இன்னும் இரண்டே நாளில் கோகுலாஷ்டமி
வரப்போகிறது என்கிற நிலையில் உமாவுக்கு அவள் அம்மாவின் ஞாபகமாகவே இருந்தது.
மகள் தியா
பள்ளியிலிருந்து வந்ததும் வராததுமாக இந்தப் பண்டிகையின் சிறப்புக்களைப் பற்றி கேட்க கண்ணனின் லீலைகளையும், விஷமங்களையும் பற்றி அவள்
சொல்லிக் கொண்டிருக்கவும், கணவன் அலுவலகத்திலிருந்து வரவும் சரியாக இருந்தது. கோகுலாஷ்டமிக்கு என்னென்ன பட்சணங்களும் நைவேத்தியங்களும்
செய்வார்கள் என்று கேட்ட தியாவிடம் சீடை, தட்டை போன்ற பட்சணங்களும், கண்ணனுக்கு மிகவும்
பிடித்த அவலில் பாயசமும், பால், தயிர் வெண்ணெய் என்று விவரித்துக் கொண்டிருந்தாள்.
”அம்மா நீ என்னென்ன பண்ணப் போற?” என்று
தியா கேட்டு முடிப்பதற்குள் ”அதெல்லாம் ஒன்றும் இழுத்து விட்டுக் கொள்ளாதே? கிருஷ்ணன் உன்னிடம் சீடை, முறுக்கு பண்ணித்தா என்று
கேட்டாரா? இதெல்லாம் மனிதர்களா வகுத்துக் கொண்ட நியதி. விதவிதமாக சாப்பிட இப்படி ஒரு
ஏற்பாடு. உன் திருப்திக்கு வேண்டுமென்றால் பாலையோ, பழத்தையோ நைவேத்தியம் செய்து விடு”
என்றான் கணேசன். அவன் எப்பவுமே இப்படித் தான்.
விஷப்பரிட்சை எதுக்கு என்று நினைத்திருக்கலாம்
அல்லது மனைவியை கஷ்டப்பட வைக்க வேண்டாமென எண்ணியிருக்கலாம் என்று தனக்குள் பேசிக் கொண்ட
உமா அடுத்து தனது அம்மாவுடன் கொண்டாடிய கோகுலாஷ்டமி பற்றிய நினைவுகளில் மூழ்கிப்போனாள்.
அம்மா நினைத்தால் இரண்டே மணியில் ஐம்பது
பேருக்கு சமையல் செய்து முடிப்பாள். கைமணம் அற்புதமாக இருக்கும். ஆயிரம் கஷ்டம் இருந்தாலும்
பண்டிகைகளில் குறை வைத்ததே இல்லை. குழந்தைகள் பத்து நாட்கள் வைத்திருந்து சாப்பிடட்டுமே
என்று பார்த்துப் பார்த்து செய்வாள். கோகுலாஷ்டமி வந்து விட்டால் வெல்ல சீடை, உப்பு
சீடை, தேன்குழல், தட்டை, இன்னும் பிறவும் இருக்கும். ஒவ்வொன்றும் அரை டின் அளவுக்காகவாவது
செய்வாள். குழந்தைகளான என்னையும், தம்பியையும் உதவிக்கு அழைத்துக் கொள்வாள். மாவு தயார்
செய்து விட்டு சீடைக்கு அழுத்தி உருட்டி எண்ணையில் போட்டால் முகத்தில் வெடித்துடும்கறதாலே
மாவை எடுத்து விரல்களின் இடையில் அழுத்தாமல் உருட்ட வேண்டும் என்பாள். நாங்களும் அம்மாவுக்கு
ஒன்றும் ஆயிடக்கூடாதே என்று பவ்யமாக உருட்டி போடுவோம். இதுவரை ஒருநாளும் சீடையோ மற்ற
பட்சணங்களோ நன்றாக வரவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஆயிரம் குறை சொல்லும் பாட்டியும் (அப்பாவின்
அம்மா) ”உன் பொண்டாட்டி செய்யும் தட்டை நன்றாக இருக்கும்” என்பார். அம்மாவின் கைப் பக்குவத்தில் சரியான உப்பு காரத்துடன்
கரகரவென தட்டை அபாரமாக இருக்கும். பண்டிகைக்கு மட்டும் தான் செய்வாளா என்றால் இல்லை.
வெளியில் எங்காவது செல்லும் போதோ, கோவிலிலோ பார்ப்பவர்கள் யாராவது கர்ப்பமாக இருப்பதாகக்
கூறினால் அம்மா உடனே மாவு அரைத்து தட்டை தட்டி, ஒரு பாட்டில் புளிக்காய்ச்சல் செய்து,
ஒரு இனிப்புடன், இரண்டு முழம் பூவுடனும் கிளம்பி விடுவார்.
உமா கர்ப்பமாக இருந்த போது இந்த பாக்கியம்
கிடைக்கவில்லை. புற்றுநோயால் அவதிப்பட்டு ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டிருந்த அம்மா
உமாவின் திருமணத்துக்குப்பின் அவளுக்கு நல்வாழ்க்கை கிடைத்துவிட்ட திருப்தியுடன் அடுத்த
வருடமே இறந்து விட்டாள். அடுத்த மாதமே உமா கர்ப்பமானாள். அம்மாவின் நட்சத்திரத்திலேயே
பிறந்த தியாவை அம்மாவின் மறு உருவமாகவே எண்ணினாள். திடீரென யாரோ கையை பிடித்து உலுக்கும்
உணர்வு ஏற்பட்டதும் பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டாள்.
இன்று பண்டிகைகள் வந்தாலே பெரும்பாலானவர்கள்
கடையில் வாங்கி நைவேத்தியம் செய்து விடுகின்றனர். செய்ய செய்யத் தானே கைப்பழக்கம் வரும்.
ஒரு தடவை சொதப்பினாலும் மறு தடவை சுமாராகவாவது வரலாம். நாம் செய்தோம் என்ற திருப்தியும்,
கைக்கு அடக்கமான செலவுடனும், சுகாதாரமாகவும் இருக்கும். நம்முடைய கலாச்சாரத்தையும்
பாரம்பரியத்தையும் எக்காரணத்தைக் கொண்டும் விட்டு விடக் கூடாது. ஆயிரந்தான் உலகம் முன்னேறினாலும்
கடவுளுக்கு பீட்ஸாவையும் பர்கரையுமா நைவேத்தியம் செய்ய முடியும்? அம்மா எத்தனையோ விதமான
பட்சணங்கள் செய்தார்கள். இன்று நாம் நாலு விதமாவது செய்தால்தான் நாளை நமது மகள் அவள்
காலத்தில் இரண்டு விதமாவது செய்வாள். அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுவது என்னுடைய தலையாய
கடமை அல்லவா?
முடிவெடுத்தவளாய் சமையலறைக்குச் சென்று
பட்சணங்களுக்கு வேண்டிய பொருட்களுக்கான பட்டியலை எழுதத் துவங்கினாள்.
மீண்டும் சந்திப்போம்!
ஆதி வெங்கட்.
அம்மா உங்களை என்றென்றும் வழி நடத்துவார். அவரின் ஆசிகள் உங்களுடனேயே இருக்கும்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
இனிய காலை வணக்கம் ஆதி, வெங்கட்ஜி
பதிலளிநீக்குஆ!! கீதாக்கா ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஉ...
அட ஆதி கதையா சூப்பர் வரேன்...இருங்க...இன்று தை அமாவாசை ஸோ வேலை முடிச்சுட்டு வரேன்..
கீதா
இனிய காலை வணக்கம் கீதாஜி.
நீக்குஆமாம். இன்னிக்கு கீதாம்மா ஃபர்ஸ்ட்டூ... சீக்கிரம் காப்பி ஆத்திட்டாங்க போல....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
ஆமாம், மாமா சீக்கிரம் எழுந்துண்டார் எனில் சீக்கிரம் காஃபி ஆத்திடுவோம். இல்லைனா டிகாக்ஷன் போட்டு வைச்சுட்டுக் கஞ்சியும் போட்டு முடிச்சுட்டு நான் போய்ப் படுத்துடுவேன். அவர் எழுந்ததும் காஃபி ஆத்துவோம். :))))
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
நீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குகதை நன்றாக இருந்தது. நம் பழைய பாரம்பரியங்களை விட்டுத் தர கூடாது. நம் சந்ததிகளும் அப்போதுதான் அதை விடாமல் பின்பற்றுவார்கள் என உணர்த்திய கதை. நம் அம்மாக்களின் வாழ்த்துக்கள் என்றென்றும் நம்முடன் இருக்கும். ஏற்கனவே தங்கள் பதிவில் கதையை படித்துள்ளேன் என நினைக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குஇந்த கான்சப்டை நல்லாச் சொல்லியிருக்கீங்க. சோம்பேறிகள்தாம் கடவுள் இதைக் கேட்டாரா அதைக் கேட்டாரா எனப் பேசுவார்கள். பாரம்பர்யத்தை பெண்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்தணும்.
பதிலளிநீக்குஎன் மனைவி ஒரு நோட்டில் எந்தப் பண்டிகைக்கு என்ன செய்யணும்னு டீடெயிலா திருமணம் ஆவதற்கு முன்னால் எழுதிவச்சிருந்தா. நான்தான் ஏன் கஷ்டப்படணும், 50 ரூபாயைக் கடைக்கார்ரிடம் கொடுத்தால் எல்லா பட்சணங்களும் வீட்டுக்கு ஓடிவந்துவிடும் எனச் சொல்வேன். அவளுக்கு, தான் செய்யணும் என்ற நினைப்பு.
இதன் அருமையை நான் உணர்ந்தேன் (என் பெண் சில பாரம்பர்யத்தை அவளாவே எங்கிட்ட சொல்லும்போது). நான் சொன்னதைக் கேட்டு மனைவி சும்மா இருந்திருந்தால் என் பெண்ணுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?
வழிவழியாக இப்படி விஷயங்களை அடுத்த தலைமுறைக்க்க் கொண்டு சேர்ப்பது நல்ல விஷயம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
காலை வணக்கம். ஆம், பாரம்பரியங்கள் காக்கப்பட வேண்டும். தலைமுறைகளுக்கு கடத்தப்பட வேண்டும்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
எதிர்வரும் தலைமுறைக்கு வழிகாட்டுதல் அவசியமான ஒன்று
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஉண்மைதான். அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குதொடர வேண்டிய கடமை...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குநல்ல கதை ஆதி. அம்மாவின் நினைவுகள் இப்படித்தான் அடிக்கடி நினைவுக்கு வரும்...உங்கள் கதை வாசித்ததும் எனக்கும் அம்மாவின் நினைவு...இன்று எபி யில் பானுக்காவின் கொ தொ பதிவு உங்கள் கதை எல்லாமே எனக்கு என் அம்மாவின் நினைவை அதிகமாக்கியது...
பதிலளிநீக்குகீதா
இன்று எல்லோருக்கும் அவரவர் அம்மா நினைவு! எனக்கும் தான். ஆனால் எப்போதும்! தினம் ஒரு முறையாவது நினைவு வந்துடும். :(
நீக்குஅம்மாவின் நினைவு.... இந்தப் பதிவு நிறைய பேருக்கு அம்மாவின் நினைவு வந்திருக்கும்......
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
நீக்குஅடுத்த தலைமுறைகளுக்கு சொல்லவேண்டியது நமது கடமையே..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குபெரியோரின் அன்பு என்றும் துணை நிற்கும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் சையா.
நீக்குநம்முடைய பண்டிகைகளைப் பற்றி அடுத்த தலைமுறையினருக்கு கண்டிப்பாக சொல்லிக் கொடுக்க வேண்டும்
பதிலளிநீக்குகதை மிக அருமை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன் ஜி.
நீக்குபீட்சா கண்ணனும்சாப்பிட்டுப்பாக்கட்டுமே
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குஎனக்கும் கோகுலாஷ்டமி என்றால் என் அம்மாவின் நினைவு வரும். இதைப்பற்றி ஒரு பதிவும் எழுதியிருக்கிறேன்.
பதிலளிநீக்குநாம் செய்யாமல் விட்டு விட்டால் பாரம்பரிய சங்கிலி அறுந்து விடும்வி என்று அழகாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடரட்டும் பாரம்பரியம் மட்டுமல்ல, உங்கள் எழுத்தும்👍
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.
நீக்கு//நாம் நாலு விதமாவது செய்தால்தான் நாளை நமது மகள் அவள் காலத்தில் இரண்டு விதமாவது செய்வாள். அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுவது என்னுடைய தலையாய கடமை அல்லவா?//
பதிலளிநீக்குஉண்மை.
கதை மிக அருமை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குநல்ல கதை. அம்மா செய்வது உமாவுக்கு மனதில் வந்தது போல் இப்போது உமா பின்பற்றுவது தியாவுக்கு வந்துவிடும்....
பதிலளிநீக்குதுளசிதரன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.
நீக்குவாழ்வியல் முறையை அடுத்த தலைமுறைக்கு கடத்தாததன் விளைவைதான் இப்ப நான் அறுவடை செஞ்சுக்கிட்டிருக்கோம்.
பதிலளிநீக்குஉடை, அறிவியல் வளர்ச்சி, மின்னனு சாதனங்களின் பயன்பாட்டுல எதும் தலையிடுவதில்லை. ஆனா, பண்டிகை, மரியாதை, பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் முறை விசயத்தில் பழசை மறக்கக்கூடாதுன்னு சொல்லித்தர நாம மறக்கக்கூடாது. என் பிள்ளைகளுக்கு அப்பிடிதான் சொல்லி தந்திருக்கோம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நீக்கு//இன்று நாம் நாலு விதமாவது செய்தால்தான் நாளை நமது மகள் அவள் காலத்தில் இரண்டு விதமாவது செய்வாள். அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுவது என்னுடைய தலையாய கடமை அல்லவா?//
பதிலளிநீக்குசூப்பரா சொல்லியிருக்கீங்க .நானும் மகளுக்கு 90% நமது உணவுகளையே பழக்கப்படுத்தி வச்சிருக்கேன் .நீங்க சீடை செய்றது போல் நாங்க முள் கரண்டியில் உருட்டி கல் கல் செய்வோம் .அம்மாவுக்கு பண்டிகை நாட்களில் நானும் தங்கையும் உருட்டி தருவோம் .இப்போ மகளை ட்ரெயின் செஞ்சு வச்சிருக்கேன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சல்.
பதிலளிநீக்கு