தொகுப்புகள்
▼
வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018
வியாழன், 30 ஆகஸ்ட், 2018
புதன், 29 ஆகஸ்ட், 2018
செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018
திங்கள், 27 ஆகஸ்ட், 2018
ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018
சனி, 25 ஆகஸ்ட், 2018
வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018
வியாழன், 23 ஆகஸ்ட், 2018
புதன், 22 ஆகஸ்ட், 2018
செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018
திங்கள், 20 ஆகஸ்ட், 2018
ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018
சனி, 18 ஆகஸ்ட், 2018
வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018
வியாழன், 16 ஆகஸ்ட், 2018
புதன், 15 ஆகஸ்ட், 2018
செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018
திங்கள், 13 ஆகஸ்ட், 2018
ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018
சனி, 11 ஆகஸ்ட், 2018
வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018
வியாழன், 9 ஆகஸ்ட், 2018
சாப்பிட வாங்க – காஞ்சிபுரம் இட்லி
காஞ்சிபுரம் இட்லி உலக ப்ரசித்திப்
பெற்றது. பெருமாளுக்கு அன்றாடம் பூக்குடலையில் செய்து நிவேதனம் செய்வார்களாம். இதுவரை
காஞ்சிபுரத்துக்கும் சென்றதில்லை, காஞ்சிபுரம் இட்லியும் ருசித்ததில்லை! ஆனால் தெரிந்த
ஒரு மாமியிடமிருந்தும், இணையத்தில் பார்த்தும் கற்றுக் கொண்டு இன்று செய்தாச்சு.
பூக்குடலையிலும், விறகு அடுப்பிலும்
செய்து பெருமாளுக்கும் அர்பணிப்பதால் அதன் சுவை கூடுதலாக இருக்கும்.
நான் எனக்குத் தெரிந்த முறையில் செய்துள்ளேன்.
செய்முறையும் மிகவும் எளிது. சுவையும் அபாரம். நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் முயற்சி
செய்து பார்க்கலாம்.
செய்முறை:-
பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து மூன்றும்
சம அளவில் எடுத்து ஊறவைத்து அரைக்கவும். கொஞ்சம் ரவை பதத்தில் அரைத்து எடுக்கவும்.
உப்பு போட்டு கரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.
மாவில் சுக்குப் பொடி 1 ஸ்பூன் அளவு
சேர்க்கவும். சிறிதளவு நெய்யில் மிளகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து
பொரிந்ததும் மாவில் கொட்டவும். கலந்து இட்லி தட்டிலோ, கிண்ணங்களிலோ 20 நிமிடம் ஆவியில்
வைத்து எடுக்கவும். சட்னி, சாம்பார் மற்றும் மிளகாய்ப்பொடியுடன் பரிமாறலாம்.
விரைவில் வேறு ஒரு பதிவில் மீண்டும்
ச[சி]ந்திப்போம்….
நட்புடன்
ஆதி வெங்கட்
புதன், 8 ஆகஸ்ட், 2018
செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018
திங்கள், 6 ஆகஸ்ட், 2018
ராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் –ஃபதே சாகர் ஏரி – ஸ்பீட் போட் பயணம்
ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 14
இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது
ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது.
அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
ஜக்தீஷ் மந்திர், Gகங்gகௌர் gகாட்
ஆகிய இடங்களைப் பார்த்த பிறகு இரண்டு ஷேர் ஆட்டோக்களில் எங்கள் வாகனத்துடன்
ஓட்டுனர் ஜோதி இருந்த இடத்திற்குச் சென்று சேர்ந்தோம். அப்போதே மாலை நேரம்
ஆகியிருந்தது. அதன் பிறகு எங்கே செல்ல வேண்டும் எனக் கேட்க, உதய்பூர் நண்பர்
கஜேந்திரா அவர்கள் பிச்சோலா ஏரியில் நீங்கள் படகுச் சவாரி செய்யவில்லையே அதனால்
உதய்பூர் நகரின் இன்னுமொரு ஏரியான ஃபதேசாகரில் படகுப் பயணம் செய்யலாம் எனச்
சொன்னார். ஏரியைச் சுற்றி ஒரு வழிப்பாதை செல்வதில் வண்டியில் போகலாம் நன்றாக
இருக்கும் என்று சொல்ல, சரி போகலாம் என அவரையும் அவர் நண்பரையும் அழைத்தோம்.
ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018
கதம்பம் – புரியாத புதிர் – கத்திக்கல்ல – கீகீ சேலஞ்ச்
ஒண்ணும் கத்திக்கல்ல…
அலுவலகத்தில் இருக்கும் Coffee
Board உழைப்பாளி பற்றி ஏற்கனவே ஒரு முறை எழுதி இருக்கிறேன். எந்தப் பதிவில்
என்பதைத் தேட வேண்டும் – நிறைய பதிவுகள் எழுதினால் இது ஒரு பிரச்சனை! :) சமீபத்தில்
எனது பக்கத்தில் எழுதிய முந்தைய பதிவுகளைப் படித்த போது எனக்கே பிரமிப்பாக
இருந்தது – இவ்வளவு எழுதி இருக்கிறேனா என! சரி விஷயத்துக்கு – காஃபி போர்ட்
உழைப்பாளிக்கு வருவோம்.