தொகுப்புகள்

சனி, 9 டிசம்பர், 2017

கதம்பம் – ஒரு சூப்பர் டான்ஸ் – மொட்டைமாடி காட்சிகள் – மண் வாணலி!



ஒரு சூப்பர் டான்ஸ்!



கடவுளின் படைப்பில் தான் எத்தனை அற்புதம்!!! சமீபத்தில் வீட்டின் சமையலறைக்குள் சுவற்றில் பார்த்த ஒரு உயிரினம். என்னமா டான்ஸ் ஆடுது பாருங்க. ஜிந்தாத்தா ஜிந்தா ஜிந்தா ஜிந்தாத்தா! என்ன டான்ஸ் பாருங்க.




மொட்டை மாடிக் காட்சிகள்

சமீபத்தில் மாலை நேரத்தில் மொட்டை மாடிக்குச் சென்ற போது கண்ட காட்சிகள்! இயற்கையின் அழகு – புகைப்படங்களாய் -உங்கள் பார்வைக்கு!






மண் வாணலி


சமீபத்தில் தான் இந்த வாணலியை வாங்கினேன். குழம்பு, கூட்டு செய்ய ஏற்கனவே ஒரு சட்டி ஐந்து வருடமாய் என்னிடத்தில் உண்டு! தினசரி சமையல் அதில் தான். மண்பாத்திர சமையலில் அடுத்த கட்டமாக இந்த வாணலி.

இதைப் பழக்க ஆரம்பிக்க உங்களிடம் டிப்ஸ் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்! தெரிந்து கொள்கிறேன். எண்ணெய் தடவி அடுப்பில் வைத்து எடுக்கணும் என்று வாசித்த ஞாபகம்.

வெங்கி’ஸ் கார்னர்: [என்னவரின் முகப்புத்தக இற்றை ஒன்று!]

ராஜா காது கழுதைக் காது.....

இன்று மதியம் தலைநகரின் பிரபலமான ஒரு இடத்தில்....

பின்னணியில் அந்த இடம் இருக்க, ஒரு இளம் ஜோடி - பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள் - இரண்டு பேரும் சேர்ந்து செல்ஃபி எடுக்கவில்லை. சுற்றுலா வந்திருக்கும் தமிழர்கள் போலும்!

ஆண் நிற்க, பெண் அவரது அலைபேசி மூலம் புகைப்படம் எடுத்த போது, சொன்னது - “லூசு லூசு... கண்ணை ஏன் மூடிக்கற, நல்ல திறந்து வை!”

ஆண் ஒன்றும் சொல்லவில்லை என்றாலும் சொல்ல நினைத்திருப்பார் - “சூரியனை பார்த்து கண்ணை மூடாம, எப்படிம்மா நல்ல திறந்து வைக்கறது!”

நான் சிரிப்பதைப் பார்த்து ஹிந்திக்கார நண்பர் கேட்க விவரித்தேன் - அவருக்கும் புன்னகை!

உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லலாமே!

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

நட்புடன்

ஆதி வெங்கட்
திருவரங்கத்திலிருந்து....


20 கருத்துகள்:

  1. பூச்சி அழகாக இருக்கிறது ஆதி!! ஆனால் டான்ஸ் தான் பார்க்க முடியலை!! ஏதோ லிங்க் இருக்காப்ல இருக்கு ஆனால் வரலை...

    இயற்கைக் காட்சிகள் அழகு. குறிப்பா அந்த வானில் உள்ளக் கீற்று...

    நானும் மண் வாணலி வைத்திருக்கேன். அதில்தான் காய் வதக்குவதுண்டு பல சமயங்களில்...
    ஊரில் என்றால் உமியை அதில் போட்டு நன்றாகப் புரட்டி விட்டு தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து அப்படியெ விட்டு அடுத்த நாள் கொட்டிவிட்டு பயன்படுத்துவது.

    இப்போது இங்கு உமிக்கு எங்கு போவது எனவே நன்றாகக் கழுவிவிட்டு, எண்ணை போட்டு தடவி விட்டு அதில் தண்ணீஈர் விட்டு அரிசி மாவ அல்லது கோதுமை மாவு போட்டு கரைத்து கொதிக்க விட்டு எண்ணையும் உப்பும், மஞ்சளும் சேர்த்துக் கொதிக்க விட்டு அப்படியே ஊற வைத்து விட்டு மறு நாள் நன்றாகக் கழுவிட்டுப் பயன்படுத்தலாம்..

    ராகாககா ஸ்வாரஸ்யம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லிங்க் மாற்றி இருக்கிறேன். இப்போது பார்க்க முடியும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. புதுப்பாணை வாங்கினால் அதன் மீது உள்ளும் வெளியிலும் நீரில் கெட்டியாக கரைத்த அரிசி மாவைதடவி அடுப்பில் வைத்து எடுத்து அதை கழுவி பயன்படுத்துவார்கள் என்று ஞாபகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  3. போட்டோஸ் அழகு.
    பூச்சி அழகோ அழகு... வீடியோ வரலை.... டான்ஸ் பாக்க முடியல.
    லூசு... லூசு முகநூலில் வாசித்தேன்...
    மண்பானை சமையல் சுவையோ சுவைதான்... அம்மா உமியை வறுத்து ஏதோ செய்வார்கள்... மறந்து போச்சு.... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  4. மண்பானைச் சமையல் சுவைதான்..
    இதைத் தானே சில காலங்கள் முன்பு வரை பயன்படுத்தி வந்தோம்..

    நாகரிகம் அதிகமானதான் சட்டி பானையெல்லாம் ஏழைபாழைகளுக்கானது என்று ஒதுக்கி விட்டு உலோக பாத்திரங்களுக்கு மாறினோம்...

    இப்போது மறுபடியும் - மண் பானை, சட்டிகள்....

    குயவர் கைச் சகடையைப் போல
    காலச் சக்கரம் சுழல்கின்றது.. காட்சிகளும் மாறுகின்றன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  5. /“சூரியனை பார்த்து கண்ணை மூடாம, எப்படிம்மா நல்ல திறந்து வைக்கறது!”/கவிதை வரிகள் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  6. “சூரியனை பார்த்து கண்ணை மூடாம, எப்படிம்மா நல்ல திறந்து வைக்கறது!”

    சொல்ல பயப்பட்டு இருப்பாரோ......

    படங்கள் ஸூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயப்பட்டு இருப்பாரோ ? :) இருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. பெண்கள் பெல்லி டான்ஸ் ஆடுவதுபோல் இது பூச்சியின் மீசை டான்ஸ் போலிருக்கிறது. படங்கள் அருமை. மண் பத்திரத்தில் சமைக்கும்போது சுவையிலும், சமைக்க ஆகும் நேரத்திலும் என்ன வித்தியாசம் இருக்கும் என தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீசை டான்ஸ்! :)

      வித்தியாசம் - எனக்குத் தெரியலை! அவங்க வந்து சொல்வாங்கன்னு நினைக்கிறேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....