தொகுப்புகள்

சனி, 14 ஜூன், 2014

ஒற்றைக்கண்.....


 பட உதவி: இணையம்


எனக்கு அப்பாவைக் கண்டாலே பிடிக்காது. அவரும் அவருடைய ஒற்றைக் கண்ணும்! சே.... என்ன ஒரு அசிங்கம்.....



நான் படித்த பள்ளியில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சமைத்துக் கொடுக்கும் பணியில் தான் அவர் இருந்தார். அவரை எனது அப்பா என்று சொல்லிக் கொள்ளவே எனக்கு வெட்கம். ஒரு நாள் நான் வகுப்பறையில் இருந்த போது அங்கே வந்து என்னைப் பார்த்து பேச முயன்றார். நான் அவர் யாரோ தெரியாத மனிதர் போல இருந்து விட்டேன். ஆனாலும் சில மாணவர்களுக்கு அவர் தான் எனது அப்பா என்பது தெரிந்துவிட, அவர்கள் என்னை கிண்டல் செய்தார்கள்.



எனக்கு அவர் மீது பயங்கரமான கோபம் – உங்களால எனக்கு பயங்கர அவமானம். எல்லாரும் என்ன கிண்டல் பண்றாங்க! நீங்க ஏன் தான் இன்னும் உயிரோடு இருக்கீங்களோ?என்று கேட்டுவிட்டு, அந்த கேள்வி அவரை என்ன செய்திருக்கும் என்ற எண்ணம் கூட இல்லாது அங்கிருந்து அகன்றேன். விரைவில் நன்கு படித்து பட்டம் பெற்று இவரிடமிருந்து விலகி கண்காணாத இடத்திற்குச் சென்றுவிட வேண்டும் என்ற வெறி எனக்கு உண்டானது.



வெறியுடன் படித்து தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால் வெளிநாட்டில் உதவித் தொகையுடன் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இனிமேல் நிம்மதி என்ற எண்ணத்துடன் வெளிநாட்டிற்குச் சென்று மேல்படிப்பு படித்து அங்கேயே வேலை தேடிக்கொண்டேன். திருமணமும் புரிந்து குழந்தைகள் பெற்றுக் கொண்டேன். அப்பாவினைப் பற்றிய எண்ணம் வரவேயில்லை – எனது குழந்தைகளைக் கூட அவருக்குக் காட்டக் கூடாது என்று இருந்து விட்டேன்.



ஒரு நாள் திடீரென எனது வீட்டின் வாயிலில் ஒற்றைக் கண்ணுடன் அப்பா – அவரைப் பார்த்தவுடன் எனது குழந்தைகளுக்கு பயம் வந்துவிட, “என்ன தைரியம் இருந்தால், அழைக்காமலே வந்து, என் குழந்தைகளை பயமுறுத்துவீர்கள்?, உடனே இங்கிருந்து விலகிச் செல்லுங்கள்என்று கத்தினேன். அப்போது கூட, ஒன்றும் சொல்லாது, “ஓ என்னை மன்னித்து விடுங்கள், நான் தப்பான முகவரிக்கு வந்து விட்டேன் போல!என்று சொல்லி அங்கிருந்து விலகினார்.  



சில மாதங்களுக்குப் பிறகு எனக்கு ஒரு கடிதம் வந்தது. என் பள்ளி மாணவர்கள் அனைவரும் சந்திக்க பள்ளிக்கு வரப்போவதாகவும், என்னையும் வரச் சொல்லியும் அழைத்து இருந்தார்கள். என்னுடைய மனைவியிடம் அலுவலகப் பணி இருப்பதாக பொய் சொல்லி எனது ஊருக்குச் சென்றேன். அங்கே அனைவரையும் சந்தித்த பிறகு எனது அப்பா தங்கியிருந்த குடிசைக்குச் சென்றேன்!



பக்கத்து வீட்டில் இருந்தவர்கள், அப்பா இறந்து விட்டதாகவும், எப்போதாவது நான் வந்தால் என்னிடம் தரச் சொல்லி ஒரு கடிதம் தந்ததாகவும் சொன்னதோடு, அப்பா எழுதிய கடிதத்தினையும் என்னிடம் தந்தார்கள். அப்பா இறந்து போனதைக் கேட்ட போது கூட என் கண்களிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை. அப்பாவின் கடிதத்தினை படிக்க ஆரம்பித்தேன்.



“அன்புள்ள மகனுக்கு,



நான் எப்போதும் உன் நினைவாகவே இருக்கிறேன். சமீபத்தில் உன் வீட்டிற்கு வந்து உன் குழந்தைகளை பயமுறுத்தி விட்டேன். என்னை மன்னித்து விடு. நீ உன் பள்ளிக்கு மீண்டும் வரப்போவதாக தெரிந்து மனதில் மகிழ்ச்சி. ஆனாலும் எனது படுக்கையிலிருந்து எழுந்து கொள்ளக் கூட முடியாத நிலையில் தான் நான் இருக்கிறேன்.



சிறு வயதில் என்னுடைய தோற்றத்தினால் உன்னை பல விதங்களில் நான் சங்கடப் படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடு. இது வரை உனக்கு தெரியாத ஒரு விஷயத்தினை இப்போது சொல்ல வேண்டும். உன் சிறு வயதில் ஒரு பயணத்தின் போது விபத்து ஏற்பட்டது. அதில் நீ ஒரு கண்ணை இழந்து விட்டாய். ஒரு கண்ணோடு உன் வாழ்நாள் முழுவதும் நீ கஷ்டப்படுவாய் என்பதை அப்பா எனும் நிலையில் என்னால் நினைத்துக் கூட பார்க்க இயலவில்லை. அதனால் என்னுடைய கண்களில் ஒன்றை உனக்கு பொருத்தி விடச் சொல்லி மருத்துவர்களிடம் சொல்லி விட்டேன்.



என் கண் மூலம் நீ இந்த உலகினைப் பார்க்க முடியும் என்ற மகிழ்ச்சியுடன் எனது வாழ்நாளினை கழித்து விட்டேன்.  உன் மகிழ்ச்சி மட்டுமே எனக்கு முக்கியம்.  மேலும் பல சந்தோஷ அலைகள் உன் வாழ்வில் வீசட்டும்....



என்றைக்கும் உன் வாழ்வில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் நிலவட்டும்....



அப்பா...



டிஸ்கி:  நாளைக்கு தந்தையர் தினம் – ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமை அன்று தந்தையர் தினம் கொண்டாடப் படுகிறது. இந்த தினத்திற்கென ஒரு பதிவு எழுத நினைத்திருந்தேன். சமீபத்தில் வந்த ஒரு மின்னஞ்சலில் ஆங்கிலத்தில் Dad and Me என்று வந்த்தை இங்கே தமிழில் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.......





71 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. // இன்றைக்கு தந்தையர் தினம் – ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமை அன்று தந்தையர் தினம் கொண்டாடப் படுகிறது. //

    அப்படியென்றால் இந்த பதிவு நாளை அல்லவா வந்திருக்கவேண்டும். இருப்பினும் உள்ளத்தை தொட்ட கதை. தந்தையர் தினத்திற்கு பொருத்தமான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறினைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. நாளைக்கு தான் வந்திருக்க வேண்டும். இப்போது மாற்றி விட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  3. புற அழகில் மயக்கம்... அக அன்பை புரிந்து கொள்ளவில்லை...

    இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. Happy FATHERS Day.நல்ல கதை.தந்தையின் அன்பு மறைந்து இருக்கும். தந்தையின் அருமை இருக்கும் போது தெரிவது இல்லை என்பதே உண்மை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுபா.

      நீக்கு
  5. வணக்கம்
    ஐயா
    பிள்ளைகளின் மனச்சிந்தனை வேறு தாய் தந்தையின் சிந்தனை வேறு அப்பாவின் உதவியை நினைத்துக்கூட பார்க்க முடியாது ...
    அப்பா இறந்த பின் அவர் எழுதிய கடிதத்தின் வழிதான் அப்பாவுக்கு கண் இல்லாமல் போனதுக்கு காரணத்தை.தெரிந்து கொண்டான் மகன். மிக அருமையாக உள்ளது
    இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  6. வணக்கம்

    த.ம 2வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  7. மனதை உலுக்கும் கடிதம் ஐயா
    தந்தையர் தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தமிழ் மணம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. தந்தையின் தியாகங்கள் பலவும்
    தனயர்களால் புரிந்துகொள்ளவே படாமல் நாட்கள் கடந்துவிடுகின்றனவே..!

    இனிய தந்தயர் தின வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜ்ராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  10. Venkat

    Super. I have read this in english which I recd through mail. Anyhow thanks for your good attempt.

    Vijay

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் அனுப்பி வைத்தது தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு
  11. அப்பாக்களின் தியாகம் என்றும் வெளியில் வருவதே இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  13. நண்பரே! படித்துவிட்டு மனம் கனத்து அப்படியே இருந்துவிட்டோம்! இந்தக் கதை மனதை பிழிந்தெடுத்துவிட்டது எங்களை அறியாமல் கண்ணில் நீர்......

    இப்படியும் மகனா?! என்றும் தோன்றியது! நல்லதொரு பகிர்வு! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  14. மனதை உலுக்கிய கதை.....உண்மையாய் இருந்துவிடக் கூடாது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

      நீக்கு
  15. பெற்ற மனம்பித்து பிள்ளைமனம் கல்லு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  16. பாசப் பிணைப்பினை மிக அழகாக உணர்த்திய கதை ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரசன்.

      நீக்கு
  17. கதை தான் என்றாலும் - மனம் நெகிழ்ந்தது.
    இப்படிப்பட்ட பிள்ளைகளையும் இந்த பூமி தாங்க வேண்டியுள்ளதே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  18. அப்பாக்கள் தின நல் வாழ்த்துக்கள் என் அன்புச் சகோதரனே தங்களுக்கும்
    ஏனைய ஆண் சகோதர்களுக்கும் முன் கூட்டியே வாழ்த்துச் சொல்வதிலும்
    மட்டற்ற மகிழ்வு நிலைக்கிறது அருமையான பகிர்வினைத் தந்து எம்
    உள்ளக் கிடக்கையில் உள்ள உணர்வுகளைத் தட்டி எழுப்பியுள்ளீர்கள் இதற்கும்
    என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா இன்று உலக
    வலைத்தள நாளாம் அதற்காவும் எனது வாழ்த்து மலர்களை இங்கே தூவிச்
    செல்கின்றேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நனறி அம்பாளடியாள்.

      நீக்கு
  19. இதையே அம்மா என்றும் படித்திருக்கிறேன்!
    தந்தையர் தின மற்றும் பதிவர் தின வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  20. ஆமாம் நானும் அம்மா என்று தான் படித்த்ருக்கிறேன். நன்று..த.ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

      நீக்கு
  21. இதை வேறு பல வகைகளில் படித்திருக்கிறேன். இருந்தாலும் சுவாரசியம் தான்.
    அப்பா இந்த உண்மையை சாவிலும் சொல்லியிருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

      நீக்கு
    2. http://avargal-unmaigal.blogspot.com/2011/05/blog-post_08.html மனதை தொட்டுச் செல்லும் ஒரு ஆண்மகனின் கதறல்கள்

      நீக்கு
    3. இணைப்பில் தந்திருக்கும் பதிவினைப் படித்தேன் மதுரைத் தமிழன்.

      அன்னையர் தினம், தந்தையர் தினம் சமயங்களில் இந்த மாதிரி மின்னஞ்சல்கள் வந்துவிடுகின்றன. நீங்கள் அப்போதே எழுதியிருக்க, இப்போது நான்! :)

      தங்களது வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.

      நீக்கு
  22. நெகிழ வைத்த பகிர்வு! தந்தையர் தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  23. நெகிழ வைத்தது...
    ஒரு தந்தையாக பெருமிதம்படுகிறேன்......
    இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஷ் பிரபு.

      நீக்கு
  24. தந்தையர் தின வாழ்த்துகள் வெங்கட். அருமையான கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  25. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

      நீக்கு
  26. மனம் நெகிழ வைத்த கதை. தந்தையர் தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.

      நீக்கு
  27. இது ஒரு முழுக்க முழுக்க கற்பனை நிகழ்ச்சிங்க. இதே கருத்துடன் பல வகையான மெயில்கள் இணையத்தில் கிடைக்கும். ஒன்றில் அப்பா என்பார்கள், ஒன்றில் அம்மா, இன்னொன்றில் அக்கா இப்படி பல வகைகள் உண்டு. நிஜத்தில் இத்தகைய தியாகம் உள்ளம் கொண்டவர்களையும் பார்க்க முடியாது. பெற்றோரை ஒரு கண் இல்லை என்றும் வெறுக்கும் பிள்ளைகளையும் பார்க்க முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி!

      நீக்கு
  28. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மா....

      உங்கள் முதல் வருகை மகிழ்ச்சி தந்தது.

      நீக்கு
  29. மனதை உருக்கிய கதை! சோகமான முடிவும் கண் கலங்க வைத்தது,
    இனிமையான தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்!
    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.
    என் தளத்தில் முடிந்தால்"அப்பாவை அல்லது தந்தைக்கு ஓர் குறுந்தகடையும்,"கண்டு கருத்துரை ௬றினால் மகிழ்ச்சியடைவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி! உங்கள் தளத்திற்கும் வருகிறேன்.

      நீக்கு
    2. வணக்கம். என் வேண்டுகோளுக்கு மதிப்பளிித்து என் தளம் வந்து பாரட்டுக்களுடன் ௬டிய யார்வையிட்டமைக்கு மிக்க நன்றி சகோதரரே!
      நட்புடன்.
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. உங்க்ள் பக்கத்தினை தொடரும் வசதி இல்லாத் காரணத்தினால் தான் தொடர்ந்து படிக்கவில்லை......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி...

      நீக்கு
  30. மனம் தொட்ட பதிவு.
    தந்தையர் தின வாழ்த்துக்கள் நாகராஜ் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்......

      நீக்கு
  31. தந்தையர்களின் தியாகஙகளை பிள்ளைகள் புரிந்து கொள்வதில்லை, ஆனால் அவர்கள் புரிந்து கொண்டபிறகு , அவர்களை காணமுடியவில்லை..
    கடைசியில் ஏன் வெறுத்தோம் என வருத்தபடும் அளவுக்கு உணர்ந்தானே....

    மிக அருமையான் மொழிபெயர்ப்பு கதை,...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜலீலா ஜி....

      நீக்கு
  32. உள்ளத்தை உருக வைத்த பதிவு.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  33. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....