருமைப் பதிவு.
    700வது பதிவிற்கு வாழ்த்துவதுடன்
    இன்னும் 200க்கு மேல போட்டால் என்னளவு வருவீர்கள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  11. அறியாத தகவல். பகிர்வுக்கு நன்றி.

    700_வது பதிவுக்கு நல்வாழ்த்துகள். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  12. 700ஆவது பதிவுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்! அரிய கதை! “பாரதியார் கதைகள்“ நூலில் இருப்பதாகத் தெரியவில்லை. கதையும் கருவும் பாரதியை மீண்டும் அசைபோட வைத்தன. விகடன் மலரில் தேடிஎடுத்து வெளியிட்டமைக்கு நன்றி அய்யா. விரைவில் 1000பதிவுகாணவும் அன்பு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நா. முத்துநிலவன் ஐயா.

      நீக்கு
  13. கதைக்கு வாழ்த்துக்கள் ....௭௦௦ வது பதிவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் ...எப்படியோ ௭௦௦ வது பதிவுக்கு flight புடிச்சி உங்க வீட்டுக்கு வந்து சேந்துட்டன் ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கலை.

      நீக்கு
  14. உங்களது 700வது பதிவுக்கு பாராட்டுகள். இதுவரை எங்கும் படிக்காத கதை. நிச்சயமா அந்த பாரதியை போன்றே இதுவும் ஒரு அரிய பொக்கிஷம்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாடிப்படி மாது.

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

      நீக்கு
  16. பொக்கிச கதை பகிர்ந்து கொண்டு 700-வது பதிவை சிறப்பித்தமைக்கு பாராட்டுக்கள்... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  17. 700ஆவது பதிவா? கவனிக்கலை. வாழ்த்துகள். மேலும் பல எழுநூறுகள் காணவும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  18. 700 பதிவுகள். வாழ்த்துக்கள். 1000மாவது பதிவை சீக்கிரம் எட்டுவதற்கு வாழ்த்துக்கள். அப்புறம் 10000,20000 என்று வளருவதற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  19. 700ஆ.. அடேங்கப்பா! அசத்தறீங்க.. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பந்து ஜி!

      நீக்கு
  20. பாரதியின் கதை அருமையோ அருமை! எப்படிப்பட்ட ஒரு பகிர்வு! இப்படிப்பட்ட ஒரு நல்ல பகிர்வைத் தந்து "ஓ" போட வைத்துவிட்டீர்கள்!

    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  21. பாரதி பத்தின தகவல் அருமை சார்...

    700 பதிவுக்கு மேல இன்னும் ஏகப்பட்ட பதிவு படைக்கணும் சார்..

    வாழ்த்துக்கள் சார்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மஹேஷ் பிரபு.

      நீக்கு
  22. தங்களின் 700 ஆவது பதிவில் தேசியக்கவி பாரதியின் கதையை பகிர்ந்தமைக்கு நன்றி. விரைவில் தங்களின் பதிவு ஆயிரத்தைத் தொட வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  23. வழியோடு போகும் சனியை விலைக்கு வாங்குவதா, என்பதுதான் இந்த கால கட்டத்திலே உள்ள நிலையாகும். ஒன்று பட்டால் யாவர்க்கும் உயர்வே, ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே என்ற பாரதி சொல்லை மந்திரமாக எடுத்துக்கொள்ளல் நன்று.

    படைப்பாளியின், 700-வது என்ன, ஒவ்வொரு படைப்புமே போற்ற தகுந்த மற்றும பொக்கிஷமாக பாது காக்கும்படியாகத்தான் உள்ளது. வாழ்க, வளர்க.

    வேளச்சேரி நடராஜன்.
    10-04-2014.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நடராஜன் சித்தப்பா....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....