அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
WE COME WITH NOTHING, WE GO WITH NOTHING, BUT ONE GREAT THING WE CAN ACHIEVE IN OUR BEAUTIFUL LIFE IS… A LITTLE REMEMBRANCE IN SOMEONE’S MIND AND A SMALL PLACE IN SOMEONE’S HEART.
******
இந்த வாரத்தின் முதல் நாளில் எனது மின்னூல்களில் ஒன்றான “ஹனிமூன் தேசம்” என்ற மின்னூலுக்கு கிடைத்த இரண்டு விமர்சனங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. சஹானா இணைய இதழ் நடத்தி வரும் மாதாந்திர வாசிப்புப் போட்டிகளில், மார்ச் மாதத்திற்கான போட்டியில் பங்கு பெற்ற எனது இந்த மின்னூலுக்கு விமர்சனங்களை, முகநூலில் எழுதிய நண்பர்களுக்கு நன்றி.
விமர்சனம் - 1 - ஜெயா சிங்காரவேலு:
இவருடைய பயண நூல்கள் முன்பும் வாசித்து இருக்கிறேன். கொஞ்சம் சிரிப்போடு, கொஞ்சம் குளிரோடு, நிறைய படங்களைப் பார்த்து மனக்கண்ணில் அந்த இடத்திற்குச் சென்று வருவது போல் உணர்ந்து படித்தேன். குலூ, மணாலி,பியாஸ் நதி, ராப்டிங் பயணம் என நானும் பயணித்து விட்டேன். எனக்கு ரொம்ப பிடித்த இடம் வசிஷ்ட் குண்ட் வெந்நீர் ஊற்று. அதை டிவியில் ஒருமுறை பார்த்து இருக்கிறேன். அங்கே போய் சாப்பிட வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ஹடிம்பாவின் கோவில், அதற்கான கதை எல்லாம் சூப்பர். கல்யாண சமையல் சாதம் பாடுபவர் தானே மாயாபஜார் படத்தில் கடோத்கஜனாக வருவார் என்று நினைத்துக்கொண்டேன். இந்தப் புத்தகத்தை வைத்துக்கொண்டே குலூ, மணாலிக்கு ஒரு சுற்றுலாவே சென்று விடலாம். பயண தகவல்கள், தங்கும் இடத்தின் செலவுகள், உணவுகள், போக்குவரத்து என்று எல்லாத்தையும் கூறியிருக்கிறார். ரசித்து ரசித்து பயணம் செய்பவர்களுக்கே அதை அடுத்தவர் ரசிக்கும் வண்ணம் எழுதவும் முடியும். காலங்களில் அவள் கோடை பாட்டு அவர் நண்பர் எவ்வளவு பாதித்திருந்தால் இப்படி பாடியிருப்பார் என்று நினைத்து சிரிப்பாக வந்தது. ரோட்டோர ஆப்பிள் மரம், சுற்றிலும் மலை, அருகே நதி, பனிப்பொழிவு என்று ஒரு வெள்ளை மழைப் பொழிகின்றதே பாடல் பின்புறம் ஒலிக்க பார்த்து, படித்துக்கொண்டே வந்தேன். ரொம்ப அழகாக எழுதியிருக்கிறார். ஆசிரியருக்கு வாழ்த்துகள். உங்களுக்கு எண்ணற்ற பயணங்கள் வாய்க்கட்டும்.
*******
விமர்சனம் - 2 - கற்பகாம்பாள் கண்ணதாசன்:
செம்ம ஜாலியா குலு மணாலிக்கு ஒரு ட்ரிப் போய் வந்த அனுபவம். ஒரு சுற்றுலா சென்று வந்த குழந்தையின் மனநிலையில் இப்பதிவினை இடுகிறேன்.
பியாஸ் நதியின் அழகு, பீச் மற்றும் ஆப்ரிக்காட் மலர்கள், பனிபடர்ந்த இடத்தில் விளையாட்டு, பனி உருகி வீழும் ஊற்றில் புகைப்படம், பியாஸ் நதியில் சென்ற படகு சவாரி, ரோப் கார் பயணம், ஹடிம்பா கோவில், அந்த யாக், மணிக்கரன் வெந்நீர் ஊற்று, அந்த குருத்துவாராவில் கொடுக்கும் நெய் சொட்டும் ஹல்வா, மணிக்கரனில் இருக்கும் சிவன்சிலை எல்லாமே டாப் டக்கர். சொல்ல மறந்துட்டேனே அந்த ஹமாமும், பொருட்கள் எடுத்து செல்லும் புல்லி சிஸ்டம் கம்பிகளும் சூப்பர்.
மனித மனதுக்குதான் என்னவொரு ஆற்றல் இடந்த இடத்திலிருந்தே நாம் கற்பனை செய்யும் இடத்திற்கு உடனே கொண்டு சேர்த்துவிடுகிறது. இப்புத்தகம் படித்த இரண்டு மணி நேரமும் குலு மணாலியை அனுபவித்தேன் என்றால் அது மிகையாகாது. அருமை அருமை
பீச், ஆப்ரிகாட் மலர்கள், யாக், கட்டிடத்தொழிலாளியின் குழந்தை, கறுப்பு பைரவர், சூரிய ஒளியை பிரதிபலிக்கும் பனிச் சிகரம், சுமைகள் தூக்கிச் செல்லும் பெண்கள், மழைத்தூறலில் தங்குமிடம், மணிக்கரண் சிவன் சிலை, பஞ்சாபி தாத்தா, ரிப்போர்டிங் ஜோதி அண்ணா, இதுவெல்லாம் சூப்பர் ஷாட் போட்டோகிராபி
ஒரே ஒரு வருத்தம் படங்களை தொட்டு தொட்டு பெரிதாக்கிப் பார்க்க கொஞ்சம் நேரம் பிடித்தது. அடுத்தமுறை லிங்க்காக இல்லாமல் நல்லா பெருச்ச்ச்சா போட்டோ போடுங்க சகோ படிக்கும்போது ஜாலியா இருக்கும்.
சூப்பர் பயண நூல். சீக்கிரம் கெளம்புங்க எல்லாரும் குலு மணாலிக்கு......
*******
நண்பர்களே, இந்தப் பதிவின் வழி உங்களுடன் பகிர்ந்து கொண்ட வாசிப்பனுபவங்கள் குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள். நாளை வேறொரு பதிவின் வழி உங்களைச் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து…
இருவரது விமர்சனமும் சிறப்பு. உணர்ந்து படித்து இருக்கிறார்கள் வாழ்த்துகள் ஜி
பதிலளிநீக்குவிமர்சனங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. வாழ்த்தியமைக்கு நன்றி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சுருக்கமாக எனினும் இரண்டு விமர்சனங்களும் அருமை..இரசித்து எழுதியிருக்கிறார்கள்..வாழ்த்துகள்..
பதிலளிநீக்குவிமர்சனங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. வாழ்த்தியமைக்கு நன்றி ரமணி ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இருவரும் நன்றாக விமர்சனம் செய்து இருக்கிறார்கள். வாழ்த்தியவர்களுக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவிமர்சனங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. வாழ்த்தியமைக்கு நன்றி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அதிக குளிரோடு... அருமையான விமர்சனங்கள்...
பதிலளிநீக்குவிமர்சனங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையான விமரிசனங்கள் . . நன்றி.
பதிலளிநீக்குவிமர்சனங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இரு விமர்சனங்களும் அருமை சார்.
பதிலளிநீக்குவாசகம் எதார்த்தத்தைச் சுட்டுகிறது.
இந்நூலை நானும் வாசித்து மகிழ்ந்திருக்கிறேன்.
எனக்கு ராஃப்டிங் செல்ல வெகுநாள் ஆசை உண்டு.
இதில் அது குறித்த விளக்கத்தை மிகவும் ரசித்தேன்.
விமர்சனங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சிறப்பு. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
பதிலளிநீக்குவிமர்சனங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. வாழ்த்தியமைக்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
விமரிசனக் கலை கைவந்துள்ளது இருவருக்கும். அருமையாக விமரிசனம் செய்திருக்கின்றனர். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவிமர்சனங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமை
பதிலளிநீக்குவாழ்த்துகள் ஐயா
விமர்சனங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. வாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.