தொகுப்புகள்

வியாழன், 1 ஏப்ரல், 2021

அம்மாவின் அன்பு - குறும்படம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட சாப்பிட வாங்க பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


காத்திருக்கக் கற்றுக்கொள்… எல்லாவற்றிற்கும் ஒரு உரிய நேரம் இருக்கிறது! அவசரப்படுவதால் நிம்மதி தொலையுமே தவிர நமக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. 


******





எப்போதுமே நம்மிடம் ஒரு பொருளோ அல்லது ஒரு உறவோ இருக்கும்போது அவற்றின்/அவர்களின் சிறப்பு தெரிவதே இல்லை.  பல சமயங்களில் நாம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தத் தெரியாமல் அடுத்தவர்களை காயப்படுத்தி விடுகிறோம்.  ஆனால் அந்த உறவு இல்லாமல் போகும்போது தான் நாம் எவ்வளவு தவறான செயலைச் செய்திருக்கிறோம் என்று புரிந்து கொள்ள முடிகிறது.  அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகள், மனைவி, குழந்தைகள் என எந்த உறவாக இருக்கட்டும், ஏதோ சமயத்தில் நாம் சொல்லும் வார்த்தைகள் அவர்களை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்வதே இல்லை - அவர்களை இழக்கும் வரை!  கண்கெட்ட பின்னே சூரிய உதயம் என்பதைப் போல, இழந்த பிறகே அவர்களது பெருமையை உணர்ந்து கொள்கிறோம்.  இந்தக் குறும்படத்தில் வரும் மகனும் அப்படியே தனது தாயின் அருமையை உணர்ந்து கொள்ளும்போது அவரில்லை!  


இப்படி நிறைய தாய்லாந்து விளம்பரங்கள்/குறும்படங்கள் இணையத்தில் கிடைக்கின்றன.  பார்க்கப் பார்க்க நம் மனதை உருக்கி விடும் விதத்தில் இருக்கின்றன.  ஆனாலும் சிலருக்கு இந்த விதமான குறும்படங்கள்/விளம்பரங்கள் பிடிப்பதில்லை - அந்தக் காணொளிகளுக்கு வரும் கருத்துரைகள் பார்க்கும்போதே இதைப் புரிந்து கொள்ள முடிகிறது.  சந்தோஷமான குறும்படங்களே இல்லையா என்று கேட்பதைப் பார்க்க முடியும்.  ஜாலியான குறும்படங்களும் இருக்கத் தான் செய்கின்றன என்றாலும், இது போன்ற குறும்படங்கள் மனதைத் தொடுபவை.  இந்த வாரத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் குறும்படம் - Mother’s Love - பாருங்களேன்.


மேலே உள்ள காணொளியை உங்களால் பார்க்க முடியவில்லை எனில் கீழேயுள்ள சுட்டி வழி நேரடியாக யூட்யூபில் பார்க்க முடியும். 


Mother’s Love


******


நண்பர்களே, இந்த நாளில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட குறும்படப் பதிவு குறித்த உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் பகிர்து கொள்ளுங்கள்.  நாளை வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


14 கருத்துகள்:

  1. உரிய நேரம் வரை காத்து இருக்க வேண்டும், உண்மை.வாசகம் அருமை.

    கண்ணீரை வரவழைத்த குறும்படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் குறும்படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. குறும்படம் மனதை கனக்க வைத்து விட்டது ஜி.

    நான்கு நிமிடத்தில்கூட உணர்வுகளை தொட வைக்க முடிகிறது சில குறும்படங்களால்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு நிமிடங்களில் கூட மிகச் சிறப்பாக சொல்ல வரும் விஷயத்தினைச் சொல்லி விடுகிறார்கள் கில்லர்ஜி. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. நமக்கென்று வரும் ஒரு நேரத்திற்கு காத்திருக்க வேண்டும். உண்மைதான்....

    குறும்படம் பார்த்தேன். மனதை நெகிழச் செய்தது. அன்பான உறவுகள் நம்மிடம் வைத்திருக்கும் அன்பை காலம் கடந்துதான் உணர்ந்து கொள்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும் குறும்படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. மனதைத் தொடும் குறும்படம் தான் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நெகிழ்வான கதை.  கண் திறக்கும்போது காலம் கடந்து விடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. கண்ணீரை வரவழைத்தது குறும்படம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்ததில் மகிழ்ச்சி எழில் சகோ.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. அன்பு வெங்கட்,
    நல்லதொரு குறும்படம்.
    ஆனால் எனக்கு ஒரு விஷயம் உறுத்துகிறது.
    அந்த அம்மா வாயைத் திறந்து நல்லா இருக்கு என்று சொல்லலாமே.

    குழந்தைகள் எப்படிப் புரிந்து கொள்வார்கள்.

    தாய்லாந்தில் இதுதான் நிலைமையோ என்னவோ.

    நல்ல நடிப்பு. காட்சி அமைப்புகள் எல்லாமே அருமை.
    நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லிம்மா.

      குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....