தொகுப்புகள்

சனி, 22 அக்டோபர், 2016

ராஜஸ்தானி உணவு – கேர் சாங்கர் – பேசன் Gகட்டா


கேர் சாங்கர்/சாங்க்ரி......

தில்லியில் தற்போது இரண்டாவது தேசிய கலாச்சார விழா நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் பல நடன நிகழ்ச்சிகள், கச்சேரிகள் என அமர்க்களப்படுத்துகிறார்கள். காலை முதல் இரவு பத்து மணி வரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நிகழ்ச்சிகள். மாலை முக்கியமான நிகழ்வுகள்.  பல மாநிலங்களில் இருந்தும் வந்திருக்கும் கலைஞர்கள் தவிர பல கைவினைப் பொருட்கள் செய்பவர்களும் வந்திருக்கிறார்கள், உணவுக் கடைகள் ஏற்பாடும் உண்டு.

அலுவலகத்தில் இந்த நேரம் பார்த்து அதிக வேலைகள்….. தினம் மாலை நேரம் அங்கே செல்ல முடியவில்லை.  இரண்டு நிகழ்ச்சிகள் – ஒன்று உஷா உதூப் அவர்களின் கச்சேரி, மற்றொன்று மனோஜ் திவாரி கச்சேரி – மட்டும் போக முடிந்தது. அங்கே பார்த்த நிகழ்ச்சிகள், நடனங்கள் பற்றி பிறகு எழுதுகிறேன்.  இன்றைக்கு சில உணவு வகைகள் பற்றி மட்டும் பார்க்கலாம்! முதல் நாள் அங்கே சென்றபோது ஒன்றும் சாப்பிடவில்லை. இரண்டாம் நாள் சென்றபோது உணவுக்கடை பக்கம் செல்ல, அங்கே பல மாநிலங்களிலிருந்தும் கடைகள், பல்வேறு உணவுகள் இருக்க, ராஜஸ்தானி உணவுக்கடைக்குச் சென்றேன்.

முதலில் கச்சோடி மட்டும் சாப்பிடலாம் என நினைத்து 50 ரூபாய்க்கு டோக்கன் வாங்கியபிறகு, அது மட்டும் சாப்பிட்டால், வீட்டிற்கு வந்த பிறகு சமைக்க வேண்டுமே என 50 ரூபாய் டோக்கனைத் திருப்பிக்கொடுத்து ”ராஜஸ்தான் தாலி” வாங்கிக் கொண்டேன்! தாலி என்றால் தட்டு! தட்டு முழுவதும் ராஜஸ்தானிய உணவு! பாஜ்ரா ரொட்டி, மிஸ்ஸி ரொட்டி, பேசன் Gகட்டா, தால், கடி, சூர்மா லட்டு, பயத்தம்பருப்பு ஹல்வா மற்றும் கேர் சாங்கர் என நிறைய வகை உணவுகளோடு ஒரு தட்டு – ரூபாய் 200 மட்டும்!


பேசன் Gகட்டா......

கேர் சாங்கர் என்பது என்ன என்று கேட்க, அது ராஜஸ்தானி ஸ்பெஷல் உணவு என்று சொல்ல, குச்சி, குச்சியாக இருப்பது பார்க்கும் போது இது சைவமா அசைவமா என ஒரு சந்தேகம். ஏற்கனவே விளக்குகளைச் சுற்றி இருந்த பூச்சிகள் சில பேசிக்கொண்டிருக்கும்போது வாய்க்குள் சென்று விட கொஞ்சம் அசைவமாக மாறி இருந்த நாள்! இதில் இதுவும் சாப்பிட்ட பிறகு கேட்பதை விட முன்பே கேட்டுவிடலாம் என கேட்க, மீசை முறுக்கிய சிப்பந்தி, ”சைவ உணவு தான்” என்று சிரித்தார்! நன்றி சொல்லி தட்டுடன் மேஜைக்கு நகர்ந்தேன்!

ஒரு பாஜ்ரா ரொட்டி, ஒரு மிஸ்ஸி ரொட்டி ஆனால் தொட்டுக்கொள்ள நிறைய சப்ஜி – மூன்று விதமான சப்ஜி! பாஜ்ரா என்றால் கம்பு – கம்பு மாவில் சப்பாத்தி செய்தால் அது பாஜ்ரா ரொட்டி! மிஸ்ஸி ரொட்டி என்பது கோதுமை மாவுடன் கடலை மாவு மற்றும் ஓமம் சேர்த்து செய்யும் ரொட்டி – அதாவது சப்பாத்தி! பேசன் Gகட்டா என்பதும் கடலை மாவில் உருளை வடிவில் செய்து சப்ஜியில் சேர்ப்பார்கள் – பிறிதொரு சமயம் அதன் குறிப்பு எழுதுகிறேன் – ஒன்றிரு முறை செய்ததுண்டு…..  கடி என்பது மோர்க்குழம்பு மாதிரி ஒரு சப்ஜி வகை.

இவை எல்லாம் முன்னரே ருசித்திருந்தாலும் இந்த கேர் சாங்கர் இது வரை சாப்பிட்டதில்லை. சைவ உணவு எனத் தெரிந்துவிட்டது – எப்படி இருந்தாலும் சாப்பிட்டு பார்ப்போம் என சாப்பிட நன்றாகவே இருந்தது. கேர் என்பது பாலைவனப் பகுதிகளில் காண்ப்படும் முட்செடி ஒன்றின் புளிப்பான பெர்ரி வகை பழம். சாங்கர் என்பது வன்னி மரத்தின் பீன்ஸ்! இரண்டும் சேர்ந்து மசாலாக்களுடன் தயார் செய்வார்களாம்…. பார்க்க கருப்பு/பிரவுன் நிறத்தில் இருக்க, முதலில் கொஞ்சம் எடுத்துச் சுவைக்க, புளிப்பும் காரமும் சேர்ந்து நன்றாகவே இருந்தது.  முழுவதும் முடிக்கும் அளவிற்குப் பிடித்திருந்தது!

நன்றாகவே இருக்கிறது இந்த கேர் சாங்கர்….. சிலர் கேர் சாங்க்ரி என்றும் அழைக்கிறார்கள்.  ராஜஸ்தானிய உணவுக் கடைகளில் கிடைத்தால் இதை மட்டுமாவது சாப்பிட்டுப் பாருங்களேன்…..

நாளை மீண்டும் ச[சி]ந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


22 கருத்துகள்:

  1. அவசியம் ஒரு முறை சாப்பிட்டுப் பார்த்துவிட வேண்டும் ஐயா
    நன்றி
    தம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. தாலி என்றால் தட்டா?! ஏற்கெனவே சாப்பிடாமல் எந்த நம்பிக்கையில் ராஜஸ்தான் உணவைத் தெரிவு செய்தீர்கள்! எப்படியோ நன்றாக இருந்தது அல்வா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜஸ்தானி உணவு சாப்பிட்டதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. >>> ராஜஸ்தானிய உணவுக் கடைகளில் கிடைத்தால் இதை மட்டுமாவது சாப்பிட்டுப் பாருங்களேன்… <<<

    ஆனால், இப்போதைக்கு இந்தத் தகவல்களே அருமை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

      நீக்கு
  4. கேர்சாங்கர் சாப்பிடும் ஆவல் வந்துவிட்டது...
    இங்கிருக்கும் ராஜஸ்தானி ஹோட்டல்களில் இருக்குமா தெரியவில்லை.... விசாரிக்கணும் அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விசாரித்துப் பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப்ரிவை சே. குமார்.

      நீக்கு
  5. சாப்பிட்டிருக்கோம். :) ராஜஸ்தானிய உணவின் காரம் தான் ஒத்துக்கொள்வதில்லை! மற்றபடி பேசன் gகட்டா பிடிக்கும். ஆனால் ஒத்துக்காது. செய்தும் பார்த்திருக்கேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேசன் கட்டா பலருக்கும் பிடிப்பதில்லை, ஒத்துக் கொள்வதும் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  6. நம்ம வீட்டு கேர் டேக்கர் மனது வைத்தால் இன்றே கேர் சாங்கர் சாப்பிட்டு விடலாம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனசு வைத்தால் :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி

      நீக்கு
  7. சாப்பிடும் ஆவலை தூண்டியது.
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பிட்டுப் பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

      நீக்கு
  8. முதல் படமே ஆசையை தூண்டுகிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பிட்டு பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  9. புது வகை உணவைப் பற்றி தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  10. வணக்கம்.

    வட மாநிலங்களுக்குச் சென்றதுண்டு.

    எனக்கென்னவோ நம்மூர் உணவுதான்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் விஜூ ஜி!

      நீக்கு
  11. நான் வட இந்திய உணவு அவ்வளவாகச் சாப்பிட்டுப் பழக்கம் இல்லாததால் (சப்பாத்தி வழ்க்கமாகச் செய்யும் தொட்டுக் கொள்ளும் கூட்டு போன்றவை பெரும்பாலும் வீட்டில் அசைவம்...) தெரியவில்லை. சாப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

    கீதா: ஜி அட ராஜஸ்தானி தாலி...சாப்பிட்டதுண்டு. அது போல குஜராத்தி என்று வகை வகையாகச் சாப்பிட்டு ருசித்ததுண்டு. சாப்பிடுவது கொஞ்சம் என்றாலும் ஆர்வம் அதிகம் எல்லாம் ருசிப்பதில். அதுவும் புதிது என்றால் (சைவம் மட்டுமே) கேட்கவே வேண்டாம் சாப்பிட்டுப் பார்த்டுவிடுவேன். இப்போது சுவை அறியும் உணர்வை இழந்த பிறகும் கூட ஆர்வம் மட்டும் குறையவில்லை. இதில் நீங்கள் சொல்லியிருக்கும் கேர்சாங்கர் புதிது/. ருசித்தது இல்லை. பார்க்க பிட்ரூட் புஜியாவாக ஆலு புஜியா போல... இருக்குமோ என்று நினைத்தேன். உங்கள் குறிப்பிலிருந்து அறிந்தேன் அது அல்ல என்று. பேசன் கட்டா செய்ததும் உண்டு. உங்கள் குறிப்பை அறிய ஆவல்!!

    கலக்குங்கள் ஜி!!! நாக்கில் நீர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குஜராத்தி தாலி, ராஜஸ்தானி தாலி என பலவிதங்கள் சாப்பிட்டதுண்டு.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....