தொகுப்புகள்

புதன், 6 ஜூலை, 2016

மிடறு – குறுங்கவிதைகள்.....


மே மாதத்தின் ஒரு ஞாயிறு – விதைக்கலாம் நிகழ்வுக்காக புதுக்கோட்டை சென்ற போது நண்பர்கள் கஸ்தூரி ரெங்கன், தென்றல் கீதா, ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம் ஆகியோர்களை சந்தித்தேன். விதைக்கலாம் நிகழ்வு பற்றி ஏற்கனவே எனது பக்கத்தில் விதைக்கலாம் – மரம் நடுவோம் வாங்கஎன்ற தலைப்பில் எழுதி இருக்கிறேன். சந்திப்பின் போது சகோ தென்றல் கீதா அவர்கள் எனக்கு சில கவிதைப் புத்தகங்களைத் தந்தார்கள்.  அவற்றில் ஒன்று தான் இன்று நாம் பார்க்கப் போகும் “மிடறுஎனும் குறுங்கவிதைகள் தொகுப்பு.

மே மாதம் கொடுத்தது, அப்போதே படித்தது என்றாலும் இதுவரை அந்தத் தொகுப்பினை வாசித்த அனுபவம் பற்றி பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த ஞாயிறில் அந்தத் தொகுப்பினை வாசித்துக் கொண்டிருந்தேன்.  அதிலிருந்து எனக்குப் பிடித்த சில குறுங்கவிதைகள் – இதோ இன்றைக்கு இங்கே ஒரு பதிவாக......  “மிடறு ஆசிரியர் சா முருகதாஸ். வெளியிட்டோர் - கலகம் வெளியீட்டகம் - இந்த நூலின் விலை ரூபாய் 70.  புத்தகத்தில் எனக்குப் பிடித்த சில குறுங்கவிதைகள் இதோ.....



விலை உயர்ந்தது
வாங்கப் பணமில்லை
கைகொட்டி சிரித்தது பொம்மை.

மண்புழுவை கோர்த்து
மீன் பிடித்தான்
ஏழைக்கு இலவசம்.





சாலை முழுவதும் கண்ணீர்
முன்னே
மணல் லாரி.

மழைக்காக உண்ணாவிரதம்
மடிந்தது
புல்வெளி.


ஆறு காணாத மக்களுக்கு
தாகம் தீர்த்தது காவேரி
தண்ணீர் லாரியின் பெயர்.

அழகான மழை
ரசிக்கவில்லை

வாசலில் வடகம்.



என்ன பெயர் வேண்டுமானாலும் வை.
பிறக்கும் போது குழந்தை
இறக்கும் போது பிணம்.

இங்கே எடுத்துக் காட்டியிருக்கும் குறுங்கவிதைகள் வெகுசிலவே.  இதைத் தவிர புத்தகத்தில் தொகுத்திருக்கும் பலவும் எனக்குப் பிடித்தவையே.....  புத்தகத்தினைக் கொடுத்த சகோ கீதா அவர்களுக்கு நன்றி.  கவிதைகளோடு இப்பதிவில் வெளியிட்டு இருக்கும் படங்கள் நான் எடுத்தவை....

நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

34 கருத்துகள்:

  1. நிறைய ரசிக்க முடிகிறது. நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். நல்லதொரு புத்தகத்தினை அறிமுகம் செய்ததற்கு....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. ரசித்தேன் , படங்களும் அருமை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  5. கவிதையும் புகைப்படங்களும் மிகவும் அருமை ரசித்தேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  6. படங்களுடன் குறுங்கவிதைகள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.....

      நீக்கு
  7. கவிதைகளையும் படங்களையும் ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  8. கவிதைகள் அனைத்தும் அருமை...வெங்கட்ஜி பகிர்வுக்குமிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  9. அருமையான படங்கள், அருமையான குறுங்கவிதை.
    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  10. அனைத்தும் அருமை. முதல் இடம் மணல் லாரியும் கண்ணீரும். வாழ்த்துகள் கீதா.
    நன்றி வெங்கட்.
    ஐஸ்க்ரீம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....

      நீக்கு
  11. அவ்வப்போது தோன்றும் மன ஆதங்கங்கள் நல்ல குறுங் கவிதைகளாகிறது பகிர்வுக்குப் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.

      நீக்கு
  13. ரசிக்க வைத்த ஹைக்கூ...
    ஆசிரியருக்கும் பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  14. அருமை....முதல் படமும் கவிதையும்...அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முருகதாஸ் ஜி!

      நீக்கு
  16. வணக்கம் சார், ரொம்ப நன்றி. நான்தான் மிடறு நூலின் ஆசிரியர் என்னுடைய கவிதைகளை படித்ததிற்கும் அதை உங்கள் வலைப்பதிவில் வெளியிட்டதிற்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திரு முருகதாஸ்.... உங்கள் புத்தகம் கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி. சகோ கீதாவிற்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முருகதாஸ் ஜி!

      நீக்கு
  17. கவிதைகள் அருமை. அதுவும் அந்த கடைசி கவிதை மிக அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....