தொகுப்புகள்

புதன், 12 ஆகஸ்ட், 2015

பொய் புன்னகை சிந்திய காரிகைகள்

பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 2

முந்தைய பகுதி [பகுதி-1]

படம்: இணையத்திலிருந்து.

பயணம் செய்ய வேண்டிய நாளும் வந்தது. தில்லி விமான நிலையத்தின் 1D Terminal வரை வாடகைக் காரில் பயணித்து அங்கிருந்து காலை 06.55 மணிக்கு புறப்படும் இண்டிகோ விமானத்தில் பயணிக்க வேண்டும். எங்கள் இல்லத்திலிருந்து விடிகாலை நேரத்தில் இருபது நிமிடங்களிலேயே விமான நிலையம் சென்றுவிடலாம் என்றாலும், இரண்டு மணி நேரங்களுக்கு முன்னரே விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்பதால் 04.30 மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட்டோம்.

விமான நிலையம் சென்று முதல் வாயிலில் எங்களது பயணச்சீட்டையும் அவரவரது அடையாள அட்டையைக் காண்பித்த பிறகு உள்ளே நுழைந்தோம். நேராக Indigo Counter சென்று பயணச்சீட்டையும் அடையாள அட்டைகளையும் காண்பித்து Boarding Pass வாங்க வேண்டும். அங்கே அமர்ந்திருந்த பெண்ணிடம்,  ஒரே வரிசையில் இருக்கைகள் கேட்க, அவர் மனமிரங்கி 13-D,E,F என்று சொல்லி புன்னகையுடன் கொடுத்தார்! Security Clearance-க்குண்டான வரிசை மிக நீளமாக இருக்க, கடைசியில் போய் நாங்களும் நின்று கொண்டோம்.

சமீப காலங்களில் விமானப் பயணத்தினை தேர்ந்தெடுக்கும் இந்தியப் பயணிகள் அதிகரித்து விட்டார்கள். பல சமயங்களில் ஏதோ பேருந்து நிலையத்திலோ/ரயில் நிலையத்திலோ இருக்கும் உணர்வு வந்துவிடுகிறது – அத்தனை மக்கள் கூட்டம் - உள்நாட்டு போக்குவரத்திற்கும் விமானங்களை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். தில்லி விமான நிலையத்தில் காலை/மாலை வேளைகளில் அத்தனை நீண்ட வரிசை – Security Clearance-க்காக நிற்பதைப் பார்க்கும்போது மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்து இருப்பது தெரிகிறது.

விமானம் புறப்பட ஒரு மணி நேரத்திற்கும் மேலாகவே இருக்கிறது. எங்களுக்கான நுழைவாயில் அருகே உள்ள இருக்கைகளில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க துவங்கினேன். இது தானே இருப்பதிலேயே மிகமிக அவசியமான வேலை!  அதிகாலை நேரமாக இருப்பினும், பலர் நொறுக்குத் தீனிகளை வாங்கி உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்கள் – சிலருக்கு பொழுது போகவில்லை என்றால் சாப்பிடத் துவங்கி விடுகிறார்களே!  கொடுத்து வைத்தவர்கள்!

சிலர் நொறுக்குத் தீனியில் மும்மரமாக இருக்க, பலர் தங்களை செல்ஃபி எடுத்துக் கொள்வதில் மும்மரமாக இருந்தார்கள். அதிலும் தன்னந்தனியே அமர்ந்து கொண்டு விதவிதமாக செல்ஃபி எடுப்பவர்களைப் பார்த்தால் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது – “பாவம் யார் பெத்த புள்ளையோ..... மனசு சரியில்லை போல! என்று செல்ஃபி பற்றி தெரியாதவர்கள் நினைத்து விடக்கூடும்!


படம்: இணையத்திலிருந்து.

எங்கள் விமானத்திற்கான அழைப்பு வந்ததும், அதற்குரிய வாயிலில் மீண்டும் நீண்டதோர் வரிசை – இம்முறை Indigo பணியாளர்கள் Boarding Pass/ID Card சோதனை செய்து வரிசையாக உள்ளே அனுப்ப, எங்களை விமானம் வரை அழைத்துச் செல்வதற்காக குளிரூட்டப்பட்ட பேருந்து நின்று கொண்டிருந்தது. அதில் பயணித்து விமானத்தினைச் சென்றடைந்தோம்.  பொய் புன்னகை சிந்திய காரிகை “தரணும்எங்களை வரணும்என வரவேற்றார். [அந்த காரிகையின் பெயர் Tarannum என எழுதி இருந்தது!] அரை விநாடிக்கு ஒரு முறை புன்னகைக்க இவர்களுக்கு தனியே வகுப்பு எடுத்திருப்பார்கள் போலும்!


 படம்: இணையத்திலிருந்து.

பல சமயங்களில் இவர்களைப் பார்க்கும் போது ஒரு வித பரிதாப உணர்வு தோன்றுகிறது. என்னதான் Air Hostess என்று சொன்னாலும், தற்போது அவர்களுக்கு எத்தனை வேலைகள் – உணவு கொடுப்பதிலிருந்து, குப்பைகளை அகற்றுவதிலிருந்து, பயணிகளுக்கு தேவையான விளக்கங்கள் கொடுப்பதிலிருந்து எத்தனை எத்தனை வேலைகள். அதுவும் சமீப காலங்களில் விமானத்திற்குள்ளேயே பொருட்கள் விற்பனையும் செய்ய வேண்டியிருக்கிறது! – சிறு வயதில் பன்ரூட்டி நகர் செல்லும் போது அங்கே ஒருவர் கையில் தட்டு வைத்து “இஞ்சி மரப்பாஎன்று விநோத குரலில் விற்பனை செய்வார்.  அவர் போல இவர்கள் குரல் மட்டும் தான் எழுப்பவில்லை – அதற்கு பதில் Recorded Voice!

மேலும் பயணிகள் இவர்களுக்குத் தரும் தொல்லைகள் – அப்பப்பா! எவ்வளவு பொறுமை வேண்டும் இவர்களுக்கு – Seat Belt அணிந்து கொள்ள வேண்டிய வேளைகளில் அதை கழட்டி விடுவதும், Toilet உபயோகம் செய்யக்கூடாது என்ற அறிவிப்பு வந்த சில விநாடிகளிலேயே சிலர் எழுந்து அந்தப் பக்கம் போக முயற்சிப்பதும், சிலர் விநாடிக்கு ஒரு முறை அவர்களை அழைக்க Call Button உபயோகிப்பதும் என்னவெல்லாம் செய்கிறார்கள் – பயணிப்பது இரண்டு மணி நேரமாக இருப்பினும் அதற்குள் பத்து முறை அழைத்த ஒரு பிரயாணியை பார்த்திருக்கிறேன்!

பக்கத்து [13C] இருக்கையில் இருந்த ஒரு பெண்மணி தனது கணினியில் “A presentation on bacteria” என Powerpoint-ல் தயார் செய்து கொண்டிருந்தார். அவருக்கு அத்தனை Cold and Cough! தொடர்ந்து மூக்கை உறிஞ்சுவதும், தும்முவதுமாக இருந்தார்! நல்ல பொருத்தம்! இரண்டு வரிசைக்கு முன்னர் இருந்த யாரோ சத்தமாக அலைபேசியிலோ/கணினியிலோ பாட்டு கேட்டுக்கொண்டிருக்க – புரியாத மொழிப் பாட்டு - அதைக் கேட்டு பலரும் மெர்சலானார்கள்!

இப்படியாக பயண நேரமான ஒன்றரை மணி நேரம் கழிய அஹமதாபாத் நகர தட்பவெப்ப நிலை இவ்வளவு என்று சொல்லியபடியே விமானம் தரை இறங்கப் போவதாக விமானத்தினை செலுத்திய Pilot, Speaker வழியே எங்களுக்கு அறிவிக்க, இறங்கிய உடனேயே வெளியே போக வேண்டும் என்ற முனைப்புடன் பலரும் இருக்கையின் நுனிப்பகுதிக்கு வந்திருந்தனர்! விட்டால் குதித்து விடுவார்கள் போலிருந்தது!

எங்கள் மூவரையும் வரவேற்க, அஹமதாபாத் கனிவுடன் காத்திருந்தது!  நாம் தான் அஹமதாபாத் என சொல்கிறோமே தவிர, இங்கே அவ்வூரை ஆம்தாபாத் என தான் அழைக்கிறார்கள்.....  ஆம்தாபாத்! Here I come என்று சொல்லிக் கொண்டே நானும் தயாரானேன்! நீங்களும் தயார் தானே!

நட்புடன்


   

56 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. செல்ஃபி கம்மென்ட் சூப்பர்! அரை விநாடிக்கொருமுறை புன்னகை சிந்தினால் வாய் வலிக்காதோ! பயிற்சி போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. படிக்கவே சுவாரசியமா இருக்கு, நேரில் இன்னும் நேரம் போனதே தெரியாமல் இருந்திருக்கும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு

  5. உங்களுடன் நாங்களும் சேர்ந்து பயணித்தது போன்ற ஒரு உணர்வு... குட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  6. Air Hostess பணி ரொம்பவும் சிரமம் தான்...

    காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. செல்பி பற்றிய தகவலை சரியாகச் சொன்னீர்கள்.
    நாங்களும் தயாராகி விட்டோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  8. அட! அதற்குள் ஆம்தாபாத் வந்து விட்டதா! சரி. அது இருக்கட்டும். காரிகையைப் பார்த்து பதிலுக்கு சிரித்தீர்களா, இல்லையா? அந்தத் தருணத்தை நன்றாக நினைவு கூர்ந்து சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிலுக்கு சிரித்தீர்களா இல்லையா? கேள்வி கேட்டீங்களா! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  10. அருமை! ஆமடாவாடுக்கு வந்துட்டோம்!

    // உடனேயே வெளியே போக வேண்டும் என்ற முனைப்புடன் பலரும் இருக்கையின் நுனிப்பகுதிக்கு வந்திருந்தனர்! விட்டால் குதித்து விடுவார்கள் போலிருந்தது!//

    இதுதான் எரிச்சல் கிளப்பும். விமானம் நின்னவுடன் செல் பேசி பேச்சு சத்தமா ஆரம்பமாகிரும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  11. வணக்கம்,
    அருமையான பயணம், நாங்களும் தொடர்ந்து,,,,,,,,
    அஹமதாபாத் - ஆம்தாபாத் அறிந்தோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

      நீக்கு
  12. கட்டுரை நன்றாக இருந்ததது... வாழ்த்துக்கள்.!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமல் ராஜ்.

      நீக்கு
  13. விமானத்தில் உடன் பயணித்த உணர்வை ஏற்படுத்தியது கட்டுரை! சுவாரஸ்யம்! தொடர்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!

      நீக்கு
  15. நல்ல சுவாரஸ்யமாக போகிறது நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  16. விமானப் பயணம் சர்வ சாதாரணமாக ஆகிப் போனது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  17. அப்படியே படம்பிடித்துக் காட்டி விட்டீர்கள்,விமான நிலையத்தை,பணிப்பெண்களை.சக பயணிகளை.நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  18. நல்ல பகிர்வு. தயார்:). தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  19. ஒரு காலத்தில் ஏர் ஹோஸ்டசுக்கு இருந்த ஒளிவட்டம் இன்று இல்லைதான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  20. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

      நீக்கு
  21. ஹோல்ட் ஆன்! நாங்க கொஞ்சம் தாமதம்...ஃப்ளைட்டை நிற்கச் சொல்லுங்க...வெங்கட் ஜி! ஹஹஹ..துளசிக்கு கீதா வாசித்து வருவதற்கு தாமதம்..

    நல்ல சுவாரஸ்யம்...உங்களுடன் பயணித்ததில்.....நிறைய சுவையான வார்த்தைகள் வாக்கியங்கள்...ஹாஸ்யமாகவும்...

    வாசித்ததும், எங்கள் நினைவுக்கு வந்தது மௌலியின் ஃப்ளைட் நம்பர் 172 நினைவுக்கு வந்தது. இப்போதெல்லாம் பணப்புழக்கம் அதிகமாகிவிட்டது போல்தான் தோன்றுகின்றது. பெரும்பாலானோர் ஃப்ளைட் அப்படி இல்லை என்றால் எப்போதுமே ஏசி ரயிலில் என்றால் என்று.

    ஃப்ளைட்டிலும் கூட பஸ்ஸிலிருந்து அது நிற்கும் முன்னரேயே குதித்து இறங்குவது போல ஃப்ளைட்டிலும் தயராகிவிடுகின்றார்கள் அதைப் பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கும். இறங்குவதில் அத்தனை முண்டியடிப்பு கூட நடக்கும்...

    விமானப் பணிப்பெண்கள் பாவம் தான்..அதுவும் தண்ணிப் பார்டிகள் ஏறினால் அவர்கள் பாடு திண்டாட்டம்...

    ஆம்தாபாத் வந்தாச்சு...உங்களுடன் தொடர்கின்றோம் ..




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  22. செல்ஃபி - அஹ்ஹாஹ்ஹா

    விமானப்பணிபெண்கள் - ரெடிமேட் புன்னகை...ஓரிருவர், அவர்கள் புன்னகைக்கும் போது அதில் ஒரு நட்பு இருப்பது தெரியும்....மனதிலிருந்து என்பது தெரியும்...ஆனால் பொதுவாக ரெடிமேட் புன்னகைப் பயிற்சி உண்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  23. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  24. வணக்கம்,
    அருமையாக இருக்கு,
    நாங்களும் தொடர்ந்து,,,,,
    வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

      நீக்கு
  25. Hope you enjoyed Ahmedabad. I love the place. Been there thrice and I could go again n again!!!
    My Travelogue

    பதிலளிநீக்கு
  26. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  27. ஆம்டாபாதில் துணிகள் கொள்ளை மலிவு. வாங்கினீங்களா? சுத்திப் பார்த்தீங்களா? கொஞ்சம் நசநசவென வியர்க்கும்! அதான் பிடிக்காது! :) நெரிசலாகவும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாகவே வெளியூருக்குப் போகும் போது எதையும் வாங்குவது இல்லை. :))

      நெரிசல் பழகிப் போன விஷயம் தானே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  28. விமானப் பணிப்பெண்கள் பாவம்தான்..அந்த புன்னகைக்குப் பின் என்ன சோகம் இருக்கிறதோ..
    லேட்டா வந்துட்டு கமெண்ட் வேறயா என்று கேட்காதீர்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோகம் இருந்தாலும் புன்னகைக்க வேண்டிய கட்டாயம்தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....