தொகுப்புகள்

ஞாயிறு, 17 ஜூன், 2018

இந்த வாரத்தின் புகைப்பட உலா – கவிதை தாருங்கள்!

Photo of the Day Series - 2

சென்ற வாரத்தில் #Photo_of_the_day எனும் Tag Line-உடன் முகநூலில் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு இந்த ஞாயிறில் இங்கே….




படம்-1: எடுத்த இடம் – தஞ்சாவூர் மே 2018, தஞ்சை பெரிய கோவில் உள்ளே!

தவறு என்பது வாழ்க்கையின் ஒரு பக்கம் மட்டுமே. ஆனால் நட்பு என்பதோ ஒரு புத்தகம்…. ஒரு பக்கத்திற்காக புத்தகத்தினை இழப்பது சரியல்ல! மறப்போம் மன்னிப்போம்!


படம்-2: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 – சித்திரைத் தேர் திருவிழா.

இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல், உங்களுக்கும் மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும் – ஸ்வாமி விவேகானந்தர்.


படம்-3: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 – சித்திரைத் தேர் திருவிழா.

வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம், யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான் – அம்பேத்கர்.


படம்-4: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 – சித்திரைத் தேர் திருவிழா.

ஹையோ! ஹையோ!! இந்த மாமாவுக்கு ஃபோட்டோ புடிக்கிறது தவிர வேற வேலையே இல்லையா?

முகநூலில் இப்படம் வெளியிட்டபோது ரிஷபன் பகிர்ந்து கொண்ட வரிகள் –

இமைக் கதவைத் திறந்து விடாதே…
ஓரிரு நிமிடங்களேனும்.
சிறைப்பிடித்த இப்பிரியம்
உன் இதயத்தில் சேரட்டும்…
அவ்வப்போது
கண்ணுக்குக் கொண்டு வந்து
காட்சியாய்க் காணலாம் வாழ்நாள் முழுதும்…


படம்-5: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 – சித்திரைத் தேர் திருவிழா.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் நம்பிக்கையோடு ஏறு!


படம்-6: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 – சித்திரைத் தேர் திருவிழா.

கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே, அது உன்னைக் கொன்று விடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம்!

பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதைச் சொல்லுங்களேன். படங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது, படம் பார்த்த போது தோன்றிய எண்ணம் என்ன என்பதையும் சொல்லுங்கள் – முடிந்தால் கவிதையாகவும் எழுதலாமே – பின்னூட்டத்தில்….

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

26 கருத்துகள்:

  1. படங்களும், கவிதைகளும் ஸூப்பர் ஜி.
    எனக்கு மிகவும் பிடித்த சுவாமி விவேகானந்தரின் பொன்மொழியை மீண்டும் இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் 🙏 கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. படங்களும் கவிதையும் நல்லா வந்திருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    அனைத்துப் படங்களும் மிக அருமையாய் உள்ளது. அதற்கேற்ற பொன்மொழிகளும் மிக அருமை. சகோதரர் ரிஷபன் அவர்களின் கவிதை மிக அருமையாய் உள்ளது. கண்ணை மூடிக் கொண்டு இருந்த சிறுமிக்கு நீங்கள் கொடுத்த கமெண்ட் சிரிப்பை வரவழைத்தது. அந்த பாப்பா மிகவும் அழகாக இருக்கிறார். நீங்கள் அவ்வாறு புகைப்படங்கள் எடுப்பதினால்தானே எங்கள் கண்ணுக்கு விருந்தாகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  4. அத்தனையும் அழகு.. அருமை..

    ஆனலும் அந்த தேங்காய் உடையல்!??????...

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  5. அத்தனை படங்களும் மிக அழகு.
    கவிதைகளை முகநூலில் படித்தேன்.
    ஆதியும் கவிதை எழுதி இருந்தார்களே!
    சோப்பு குமிழிக்கு என்று நினைக்கிறேன்.
    அது அடுத்து இடம்பெறுமோ?

    ரிஷபன் கவிதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அவரும் ஒரு சில படங்களுக்கு எழுதி இருக்கிறார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  6. தலையில் தேகாய் உடைக்கும்படத்துக்கு
    /நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
    நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்
    தன் துயர்களுக்குக் காரணம்கடவுள் என்பார்
    கடந்தஜென்மக்கர்மா என்பார்
    பரிகாரம் என்பார் தலையில் தேங்காய் உடைத்திடுவார்
    அலகு குத்திடுவார் அந்தணன் உண்ட இலையில்
    புர்ண்டெழுவார் தானாய் சிந்தனை என்பாதே இல்லாதார்
    எண்ணங்களில் எண்ணிலா நோயுடையார்
    இவர் ஏது கூறினும் பொருளறியார்-இவர்
    சிந்தையில் உரைக்க இவர் வணங்கும்
    தெய்வமே வந்தால்தான் ஒருக்கால் சீர்படுமோ.? ( நெஞ்சு )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை நன்றாக இருக்கிறது.

      அவரவருக்கு அவரவர் நம்பிக்கை. அதில் நாம் எப்படித் தலையிட....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  7. புகைப்படங்கள் அழகு.குறிப்பாக,கண்களை மூடிக் கொண்டிருக்கும் சிறுமி, புன்னகைக்கும் சிறுவர்கள். ரிஷபன் சரி கவிதையை தனியாக சொல்ல வேண்டுமா என்ன?

    கண்ணை திறந்து வை மகளே!
    மூடிக்கொண்டு ஒரு நொடியில்
    சாற்றி விட்டார் நாமத்தை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'மூடிக்கொண்ட..' என்று வாசிக்கவும்.

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
    3. உங்கள் கவிதை வரிகள் சிறப்பு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  8. புகைப்படங்கள் தெளிவாக அழகாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. உங்களின் புகைப்பட ரசனைக்குப் பாராட்டுகள். அந்த ரசனை காரணமாகத்தான், தஞ்சாவூர் பெரிய கோயிலில் நானும் திரு கரந்தை ஜெயக்குமாரும் உங்களைச் சந்தித்தபோது, அவர் உங்களிடம் எங்களை புகைப்படம் எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். புகைப்படக்கருவியைப் பாராட்டுவதா? உங்களைப் பாராட்டுவதா? கலை நுட்பத்தைப் பாராட்டுவதா? அப்பப்பா.... தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா, உங்கள் இருவரையும் சந்தித்த போது எடுத்த படங்களை WhatsApp மூலம் உங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன் - நீங்கள் இன்னும் பார்க்கவில்லை போலும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  11. படம் பிடித்த தருணங்களை மிக அழகாக்கி இருக்கிறீர்கள் சகோ... பாராட்டுக்கள்!!
    கவிதைக்கு கால அளவு உண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது எழுதி அனுப்பி வைக்கலாம். உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு
  12. படங்கள் அத்தனையும் அழகு.

    கீதா: படங்களுடன் ரிஷபன் அண்ணாவின் கவிதை அருமை. அந்தக் கண் மூடிய பாப்பா அழகோ அழகு!

    அந்த ஃபோட்டோவைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது இதுதான்....


    கண் இமை திறந்து
    இவ்வுலகைப் பார்ப்பதற்குள்
    அந்த ஒரு நிமிடமேனும்
    மகிழ்வாய் இருந்திடு பாப்பா!!
    திறந்த பின்
    மனிதரைப் பார்த்திடாமல்
    இவ்வுலகின் அழகை மட்டும்
    ரசித்திடு பாப்பா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி. கவிதை நன்று.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....