தொகுப்புகள்

ஞாயிறு, 30 மே, 2021

சந்தித்ததும் சிந்தித்ததும் - நண்பர்களின் பார்வையில் - பகுதி மூன்று - எங்கள் பிளாக் ஸ்ரீராம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை.


*****




செப்டம்பர் 2009-இல் ஆரம்பித்த எனது இந்த வலைப்பூ பயணம் இதுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது!  இது வரை இந்தப் பக்கத்தில் 2500-க்கும் மேலான பதிவுகளை வெளியிட்டிருக்கிறேன்.  இந்தச் சமயத்தில் வலையுலகு தந்த நட்புகளில் சிலரையும், தில்லி நண்பர்கள் சிலரையும் எனது வலைப்பூ குறித்த அவர்களது எண்ணங்களை எழுதி அனுப்பச் சொல்லி கேட்டிருந்தேன்.  அப்படி எழுதி அனுப்பிய நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. இது வரை இந்த வரிசையில் இரண்டு பதிவுகள் வெளியிட்டு இருக்கிறேன்.  மூன்றாவதாக, எங்கள் பிளாக் ஸ்ரீராம் அவர்கள் எனது வலைப்பூவினைப் பற்றியும் அதில் வெளியிடும் பதிவுகள் குறித்தும் எழுதி அனுப்பிய அவரது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  அவரது வேலைகளுக்கு இடையே, எனக்காக தனது எண்ணங்களை எழுதி அனுப்பிய நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  வாருங்கள் - அவரது எண்ணங்களைப் படிக்கலாம்! 


*****

எண்ணம் - 3 - எங்கள் பிளாக் ஸ்ரீராம், சென்னை:


2010 அல்லது 2011...   ஒருவேளை அது 2012  ஆகவும் இருக்கலாம்.  அப்போது பல மூத்த பதிவர்கள் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள்.  டோண்டு, ஆர்விஎஸ் கணேஷ் பாலா பரிசல்காரன் இன்னும் எத்தனை எத்தனையோ பெரும் பதிவர்கள்...


தமிழ்மணமும், வலைச்சரமும்தான் எனக்கு பல பதிவர்களை அடையாளம் காட்டின.


அந்நேரத்தில் நான் சென்ற பல பதிவுகளில் "புது தில்லியிலிருந்து வெங்கட்" என்கிற கமெண்ட்ஸ் பார்ப்பேன்.  அதென்ன, புது தில்லியிலிருந்து வெங்கட் என்று மனதுக்குள் தோன்றும்!  ஒருநாள் அந்தப் பெயரைப் பிடித்துக்கொண்டு வெங்கட் தளத்துக்கும் வந்து சேர்ந்தேன்.


அன்று தொடங்கி இன்று வரை படித்துக் கொண்டிருக்கிறேன்.  


அவர் தளத்தில் உபயோகமில்லாத பதிவு எதுவும் வந்தது என்றே சொல்ல முடியாது.  புதுக்கோட்டையா, எந்த ஊர் என்று நினைவில்லை, பதிவர்கள் மாநாடு நடந்தபோது அவர் புகைப்படத்தையும் பார்த்தேன் என்று ஞாபகம்.  என்னை முதலில் கவர்ந்தது அவரது உயரம்.  எனக்கு உயரமானவர்களை எப்போதுமே பிடித்துப் போகும்.  இதை அவரிடமே சொல்லி இருக்கிறேன்!


வெங்கட் பதிவுகளில் ஸ்பெஷல் எது என்று நான் சொல்லியா நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்?  பயணங்களின் காதலன்.  அருமையான புகைப்படக்காரர்.  இவரது பெரும்பாலான புகைப்படங்களில் கழுத்தில் அல்லது கையில்  கேமிராவுடன்தான் இருப்பார்.


வெளியில் அதிகம் செல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளாத எனக்கு தனது பயணக்கட்டுரைகள் மூலம் நாமும் ஏன் இப்படி இல்லாமல், எங்கும் செல்லாமல் போனோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவர் வெங்கட். 


சமையல் பகுதியாகட்டும், ராஜா காது கழுதை காது பகுதி, காபி வித் கிட்டு போன்ற பல்சுவைப்பகுதிகள் இவரது பக்கத்தை சுவாரஸ்யமாக்குகின்றன.  இவரது திருமதி மட்டுமல்லாது, மகளும் சிறுவயதிலிருந்தே ஒரு வலைப்பதிவர் என்பது சிறப்பு.  தந்தை தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி பாய்கிறது.


பதிவுகளில் யாரையும் காயப்படுத்துவதோ, தவறான வார்த்தைப் பிரயோகங்களோ, அரசியலோ, 'எதிர்மறைச் சிந்தனையோ" எதுவும் இருக்காது.   அதே சமயம் படிப்பவர்களுக்கு உதவும் பல விஷயங்கள் இவரது வலைப்பக்கங்களில் கிடைக்கும். 


வலைப்பக்கங்கள் தொடங்கினார்கள்.  மின்னூல்கள் வெளியிட்டார்கள்.  இப்போது மூவருமே யூடியூப் சேனல் தொடங்கி இருக்கிறார்கள்.  அயராத உழைப்பு.  படிப்படியாக அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றம்.


நெஞ்சிருக்கும்வரை வெங்கட் நினைவிருக்கும்.  காரணம் அவர் வலைப்பூவின் வாசகம்!


வாழ்த்துகள் வெங்கட்.

 

ஸ்ரீராம். 


*****


நண்பர்களே, இன்றைய பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள். அத்துடன் இந்த வலைப்பூவில் வெளிவரும் பதிவுகள் குறித்த உங்கள் எண்ணங்களையும் நிறை குறைகளையும் சொல்லுங்கள்.  மீண்டும் வேறு ஒரு பதிவுடன் சந்திக்கலாம்.  அது வரை…


நட்புடன்




வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...


32 கருத்துகள்:

  1. இப்போது படிக்கும்போது உங்கள் குறும்படங்கள் பற்றியும் விளம்பர அறிமுகங்கள் பற்றியும் சொல்ல மறந்திருப்பது தெரிகிறது!


    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது பணிச்சுமைகளுக்கு இடையில், நேரம் எடுத்து எனது வலைப்பூ குறித்த தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. நல்ல பதிவு. இரசித்து படித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கௌதமன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. சகோதரர் ஸ்ரீராம் மிக அருமையாக உங்களைப்பற்றியும் உங்கள் வலைத்தளம் பற்றியும் எழுதியிருக்கிறார்கள். இனிய வாழ்த்துக்கள் வெங்கட்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் ஸ்ரீராம் அவர்கள் எழுதி இருப்பது குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி மனோம்மா. வாழ்த்தியமைக்கு நன்றி.

      நீக்கு
  4. சொன்னதனைத்தும் அருமை... உண்மை...

    வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நல்ல அலசல். இப்படி ஒரு விமரிசனப் பதிவுகள் வருவதே எனக்குத் தெரியாதே! முதல் இரு எண்ணங்களின் சுட்டியையும் இதில் இணைத்திருக்கலாமே! என் போன்ற படிக்காத/தெரியாத பலர் படிக்க வசதியாக இருக்குமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது வரை இப்படி மூன்று பதிவுகள் வந்திருக்கின்றன. இன்னும் இரண்டு பதிவுகள் வெளிவரும் கீதாம்மா. சுட்டிகள் அடுத்த பதிவில் இணைத்து விடுகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. ஶ்ரீராம் மிகைப்படுத்திச் சொல்லாமல் உண்மையையே சொல்லி இருக்கார். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகைப்படுத்திச் சொல்லாமல் - ஆமாம் கீதாம்மா. வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வாழ்த்துகள் வெங்கட்! உங்கள் தளம் பற்றி வல்லி அக்கா எழுதியிருந்ததை படித்தேன். இன்று ஸ்ரீ ராம் அவர்களின் கருத்தும் சிறப்பு. "ஐயோ எனக்கு எழுதவே வராது" என்று அலட்டியிருப்பாரே? ஹாஹா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”ஐயோ எனக்கு எழுதவே வராது” - :) அவருக்கு இருக்கும் பணிச்சுமைக்கு இடையே எழுதுவது கடினமாக இருந்தாலும் எழுதி அனுப்பினார் பானும்மா.

      வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. ஸ்ரீராம் மிக அருமையாகச் சொல்லியிருக்கிறார் உங்கள் தளம் பற்றி. அழகான கருத்துகள் நயம்படச் சொல்லியிருக்கிறார். அத்தனையும் அப்படியே! எந்த ஒரு பதிவும் மொக்கைப் பதிவு என்று சொல்லவே முடியாதுதான்.

    ஸ்ரீராம் எனக்கு எழுதவே வராது (என்னைப் போல் நானும் அப்படித்தான் சொல்வது வழக்கம்...ஹிஹிஹி) என்றுச் சொல்லிக் கொண்டு மிக அழகாக எழுதுவார். தன்னடக்கம்?!! (ஆனால் எனக்கு அதுவும் வராது என்பது வேறு விஷயம்!!)

    வாழ்த்துகள் வெங்கட்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் அவர்கள் எழுதி இருக்கும் கருத்துகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தன்னடக்கம் - ரசித்தேன். உங்கள் திறமைகள் நிறையவே இருக்கிறது. தொடர்ந்து பரிமளிக்க வாழ்த்துகள்.

      வாழ்த்தியமைக்கு நன்றி கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அழகான விமர்சனம். உள்ளது உள்ளபடியே சொல்லியிருக்கும் விதம் ரசிக்கும்படியாக இருக்கிறது. ஸ்ரீராம்ஜிக்கும், வெங்கட்ஜி க்கும் வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் ஸ்ரீராம் சொல்லி இருக்கும் கருத்துகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி. வாழ்த்தியமைக்கும் நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. அழகான விமர்சனம். வாழ்த்துகள் வெங்கட் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. வாழ்த்தியமைக்கு நன்றி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பயணங்களும் குறும்படங்களும் நான் மிக ரசித்தவை.
    அந்நாளில் வந்த ப்ரூட்சாலட் (ஏன் மாற்றினீர்கள் என்று நினைத்ததுண்டு) கலவை நன்றாக இருக்கும்.
    இன்று நிறைய பேர் மின் புத்தகம் வெளியிட நீங்களும் உங்கள் வலைய்பூவும் முன்னோடிகள்.
    சில பதிவர்கள் ஆழமானவர்கள். சிலர் அகலமான கண்ணோட்டத்தில் எழுதுவார்கள். நீங்கள் ஆழமா அகலமா என்று குழம்பியிருக்கிறேன் - அது உங்கள் வெற்றி.
    காலத்தை வென்று எழுதும் முக்கியமான தசாவதாரங்களில் ஒருவர். :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலத்தை வென்று எழுதும் - ஆஹா... மகிழ்ச்சி அப்பாதுரை.

      ஃப்ரூட் சால்ட் - காஃபி வித் கிட்டு - இரண்டுமே ஒரே விதம் தான். கொஞ்சம் இடைவெளி விட்டு எழுத ஆர்மபித்தேன் - வேறு பெயரோடு - தனிக்காரணம் ஒன்றுமில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. அனைத்தும் உண்மை
    கலப்படமில்லாத உண்மை
    வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை.//
    வாசகம் மிக அருமை. ஸ்ரீராம் இன்று சொன்னதற்கு சாட்சி இந்த வார்த்தைகள்.

    //பதிவுகளில் யாரையும் காயப்படுத்துவதோ, தவறான வார்த்தைப் பிரயோகங்களோ, அரசியலோ, 'எதிர்மறைச் சிந்தனையோ" எதுவும் இருக்காது. அதே சமயம் படிப்பவர்களுக்கு உதவும் பல விஷயங்கள் இவரது வலைப்பக்கங்களில் கிடைக்கும். //

    ஸ்ரீராம் மிக அருமையாக சொல்லி விட்டார்.

    குறும்படம் தேர்வு, பாடல் திறமை இரண்டையும் சேர்க்க வேண்டும் ஸ்ரீராம்.

    ஸ்ரீராமுக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. அன்பின் ஸ்ரீராம் ,
    அருமையாகச் சொல்லி இருக்கிறார்.
    முத்தான கருத்துகள். அனைவரின் அன்பையும்
    பெற்ற குடும்பம்.

    //ஒரு பதிவு கூட வீணாகப் பதிவிடப் பட்டது என்றே
    கிடையாது.// இந்த வரி மிக முக்கியம்.

    நல்ல கணிப்பு. இடைவிடாத வேலைகளுக்கு நடுவே
    கருத்துக்களைப் பகிர்ந்திருக்கும் ஸ்ரீராமுக்கும்,
    உங்களுக்கும் வாழ்த்துகள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் ஸ்ரீராம் சொன்ன கருத்துகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. சிறப்புகளைச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் ஸ்ரீராம். அத்தனையையும் வழிமொழிகிறேன். வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி சொன்ன விஷயங்கள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. திரு வெங்கட் அவர்களின் வலைதள பதிவுகள் குறித்த திரு ஸ்ரீராம் அவர்களின் பார்வை தெள்ளிய நீரோடை. எதிர்மறை சிந்தை துளியும் எட்டிப்பார்க்காது நேர்மறை எண்ணங்களின் பிரதிபலிப்பாக பவனிவரும் திரு வெங்கட்டின் பதிவுகளும் படைப்புகளும் திரு ஸ்ரீராம் அவர்களின் அங்கீகாரத்தால் கொஞ்சம் "அகங்காரம்" கொண்டாலும் தவறில்லை. வெங்கட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்பட விமர்சனங்கள்..சபாஷ் சொல்லப்படவேண்டியவை.
    வாழ்த்துக்கள் இருவருக்கும்.
    நன்றி
    கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் அவர்களின் இந்தப் பதிவு குறித்த தங்கள் எண்ணங்கள் கண்டு மகிழ்ச்சி கோ.

      அகங்காரம் கொண்டாலும் தவறில்லை - ஹாஹா... அப்படி ஒரு எண்ணம் வந்ததே இல்லை நண்பரே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....