தொகுப்புகள்

ஞாயிறு, 8 மே, 2016

வானமே வண்ணமாய்......


ஃபேஸ்புக் – முகப்புத்தகத்தில் பல குழுமங்கள் உண்டு. குறிப்பாக புகைப்படங்களுக்கான குழுமங்கள் சிலவற்றில் நானும் இருக்கிறேன் – எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்என்று சொல்லிக் கொள்ளும் விதத்தில் மட்டுமே! குழுமத்தின் மற்ற உறுப்பினர்கள் அங்கே பகிர்ந்து கொள்ளும் படங்களை ரசிப்பதோடு சரி. சில நேரங்களில் மட்டும் Like Button-ஐ சொடுக்குவதுண்டு.....  எனது படங்களை நான் பகிர்ந்து கொண்டது ஒரு முறையோ இரு முறையோ தான்.

ஒவ்வொரு வார இறுதியில் ஒரு மையக்கரு கொடுத்து அதற்கு தகுந்த புகைப்படங்களை, உறுப்பினர்கள் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளச் சொல்வார்கள்.  இது சுமார் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டுவருகிறது. இந்த வாரம் அவர்கள் கொடுத்திருக்கும் மையக்கரு – வானமே வண்ணமாய்..... 

மையக்கரு எனக்கும் பிடித்த ஒன்றாக அமைந்திருக்க உடனேயே ஒரு படத்தினை – அருணாச்சலப் பிரதேசம் சென்றிருக்கும் போது எடுத்த படம் ஒன்றினை பகிர்ந்து கொண்டேன்.  நான் பயணிக்கும் பல சமயங்களில் மாலை நேரம் அல்லது காலை நேரம் – சூரியன் உதிக்கும் நேரமோ அல்லது மறையும் நேரமாகவோ அமைந்துவிட்டால் அச்சூரியன் வானத்தில் ஏற்படுத்தும் வர்ணஜாலத்தினை புகைப்படம் எடுக்காமல் விட்டதில்லை. அப்படி பல படங்கள் என்னிடத்தில் உண்டு. 

வானமே வண்ணமாய் எனும் தலைப்பில் அங்கே பகிர்ந்து கொள்ளாத மற்ற புகைப்படங்களில் சில இங்கே ஒரு தொகுப்பாக..... உங்கள் பார்வைக்கும், ரசிப்பிற்கும்.



படம்-1
மறையும் சூரியன் - வானக் கல்லில் தன்னைத்தானே ஆம்லெட்டாக போட்டுக்கொண்டதோ?
இடம்:  தவாங், அருணாச்சலப் பிரதேசம்.


படம்-2
வானம் காட்டிய வர்ணஜாலம்....
இடம்: திருவரங்கம், தமிழ்நாடு


படம்-3
இத்தனை பெரிய இடம் கிடைத்தால் ஓவியம் வரையாமல் இருக்கமுடியுமா?
இடம்: திருவரங்கம், தமிழ்நாடு


படம்-4
என்னுள்ளே பல வண்ணமுண்டு.....
இடம்: திருவரங்கம், தமிழ்நாடு


படம்-5
கருமேகம் என்று சொன்னாலும், என்னில் பல நிறங்கள் உண்டு
இடம்: திருவரங்கம், தமிழ்நாடு


படம்-6
பழமையான கடற்கரைக் கோவிலும்  பின்புலத்தில் வானமும்
இடம்: மஹாபலிபுரம், தமிழ்நாடு


படம்-7
இத்தனை சிறிய சூரியனா இத்தனை வண்ணத்தினை பிரதிபலிக்கிறது?
இடம்:  தவாங், அருணாச்சலப் பிரதேசம்.


படம்-8
தரையில் இருக்கும் ஏரி உறைந்து கிடக்க, மேகத்தில் பஞ்சுப்பொதிகள்!
இடம்:  தவாங், அருணாச்சலப் பிரதேசம்.


படம்-9
மேகமே நீ கூட்டமாய் வந்தாலும் என்னை மறைக்க உங்களால் முடியாது எனச் சொல்கிறதோ....
இடம்:  அசாம்


படம்-10
நான் மலைகளுக்கிடையும் புகுந்து வருவேன்.... வண்ணமும் தருவேன். 
இடம்:  மேகாலயா


படம்-11
மொத்தமாய் விழுங்கிவிடவா எனக் கேட்கிறதோ இந்தக் கருமேகம்?


படம்-12
வானத்திலும் அலை அடிக்கிறதோ?


படம்-13
ஏ தென்னையே, என்னைத் தொட்டுவிட உத்தேசமோ?


படம்-14
என்னிடமிருந்து வண்ணத்தினை திருடிக்கொள்ள எண்ணமோ காவிரியே?
இடம்:  காவிரி ஆறு, திருவரங்கம்.


படம்-15
இப்படிக் கூட்டமாய் வந்தால் பயந்து விடுவேன் என்று எண்ணமோ?


படம்-16
வண்ணம் மட்டுமல்ல....  கருப்பு வெள்ளையும் எனக்குப் பிடிக்கும்!


படம்-17
இன்று போய் நாளை வருவேன்!


படம்-18
என்னை மறைக்க நினைக்காதே மரமே!


படம்-19
பழமையான கோவில் ஒன்றின் கோபுரத்தோடு.....
இடம்:  ஸ்ரீமுகலிங்கம், ஆந்திரப் பிரதேசம்


படம்-20
இன்னும் இருந்தாலும், இது தான் கடைசி!


என்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா?  ஒவ்வொரு புகைப்படம் பார்க்கும்போது உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை பின்னூட்டமாக பதிவு செய்யுங்களேன்.....

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து..... 

34 கருத்துகள்:

  1. படங்கள் அனைத்தும் அருமை!
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

      நீக்கு
  2. கண் கொள்ளாக் காட்சிகள்..
    விடியற்காலைப் பொழுதில் அருமையான அழகான - விஸ்வரூப தரிசனம்!..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  3. பூமியில் இரவான நிலையிலும் ,விமானத்தில் பறக்கும் போது நீண்ட நேரம் சூரியன் தெரியும் ,அந்த ஆங்கிளில் எடுத்த படமும் உங்களிடம் இருக்குமே ,அதையும் போடுங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிலவிலிருந்து எடுத்த படம் ஒன்று கூட இருக்கிறது! போடவா? :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  4. இரசித்தேன்!படங்கள் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  5. எல்லாமே அற்புதம்
    கச்சேரிக்குப் போகவில்லை
    அற்புதமான கச்சேரியே
    செய்துள்ளீர்கள்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  6. ஆஹா வானத்திலேயே பறக்கும் உணர்வு..இயற்கையின் வர்ணஜாலங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன சகோ...மறைந்துவிட்ட கவிஞர் வைகறையின் மகனுக்காக நிதி திரட்டும் பணியில் வீதி அமைப்பு செயல்பட்டுக்கொண்டு வருகின்றது.உங்களின் நண்பர்களின் உதவிகள் முடிந்தால் பெற்று தாருங்கள் என்பதை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  7. வானத்தின் வர்ணஜாலம் ஒளி ஓவியமாய் உங்கள் வலையினில் கண்டு மகிழ்ந்தேன்! அருமையான புகைப்படங்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  8. ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. நீங்கள் செய்வதுதான் சரி நம்மைக் கவர்ந்த படங்கள் கையில் இருக்கும்போது தலைப்புக்கேர்றபடி இருந்தால் அனுப்பலாம் தலைப்புக்காக படமெடுக்கத் தேடுதல் சரியாகுமா. அனைத்துப்படங்களும் உங்கள் கை வண்ணத்தில் மிளிறுகின்றனபாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  10. அனைத்து புகைப்படங்களும் அருமை ரசித்தேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  11. அத்தனையும் அருமை.. ஆந்திரம் அசத்துகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!

      நீக்கு
  12. வானத்து வர்ணஜாலம். அருமையான தொகுப்பு. ஸ்ரீரங்கத்தில் எடுக்கப்பட்ட படங்கள், வலைப்பதிவர் சந்திப்பினில், மேடம் கீதா சாம்பசிவம் அவர்கள் வீட்டு அபார்ட்மெண்ட்ஸ் மாடியில் எடுத்தது போல் தெரிகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவரங்கம் என்று எழுதி இருந்தவற்றில் முதல் நான்கு எங்கள் வீட்டு மொட்டை மாடியிலிருந்து எடுத்தவை. காவிரி ஆற்றுடன் இருக்கும் படம் கீதாம்மா வீட்டு மொட்டை மாடியிலிருந்து எடுத்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  13. புகைப்படங்கள் அனைத்தும் அருமை.

    வானத்தில் இருக்கும் சிவப்பு வர்ணங்கள் வெறும் வர்ணஜாலங்கள் அல்ல. இரண்யகசிபுவின் ரத்தமாக்கும். எங்க பாட்டி சொல்லிச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

      நீக்கு
  14. அருமை அருமை. படங்களும் கவிதையாய் குறிப்புகளும் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவகுமாரன்.

      நீக்கு
  15. படங்களைப் பார்த்து ரசித்தேன், அனைத்தும் அருமை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.

      நீக்கு

  16. இயற்கை, வானில் வரைந்த ஓவியங்கள் ஒரு தேர்ந்த ஓவியன் வரைந்த ஓவியங்கள் போல் உள்ளன. படங்கள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  17. வெங்கட்ஜி அனைத்துப் படங்களும் அருமை! வர்ணஜாலங்கள்தான்..இயற்கையின் ஓவியங்கள்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....