அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 24
பகுதி
23 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....
அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்
“அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!
கோனார்க் சூரியனார் கோவில், ஒடிஷா
Bபிரஜா தேவி கோவில் தரிசனம் முடித்த பிறகு, கோவில் அமைந்திருக்கும்
ஜாஜ்பூரிலிருந்து நாங்கள் தங்கியிருந்த புவனேஷ்வர் நகருக்கு வந்து சேர்ந்தோம். இரவு
உணவை முடித்துக் கொண்ட பிறகு நல்ல ஓய்வு. நாள் முழுவதும் பயணமும், அலைச்சலும் இருக்கும்
போது, இரவு நல்ல ஓய்வு எடுத்துக் கொள்வது மிக முக்கியம். அப்போது தான் அடுத்த நாள்
பயணிக்கவும், இன்னும் சில இடங்கள் பார்க்கவும் நமக்கு உடல் ஒத்துழைக்கும். பெரும்பால பயணிகள் இரவு வெகு நேரம் உறங்காமல் இருந்து
அடுத்த நாள் திண்டாடுவார்கள் – பல குழுக்களில் பயணித்திருப்பதால் அப்படி அவதிப்படும் சிலரைப் பார்த்த அனுபவம் உண்டு! நல்ல உறக்கத்திற்குப் பிறகு நாங்கள் அடுத்த நாள் தங்க முக்கோணம்
என அழைக்கப்படும் மூன்று நகரங்களில் [புவனேஷ்வர், கோனார்க், பூரி] இரண்டாம் நகரமான
கோனார்க் நோக்கி பயணித்தோம்.