இந்த
வார செய்தி:
இந்த மாதத்தின் முதல் பதிவாக புகைப்படக்
கவிதைகள் – `கவிதை எழுத அழைப்பு - மின்னூலாக்க முயற்சி…..
என்ற பதிவினை வெளியிட்டு, நான் எடுத்த புகைப்படங்களுக்குப் பொருத்தமான கவிதைகளை எழுதி
அனுப்பும்படி கேட்டிருந்தேன். இந்த மாதத்தின்
கடைசி வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனச் சொல்லி இருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இந்த அழைப்பினை ஏற்று சில கவிதைகள் எனது மின்னஞ்சலுக்கு
வந்திருக்கின்றன. மேலும் கவிதைகள் எழுதி அனுப்ப
விருப்பமிருப்பவர்கள் இந்த மாதக் கடைசிக்குள் எழுதி அனுப்பினால் தொகுத்து மின்புத்தகமாக
வெளியிட வசதியாக இருக்கும். எனது வலைப்பூவில்
வெளியிட்ட எந்தப் புகைப்படத்திற்கு வேண்டுமென்றாலும் கவிதை எழுதலாம்…. வந்திருந்த கவிதைகளில்
ஒன்று கீழே…..
இந்தத் தோடு யார் வாங்கித் தந்தா?
இந்த சட்டை?
உன் கழுத்து மணி அழகாயிருக்கே...
சாக்லேட்டா சாப்பிடுகிறாய்?
உருட்டி விழிக்கும் கண்களோடு
வாய் திறவாமல் மென்று கொண்டிருக்கிறாய்
என் பொறுமையை.
---------- நிலாமகள், நெய்வேலி.
இந்த வார குறுஞ்செய்தி:
காயப்படுத்தியவர்கள் மறந்து விடலாம், காயப்பட்டவர்கள் என்றும்
மறப்பதில்லை – காயங்களையும் அதன் வலிகளையும்…..
இந்த வார முகப்புத்தக இற்றை:
ஆறு நாள் வேலை செய்துவிட்டு, ஒரே ஒரு நாள் வீட்டில்
ஓய்வு எடுக்க நினைக்கும் ஆண்……
ஆறு நாள் வீட்டிற்குள்ளேயே வேலை செய்து விட்டு
ஒரு நாள் வெளியே செல்ல நினைக்கும் பெண்….
இந்த இருவருக்கும் நடக்கும் சண்டை தான் சண்டே!
வேலைக்கும் சென்று வீட்டு வேலையும் பார்க்கும் பெண்களின் நிலை
பற்றி என்ன சொல்ல!
இந்த வார காணொளி:
என்னலே
நடக்குது இங்கே!
ஆண்களும்
ப்யூட்டி பார்லர் சென்றபோது....
இந்த வார WhatsApp:
கணவரை அடிப்பதில் இந்திய பெண்களுக்கு
மூன்றாவது இடம் – பத்திரிகை செய்தி!
ஒட்டுமொத்த ஆண்களின் குரல் [இல்லைன்னா மதுரைத் தமிழனோட குரலா?]: “அடேய்… இதெல்லாம் ஏண்டா வெளியே சொல்லுறீங்க… இனி முதல் இடம்
வர வரைக்கும் அடிப்பாளுகடா….”
இந்த வார உணவு:
Bhutte ke kees: Bhutte எனும் ஹிந்தி வார்த்தை சோளத்தைக்
குறிப்பது. மக்காச் சோளம் வைத்து செய்யப்படும்
இது, மத்தியப் பிரதேசத்தில் ரொம்பவும் பரவலாகச் சாப்பிடப் படும் ஒரு உணவு வகை. சமீபத்தில்
சென்று வந்த ஹுனர் ஹாட், நேற்றும் மீண்டும் சென்ற போது இந்த Bhutte ke kees சாப்பிட்டுப்
பார்த்தேன்! ஒரு முறை முயற்சிக்கலாம்! இணையத்தில்
தேடிப்பாருங்கள் – எப்படிச் செய்வது என்ற செய்முறைகள் இருக்கின்றன…..
இந்த வார புகைப்படம்:
மகள் ரோஷ்ணியின் சமீபத்திய இரண்டு
கணேஷா ஓவியங்கள்…
படித்ததில் பிடித்தது:
மரணம்: வா, மனிதா….
நீ கிளம்புவதற்கான நேரம் வந்து விட்டது…
மனிதன்: “இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள்
என்ன ஆவது?”
மரணம்: “மன்னித்துவிடு மனிதா… உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம்
இது…”
மனிதன்: நான் இரவு பகலாக, உழைத்து சேர்த்த எனது பொருளாதாரம்….
மரணம்: நீ கூறியவை அனைத்தும் உன்னுடையதல்ல…. அவைகள் பூமியில்
நீ வாழ்வதற்கு…..
மனிதன்: என்னுடைய திறமைகள்…..
மரணம்: அவை உன் சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது.
மனிதன்: அப்படி என்றால், என் மனைவி, மக்கள் மற்றும் உற்றார்
உறவினர்…
மரணம்: அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்….
மனிதன்: எனது உடல்?
மரணம்: அது இந்த மண்ணுக்குச் சொந்தமானது.
மனிதன்: கண்களில் நீர் வழிய, “என்னுடையது என்று எதுவும் இல்லையா?”
மரணம்: நீ வாழ்ந்த ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது. நீ செய்த
தர்மம், பிறருக்கு நன்மை செய்தது, பிறர் துன்பத்தில் பங்கு கொண்டது, பிறருக்கு தீங்கு
செய்யாமல் இருந்தது போன்ற நல்ல செயல்கள், மற்றும் நீ செய்த பாவ கருமங்கள்… இவை மட்டுமே
உன்னுடையது. மற்ற எதையும் இறுதிக்காலத்தில் நீ உன்னுடன் கொண்டு போக முடியாது…..
வாழும் காலம் கொஞ்சமே…. மனிதா நீ மாறிவிடு,
உன் மறு உலகத்திற்காக…..
மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
ரோஷினிக் குட்டியின் நண்பர் கணேஷின் படங்கள் அருமை!!! பபி தத்துவம் பிடித்தது அதுதானே உண்மை..
பதிலளிநீக்குவாட்சப் செய்தி வாசித்ததும் மதுரைத் தமிழன் தான் நினைவுக்கு வந்தார்...சொல்ல நினைத்ததை நீங்களே சொல்லியிருக்கிறீர்கள் அஹ்ஹஹஹ
குறுஞ்செய்தி:திருக்குறளின் புதுபரிமாணம்.??!!!
இற்றை:உண்மைதான்...
கவிதை : அருமை
காணொளி : ஆமாம்ல என்னதான் நடக்குது இந்த பசங்களுக்கு என்ன்னாச்சு...??!!
அனைத்தும் ரசித்தோம் ஜி
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குபடம்1: அட என்னப்பா என்ன நடக்குதுப்பா தமிழ்நாட்டுல? ஹும் ஒன்னும் புரியல, நல்லதாவும் தெரியல..உங்க தலையெழுத்த மாத்த முடியாது போலருக்கே..
பதிலளிநீக்குபடம்2: அட போங்கப்பா உங்க விளையாட்டு போங்கு! நமக்குச் சரிவராது..நீங்க என்ன வேணா பண்ணிக்கங்க. அடிச்சுக்குங்க புடிச்சுக்குங்க. மண்டைய உடைச்சுக்குங்க...விடு ஜூட்..நான் போறேன்பா ஜாலியா என் வழில..
சோள ரெசிப்பி இணையத்தில் பார்த்துவிட்டேன். செய்து பார்த்து விடுகிறேன்.
மிக்க நன்றி வெங்கட்ஜி
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நீக்குஅருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!
நீக்குஅனைத்தும் சிறப்பு...
பதிலளிநீக்குபாப்பாவின் படங்கள் அழகு...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!
நீக்குநிலா மகள் கவிதை, புல்லட்டிற்க்கு மாறிய விநாயகர் அழகு. மதுரைகாரர் குரல் (கவுண்டமணி அவர்களின் குரல் இன்னும் பொருத்தமாக இருக்கும்)ஹாஸ்யம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சோமேஸ்வரன் ஜி!
நீக்கு"வளையத்துல காது மாட்டியிருக்கா? காதுல வளையம் மாட்டியிருக்கான்னு பார்க்கறேன்"
பதிலளிநீக்குகுறுஞ்செய்தி = தீயினார் சுட்ட புண்..
இற்றை ரசித்தேன்.
காணொளி நான் காணா ஒளி!
உங்கள் மகளின் கைவண்ணத்தை முகநூலில் ரசித்தேன். பாராட்டுகள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்கு// வாழும் காலம் கொஞ்சமே…
பதிலளிநீக்குமனிதா நீ மாறிவிடு... //
அருமை...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஇந்த வார பழக்கலவையில் அனைத்தும் அருமை அதுவும் அந்த ‘சண்டே’ அன்று ஏன் சண்டை வருகிறது என்ற துணுக்கும் தங்கள் மகளின் இரண்டு படங்களும் மிக அருமை. தங்கள் மகள் ரோஷ்ணிக்கு பாராட்டுகள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குமனிதர்கள் நினைவில் வைக்க வேண்டிய வரிகள் இறுதி உரையாடல்
பதிலளிநீக்குரோஷனி அருமையாக வரைகிறார் வாழ்த்துகள்
நிலாமகள் எதார்த்தக் கவிதை செமை
பொறுமையை மெல்கிறார்கள்தான் குழந்தைகள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.
நீக்குகணவரை அடிப்பதில் இந்தியப் பெண்கள் முதலிடம் வந்து இருக்க வேண்டும் ஆனால் புள்ளிவிபரம் சேகரிக்க போனது பல கணவர்கள் உன்மையை மறைத்துவிட்டார்கள் அதனால்தான் முன்றாவது இடத்திற்கு வந்து இருக்கிறோம்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
நீக்குகுழந்தை ரோஷனி அருமையாக வரைகிறார் பாராட்டுகள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
நீக்குஅருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @நொரண்டு.
நீக்குஎப்போதும் போல் செறிவான ப்ருட் சாலட்... 'படித்ததில் பிடித்தது' எல்லோருக்குமானது! காணொளி சிரிப்பைத் தந்தது. கவிதைக்கு மகிழ்வும் நன்றியும்! மெருகேறுகிறது ரோஷிணியின் வரைதிறன். வாழ்த்துக்கள்! வினயகருடனான பைக் பயணத்தில் நானும் உன்னுடன் வரட்டுமா ரோஷ்ணி? எந்த வடிவத்துக்கும் ஈடு கொடுப்பவர் அவரன்றி வேறு யார்?
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.....
நீக்குரோஷ்ணியின் ஓவியங்கள் அழகு! அவருக்கு என் பாராட்டும் வாழ்த்தும். காணொளி சிரிப்பை வரவழைத்தது. நிலாமகளின் கவிதை நன்று. சாலட் சுவையாக இருக்கிறது. நன்றி வெங்கட்ஜி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞா. கலையரசி ஜி!
நீக்குExplanation for Sunday is too good! Your daughter's painting is excellent!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!
நீக்கு