தொகுப்புகள்

சனி, 17 அக்டோபர், 2015

கவிதைப் போட்டி-2015 மற்றும் ஒரு போட்டியும்!



வலைப்பதிவர்கள் அனைவருக்கும் வணக்கம்! நண்பர் ரூபன் அவரது வலைப்பூவில் இந்த தீபாவளிக்கும் ஒரு கவிதைப் போட்டி பற்றிய அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார். தீபாவளி, பொங்கல் என அவ்வப்போது போட்டிகள் வைத்து பதக்கமும் சான்றிதழும், பரிசும் கொடுத்து தமிழுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் நண்பருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

போட்டி பற்றிய தகவல்களை முழுதும் தெரிந்து கொள்ள கீழுள்ள தளங்களுக்கு செல்ல வேண்டுகிறேன்.



அது சரி தலைப்பில் இருக்கும் மற்றுமொரு போட்டி என்ன?  என்னை மாதிரி கவிதை எழுதத் தெரியாதவர்களுக்கான போட்டி அது! பத்திரிகைகளில் வாராவாரம் படம் கொடுத்து ஆறு வித்தியாசம் கண்டுபிடிப்பது, குறுக்கெழுத்து போன்ற போட்டிகள் நடத்துவார்கள் அல்லவா? அது போன்று ஒரு படம் தான் இன்றைக்கு தரப் போகிறேன். அப்படத்தின் தலைப்பான “ஆறுவது சினம்என்பதில் உள்ள எழுத்துகளைக் கொண்டு எத்தனை வார்த்தைகள் சேர்க்க முடியும்?




மொத்தம் 21 வார்த்தைகள் சேர்க்க முடியும் என்று போட்டி வெளிவந்திருந்த கலைமகள் தீபாவளி மலர்-1951-ல் சொல்லி இருக்கிறார்கள்.  அரை மணி நேரத்தில் 15 வார்த்தைகளுக்கு மேல் சேர்ப்பவர்கள் கெட்டிக்காரர்கள். 10-க்கும் மேல் குற்றமில்லை. 7-க்கு மேல் சுமார். மற்றவர்களைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை!   என்று அவர்களே சொல்லி இருக்கிறார்கள். எத்தனை வார்த்தைகள் உங்களால் சேர்க்க முடிந்தது என்பதையும், அந்த வார்த்தைகளையும் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

டிஸ்கி: அவர்கள் விடையாகத் தந்திருந்த 21 வார்த்தைகளும் இன்று இரவுக்கு மேல் இப்பதிவில் சேர்க்கப்படும். அதுவரை நான் காத்திருக்கிறேன் என்று சொல்லக்கூடாது! :)

புத்தகத்தில் கொடுத்திருந்த விடைகள்:

1.  ஆ [பசு]; 2. ஆறு [நதி]; 3. ஆவ [ஐயோ]; 4. ஆவது [ஆகும் காரியம்]; 5. ஆசி [ஆசீர்வாதம்]; 6. ஆம்; 7. ஆதும் [ஆவோம்]; 8. துறு [நெருங்கு]; 9. வசி; 10. வனம்; 11. ஆவம் [அம்புறாத்துணி]; 12. சிறுவ; 13. சிறு; 14. ஆறுதும் [ஆறுவோம்]; 15. சிவம்; 16. சிவ; 17. சிறுவனது; 18. ஆறும்; 19. துறும் [நெருங்கும்]; 20. வது [மணப்பெண்].

அது சரி, வார்த்தைகள் கண்டுபிடிக்கும் போட்டிக்கு என்ன பரிசு? என்று கேட்பவர்களுக்கு, உங்களுக்கு நீங்களே சபாஷ் என்று சொல்லிக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.  மேலும் உங்களை ஊக்குவிக்க இன்னுமொரு போட்டியும் அடுத்த சனிக்கிழமையில் பொக்கிஷப் பகிர்வாக வெளியிடப்படும்!

நாளை வேறு பதிவில் சந்திக்கும் வரை...

நட்புடன்







29 கருத்துகள்:

  1. ஆறுவது சினம்
    ஆசி
    சிறு
    வசி
    ஆம்
    இப்படி சேர்க்கலாமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியே தான்.... ஆறுவது சினம் தவிர!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  2. கொஞ்ச வார்த்தைகள் சேர்த்தேன்... பொறுமையாக முயற்சித்தால் வார்த்தைகளைப் பிடிக்கலாம் அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிடித்த வார்த்தைக்ளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  3. ஆறு
    ஆவது
    ஆனவம்
    சினம்
    சிறு
    சிவ
    ஆம்
    வசி
    வனம்
    ஆசி
    ஆனது
    துறு
    துசி
    வம்சி
    வது
    ஆறுவது
    சினம்
    றுசி
    ஆனம் ஆனால் இப்படி எழுத்துக்களை மாற்றி சேர்க்கலாம் பொருள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனவம், றுசி - இவை சரியல்ல! அல்லது இதற்கு வேறு பொருள் உண்டோ?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா....

      நீக்கு
  4. ஹி ஹி ஹி நானும்கூட எழுதலாமா ? ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா.... நீங்களும் எழுதலாம் ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  5. 1. ஆறு
    2. ஆசி
    3. ஆனம்
    4. ஆம்
    5. ஆவது
    6. வது
    7. வனம்
    8. வசி
    9. வறு
    10. துஆ
    11. து
    12. சிறு
    13. சிவம்
    14. ஆறுவது
    15. சிறுவ
    16. ஆவதும்
    17. ஆறும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  6. 01 ஆறு
    02 ஆவது
    03 ஆறுது
    04 ஆசி
    05 ஆம்
    06 ஆறும்
    07 ஆவதும்
    08 வசி
    09 சிறு
    10 வனம்
    11 சினம்
    12 துவனம்
    13 துவசி
    14 வம்சி
    15 சிவம்
    16 சிவனம்
    17 ஆவனம்
    18 துறுவம்
    19 ஆனது
    20 வது
    21 சிவ
    - கில்லர்ஜி -

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  7. ஆறு
    ஆசி
    ஆம்
    ஆனம்
    சிறு
    வறு
    துறு
    ஆவது
    வது
    வனம்
    வம்சி
    வசி
    சிவம்
    சிறுவம்
    துசி
    ஆறும்
    இவையே நான் எழுதியவை அண்ணா...
    ஆணவம் மூணு சுழிதான் வரும் அதனால் எழுதவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை. சே. குமார்.

      நீக்கு
  8. வது - மணப்பெண்.
    ஆறு
    சிம்(கார்ட்)
    துஆ - பிரார்த்தனை.
    சிறு
    ஆறும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. வணக்கம்.

    1) ஆ – பசு
    2) வ – ¼ என்பதன் தமிழ்க்குறியீடு
    3) து - உணவு
    4) சி – சிரஞ்சீவி என்பதன் சுருக்கக் குறியீடு
    5) ஆறுவது
    6) சினம்
    7) ஆறு – எண், வழி
    8) ஆவ - ஆக
    9) ஆது - தெப்பம்
    10) ஆவது – இயலுவது,
    11) ஆவம் - அம்புக்கூடு
    12) ஆசி
    13) வறு – வறுத்தல்
    14) வது – மணப்பெண்
    15) வசி
    16) வனம்
    17) சிறு
    18) சிவம்
    19) துறு - நுழை
    20) ஆம்
    21) ஆசிவம் – ஆசீவகம் என்பதன் மரூஉ
    22) ஆனம் – கப்பல்.
    23) தும் – தூசி.
    24) துவம் – இரண்டு.
    25) சிறுவ – சிறுவன் என்பதன் அண்மை விளி.

    எனக்கு எட்டிய மட்டில்...

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஊமைக்கனவுகள்....

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  11. 1.ஆறு-தண்ணீர்உள்ள ஆறு.
    2.சினம்
    3.வது
    4.சிறு
    5.ஆ-பசு
    6.சிவ
    7.துவம்-முதலாளி
    8.னம்-மர்மம்
    9.ஆசி-நிறைவேறி
    10.சிம்
    11.சின-கோபி
    12.ஆனம்-ஆதாரம்
    13.ஆம்
    14.ஆன
    15.துசி
    16.வனம்
    17.ஆறு-இலக்கம்
    18.வசி
    19.தும்-ஒரு ஒலி சப்பதம்
    20.வம்சி.
    21றுது.
    22.வறு
    நல்ல போட்டி ஐயா.. எல்லோரையும் சிந்திக்க வைத்திங்கள்.உலகம் தழுவிய கவிதைப் போட்டி சம்மந்தமாக பதிவை வெளியிட்டமைக்கு நன்றி ஐயா. த.ம
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  12. தமிழறிவு பெருக
    நல்ல போட்டி
    முயன்றால் அதிக வார்த்தைகள் வசப்பட
    நல்ல வாய்ப்புண்டு
    நானும் முயற்சிக்கிறேன்
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  13. புத்தகத்தில் கொடுத்த விடைகள் தற்போது பதிவில் சேர்த்து விட்டேன். வார்த்தைகள் சேர்த்து இங்கே பகிர்ந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. வாழ்த்துகளும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் என்ன நினைத்தேனோ எல்லாமே விடையில் இருக்கே :)

      நீக்கு
    2. ஹா..ஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  14. பரிசு இல்லாத போட்டியெல்லாம் போங்கு!(போங்கு-பொருள் என்ன?!)சபாஷ் கூட நீங்க சொல்ல மாட்டீங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகள் சொல்லி இருக்கேன்! பின்னூட்டத்திலே! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....