தொகுப்புகள்

சனி, 6 பிப்ரவரி, 2016

ஃப்ரூட் சாலட் – 157 – அம்மான்னா சும்மாவா? – நட்பு – உடலுறுப்பு தானம்


நம்பிக்கை:


ஆட்டோ டிரைவர் ஆகாய விமானியான கதை - வானம் தொட்டுவிடும் தூரம்தான்:

முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் ஸ்ரீகாந்த் பண்டவானா. ஸ்ரீகாந்த் நாக்பூர் நகரில் ஒரு "செக்யூரிட்டி" யின் மகனாகப் பிறந்தார். பள்ளியில் பயிலும் போதே "டெலிவரி பாய்" "ஆட்டோ டிரைவர்" என கிடைத்த வேலையை செய்தவர்.  அடிக்கடி மும்பை விமான நிலையம் வரை சரக்கு "டெலிவரி" செய்ய போனவருக்கு தானும் ஒரு விமானியாக வேண்டும் என்ற எண்ணம் துளிர்விட ஆரம்பித்தது. ஒருநாள் தற்செயலாக அங்குள்ள "கான்டீன்" உரிமையாளரிடம் பேசிக் கொண்டு இருந்த போது, விமானம் இயங்கும் பைலட் களுக்கான தேர்வு நடப்பதை தெரிந்து கொண்டார்.

சிவில் ஏவியேஷன் நடத்தும் இந்த சிறப்பு தேர்வில் கலந்து கொள்ள தன்னை தயார் படுத்த நினைத்தார். அதற்கு முன்பாக , மத்திய பிரதேசத்தில் உள்ள "விமானபயிற்சி பள்ளி" -யில் நுழைந்தார். அங்கு கவனமாக பயின்று் அதன் மூலம் நல்ல ஊக்கத்தொகையும் பெற்றார். அதன் பிறகு ஒரு நல்ல பயணிகள் விமானத்தை இயக்கும் ஒரு கைதேர்ந்த விமானியாக சான்றிதழ் பெற்றார். சர்வதேச பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட போது "பட்ஜட்" ரக விமானங்களை இயக்கினார். குறிப்பாக,"கோ பைலட்"ஆக பணியாற்றினார்.

இப்பொழுது, ஏவியூஷன் துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றுகிறார். ஆகாயத்தில் அந்தஸ்து வேண்டும் என்பதை விட, உழைப்பும், விடா முயற்சி வேண்டும் என்பது நூறு சதவீத உண்மை!

#முயற்சி திருவினையாக்கும்!

ஸ்ரீகாந்த் அவர்களுக்கு உங்கள் சார்பாகவும் என் சார்பாகவும் ஒரு பூங்கொத்து!

நட்பு.....

Everyone has a friend during each stage of life.  But lucky ones have the same friend in all stages of life.

யானையும் எறும்பும்!:

யானைக்குக் கறும்புத் தோட்டமே தேவையாக இருக்கிறது. எறும்புக்கு சக்கையே போதுமானதாக இருக்கிறது.  தோட்டம் கிடைக்கும்போது யானையாக இரு.  சக்கை கிடைக்கும்போது எறும்பாய் இரு. வாழ்க்கையில் திருப்தியில்லை என்ற பேச்சுக்கே இடமிருக்காது!

ஆறு நிமிடத்தில் இந்தியா:

அருமையானதோர் காணொளி. இந்தியாவில் இருக்கும் பல சுற்றுலாத் தலங்களையும் ஆறே நிமிடத்தில் காணமுடியும் – பயணிக்க முடியாத பலருக்கு இது நல்ல வாய்ப்பு! பார்த்து ரசியுங்களேன்.....

India
India <3 Easy to love, hard to forget....
Posted by This is India on Tuesday, January 19, 2016


உடலுறுப்பு தானம்...

மனதைத் தொடும் காணொளி.....  பாருங்களேன்.

Mom hears son's heartbeat after his death
A mom in Arizona donated her 18-month-old son's organs after he died. She recently met with the family of one of the lives he saved. http://cnn.it/1PaKTei*Editor's note: Lukas Clark was 7-months-old when he died. The original video post says he was 18-months-old at the time of his death.
Posted by CNN on Monday, February 1, 2016



அம்மான்னா சும்மாவா?..... 


Posted by Im friend :-) on Monday, November 30, 2015




மாட்டுச் சாணமும் பாபமும்

காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி. அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர்.

ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார். மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தான். மகரிஷியும் அதை வாயில் போட்டு விட்டார். மன்னன் கலகலவென சிரித்தபடியே அங்கிருந்து போய்விட்டான்.
மறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர், ‘மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா?. அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உண்ண வைப்பார்கள். அதற்கு தயாராக இரு! என்று கூறி விட்டு போய்விட்டார். மன்னன் நடுங்கி விட்டான். தான் விளையாட்டாக செய்த தவறை எண்ணி வருந்தினான்.

தான தர்மங்கள் செய்து, தன் பாவங்களைக் குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து அங்கேயே தங்கினான். அரண்மனை ஆடம்பர சுகத்தை மறந்தான். தன் நாட்டிலுள்ள இளம்பெண்களை குடிலுக்கு வரவழைத்து, அவர்களது திருமணத்துக்கு தேவையான நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக்கூறி அனுப்பிவைத்தான். இது நாள்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.

அரசனின் இந்த தினசரி வழக்கத்தை, அந்த நாட்டில் சிலர் வேறுமாதிரியாக கதை கட்டி விட்டனர். மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் குடிலுக்கு வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான் என்று திரித்துக் கூறினர். இப்படியாக பல விமர்சனங்கள் வந்தவண்ணமிருந்தன.

ஒருநாள் கற்புக்கரசியான பெண் ஒருத்தி, பார்வையற்ற தன் கணவருடன், அரசனின் குடில் முன்பாக நின்று யாசகம் கேட்டாள். அந்த கணவன், ‘நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்? எனக் கேட்டான்.

அரசன் அமைத்திருக்கும் குடில் முன்பு என்று பதிலளித்தாள் அந்தப் பெண்.

அதற்கு அவளது கணவன், ‘ஓ! தானம் கொடுப்ப தாகச் சொல்லிக் கொண்டு, பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா? என்றான். அந்தப் பெண் பதறிப்போய் உடனடியாக அவனது வாயைப் பொத்தினாள்.

பின் மெதுவாக தன் கணவனிடம் கூறத்தொடங்கினாள். சுவாமி! என் கற்பின் சக்தியால், நான் முக்காலத்தையும் உணர்ந்து சொல்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தான். அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்பதற்காக தயாரானது. அவ்விஷயம் மன்னனுக்குத் தெரிய வரவே, அந்த பாவ மலையை கரைக்கும் பொருட்டு, கன்னியருக்கு தானதர்மம் செய்து நற்போதனைகளைச் செய்து வருகிறான்.

ஆனால் சிலர் மன்னனைப் பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. தற்போது மன்னனைப் பற்றி தவறாகப் பேசியதன் காரணமாக, அந்த கடைசி கவளத்தை தாங்கள் எடுத்துக் கொண்டீர்கள். மேலும் அடுத்தப் பிறவியிலும் கூட தாங்கள் பார்வையற்றவராகவே பிறப்பீர்கள் என்று கூறினாள். அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அவளது கணவன்.

தவறு செய்தவர்கள் திருந்த எடுக்கும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது. அவர்களை தவறாக விமர்சித்தால், அவர் செய்த பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும். உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல், காலத்துக்கும் வம்பு பேசிக்கொண்டு மற்றவர்களின் பாவத்தை சிலர் பங்கிட்டுக்கொள்கிறார்கள். அந்த தவறை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது.

நாம் செய்த பாவத்தை சுமக்கவே, நமக்கு இந்த ஒரு பிறவி போதுமா என்பது தெரியாத நிலையில், தேவையில்லாமல் புறம்பேசி அடுத்தவரின் பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டுமா என்ன!

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்

திருவரங்கத்திலிருந்து.....

40 கருத்துகள்:

  1. ஸ்ரீக்காந்த்தைப் பாராட்டுவோம்.

    நான் கொஞ்சம் அதிருஷ்டமில்லாதவன் - அந்த வகையில்!

    போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

    காணொளிகள் அப்புறம்தான் பார்க்க வேண்டும்.

    கடைசிக் கதை நல்ல என்னத்தைப் போதிக்கும் கதை. அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. என்னத்தை இல்லை, எண்ணத்தை! தவறுக்கு மன்னிக்கவும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயங்களில் இப்படித்தான் :)

      தங்களது மீள் வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பழக்கலவையினை அதிகம் ரசித்தோம், வழக்கம்போல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  4. வீடியோக்களைப் பார்க்க முடியாவிட்டாலும், தகவல்களை வாசித்துவிட்டேன். நிறைய மெனக்கெட்டிருக்கிறீர்கள் வெங்கட்ஜீ! பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டை அண்ணா....

      நீக்கு

  5. ஸ்ரீகாந்துக்கு வாழ்த்துக்கள்! மூன்று காணொளிகளையும் கண்டேன். முதல் காணொளி மகிழ்ச்சியையும் இரண்டாம் காணொளி நெகிழ்ச்சியையும் உண்டாக்கியது.பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  6. ஆஹா அனைத்தும் அருமை சகோ, அதிலும் யானையும்- எறும்பும் சூப்பர்ப்,,, மற்ற பகுதிகளும் அருமை அருமை,, தொர்கிறேன் சகோ,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

      நீக்கு
  7. இப்பொழுது, ஏவியூஷன் துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றும் ஸ்ரீகாந்த் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    //ஆகாயத்தில் அந்தஸ்து வேண்டும் என்பதை விட, உழைப்பும், விடா முயற்சி வேண்டும் என்பது நூறு சதவீத உண்மை!//

    மிகவும் உண்மைதான்.

    மற்ற அனைத்தும் வழக்கம்போல அருமை, ஜி.

    அடிக்கடி தரம் வாய்ந்த பதிவுகள் தர மிகக்கடினமாக உழைத்து வருகிறீர்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  8. இறந்த மகனின் இதயத் துடிப்பை கேட்டு நெகிழ்ந்தது அந்த தாய் மட்டுமல்ல ,நானும்தான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  9. வாழ்வில் வெற்றி பெற்றால்தான் பேசப்படுகிறார்கள் எல்லோரது முயற்சியும் திருவினை ஆவதில்லையே சாண்மும் பாவமும் கதையின் சாரம் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  10. காணொளி மற்றும் கதை - என அனைத்தும் அருமை..
    இதயத்தின் ஒலியைக் கேட்ட தாயின் நிலை கண்டு நெகிழ்ச்சி..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  11. அனைத்தும் அருமை...இதயம் கண்ணீரை வரவழைத்து விட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

      நீக்கு
  12. வணக்கம்
    ஐயா

    சொல்லிய தகவல் அனைத்தும் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  13. ஸ்ரீகாந்த் பாராட்டுக்குறியவர் அனைத்தும் அருமை ஜி காணொளிகள் மனதை கனக்க வைத்து விட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  14. வழக்கம்போல் அனைத்தும் அருமை..
    இதயத் துடிப்பைக் கேட்கும் தாயின் அன்பு இதயத்தை ஏதோ செய்துவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

      நீக்கு
  15. ஸ்ரீக்காந்த்துக்கு பாராட்டுகள்!

    அம்மான்னால் சும்மாவா காணொளி இரண்டும் நெகிழ்ச்சி!இதயத்தின் சத்தம் கேட்கும் தருணம் பார்க்கும் என் கண்களிலும் நீர்!

    கதை சொல்லும் கருத்து அசத்தல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

      நீக்கு
  16. பழமொழிகள் காணொளிகள் கதை
    அனைத்தும் அருமை அருமை
    சாலட் என்பது தங்கள் பதிவுக்கு காரணப்பெயர்
    என்பதே சரி.
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  17. ஃபரூட் சாலட் செம டேஸ்ட்டு. காணொலிகளை காணமுடியல. யானையும் எறும்பும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப்ராப்தம்.....

      நீக்கு
  18. ஸ்ரீகாந்திற்கு பொக்கேயுடன் பாராட்டுகள் வாழ்த்துகள்
    யானை எறும்பு ...நல்ல கருத்து...
    இந்தியா காணொளி அருமை
    இதயம் இதயத்தைக் கனக்க வைத்தது. இரு தாய்களின் காணொளிகளும் அருமை...அம்மானா சும்மாவா !!! இரண்டு காணொளிகளுக்குமே பொருந்துமோ...!!!!

    கதையும் நல்ல கருத்தைச் சொல்லுகின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  19. அருமையான பழக்கலவை! பகிர்வுக்கு நன்றி ஶ்ரீகாந்த் பற்றிய தகவல் முற்றிலும் புதிது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  20. அருமையான கலவை...
    ஹார்ட் பீட் பார்த்து கண் கலங்கிவிட்டது...
    குருவியின் வீடியோ அருமை...
    ஸ்ரீகாந்துக்கு வாழ்த்துக்கள்.
    மன்னன் கதை அருமை...
    கலக்கல் அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....