தொகுப்புகள்

சனி, 16 செப்டம்பர், 2017

கோவை2டெல்லி – அனுபவக் கட்டுரைகள் – இப்போது மின்புத்தகமாக – ஆதி வெங்கட்

இன்றைய இரண்டாம் பதிவாக...

இல்லத்தரசியின் முதலாம் மின்புத்தகம் - அவரது வலைப்பூவில் வெளிவந்த கட்டுரைகள் சிலவற்றைத் தொகுத்து மின்புத்தக வடிவில் WWW.FREETAMILEBOOKS.COM தளத்தின் மூலம் வெளியாகி இருக்கிறது. அத்தளத்தினை நிர்வகிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. 

இதோ புத்தகம் பற்றிய ஒரு சிறு முன்னுரை....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.





ஒவ்வொரு பெண்ணிற்கும் திருமணம் என்பது அவளுடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி அமைக்கக்கூடியதாக அமைகிறது!  மிதமான தட்பவெப்பத்தில், அழகான கோவையின் ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்த என்னை, அதிக வெயில், அதிக குளிர், பாஷை புரியாத, அழுக்கான தில்லிக்கு ஏற்றி அனுப்பியது திருமணம்!  மனதிற்குள் ஒரு வித பயத்துடனும், எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற எண்ணத்துடனும் தான் தலைநகர் தில்லிக்கு முதல் முறையாக பயணம் செய்தேன்.



கோவையில் இருந்தவரை வீடு, அப்பா, அம்மா, தம்பி, நெருங்கிய உறவினர்கள், மிகக் குறைவான நட்பு வட்டம், தெரியாத வெளியுலகம் என இருந்த எனக்கு தலைநகரத்துக்குச் சென்ற பிறகு தான் தெரிந்தது என்னவரின் நட்பு வட்டம் எவ்வளவு பெரியது என! தங்கியிருந்த பகுதியில் இருந்த அனைத்து தென்னிந்த மனிதர்களுக்கும் [அது இருக்கும் நூற்றுக்கணக்கில்!] தெரிந்தவராக இருந்தார் என்னவர். வீட்டிற்கு வரும் நண்பர்கள், நேரே சமையலறைக்கு வந்து “என்ன சமையல் இன்னிக்கு?” என்று கேட்கும்போது வரும் உதறல் கொஞ்சம் நஞ்சமல்ல! சாப்பிட்ட பிறகு தான் செல்வார்கள்! சென்ற புதிதில் நிறையவே பயந்திருக்கிறேன்.

வெளியே போனால் எப்போது திரும்புவார் என்று சொல்ல முடியாத அளவுக்கு பொதுச் சேவை அவருக்கு!  இரவு திடீரென தொலைபேசி/அலைபேசியில் அழைப்பு வந்தால், “இதோ வரேன்!” என்று புறப்பட்டு விடுவார் - தனியே இருந்தே பழக்கம் இல்லாத எனக்கு இரவு முழுவதும் உறக்கம் வராது – பயத்தில்! ஒரு முறை இரவு முழுவதும் வீட்டுக்கு வரவில்லை! நான் வீட்டில் தனியாக உறங்காமல் இருக்க, அவரும், அவருடைய ஒரு நண்பரும் இன்னுமொருவர் வீட்டில் இரவு முழுவதும் விழித்துக் கொண்டு – அவர்களுக்குத் துணையாக இறந்து போன அந்த வீட்டு மனிதரின் உடல்!  அதிகாலை வீட்டுக்கு, சர்வ சாதாரணமாக இதைச் சொல்லி, ஒரு குளியல் போட்டு கிளம்பினவர், எல்லா வேலைகளும் முடிந்து வீட்டுக்கு வரும்போது மாலை ஐந்து மணி!

என்னதான் விஷாரத் வரை ஹிந்தி படித்திருந்தாலும், ஒரு மொழியைப் பேசுவதற்கும் படிப்பதற்கும் நிறையவே வித்தியாசம்! ஹிந்தி தெரிந்திருந்தாலும், தில்லி மக்கள் பேசும் ஹிந்தி புரியாமல் விழிபிதுங்கி வெளியே வரும் அளவுக்கு முழித்திருக்கிறேன்.  ஒரு முறை மார்க்கெட் சென்றபோது “நாஸ்பதி நாஸ்பதி எனக் கூவிக் கூவி விற்க, என்னவரிடம் “என்னங்க ராஷ்ட்ரபதியை கூவிக் கூவி விற்கறானே என்று கேட்டுவிட, அவர் இன்றளவும் என்னைக் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்!  அவர் விற்றது பேரிக்காய் வகைகளில் ஒன்று – அதன் பெயர் ஹிந்தியில் நாஸ்பதி! இப்படி பல முறை பல்பு வாங்கி இருக்கிறேன். ஹிந்தியே தகராறு எனும்போது, ஹர்யான்வி, பஞ்சாபி என பல மொழி பேசும் தில்லி மக்களிடம், “என்னதான் சொல்ல வராங்க?” என்று தெரியாமல் மாட்டிக்கொண்டு முழித்திருக்கிறேன்! 

மாற்றம் முதலில் பயமுறுத்தினாலும், நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன் – வட இந்திய சமையல் முதல் ஃபுல்கா எனப்படும் சப்பாத்தி செய்வது வரை, வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை, சக மனிதர்களை, பாஷையை, என நிறையவே விஷயங்கள் தெரிந்து கொண்டது, புதிய நட்புகளைப் பெற்றது ஆகிய எல்லாமே இந்த மாற்றத்தினால் தான்.  கோவை2தில்லி தந்த மாற்றங்கள், சில சுவையான நிகழ்வுகள், நினைவுகள் ஆகியவற்றை இந்தக் கட்டுரைத் தொகுப்பில் பார்க்கலாம்! வலைப்பூவில் எழுதிய கட்டுரைகளை ஒரு தொகுப்பாக, சேமிப்பாக, மின்புத்தகமாக வெளிக் கொண்டு வருவதில் மகிழ்ச்சி. 

மின்புத்தகத்தினை கீழே உள்ள சுட்டி மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்! நான்கு விதங்களில் தரவிறக்கம் செய்யும் வசதி உண்டு! தரவிறக்கம் செய்து படிக்கலாம்!


கோவை, தில்லி என மாற்றி மாற்றி எனது அனுபவங்களைச் சொல்லி இருக்கிறேன்.  சொல்லி இருக்கும் நிகழ்வுகள், அவை மீட்டெடுத்த உங்கள் நினைவுகள், பற்றிய உங்கள் கருத்துகளைத் தெரியப் படுத்தலாமே!

நட்புடன்


48 கருத்துகள்:

  1. ஆதி வெங்கட் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.... புத்தகத்திற்கு அட்டைப்படம் வரைந்த ரோஹிணிக்கும் என் வாழ்த்துக்கள் TM 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரோஷ்ணி வரைந்த ஓவியம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  2. சுவாரஸ்யமாய் இருக்கும் என்று தெரிகிறது. புத்தகத்தை இறக்கிக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. வாழ்த்துக்கள்
    இதோ தரவிறக்கம் செய்து கொள்கிறேன்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  5. வாழ்த்துக்கள் ஆதி வெங்கட். தில்லி வசிப்பே சம்திங் ஸ்பெஷல்தான் போல. மின்னூலைத் தரவிறக்கிப் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  7. வாழ்த்துகள் திருமதி ஆதி வெங்கட் அவர்களே! மின்னூலைப் படிக்க இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  8. பெரும்பாலான கட்டுரைகளை ஏற்கனவே படித்திருக்கிறேன். உங்களுக்கே வருஷம் போடாததுனால இது எப்போ நடந்ததுன்னு சந்தேகம் வரலாம். இருந்தாலும் இன்டெரெஸ்டிங். கிடைத்த அனுபவங்களுக்கு நிறைய எழுதியிருக்கலாம். வெங்கட்டாக இருந்திருந்தால், 3 நாள் இரயில் பிரயாணத்துக்கே 4 இடுகைகளை எழுதியிருப்பார் (ராஜா காது கழுதைக் காது உள்பட).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிடைத்த அனுபவத்திற்கு நிறைய எழுதி இருக்கலாம்! - கலாம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

      நீக்கு
  11. புத்தகம் மிக அருமையாக இருக்குமென்பது முகவுரை பார்க்கும்போதே தெரிகிறது.. அந்தப் பிள்ளையாரை இதுக்கு முன் எங்கயோ பார்த்திருக்கிறேனே:).. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  12. மனம் நிறைந்த வாழ்த்துகள். நூலின் அறிமுகம் படிக்க ஆவலைத் தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  13. வெங்கட்ஜி!! குடும்பத்திலிருந்து மற்றொரு புத்தகம்! தங்கள் மனைவியிடமிருந்து! வாவ் வாழ்த்துகள்! மனைவிக்கும், அட்டைப்படம் தந்திருக்கும் ரோஷிணிச்செல்லத்திற்கும்!!

    கீதா: ஆதி! கலக்கிட்டீங்க!! சூப்பர்ப்பா! செமை புக் போல டவுன்லோட் பண்ணிடறேன்...ரோஷிணிக்க் குட்டியின் படம் கூடுதல் அழகு சேர்க்கிறது!! மனமார்ந்த வாழ்த்துகள்! இன்னும் நிறைய எழுதுங்க...புத்தகம் வெளியிடுங்க! அடுத்து ரோஷிணிக் குட்டியின் புத்தகம் வித் அவங்க வரையும் படங்கள் அதற்கான கதைகள் அல்லதுகுறிப்புகள் என்று வரலாமோ?!!!!

    பாராட்டுகள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளின் கைவண்ணத்தில் ஒரு புத்தகம் - பார்க்கலாம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  14. மின்னூலைப் படிக்கிறேன் என்பவர்கள் தட்டச்சின் ஓசை மறையும் முன்பே மறந்து விடுகிறார்கள் நான் உண்மையை சொல்கிறேன் கண்களுக்குப் பிரச்சனை என்பதால் வாசிக்க இயலுமா தெரிய வில்லை. பொதுவாக மின்னூல்கள் ஏதோஒருவிதத்தில் இணையத்தில் சேமிப்பாகவே இருக்கிறதோ என்னும் ஐயம் உண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னூல்கள் இணையத்தில் சேமிப்பாகவே இருக்கிறதோ? ம்ம்ம்ம். அதுவும் நன்மைக்குத் தானே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  15. தமிழ் மின்னூல் வரலாற்றில் ஒரு மைல் கல் ,மின்னூல்தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  16. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  17. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  18. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மொஹம்மத்.

      நீக்கு
  19. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவிந்தராஜூ அருணாச்சலம் ஐயா.

      நீக்கு
  20. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  21. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  22. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
    ஜி அடுத்த பதிவுகளை காணோம் வெளியூர் பயணமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      தமிழக வருகை - பதிவுகள் எழுத இயலவில்லை!

      நீக்கு
  23. கதை நன்று என யாருக்கோ போட்ட கருத்து தங்களுக்கு மாறி வந்து விட்டதென நினைக்கிறேன்.
    சிஸ்டம் பிரச்சினை தீரவில்லை...
    மின்னூல் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்...
    இன்னும் தொடரட்டும்.,

    தரவிறக்கம் செய்து வாசிக்கிறேன்.

    தவறுதலான முந்தைய கருத்துக்கு மன்னிக்கவும் அண்ணா...
    நேரடியாக கருத்து டைப் செய்ய இயலவில்லை...

    நோட்பாடில் டைப் செய்து காபி பேஸ்ட் பண்ணுவதில் இந்த தவற நிகழ்ந்திருக்கலாம்...
    கருத்து இட்டாலும் ஏற்றதா இல்லையா என்று அறிய முடியாமல் சுற்றிக் கொண்டே இருக்கிறது எனது கணிப்பொறியில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயங்களில் இப்படித்தான் கருத்து மாறி வந்து விடுகிறது! பரவாயில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  24. என்ன ரொம்ப நாளாகிவிட்டது.... ஆளைக் காணலையே... மற்ற பயணத் தொடர்களெல்லாம் என்ன ஆச்சு? இப்போ லீவுகூட இல்லையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று தான் ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறேன்! :)

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....