அன்பின் நண்பர்களுக்கு,
எனது கோவை2தில்லி
வலைப்பூவில் அவ்வப்போது சில விஷயங்களைக் கதம்பமாகத் தொகுத்து பகிர்வது வழக்கம்.
அங்கே எழுதுவதே இல்லை! முகநூலில் சமீபத்தில் எழுதிய சில விஷயங்கள் இங்கே
கதம்பமாக….
மோகன்ஜி
அண்ணாவின் பொன்வீதி! - #வாசிப்பனுபவம்
160 பக்கங்களைக் கொண்ட
சிறுகதை தொகுப்பு. மோகன்ஜி அண்ணாவின் எழுத்தைப் பற்றிச் சொல்ல எனக்கு வயதில்லை.
சில நாட்களுக்கு முன்னர் வாசிக்க ஆரம்பித்து, ஒவ்வொன்றாக ரசித்து இன்றே வாசித்து
முடித்தேன்.
வலைப்பூவில்
சிலவற்றை வாசித்திருந்தாலும் புத்தக வடிவில் வாசிப்பதில் ஒரு சுவாரஸ்யம். ஜன்னலோர
இருக்கையில் காற்று முகத்தில் ஸ்பரிசிக்க கதாபாத்திரங்களை மனக்கண்ணில் நிறுத்தி
வாசிக்கும் போது ஒரு அனுபவம்.
பொன்வீதி,
பச்ச மொழகா, பியார் கி புல்புல், கல்யாணியை
கடித்த கதை, தத்த்தி, கூளம், பாண்டு என ஒவ்வொரு கதையும் ஒரு விதம்.. அந்த கதாபாத்திரங்களின் வட்டார
வழக்கும் தத்ரூபம்..
பாண்டு என்ற கதை மிகவும் கவர்ந்தது..அண்ணாவின் கற்பனைக்கு வானமே எல்லை. சரி!
எல்லாவற்றையும் நானே சொல்லி விட்டால் எப்படி!!!! நீங்களும் இந்த புத்தகத்தை
வாசித்தால் தான் அதன் சுவையை உணர முடியும்...
ஒட்டிப் பிறந்த இரட்டைக்
குழந்தைகள்!
இன்று காய்கறிகள் வாங்கிய போது கிடைத்த
ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிறவிகள்!! தோழியின் மகன்கள் ஸ்மைலி போட மகள் எடுத்த
படம்!!
நார்த்தங்காய்
பிடிக்குமா?
தோழி நார்த்தங்காய் வேண்டுமா எனக் கேட்டு மூன்றைக் கொடுத்தார். ஏற்கனவே மாவடு, கிடாரங்காய்
உப்பில் போட்டது,
எலுமிச்சங்காய் உப்பில் போட்டது, வட
இந்திய ஊறுகாயான chundaa
எல்லாம் இருக்கு. சரியென்று இதையும் அந்த ஜோதியில் ஐக்கியம்
செய்து விட்டேன்!
தினப்படி ஊறுகாய் போட்டுக் கொள்ள மாட்டேன்.. குழம்போ, கூட்டோ
இருந்தால் அதையே போட்டுக் கொண்டு சாப்பிட்டு விடுவேன்.
சுருள் போல வெட்டி உப்பும், மஞ்சள்பொடியும் அடைத்து வைத்தேன்.. இன்று
தண்ணீர் விட்டுக் கொண்டுள்ளது.. நன்கு ஊறியதும் வெயிலில்
வைத்து காய விட வேண்டும்...
யாருக்கெல்லாம் நார்த்தங்காய் பிடிக்கும்??
ரோஷ்ணி கார்னர்:
எல்லா ஊருக்கும் லீவு விடறாங்க. நம்ம ஊருக்கு மட்டும் ஏன் லீவு விட
மாட்டேங்கறாங்கமா???
காலையிலிருந்து டி.வியில் செய்திகளையே பார்த்துக் கொண்டு
உம்மென்று சென்றிருக்கிறாள் பள்ளிக்கு!
அவ கவலை அவளுக்கு!!!!!
எட்டு நடை:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அரை
மணிநேரம் எட்டு வடிவ நடைப்பயிற்சியை ஒரு வாரமாக தொடரத் துவங்கியுள்ளேன்..
திருவரங்கமும் மழையும்!
நேற்று மகளும் நானும் கடைத்தெருவுக்குச் சென்றிருந்தோம்.
தமிழகம் எங்கும் மழை என தொலைக்காட்சியில் சொன்னாலும் திருச்சியில் குறிப்பாக
ஸ்ரீரங்கத்தில் மழை வருவது அபூர்வம்.. அதன் காரணம் அந்த ரங்கனுக்கே வெளிச்சம். இதுவரை இந்த வடகிழக்கு பருவமழையில் சேர்ந்தாற் போல் பத்து நிமிடங்கள் கூட மழை
கொட்டி தீர்க்கவில்லை.. சடசடவென்று தூறலோடு சரி..
மக்கள் குடை சகிதமாக சுற்றிக் கொண்டிருந்தார்கள்.. ராஜகோபுரம் அருகே உள்ள
கடைகளில் எங்களுக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொண்டிருந்தோம்.
ஒருபுறம் வாகனங்கள் சென்று கொண்டிருக்க, நடைபாதை வியாபாரிகள், கடைகள்
,சுற்றுலாப் பயணிகள் என அந்த இடமே நெரிசல்.. இதில் ஆங்காங்கே நின்று செல்ஃபி
எடுத்து கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் கோபம் தான் வருகிறது..
ஒரு கடையில் நின்று வாங்கி கொண்டிருந்த போது, ஐய்யோ! ஐய்யோ மழை என்று
அலறல். என்னவென்று
பார்த்தால் தூறல் சில நிமிடங்கள். அவை பூமிக்கு வந்ததும் சூட்டில் காய்ந்தே
விட்டது. இதில் குடை பிடித்துக் கொண்டு நடக்கின்றனர் மக்கள். கடைக்காரர்
கூட அலறியவரிடம் சொன்னார்.. "ஏங்க! மழை தான் வரட்டுமே!! சென்னைல எப்படி
பெய்யுது! இங்க இந்த வருடம் தண்ணீர்ப் பஞ்சமே வந்து விட்டது!!" என்று.
இப்படிப்பட்ட மனிதர்களால் தான் மழை நம்மைக் கண்டு அலறி வேறு புறம் சென்று
விடுகிறது என்று மகளிடம் சொல்லிக் கொண்டு வந்தேன்.
கோவையில் இருந்த போதெல்லாம் மழையில் நனைந்து ரசித்தது உண்டு. டெல்லியிலும்
குடும்பத்தோடு மழையில் நனைவார்கள்.. நாங்களும் நனைந்து மகிழ்ந்திருக்கிறோம் பல
சமயங்களில்..
மழையே!! மழையே!! வா! வா!
வாட்ஸப் அலப்பறைகள்:
வாட்ஸப்பில் செய்திகளை, துணுக்குகளை பதிவிட்டு யார் ஆரம்பிக்கிறார்கள்
என்று தெரியவில்லை???????
எப்படி குளிப்பது, என்ன சாப்பிடுவது, நட்சத்திர
பலன், ராசி பலன்,
பிறந்த தேதி பலன், இந்த மாத்திரையை எடுத்துக் கொண்டால் என்ன
வைரஸ் உங்களை பிடித்துக் கொள்ளும், இந்த படத்தை ஷேர் செய்யா விட்டால் சாவு
எப்போது நெருங்கும்...என்று பலதரப்பட்ட செய்திகளை நமக்குத் தந்து பொது சேவை
செய்யும் அன்பர்கள்.
புண்ணியவான்களே!!! உங்கள் வேலையெல்லாம் விட்டு, குடும்பம் குழந்தைகளோடு செலவிடும் நேரத்தை
விடுத்து, எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க!!!!!
என்ன நண்பர்களே, கதம்பத்தில் சொன்ன விஷயங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில்
சொல்லுங்களேன்!
நட்புடன்
ஆதிவெங்கட்
திருவரங்கத்திலிருந்து.....
ரசிக்க வைக்கும் கதம்பம்.
பதிலளிநீக்குமோகன்ஜியின் புத்தகம் ஒரு பொக்கிஷம்.
இரட்டையாய் இருக்கும் காய்கறி, பழம் எதையும் பிரிக்க மாட்டார் என் பாஸ்! நான் டபுள் தமாகா என்று சாப்பிட்டு விடுவேன்!
நார்த்தங்காய் பிடிக்குமாவா? என்ன கேள்வி கேட்டீர்கள்! உயிராச்சே!!
ரோஷ்ணி ஸ்கூலுக்கு இப்போ அரையாண்டு பரீட்சை லீவு வருமே!!
நடைப்பயிற்சி நல்ல முயற்சி!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஎனக்கும் நடைப் பயிற்சி செய்ய ஆசை வந்து விட்டது.
பதிலளிநீக்குரோஷ்ணி போலத்தான் நானும். ஆபிஸ் போக முன்பெல்லாம் அழுவேன்..
மழையை யாருக்குத்தான் பிடிக்காது.. என்ன.. இப்பல்லாம் நனைஞ்சா ஜலதோஷமும் பிடிக்குது
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!
நீக்குஅருமையான தொகுப்பு முகநூலில் படித்து விட்டேன். இரட்டையாக உள்ள காய்களை வள்ரும் பிள்ளைகளுக்கு கொடுக்க மாட்டார்கள். வயதானவர்கள் சாப்பிடுவார்கள்.
பதிலளிநீக்குகுழந்தை பருவத்தில் விடுமுறை குதுகலம் அல்லவா?
எட்டு நடை நல்லது.
கதம்பம் நன்றாக இருக்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குகதம்பம் அருமை
பதிலளிநீக்குதம+1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஹலோ அந்த நார்த்தாங்காயை அப்படியே இங்கே பார்சலில் அனுப்புங்க சாப்பிட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன
பதிலளிநீக்குஅனுப்பிடலாம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
பயனுள்ள செய்திகள், பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குஅனைத்தும் ரசிக்க வைத்தன! சுவையுடன் கூடிய கதம்பம்! அதாங்க நார்த்தங்காய்!!!
பதிலளிநீக்குஎனக்கு ஊறுகாய் இருந்தால் பிடிக்கும். தினமுமே! ஆனால் உடலுக்கு அது நல்லதல்ல என்பதால் தினமும் இல்லை என்றாலலும் அவ்வப்போது!
: மழை பிடிக்கும் ஆனால் நனையப் பிடிக்காது...தொண்டை கட்டி ஜலதோஷம் என்று வந்துவிடும் அதுவும் ஆசிரியர் ஆச்சே!! என்றாலு பல சமயங்களில் நனைந்து கொண்டுதான் வண்டி ஓட்டிச் செல்லணும் ஆகிவிடும் மழக்காலத்தில் வீட்டுக்குச் செல்லும் போத
துளசிதரன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
நீக்குநார்த்தாங்காய் !! ஆஹா!! ரொம்பப் பிடிக்கும்...இப்படித்தான் சுருள் நார்த்தாங்கய் போடுவதுண்டு சென்னை வந்து கற்றது. எங்கள் ஊரில் துண்டுகளாக வெட்டித்தான் போடுவார்கள். உப்பு நார்த்தாங்காய். நான் சில சமயம் பிற ஊறுகாய்களைப் போடுவது போல் காரம் போட்டு நல்லெண்ணைய் விட்டும் போடுவதுண்டு. இப்போதும் சுருள் நார்த்தாங்காய் காய்ந்து பாட்டிலில் இருக்கிறது!!! எங்கள் வீட்டில் நாங்கள் தினமும் சாப்பிடுவதில்லை நீங்கள் சொல்லியிருப்பது போல் குழம்பு அல்லது கூட்டிருந்தால் போதும். எப்போதேனும்தான்...
பதிலளிநீக்குரோஷினிக் குட்டி பாவம் லீவுஆசை எல்லாக் குழந்தைகளுக்கும் ஏன் பெரிய குழந்தைகலூக்கும்தான் கிடைத்தால் வேண்டாம் என்றா சொல்லுவார்கள்!!!!!
எட்டு உடற்பயிற்சி உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் ஆதி! நானும் செய்கிறேன். வீட்டில் மொட்டை மாடியில் கூடச் செய்யலாம் ஆனால் நான் வெளியில்தான் செய்கிறேன்..நடைப்பயிற்சி செல்லும் போது
மழை ரொம்பப் பிடிக்கும். இப்போதும் நனைந்து மகிழப் பிடிக்கும்...என்ன அப்படி நனைந்து எனது மூன்றாவது காது நிறைய தண்ணீரைக் குடித்துவிட்டது!!!! முரண்டு பிடித்துவிட்டது. இப்போது அதன் மருத்த்வரிடம் உள்ளது ... ஜல்பு போய் எப்போது என் கைக்கு வருமோ தெரியலை....அதுக்காக இனியும் நனையாமல் இருப்பேனா...அதைப் பத்திரப்படுத்திவிட்டு நனைந்துவிட வேண்டியதுதான்!!!
வாட்ஸப் அலப்பறை ஹையொ அதை ஏன் கேக்கறீங்க...இத இப்ப உடனே இத்த்னை பேருக்கு அனுப்பு உடனே நல்ல செய்தி வரும் இல்லைனா துன்பம் வரும் அப்படினு நெருங்கிய நண்பர்கள் உறவினரே அனுப்பி துன்பம் கொடுக்கறாங்களே!! ஹா ஹா ஹா முன்னாடி போஸ்ட் கார்டுல வந்துச்சு அப்புறம் கணினி வழியா இப்போ மொபைல் வாட்சப் வழியா...ஹும்..
இரட்டைக் காய் இப்படி கத்தரியிலும் வந்தது காரட்டில் கூட....ஹையோ தேங்காய்ல இப்படி இரட்டையா வந்தத அதுக்குக் குங்க்குமம் சந்தனம் வைச்சு இதை அனுப்புங்க நற்பலன் கிடைக்கும்னு வாட்சப்புல அனுப்பி ஓ மை கடவுளே!
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நீக்குகதம்பம் நல்ல மணம். 8 வடிவத்தில் நடைப்பயிற்சி குறித்து, நமது வலைப்பதிவர் எழுத்தாளர் அமுதவன் அவர்கள் ஒரு முழு பதிவே எழுதி இருக்கிறார். ‘எட்டு’ போட்டு நடை பயிலுங்கள்! http://amudhavan.blogspot.com/2012/12/blog-post_25.html
பதிலளிநீக்குமேலதிகத் தகவலுக்கு நன்றி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.
கதம்பம் மணமாய் எல்லாப்பக்கம்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.
நீக்குரசிக்க வைக்கும் கதம்பம்.
பதிலளிநீக்குஇந்த மாதிரி ரெட்டை சௌசௌ, ரெட்டை வாழைக்காய் போன்றவை, ஜீன் கோளாறுகளினால் தோன்றுபவை. அதனால் நாங்கள் அதனை வாங்கமாட்டோம், வாங்கிவிட்டாலும் உபயோகப்படுத்துவதில்லை.
'லீவு'-பள்ளி நாட்களில் செத்தவரைப் பற்றிக் கவலைப்படாமல் விடுமுறையை அனுபவித்த காலம்.
வாட்சப் - நிறைய தகவல்கள் ரிபீட். நிறைய தகவல்கள் ரசிக்க வைக்கும். 'உடனே 20 செகன்டில் ஃபார்வார்ட் செய்யணும் நல்ல செய்தி வரும்' போன்ற சிலவை மிகவும் கடுப்படிக்கக்கூடியது. இன்றைக்கு வாட்சப், முக'நூல், இன்டெர்னெட் இரண்டு வாரங்களுக்கு வேலை செய்யவில்லையென்றால், இளைய தலைமுறைக்கு நிறைய பாடங்கள் கற்றுக்கொடுக்கும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குபல்வேறு தகவல்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
நீக்குநல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும்பெய்யும் மழை சரியா
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குஎல்லாமே முகநூலில் வாசித்தது
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!
நீக்குவாட்சாப் அலப்பறைகள் அதிகம் தான்))) பொன்வீதி இனித்தான் வாசிக்க வேண்டும் .
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம்.
நீக்கு//எல்லா ஊருக்கும் லீவு விடறாங்க. நம்ம ஊருக்கு மட்டும் ஏன் லீவு விட மாட்டேங்கறாங்கமா??? காலையிலிருந்து டி.வியில் செய்திகளையே பார்த்துக் கொண்டு உம்மென்று சென்றிருக்கிறாள் பள்ளிக்கு!//
பதிலளிநீக்குகுழந்தைகள் எல்லாரும் ஒரேமாதிரிதான் போலும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ்.
நீக்கு