தொகுப்புகள்

வியாழன், 5 ஜனவரி, 2017

எங்கே எம் அவதார புருஷர்கள்….





புத்தாண்டைக் கொண்டாட வந்த பெங்களூரு பெண்களை, இளைஞர்கள் பலர் ரொம்பவே கஷ்டப்படுத்திய நிகழ்வு பற்றி நாளிதழ்களிலும் இணையத்திலும் படித்தபோது எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு வந்தது. இரவு நேரத்தினை விட்டுவிடுங்கள், பகலிலேயே பெண்கள் சுதந்திரமாய் நடமாட முடிவதில்லை. தில்லியில் அவ்வப்போது நடந்தேறும் பெண்களுக்கு எதிரான அவலங்கள் பார்க்கும்போது மனதுக்கு வேதனையாக இருக்கிறது. பெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் மனோநிலை தான் பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கிறது. அதிலும் குறிப்பாக வடக்கே பெண்களுக்கு எந்தவித மரியாதையும் மதிப்பும் கிடையாது.

பெண் என்பவள், ஆண்களுக்கு அடிமையாய், நேரத்துக்கு சமைத்துப் போட்டு, ஆண்களுக்கு பணிபுரிந்து, கூப்பிட்டவுடன் படுத்து, சுகம் தந்து, பிள்ளைகள் பெற்றுப் போடும் இயந்திரமாகவே பயன்படுத்துகிறார்கள். இன்னமும் கூட ஹரியானா, உத்திரப்பிரதேசம், பீஹார் போன்ற மாநிலங்களில் பெண்களைக் கொடுமைப்படுத்துவதும், வன்புணர்வு செய்வதும் தொடர்கிறது.

பெண்கள் மாடர்னாக உடை உடுத்துவதால் தான் அவர்களுக்கு இந்த நிலை என கர்னாடக அரசின் உள்துறை அமைச்சரே சொல்லி இருக்கிறார்! பெண்கள் தங்கள் விருப்பப்படி உடை அணிந்து வந்தால் தவறாம்! இந்தக் காலத்தில் பெரும்பாலான இளைஞர்கள் கூடத்தான், பின்பிளவு தெரியும்படி ஜீன்ஸ் அணிகிறார்கள். அவர்களுடைய பின்புறத்தில் யாராவது விஷக் கொடுக்குகள் கொண்ட தேள்களையா போட்டுவிடுகிறார்கள், இல்லை தொந்தரவு செய்கிறார்களா? உடை என்பது அவரவர் விருப்பம்! உடையே இல்லாமலோ, அல்லது Revealing-ஆக வந்தால் தான் பிரச்சனை! அதுவும் கூட அப்பெண்ணின் விருப்பம். அதற்காக அப்படி வரும் பெண்ணை மானபங்கப் படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்.

சமீபத்தில் காற்றுவெளி இதழில் படித்த கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

ராமகாதையில் படித்த
ராவணனை
ஈழப்போரின் போது
மீண்டும் பார்த்தோம்
ஆனால்
எம் இனமக்களை
மீட்டெடுக்கும்
ராமனைக் காணோம்….

துகில் உரியும்
துரியோதனன்களை
தொலைக்காட்சி செய்திகளில்
தினமும் ஒருமுறையேனும்
பார்த்து விடுகிறோம்....
பரந்தாமனாய் நின்று காத்த
கண்ணனையேனோ....
கண்டுகொள்ளவே முடியவில்லை.

எல்லா இடங்களிலும்
எதிர்த்துப் பேச திராணியற்று...
ஒரு கன்னத்தின் வலியைப்
பொறுத்து
மறுகன்னத்தைக் காட்டும்
வலிமையற்றவர்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள்...
ஆனால்
மூன்றாம் நாளில்
உயிர்த்தெழுந்த
ஏசுபிரானை எங்கும் காணோம்

எங்கே எங்கள்
அவதாரப் புருஷர்கள்

அன்பைப் போதித்தவன்
அகிம்சையால் சாதித்தவன்
வாழ்வின் நெறிமுறைகளை
விதைத்தவன்
தத்துவம் தந்து
தன்னம்பிக்கை ஊட்டி
மானுட வாழ்வை
மாண்புறச் செய்தவன் - என
தரணி போற்றும்
அவதார புருஷர்கள்
எத்தனை எத்தனையோ.......
எங்கே காண்பேன்
இன்னொரு அவதார புருஷன்...

திருமலை சோமு

அவதார புருஷர்கள் அவதரிக்கிறார்களோ இல்லையோ, சக மனிதனை, ஒவ்வொருவரையும் மதிக்கும் – அது ஆணோ, பெண்ணோ, அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு, மனிதர்களாக இருந்தாலே போதும். பெண்களை தொந்தரவு செய்யாமல் இருக்கலாமே…. மதிக்கிறோமோ இல்லையோ, மிதிக்காமல் இருக்கலாமே…… 

மீண்டும் ச[சி]ந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

39 கருத்துகள்:

  1. நச் பதிவு!!! வெங்கட்ஜி! ஆண் பிள்ளைகள் வளர்க்கப்படும் சூழல் மிக மிக் இன்றியமையாதது. வேதனை தரும் நிகழ்வுகள்! இப்படியான நிகழ்வுகளுக்கு முதல் காரணம் பெற்றோர், இரண்டாவது காரணம் பருவ வயதில் ஆண் பிள்ளையின் வெளித்தொடர்புகள் நண்பர்கள் அதனையும் பெற்றோர் மனதிற் கொண்டு வளர்த்தல் நலம். அதீதமாக பாக்கெட் மணி கல்சர்..மது பார்ட்டி கல்சர் இதெல்லாம் இப்போது மிகவும் பரவலாக உள்ளது.

    கீதா: இதைப் பற்றி நானும் ஒரு பதிவு எழுதி பாதியில் வைத்திருப்பதால் இங்கு அதிகமாகச் சொல்லவில்லை ஜி! அருமையான பதிவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெற்றோர்களின் வளர்ப்பு, முக்கிய இடம் பெறும் விஷயம்.

      கீதா ஜி உங்கள் பதிவினைப் படிக்க ஆவலுடன் நானும்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  2. சொல்ல விடுபட்டுவிட்டது...கவிதை வரிகள் அருமை...திருமலை சோமு அவர்களுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

      நீக்கு
  4. தனது ஆண் குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து, இதர பெண்களை மரியாதையாக நடத்த சொல்லிக் கொடுக்காத பெற்றோர் முக்கிய காரணம்.
    குடிகார பயல்கள் ஏறக்குறைய தற்காலிகமாக பைத்தியம் பிடித்தவர்கள். அவர்கள் நடமாடும் இடங்களில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களே கவனமாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது..

    (இன்றைய தினமலர்.காம்-ல் இது சம்பந்தமான செய்தியுடன், ஒரு பெண் போலீஸ், ஒரு இளம் பெண்ணை ஆறுதல்படுத்திக் கொண்டு இருப்பதை போல ஒரு புகைப்படம் பிரசுரம் ஆகியிருந்தது. அந்த பெண் அணிந்திருந்த உடையை பார்த்தபோது அதை ஏற்றுக்கொள்ளும் அளவு இன்றைய இரண்டும்கெட்டான் இளைஞர்கள் வளரவில்லையா அல்லது இந்தமாதிரி லூசுப் பயல்கள் அதிகம் வரக்கூடிய இடங்களுக்கு இந்தமாதிரி ஆடை அணியாக கூடாது என்று இன்றைய யுவதிகளுக்கு தெரியவில்லையா, எனக்குப் புரியவில்லை.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்கள் மட்டுமல்ல, ஆண்களே கவனமாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது.... உண்மை தான் அண்ணாச்சி....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  5. உங்கள் ஆதங்கம் புரிகிறது. இது டிரான்சிஷன் பீரியட். இந்தச் சிக்கல்களைக் கடந்துவரவேண்டும். ஆனாலும், பொறுப்பில் உள்ளவர்கள் ஆடைகளைப் பற்றி கமென்ட் சொல்வதும், பெண்களைக் குறைகூறுவதும் சகிக்கமுடியவில்லை. சிறிய வயதிலிருந்தே, பெண்ணின் முகத்தைப் பார்த்துப்பேசும் பழக்கத்தைக் கொண்டுவந்தால்தான், அவளையும் சக உயிராகப் பார்ப்பதைக் கொண்டுவந்தால்தான் இது சரியாகும்.

    "பின்புறத்தில் யாராவது விஷக் கொடுக்குகள் கொண்ட தேள்களையா போட்டுவிடுகிறார்கள்?" - ஆண்களின் மோசமான டிரஸ் சென்ஸைக் குறிப்பிட்டுள்ளதை ரசித்தேன்... டிரஸ் சென்ஸ் இருபாலாருக்கும் உரித்தானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிரஸ் சென்ஸ் இருபாலாருக்கும் உரித்தானது..... ஆமாம்....

      பெண்ணையும் சக உயிராகப் பார்க்கும் காலம் வந்தால் தான் சுகம்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  6. காற்றுவெளியில் எழுதி இருந்த விஷயம் பக்த கோடிகளுக்குப் பிடிக்காது நானே எனது பல பதிவுகளில் அவதாரப் புருஷர்கள் ஏன் இன்னும் அவதரிக்கவில்லை என்று எழுதி இருக்கிறேன் கீதையில் கண்ணனின் வாக்கு ஏனோ நடைமுறைக்கு வரவில்லை. ஒரு வேளை இந்த அவதாரங்கள் எல்லாமே கற்பப்னைக் கதைகள் தானோ என்று நான் நினைப்பது சரியோ என்று தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  9. புத்தாண்டில் நடந்த வேதனையான சம்பவங்கள் வருத்தம் தரவைத்தது. கவிதை அருமை! அவதார புருஷர்கள் அவதரிக்க வேண்டியதின் அவசியம் வந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  10. >>> ஆணோ, பெண்ணோ, அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு, மனிதர்களாக இருந்தாலே போதும். பெண்களை தொந்தரவு செய்யாமல் இருக்கலாமே…<<<

    நியாயமான கருத்து..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  11. அவதார புருஷர்கள் என்று யாரும் இனி புதிதாய் அவதரிக்கப் போவதில்லை. இப்போது இருப்பவர்களே அநீதி நடக்கும்போது அவதார புருஷர்களாய் பொங்கி எழுந்து அநீதியை தடுக்கவேண்டியதுதான். ஆனால் யாரும் அவ்வாறு செய்ய முன்வரவில்லையே என்பதுதான் வேதனையான ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அநீதியை தடுக்க யாரும் முன்வருவதில்லை என்பது தான் சோகம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  12. // அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு, மனிதர்களாக இருந்தாலே போதும்//

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @நொரண்டு.

      நீக்கு
  13. வேதனை
    கண்டனத்திற்குரிய
    தண்டனைக்குரிய குற்றம்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  14. அவதார புருஷர்கள் என்பது எல்லாம் புராண கால அல்வாக் கொடுக்கிற கற்பனைகள் தான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  15. ரொம்ப controlled ஆ emotion ஐ ஆணித்தரமாவும் அதுக்கு மிகவும் பொருத்தமான கவிதையோடும் வெளிப்படுத்திருக்கீங்க... சூப்பர் !!!
    ஆனா தலைப்பை பாத்ததும் நிஜமாவே வெங்கட்ஜி ப்ளாக் தானான்னு சந்தேகம் வந்தும் உண்மை... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியும் சில பதிவுகள் என் பக்கத்தில் வருவதுண்டு! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஒரு நண்பன்.

      நீக்கு
  16. நாகரிகம் வளர்ச்சி அடைய...அடைய... காட்டுமிராண்டித்தனம்தான் அதிகரித்துக்கொண்டே போகிறது.. அவதார புருஷர்களை நம்பிக்கொண்டிருந்தால் அற்பர்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகவேண்டியதுதான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காட்டுமிராண்டித்தனம்.... அதே தான். இதை நாகரீகம் என்று சொல்லிக்கொண்டிக்கிறார்கள் சிலர்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  17. வளர்க்கப்படும் விதம் ஒரு காரணம். இன்றைய திரைப்படங்கள் மற்றொரு காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  18. என்ன நடந்தாலும் பதவிகளில் இருப்பவர்கள் அதை சமாளிக்க ஒரு சாக்கு போக்கு வைத்திருப்பார்கள். நாளை இதே நிலை அவர்கள் வீட்டிலும் நடக்கலாம் என சிந்திக்காத ஜென்மங்கள். முதலில் இம்மாதிரி கருத்திடுவோரை தண்டிக்க சட்டங்கள் வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

      நீக்கு
  19. Arumaiyana padhivu sir.Congrats. midnitil thaniyaga appadi kondattathukukaaga veliye vara venduma?idhai veetil yeppadi anumadthithargal?siru vayadhil irundhe pen pillaigalai freedom kodukiren yendru kedukirargal parents.nanum penthan.yenakum 1 pen pillayum maganum irukirargal.frst ano penno agala nerathil veliyil yenna velai sir?in furture parentsum nam yar,nam family back ground namaku indha palakamellam othu varuma yendru kulanthaigalidam yeduthu koora vendum.primary school level- ippa no moral classes.innum sollikonde pogalam.avar avar suya kattupattudan irundhal ippadi nadakka vaipillai.inivarum kalangalil idhu pol nadakka vendam yena iraivanidam prarthikiren.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைஷ்ணவி....

      நீக்கு
  20. வணக்கம் வெங்கட் அவர்களே இந்த கட்டுரை அருமை வாழ்த்துகள் சொல்லும் அதே வேளை எனது கவிதையை மேற்கோள் காட்டியமைக்கு நன்றி சொல்லவும் கடமை பச்ட்டுள்ளேன். மிக்க நன்றி
    திருமலை சோமு

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....