தொகுப்புகள்

செவ்வாய், 28 நவம்பர், 2017

கதம்பம் – துணுக்கு சேகரிப்பு – ஓவியம் – பயமுறுத்திய விசிட்டர்


துணுக்கு சேகரிப்பு – பொழுதுபோக்கு



மாத இதழ்களில் வரும் உபயோகமுள்ள துணுக்குகள், டிப்ஸ்கள், ரெசிபிகளை கத்தரித்து அதை ஒரு பேப்பரில் ஒட்டி அதை ஒரு ஃபோல்டரில் போட்டு ஃபைல் பண்ணி வெச்சிருக்கேன்! அது அப்போ!!


என்னவரும் இதற்கு உதவி செய்திருக்கார். அவருடைய புத்தக கலெக்‌ஷனில் உள்ள புத்தகங்களுக்கு அட்டை போடுவது, எழுத்தாளர் வரிசைப்படி அடுக்கி வைப்பது, கேட்கும் பாடல்களில் பிடித்தவற்றை எழுதி வைத்து சிடிக்களில் பதிவு செய்து அடுக்குவது என அப்போது இருவரும் எங்கள் நேரத்தை செலவிட்டிருக்கிறோம்.

நானும் அவர் அலுவலகம் கிளம்பும் முன் பேண்ட், ஷர்ட் எடுத்து வைப்பது முதல் செல்ஃபோன், பேனா, பர்ஸ், ஐடி கார்டு, சாக்ஸ் எடுத்து வைத்து ஷூவுக்கு பாலிஷ் செய்வது வரை செய்திருக்கிறேன். அவரும் சப்ஜிக்கு காய்களை நறுக்கித் தருவார்.

குழந்தை பிறந்த பிறகு, நேரம் மின்னல் வேகத்தில் நகர்ந்தது. இந்த மெனக்கெடலுக்கெல்லாம் நேரமில்லை. புத்தகங்கள் பரணில் ஏறின.

இம்முறை என்னுடைய அலமாரியிலிருந்து சேகரித்த துணுக்குகளை எடுத்து வந்ததும், அந்நாட்களுக்கு சென்று வந்த உணர்வு. எத்தனை பொறுமையுடன் செய்திருக்கிறோம் துணுக்கு சேகரிப்பை என்று நினைக்கும்போது வியப்பு.

*****

ரோஷ்ணி கார்னர் – ஓவியம்



திருவரங்கம் அரசு நூலகத்தில் நடைப்பெற்ற நூலக வார விழாவையொட்டி நடத்தப்பட்ட ஓவியப்போட்டிக்கு மகள் வரைந்து பரிசுபெற்ற ஓவியம்.

*****

கதை மாந்தர்கள் – சின்சியர் சிகாமணி!

செய்யும் வேலையில் சின்சியராக இருப்போரில் இங்கு ஒருவர்.

வழக்கமாகப் பூ கொண்டு வரும் அம்மா இன்று வராததால், வாட்ச்மேனிடம் இண்டர்காமில் அழைத்து வேறு யாராவது பூ கொண்டு வந்தால் அனுப்பி விடுங்கள் என்றேன்.

சரிங்க மேடம்! என்றார்.

சிறிது நேரமாயிற்று! யாரும் வரலையோ?? கேட்கலாமா என நினைப்பதற்குள் இண்டர்காமில் அழைப்பு.

இதுவரை பூக்காரர் வரலைங்க மேடம் என்றார்.

அப்படியா!! என சொல்லி முடிப்பதற்குள், "நான் காலையிலேயே பவளமல்லி பறிச்சு வெக்கிறேன் மேடம்” என்றார்.

ஓ! நல்லது! சுவாமிக்குப் போட வேண்டும் என்றேன்.

பத்து நிமிடத்திற்குள் மீண்டும் அழைப்பு.. பூக்காரர் வந்து விட்டார். அனுப்பி வெக்கிறேன் மேடம்.

இப்படித் தன் பொறுப்பில் இடப்படும் வேலைகளில் உண்மையாக இருப்பார். பல நேரங்களில் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். சின்சியர் மனிதர்கள் கிடைப்பது கடினம் தானே!

*****

பயமுறுத்திய விசிட்டர்!

இன்று காலையிலேயே எங்கள் குடியிருப்பில் பதற்றம். நல்ல பாம்பு காம்பவுண்டுக்குள் வந்து அதை விரட்டி விட்டிருக்கிறார்கள். அடிபட்ட பாம்போ அல்லது நோய்வாய்ப்பட்டதோ நகரவே மிகவும் சிரமப்பட்டதாக சொன்னார்கள்.

ஒரு குச்சியில் எடுத்து வெளியே வீசியுள்ளனர். எங்கள் குடியிருப்புக்கு பாம்பு வருவது மூன்றோ நான்கோ தடவையாகி விட்டது.

தோப்புகள் மற்றும் விளைநிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் பங்களாக்களாகவும் மாறிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் எங்கள் குடியிருப்பும் ஒன்று. அவைகளின் இருப்பிடத்தில் தான் நாம் வசிக்கிறோம். பயத்தைத் தாண்டி குற்றவுணர்ச்சி தான் மேலிட்டது எனக்கு.

*****

முகநூலில் எழுதியவற்றை கதம்பமாக இங்கே தந்திருக்கிறேன். உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லலாமே!

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

நட்புடன்

ஆதி வெங்கட்
திருவரங்கத்திலிருந்து....



12 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  2. கதம்பத்தை ரசித்தேன். பெண்ணை, தகுந்த ஓவியப் பயிற்சிக்கு அனுப்புங்கள். இல்லைனா, திறமை ஒரு லெவலோடு நின்றுவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகுந்த ஓவியப் பயிற்சி.... எங்களுக்கும் அந்த எண்ணம் உண்டு. ஆனால் சரியான ஆசிரியர் கிடைப்பதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. இந்த மாதிரியான பொழுது போக்கு என்னிடமும் இருந்தது ஒரு வேளை அது அந்தக் காலப் பழக்கமோ பொழுது போகாத வாட்ச் மேனுக்கு இப்படியும் நல்ல பெயர் சம்பாதிக்கத் தெரிந்திருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  4. எனக்கும் சேகரிப்புக்கள் பிடிக்கும்.

    ஓவியம் மிக அழகு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதிரா.

      நீக்கு
  5. நல்ல கதம்பம் ஆதி!!

    அட நீங்களும் குறிப்புகள் சேர்த்து வைச்சுருக்கீங்களா..நானும் நிறைய சேர்த்து வைச்சிருந்தேன்...அதில் இப்போது மிச்சமிருப்பவை பொடியும் நிலையில் அதுவும் நான் நோட்புக்கில் பல சமையல் குறிப்புகள் எழுதி எல்லாம் கிழியும் நிலையில் இருக்கு இப்ப..

    ரோஷிணிக் குட்டிக்கு வாழ்த்துகள்! மிக நன்றாக வரைந்திருக்கிறாள்...

    சின்சியர் சிகாமணி!!! ஹா ஹா ஆனால் ரசித்தேன்..

    விசிட்டர்!! ஆம் நம்மில் பலரும் ஊர்வன மட்டுமில்ல பல உயிரினங்களின் வாழ்விடங்களில்தான் குடியிருக்கிறோம்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. கதம்பம் குட்டி கதைகளுடன்நல்லா இருந்தது, ஓவியத்திற்கு வாழ்த்துக்கள் ரோஷ்ணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....