தொகுப்புகள்

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

ஷிம்லா ஸ்பெஷல் – மின்புத்தக வெளியீடு


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, பற்றிய நல்லதொரு சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

எல்லா குழந்தைகளுக்குமான தேவை ஒரு சிறிய உதவி மட்டுமே, ஒரு சிறிய நம்பிக்கை மற்றும் அவர்கள் மேல் நம்பிக்கை கொள்ளும் சிலர் – மேஜிக் ஜான்சன்.




சென்ற செவ்வாய் அன்று ராஜாக்கள் மாநிலம் என்ற தலைப்பில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புஷ்கர், உதய்பூர் மற்றும் ஜோத்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்களைத் தொகுத்து அமேசான் தளத்தில் மின்புத்தகமாக வெளியிட்ட தகவலை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம் இந்தப் பதிவு படிக்காதவர்கள் சுட்டி வழி சென்று அங்கே படித்து மேலும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இன்றைக்கு இன்னுமொரு மின்புத்தக வெளியீடு பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்னர் ஒரு செய்தியைச் சொல்லி விடுகிறேன்.  இந்த ராஜாக்கள்மாநிலம் கிண்டில் புத்தகத்தினை இன்று மதியம் 12.30 மணியிலிருந்து 25-ஆம் தேதி வரை அமேசான் தளத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஐந்து நாட்களுக்கு மட்டும் இந்த இலவச தரவிறக்கம் செய்யும் வாய்ப்பு.  அமேசான் கணக்கு இருந்தால் கிண்டிலிலோ அலைபேசி/கணினி ஆகியவற்றில் வாசிக்கலாம். 

முதலிலும் சில பயணக் கட்டுரைகளை தொகுத்து www.freetamilebooks.com தளம் வாயிலாக சில மின்புத்தகங்களும் வெளி வந்ததுண்டு. இதுவரை வெளிவந்த புத்தகங்களின் சுட்டி எனது வலைப்பூவில் வலப் பக்க ஓரத்தில் ”தொகுப்புகள்” என்ற தலைப்பின் கீழே மின்புத்தகங்கள் என்ற ஒரு பக்கம் உண்டு. அந்தப் பக்கத்தினைச் சுட்டினால் இது வரை வெளிவந்த எனது மின்புத்தகங்கள் அனைத்திற்குமான சுட்டிகள் உண்டு. படிக்காதவர்கள் அங்கே எனது மின்னூல்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.  இப்போது இன்னும் ஒரு மின்புத்தகம். அமேசான் தளம் வாயிலாக,  கிண்டில் பதிப்பாக வெளி வந்திருக்கிறது. ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான ஷிம்லா மற்றும் அதன் அருகே இருக்கும் குஃப்ரி, நார்க்கண்டா பகுதிகளுக்குச் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்களைத் தொகுத்துஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன்.  புத்தகத்தினை தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே...


கிண்டில் அன்லிமிட்டட் கணக்கு வைத்திருப்பவர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து படிக்க முடியும். இந்த விடுமுறை நாட்களில் செய்த பணிகளில் இந்த மின்புத்தக தரவேற்றமும் ஒன்று.  இன்னும் இருக்கும் நாட்களில் முடிந்தால் வேறு சில பயணத் தொகுப்புகளும் மின்னூலாக வெளியிடலாம் என்ற எண்ணம் உண்டு.  இந்தக் கட்டுரைகளை மின்புத்தகமாக தரவிறக்கம் செய்து வாசிக்க விரும்புபவர்கள் தங்களது கிண்டிலிலோ அல்லது அலைபேசியிலோ/ கணினியிலோ தரவிறக்கம் செய்து வாசிக்க முடியும்.  அமேசானில் கணக்கு வைத்திருந்தால் போதும்.  கிண்டில் அன்லிமிட்டட் கணக்கு இல்லாதவர்கள் பணம் செலுத்தி படிக்க வேண்டியிருக்கும்.  இலவசமாக வெளியிட இங்கே வாய்ப்பில்லை – சில நாட்கள் மட்டும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளும்படிச் செய்யும் Promotions வழிகள் உண்டு. அதை செய்த பிறகும் இங்கே தகவல் தருகிறேன். 

தங்கள் தொடர்ந்த ஆதரவிற்கும் வலைப்பூவை வாசித்து உங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்கும் மிக்க நன்றி.  இந்த மின்புத்தகம் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.  தொடர்ந்து சந்திப்போம்.

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி.

32 கருத்துகள்:

  1. பாராட்டுகளும், வாழ்த்துகளும் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. மனம் நிறைந்த வாழ்த்துகள் ஜி
    மேலும் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  4. வாழ்த்துகள். டவுன் லோட் பண்ணிட்டேன். படிச்சிட்டு எழுதறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி கார்த்திக்.

      படித்து விட்டு உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.

      நீக்கு
  5. 11 புத்தகங்களையும் தரவிரக்கிவிட்டேன். எங்கள் அணுபநப்பதிவு விரைவில் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தகங்கள் தரவிறக்கம் செய்தமைக்கு நன்றி அரவிந்த். முடிந்தபோது உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

      நீக்கு
  6. ஆவணப்படுத்துதல் சிறப்பு... பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. ஓ புத்தகமாக வெளி வந்துவிட்டதோ.. வாழ்த்துக்கள் வெங்கட் வாழ்த்துக்கள்..

    எங்காவது பயணம் போக நினைச்சால் ஆராவது, உங்கள் புளொக்கைத்தூக்கிக் கையில கொடுத்திடலாம் என நினைச்சிருந்தேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மின்புத்தகமாக வெளிவந்திருக்கிறது அதிரா.

      தங்களது வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.

      நீக்கு
  8. வாழ்த்துகள் வெங்கட். நீண்ட நாட்கள் கழித்து உங்கள் பதிவுக்கு வந்தால் புத்தக வெளியீட்டுத் தகவல். மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை - மகிழ்ச்சி கீதாம்மா.

      நீக்கு
  9. வாழ்த்துகள் வெங்கட்ஜி! நல்ல விஷயம் ஜி நீங்கள் சென்ற இடங்களை எல்லாம் பயணக்கட்டுரைகளாக வெளியிடுவது நல்ல பயனுள்ளதாக இருக்கும் பலருக்கும். ஏன் உங்களுக்குமே பின்னர் பார்த்துக் கொள்ள...மனதை உற்சாகப் படுத்திக் கொள்ள...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி கீதாஜி.

      சிலருக்காவது இந்த மின்புத்தகங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கை தான்.

      நீக்கு
  10. பாராட்டுக்கள் , வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  12. வாழ்த்துகள் அண்ணா..நூலாக வேண்டிய அருமையான படங்களும் தகவல்களும் உங்களுடையது! ஒவ்வொன்றாகப் படித்துக் கருத்திடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி கிரேஸ். முடிந்தபோது புத்தகம் பற்றிய உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள்/எழுதுங்கள்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி மாதேவி.

      நீக்கு
  14. பாராட்டுகளும் ... வாழ்த்துக்களும் ...என்றென்றும் !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சிவா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....