தொகுப்புகள்

வியாழன், 7 மே, 2020

இறுதி இலை - முகநூல் இற்றை – முரளி


நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

ஒன்றை பெற வேண்டும் என நினைத்துவிட்டால் இறுதி வரைக்கும் போராடு… விளைவுகளையோ, அதில் ஏற்படும் தோல்வி பற்றியோ கூட கவலைப்படாதே - விவேகானந்தர்

இன்றைக்கு எனது நண்பர் திரு முரளி அவர்கள் எழுதிய பதிவொன்று – உங்கள் வாசிப்பிற்கு.  இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வழிச் சொன்னால் மகிழ்ச்சியடைவேன். கீழே அவரது முகநூல் இற்றை – வெங்கட் நாகராஜ், புது தில்லி.

****

இறுதி இ(ல்)லை:



செல்வி படுக்கையில் அயர்வுற்று வீழ்ந்து கிடக்கிறாள். மூச்சு உள்செல்லவும் வெளிவரவும் கடுமையாகப் போராடுகிறது. நுரையீரலில் யாரோ கோணிப்பையை வைத்துக் கட்டியதுபோல இறுக்கத்தைக் கொடுக்கிறது. Oxygen பற்றாக்குறையால் உடல் தன் வலுவை இழந்துள்ளது. Hallucination-ஆல் வாய் தானாக அரற்றிக்கொண்டிருக்கிறது. 26 வயதில் இந்த நிலை என்பது எவரையும் கலங்கவே வைக்கும். அருகில் நின்றுகொண்டு அவள் தோழி ராதா ஆறுதலாகக் கையைப் பற்றிக்கொண்டிருக்கிறாள்.

மூன்று மாதங்கள் முன்னால் வரை காலம் நன்றாகவே சென்றுகொண்டிருந்தது. குளிர்காலம் தன்னுடன் அழையா விருந்தாளியாக pneumonia வையும் கூடவே அழைத்து வந்து விடும். சில சமயங்களில் அது வயது வித்தியாசம் பார்ப்பதில்லை. இது அந்தப் பிரதேசத்தின் சாபக்கேடு. செல்வி ஒரு ஹாஸ்பிடலில் nurse ஆகவும்,ராதா advertisement artist ஆகவும் வேலை பார்த்து வாழ்க்கையைக் கடத்தி வருகின்றனர். இருவரும் அந்தக் காலனியில் ஒரு flat ல் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.

தினமும், ஒரு டாக்டர் வந்து மருத்துவம் பார்த்து விட்டு செல்வார். அன்றும் வந்திருந்தார். செல்வியை check செய்து விட்டு ராதாவைத் தனியாக அழைத்து செல்வி பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று ()கவலை அளித்தார். மேலும் அவர், மருத்துவர்/மருந்து/நோயாளி ஆகிய மூவரும் கூட்டாக செயல் பட்டால்தான் result நன்றாக வரும் என்றும், இங்கே செல்வி ஏற்கனவே தன் நம்பிக்கையை இழந்து விட்டதால் பிழைப்பதற்கான வாய்ப்பு குறைந்து வருவதாகக் கூறினார். ராதாவிடம், செல்விக்கு அறிவுரை கூறுமாறும் அறிவுறுத்து விட்டுக் கிளம்பினார்.

ராதா செல்வியைச் சாய்வாகப் படுக்க வைத்து விட்டு மறுநாள் deliver செய்ய வேண்டிய ஒரு advertisement painting ஆரம்பித்தாள். பின்னால் இருந்து செல்வி முணுமுணுக்கும் மெல்லிய சத்தம் கேட்டது. அருகில் சென்று ராதா காது கொடுத்தாள். செல்வி பின்னோக்கிய counting செய்து கொண்டிருந்தாள். "என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" - ராதா புதிராக வினவினாள். செல்வி ஜன்னல் வழியாக வெற்றுப் பார்வை பார்த்து கொண்டே, "அங்கே மரத்தில் மீதம் உள்ள ஆலிலைகளை எண்ணிக்கொண்டிருக்கிறேன். கடைசி இலை வீழும்போது என் உயிரும் உதிர்ந்து விடும் என உலர்ந்து கூறினாள். அது ஒரு சிறு பட்ட ஆலமரம். அந்தக் காலனியின் compound wall ஒட்டிய மேலும் வளர்வதற்கு வழியற்ற சிறு மரம். "முட்டாள் தனமாகப் பேசாதே" என்று ராதா செல்வியைக் கடிந்து கொண்டு திரைச்சீலையை விருட்டென்று இழுத்து மூடுகிறாள். "நான் சென்று கண்ணன் சாரை அழைத்து வருகிறேன்" என்று கூறி வீட்டுக் கீழே செல்கிறாள்.

கண்ணன் என்பவர் வயது 60 ஐக் கடந்தவர். அந்தக் காலனியில் கீழ் flat ல் பல வருடங்களாகக் குடியிருப்பவர். ஓவியக்கலையில் பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆவலில் நகரம் நோக்கி வந்தவர். வாழ்க்கையில் பல values கொண்டவர் (சில ஓவியர்கள் போன்று கடவுளர்களைத் தாறுமாறாக வரைந்திருந்தாலாவது ஒரு சிலரின் ஆதரவு கிட்டி புகழ் பெற்றிருக்க முடியும்). ஆனால், அவர் values அதற்கு இடமளிக்கவில்லை. So, he is still a failed artist. கிடைத்த சொற்ப வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டும், சில advertisement-களுக்கு model ஆகப் pose கொடுத்துக்கொண்டும் ஜீவனம் செய்து வருகிறார். நான்கு வருடங்களாக இந்தத் தோழிகளைத் தன் பெண்கள் போல் பாவித்து வருகிறார். இப்பொழுது அவரை அழைத்து வருவதாகத்தான் கூறி விட்டு ராதா கீழே சென்றிருக்கிறாள்.

சிறிது நேரத்தில் ராதா, கண்ணன் அவர்களுடன் மேலே வருகிறாள். அவரிடத்தும் செல்வியின், இலை வீழ்வதுடன் தன் வாழ்க்கையும் முடிந்து விடும் என்ற, விபரீதமான கற்பனையைக் கூறி அவளுக்கு அறிவுறுத்துமாறு வேண்டுகிறாள். அவர், ஒரு தந்தையின் கண்டிப்புடன் செல்வியை அதட்டி விட்டு, காலை வந்து பார்ப்பதாகவும் அது வரை வேறு நினைவின்றி கண் மூடி உறங்குமாறும் அறிவுறுத்தி விட்டு சென்று விடுவிடுகிறார்.

அன்று இரவு கடும் மழை. "சார்ங்கமுதைத்த சரமழை" என்று ஆண்டாள் பாடியது போன்ற கல் துளைக்கும் மழை. போதாக்குறைக்கு காற்று வேறு சுழன்று சுழன்று அடித்தது. குளிரும் கரடி போல் இறுக்குகிறது. ராதாவிற்கு கவலை பீடித்தது. ஒற்றை ஆலிலை தன் பழுப்பு காம்பில் ஊசலாடிக்கொண்டிருந்தது. கண்ணன் சாரின் பேச்சைக்கேட்டு செல்வி கண்மூடிப் படுத்திருக்கிறாள். ஜன்னல் வழியாகப் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்கவில்லை.

காலை, கீழ்வானம் வெள்ளென்று வெளுத்தது. செல்வி ராதாவைப் பார்த்து ஜன்னலைத் திறக்குமாறு வேண்டுகிறாள். படபடக்கும் இதயத்தோடு ராதா ஜன்னலைத் திறக்கிறாள். என்ன ஆச்சர்யம்! கடைசி இலை கீழே விழாமல் இளந்தென்றலில் மெதுவாகத் திரும்பி அவளை நோக்கி சிரிக்கிறது. செல்வியின் முகம் தெளிவாகிறது. எழுந்து உட்கார்ந்து. ரதாவைப் பார்த்து "இட்லி தருகிறாயா?" என்கிறாள். ராதாவின் நுரையீரல் நன்றாக சுவாசிக்கத் தொடங்குகிறது. "கருவில் உருப்பெற்று அண்ட வெளியில் வீழ்ந்த உயிர்க்கு, வளி எப்போது வெளியேறும் என்று இறைவன் வைத்த சித்தம், இதை நினை மனமே நித்தம்" என்று முரளி சித்தர் கூறியது போல வாழ்க்கையின் எல்லை நம் கையில் இல்லை.

வழக்கம் போல் டாக்டர் அன்றும் வருகிறார், check செய்கிறார், வியக்கிறார். செல்வி கட்டாயம் பிழைத்த விடுவாள் என்கிறார். போகும் போக்கில் இன்னொரு விஷயமும் சொல்கிறார். கண்ணன் அவர்கள் Pneumonia வால் பாதிக்கப்பட்டு மருத்துத்துவமனையில் admit செய்யப்பட்டிருக்கிறார். அட்மிட் செய்யப்பட போது அவர் வீட்டில் நனைத்த உடையுடன் நடுங்கிக்கொண்டு helpless ஆக இருந்திருக்கிறார். அவர் வீட்டிலிருந்து compound wall வரை இழுத்துச் செல்லப்பட்ட ஏணியும், பச்சை மற்றும் மஞ்சள் paint அங்கே கண்டெடுக்கப்பட்டன.

Compound wall இல் கண்ணனின் தலை சிறந்த படைப்பு. ஆலிலையில் கண்ணன் வாழ்கிறார்!!!

பின்குறிப்பு: New ideas are old ideas that are forgotten & Creativity is all about hiding the original - இந்தப் பழமொழிகள் என்னை வெகுவாகக் கவர்ந்தவை. இதைத்தான் இந்திய சினிமாவில் கதாசிரியர்கள் பயன்படுத்துவார்கள். இதற்கு inspiration என்று English-ஐத் துணைக்கொண்டு விளக்கம் அளிப்பார்கள். நான் அவ்வாறு கதைக்க விரும்பவில்லை. இது ஒரு English short story யின் சுட்ட கதை. கண்டுபிடிப்பவர்களுக்கு 100 ரூபாய் money order செய்யப்படும்.

நட்புடன்,

முரளி
சென்னை

34 கருத்துகள்:

  1. ஆம், இதை ஆங்கிலக்கதையின் தமிழாக்கமாகப் பலமுறை படித்திருக்கிறேன். யார் எழுதியது என்று நினைவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்கிலக் கதையின் தமிழாக்கம் - ஆமாம் நானும் படித்ததுண்டு - அது வேறு. ஆங்கிலத்தில் யார் எழுதியது என்பதை பின்னூட்டங்களில் சொல்லி இருக்கிறார்கள் சிலர்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சன்னல் படுக்கையில் இருந்து அழகியக்காட்சிகளை அடுத்த படுக்கையில் இருந்த ஒரு நோயாளிக்குச் சொல்லும் கதை நினைவு வந்தது..

    விவேகானந்தர் மொழி நன்று..

    நன்றி அண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விவேகானந்தர் மொழி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கிரேஸ்.

      சன்னல் படுக்கையில் இருந்து அழகிய காட்சிகளை சொல்லும் கதை - என் பக்கத்தில் கூட அதை பகிர்ந்த நினைவு.

      நீக்கு
  3. கதை வித்தியாசமாக இருக்கிறது ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை உங்களூக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  4. இக்கதை பல வகைகளிலும் நோயாளியை குணப்புத்துவதற்கு புணையப்பட்டு இருக்கிறது. மனதுக்கு நெகிழ்ச்சியை தந்த கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "குணப்படுத்துவதற்கு"

      நீக்கு
    2. ஆமாம். குணமாவது மட்டுமே இங்கே பிரதானம். உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
    3. குணப்படுத்துவதற்கு என்றே படித்தேன் கில்லர்ஜி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. இல்லை. நீங்களே சரியாக கீழே சொல்லி விட்டீர்களே! நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. ஆமாம். அதே தான். சரியான பதில் ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  7. நிச்சயம் இன்றைய சூழலில் படிக்கவேண்டிய கதை. நம் மனவலிமையே நம் உடலின் எதிர்ப்புச்சக்தியை இயர்க்கையாக பேணுவது. மிக்க நன்றி நன்பர்களே பகிர்ந்ததர்க்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய சூழலில் நம் மனவலிமையே நமக்கு அத்தியாவசியத் தேவை அரவிந்த்.

      கதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  8. கதையை விடுங்கள்! "ஒன்றை பெற வேண்டும் என நினைத்துவிட்டால் இறுதி வரைக்கும் போராடு… விளைவுகளையோ, அதில் ஏற்படும் தோல்வி பற்றியோ கூட கவலைப்படாதே" என்பதை நம்பி, முன்பொரு நாள் வீட்டில் 'ஆனியன் தோசை' வேண்டும் என்று கேட்டுவிட்டேன்.... விளைவைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?

    (பாக்கெட் தோசை மாவோ, வெங்காயமோ வீட்டில் இல்லை என்பது எனக்கு எப்படித் தெரியும்?)

    எனவே வாசகர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - ஹாஹா...

      ஆனியன் தோசை கேட்டதற்கு மோசமான விளைவாக இருந்திருக்கும் போலவே! ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது தான்.

      நீக்கு
  9. இலையில் ஓவியம் தீட்ட நானும் முயன்றதுண்டு ஓரளவு வெற்றியும் பெற்றதுண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலையில் ஓவியம் - நீங்களும் தீட்டி இருப்பது அறிந்து மகிழ்ச்சி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  10. ஆங்கிலத்தில் படிச்ச கதை. ஆனால் யார் எழுதினதுனு தெரியாது. நன்றாக இருக்கிறது. மன வலிமையைக் கொடுக்கும் கதை. இப்போதைய சூழலில் அனைவருக்கும் தேவை மனவலிமையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே ஜே.கே. பதில் சொல்லி இருக்கிறார் - The Last Leaf by O'Henry.

      இப்போதைய சூழலில் தேவை மனவலிமையே - உண்மை கீதாம்மா... உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  11. மிக அருமையான கதை. ஆல் இலையில் கண்ணன் ஓவியம் மிக அழகு.

    //ஆலிலையில் கண்ணன் வாழ்கிறார்!!!//
    செல்வியின் நம்பிக்கையை வாழவைத்துவிட்டார் கண்ணன்.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இந்தக் கதை நினைவில் இருக்கிறது. முரளிச் சித்தர்
      என்று ஒருவர் இருக்கிறாரா.
      மீண்டும் படித்ததுல் மகிழ்ச்சி நன்றி வெங்கட்.

      நீக்கு
    2. கதையும், இணையத்திலிருந்து எடுத்துப் பகிர்ந்த ஓவியமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      நீக்கு
    3. இந்தப் பதிவினை எழுதியவர் தன்னையே சித்தர் என எழுதி இருக்கிறார் மா! :) அவ்வளவு தான்.

      கதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      நீக்கு
  12. எதுவானாலும் சரி... மனதிற்கு வலிமை வேண்டும்...
    அதை நயமாகச் சோலியிருப்பது அழகு..

    ஆலிலைக் கிருஷ்ணனும் அழகு...

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமே விளையட்டும்.

      மனதிற்கு வலிமை - அதுவே இப்போதைய அத்தியாவசியத் தேவை.

      ஆலிலைக் கிருஷ்ணன் ஓவியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  13. பதில்கள்
    1. கதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி எல்.கே.

      நீக்கு
  14. இந்தக் கதை பள்ளியில் பாடமாக வந்தது. நான்டீடைலில் வந்ததா? ப்ரோஸில் வந்ததா என்று நினைவு இல்லை. தலைப்பை பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது. மிகவும் மனதை தொட்ட  கதை.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளியில் பாடமாக வந்த கதை - ஆமாம் பானும்மா...

      கதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  15. எனக்கும் இது படித்த ஞாபகம் உண்டு. மனமே மருந்து.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....