தொகுப்புகள்

வியாழன், 2 பிப்ரவரி, 2017

ராமகிருஷ்ணா மட் – பேலூர், கொல்கத்தா


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 96

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

கொல்கத்தாவின் சில சிறப்பு மிக்க இடங்களை பார்த்து இரவு உணவுக்குப் பிறகு நல்ல ஓய்வு. அடுத்த நாள் காலையிலேயே புறப்பட்டு நாங்கள் முதன் முதலில் சென்ற இடம் ராமகிருஷ்ணா மட். கொல்கத்தா – ஹௌரா என்ற இரண்டு இடங்களும் ஹைதராபாத், செகந்திராபாத் போல ஒட்டி இருக்கும் இரட்டை நகரங்கள்.  நதிக்கு இப்புறம் கொல்கத்தா என்றால் அப்புறம் ஹௌரா.  நாங்கள் சென்ற ராமகிருஷ்ணா மட், ஹௌரா பகுதியில் அமைந்திருக்கிறது.  காலையிலேயே நானும் நண்பர்களும் அங்கே புறப்பட்டுச் சென்று விட்டோம்.

பேலூர் மட்...
படம்: இணையத்திலிருந்து....

நாங்கள் தங்கி இருந்த இடத்திலிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில், ஹூக்ளி நதியைக் கடந்து பேலூர் மட் சென்று சேர்ந்தோம்.  பேலூர் மட், ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் அன்னை சாரதா தேவியின் நினைவிடம் என மிகவும் ரம்மியமான சூழல் அங்கே அமைந்திருக்கிறது. இந்த மடம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது.  நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த இடத்திற்கு நிறைய பேர் வருவதுண்டு. அமைதியான சூழல், நதிக்கரை ஓரத்தில், மனதுக்கும் நிம்மதி வழங்கும் ஒரு இடம் என்பதால் மொழி, மதம், நாடு கடந்து நிறைய பேர் இங்கே வருகிறார்கள். 

ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிரதம சீடராக இருந்த ஸ்வாமி விவேகானந்தர் காலத்தில் தனது குருவிற்கு அமைத்த நினைவிடம், அவரது நற்கருத்துகளை பரப்ப அமைத்த ஆஸ்ரமம் இது தான். இந்த பேலூர் மடத்தில் தான் ஸ்வாமி விவேகானந்தர் தனது கடைசி நாட்களை கழித்தார்.  ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி மற்றும் ஸ்வாமி விவேகானந்தர் ஆகிய மூவருக்கும் நினைவிடங்கள் இங்கே உண்டு. மிகவும் அருமையான இடம்.  அமைதியான சூழல்…. அங்கே சில மணி நேரங்கள் இருந்து அமைதியை ரசிக்க வேண்டும்….. 1938-ஆம் ஆண்டு புதிய கட்டிடமும் கட்டப்பட்டது. மேலே இருப்பது அந்த புதிய கட்டிடம்.…..

நதிக்கரையிலிருந்து பேலூர் மட்...
படம்: இணையத்திலிருந்து....

ஸ்வாமி விவேகானந்தர் தங்கி இருந்த அறை இன்னமும் இருக்கிறது. அங்கே அவர் பயன்படுத்திய பொருட்கள், புத்தகங்கள் என அப்படியே வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு இடமாகச் சென்று பார்த்து வந்தது மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம்.  மற்ற இடங்களைப் போல அல்லாமல் இங்கே சென்ற போது, இந்த உலகத்தில் பெரிய மாற்றம் கொண்டு வந்த ஒரு மஹாபுருஷனின் அறைக்குள் நானும் இருக்கிறேன் என்ற உணர்வு கிடைத்தது.  மனதில் ஒரு வித அமைதி நிலவ, ஒரு ஆனந்த நிலை… கொல்கத்தா சென்றால் நிச்சயம் செல்ல வேண்டிய ஒரு இடம் இந்த பேலூர் மட்….

அன்னைக்கு ஹூக்ளி நதியைப் பார்த்தபடி இருப்பது மிகவும் பிடித்தமான விஷயம் என்பதால் அன்னை சாரதா தேவியின் நினைவிடம் மட்டும் நதியை நோக்கியபடி இருக்கிறது. எங்கும் அமைதி நிலவ அங்கேயே இருந்துவிடலாம் என்று தோன்றுவது இயற்கை.  முழுமையாக எல்லா இடங்களையும் நின்று நிதானித்து பார்க்க குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது வேண்டும். கொல்கத்தா செல்வதென்றால் பேலூர் மட் பார்ப்பதற்கு அரை நாளையாவது ஒதுக்கிக் கொள்வது நல்லது…..

இங்கே ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்ல வேண்டும். பெரும்பாலான இந்திய நினைவிடங்கள்/வழிபாட்டுத் தலங்கள் போலவே இங்கேயும் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை!  அற்புதமான கட்டிடக்கலையை இங்கே காண முடியும்! அதை புகைப்படமாக எடுத்துக் கொள்ள அனுமதிப்பதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை என்பது புரியவில்லை!  சாலையிலிருந்து எடுத்த ஒன்றிரண்டு படங்கள் தவிர வேறு படங்கள் எடுக்க இயலவில்லை என்பதில் எனக்குக் கொஞ்சம் வருத்தமுண்டு! இங்கே பகிர்ந்து கொண்டிருக்கும் படங்கள் கூட இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை தான்.

காலை 06.00 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை நேரத்தில் 04.00 மணி முதல் 07.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். மற்ற நேரங்களில் உள்ளே சென்றாலும் நினைவிடங்களைப் பார்க்க இயலாது.  போலவே குளிர் காலங்களில் திறந்திருக்கும் நேரத்தில் சற்றே மாற்றம் உண்டு.  மேலே சொன்னது போல குறைந்தது அரை நாளாவது இங்கே இருக்கும்படிச் சென்றால் நிதானமாய் எல்லா பகுதிகளையும் பார்த்து ரசிக்கலாம்..

பேலூர் மட் பார்த்த பிறகு நாங்கள் சென்ற இடம் எது? அங்கே கிடைத்த அனுபவம் என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்…..

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

36 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @நொரண்டு.

      நீக்கு
  2. அமைதியான இடத்தைப் பற்றி அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பேலூர் மட் மிக அழகான இடம் என்று உங்கள் வர்ணனையிலிருந்து அறிய முடிகிறது. தொடர்கிறோம்.

    கீதா: ஆம்! ஜி ராமகிருஷ்ணா மடங்கள் எல்லாவற்றிலும் அமைதி தவழும். கட்டிடக் கலையும் மிக அழகாக இருக்கும். இணையத்தில் இந்தப் படங்களைப் பார்த்த போது இங்கு சென்னையில் மைலாப்பூரில் உள்ல ராமகிருஷ்ணாமட்டின் கட்டிடமும் மிக அருமையாக இருக்கும். அமைதி என்றால் அமைதி...சுத்தம் அப்படி ஒரு சுத்தம். கட்டிடம் மிக அருமையாக இருக்கும். உங்கள் விவரணத்திலிருந்து இங்கு இருப்பதிலும் கிட்டத்தட்ட எல்லாமும் இருப்பதை அறிய முடிகிறது. ஆனால் படங்கள் எடுக்க முடியவில்லை என்பது கொஞ்சம் வருத்தம்தான்...சில இடங்களில் இப்படித்தான் அருமையாக இருக்கும் ஆனால் படம் எடுக்க முடியாது. அருமையான இத்தைப் பற்றி மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். தொடர்கிறோம் ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுமதி இல்லை என்று எழுதி வைத்திருந்தாலும் சிலர் புகைப்படம் எடுக்கிறார்கள். நிர்வாகிகள் புகைப்படம் எடுப்பதற்காகவே சிலரை நியமித்து எடுக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அனைவரும் புகைப்படம் எடுக்க அனுமதிக்காதது புரிவதில்லை.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவிந்தராஜூ அருணாச்சலம் ஐயா.

      நீக்கு
  6. ராமகிருஷ்ணா மட் அதுவும் ஹூக்ளி நதிக்கரையில் - ரம்யமான சூழ்நிலை. அரைநாள் என்ன நாள் முழுதுமே கூடத் தங்கியிருக்கலாம் அவர்கள் அனுமதித்தால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏகாந்தன் ஜி!

      நீக்கு
  7. அழகான இடங்களில் புகைப்படம் எடுக்க முடியாத சூழ்நிலை..
    தங்களைப் போன்றே எனக்கும் வருத்தம் உண்டு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  8. >>> நதிக்கு இப்புறம் கொல்கத்தா என்றால் அப்புறம் ஹௌரா..<<<

    தமிழகத்திலும் இப்படியான நகரங்கள் -
    திருச்சி - ஸ்ரீரங்கம், குளித்தலை - முசிறி, திருநெல்வேலி - பாளையங்கோட்டை..

    பேலூர் மடத்தைப் பற்றி மீண்டும் வாசித்ததில் மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  9. விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது இந்த பேலூர் மடம் பற்றி படித்து இருக்கிறேன். உங்களுடைய தகவல்களுக்கும், படங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு

  10. "ஆண்மை உருக்கொண்ட அந்தணன் - எங்கள்
    அண்ணல் விவேகா னந்தனின்
    மாண்பை அளந்திட எண்ணினால் - இந்த
    மண்ணையும் விண்ணையும் பண்ணலாம்"

    என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளில் விவேகானந்தரை நினைவு கூர்ந்து வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

      நீக்கு
  11. ராமகிருஷ்ணா மட் – பேலூர் ...அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  12. இணையத்துக்கு மட்டும் எப்படி புகைப்படங்கள் கிடைக்கின்றனைம்மாட்க்ஹிரி புகைப்படம் எடுக்க அனுமதி கிடைக்காதது பல இடங்களிலும் எனக்கும் வருத்தம் கொடுத்திருக்கிறது புரிந்து கொள்ள முடியாத வழக்கங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுமதி இல்லை என்று எழுதி வைத்திருந்தாலும் சிலர் புகைப்படம் எடுக்கிறார்கள். நிர்வாகிகள் புகைப்படம் எடுப்பதற்காகவே சிலரை நியமித்து எடுக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அனைவரும் புகைப்படம் எடுக்க அனுமதிக்காதது புரிவதில்லை.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  14. நானும் ஒரு முறை , அந்த ரம்மியமான சூழலை ரசித்துள்ளேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  15. அருமையான படம்...அழகான விளக்கம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத் ஜி!

      நீக்கு
  16. இந்த மடத்திற்குச் செல்லவேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை. அந்த ஆசையை மிகுவித்தது இப்பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது சென்று வாருங்கள் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  17. இங்கேயும் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை! அற்புதமான கட்டிடக்கலை//

    நாங்கள் 1978 ல் போனோம் அப்போது
    ரோல் காமிராவில் கறுப்பு வெள்ளை படம் தான் எடுத்தோம் இப்போது அனுமதி இல்லையா?

    அமைதியான அழகான இடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....