தொகுப்புகள்

செவ்வாய், 15 ஜூன், 2021

கதம்பம் - தல தலைமுடி - ஸ்மூத்தி - மில்க் ஷேக் - மண்டலா - சுற்றுச் சூழல் தினம் - பல்பு - அம்மா



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட படித்ததில் பிடித்தது பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


கோபப்பட்டு வென்றுவிட்டாய் என்றால் உன் கோபம் பெரிது என்று அர்த்தமல்ல! அதைத் தாங்கிக் கொண்டவர்களின் பொறுமை பெரிது என்று அர்த்தம்.


******



லாக்டவுன் பரிதாபங்கள் - ”தல”யின் தலைமுடி - 5 ஜூன் 2021: 





நம்ம 'தல': வீட்டுல எங்க பார்த்தாலும் தலைமுடி தான் தென்படறது! ஒரு ஓரமா போய் சிடுக்கு எடுக்கணும். திரட்டி டஸ்ட் பின்ல போடணும்! இரண்டு லேடீஸ் இருக்கீங்க!!!


நான்: பண்ணிண்டு தான் இருக்கோம்!! காத்துல பறந்து வந்தா என்ன பண்றது 🙂 


இதெல்லாம் எப்போதும் கேட்கும் டயலாக் தான் 🙂 இப்போது!!!!


நான்: எங்க பார்த்தாலும் தலைமுடியா இருக்கு! Hairfall பிராப்ளம் இருக்கு போல! ஒருத்தி வெட்டி விடறேன்னு சொல்லும் போது கேட்கணும்! நம்பிக்கை இல்ல! 


நம்ம 'தல': ஏய்! அதெல்லாம் உங்க தலைமுடி தாண்டி!


நான்: நீளமா இருந்தா தான் எங்களோடது 🙂 கண் முன்னாடி விழற முடிய யாரோ டி.ஆர் மாதிரி அப்பப்போ கோதி விட்டுக்கறார் 🙂 ஹெட்பேண்ட் வேற போட்டுக்கறார் ஒருத்தர் 🙂 அது யாரு 🙂


ஹா..ஹா..ஹா..


******


ஆதியின் அடுக்களையிலிருந்து - Dates banana smoothie! Icecream Milkshake - 5 ஜூன் 2021: 





இந்த வாரம் Adhi's kitchen சேனலில் இந்த இரண்டு ரெசிபிக்களும் தான் செய்து காண்பித்துள்ளேன். கோடைக்கேற்ற எளிதான பானங்கள். பாருங்களேன்! 


Dates banana smoothie & Ice cream Milkshake by Adhi Venkat/Weight loss recipe/Summer Special..


******


Roshni’s Creative Corner - Mind relaxation Mandala! - 5 ஜூன் 2021: 


மகளின் சேனலில் இந்த வாரம் எளிதான மண்டலா ஆர்ட்.



Mandala for mind relaxation | Creative days | Roshni's Creative Corner


******


உலக சுற்றுச்சூழல் தினம் - 5 ஜூன் 2021: 


தன் வீட்டைப் போல சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும். வீட்டிற்கு வெளியே பொது இடத்தில் எச்சில் துப்புவோரில் ஆரம்பித்து சுற்றுப்புறத்தை அசுத்தம் செய்வோரை பார்த்தால் ஒரு 'அந்நியன்' வந்தால் தான் நன்றாக இருக்கும் என்று தான் தோன்றுகிறது.


******


இன்றைய பல்பு - தண்ணீர் கேன் - 8 ஜூன் 2021: 


வீடு துடைத்துக் கொண்டிருக்கும் போது, 'இன்னிக்கு செவ்வாயாச்சே! தண்ணி கேன் வரும்' என்று நினைத்த நேரம் வாசலில் அழைப்பு மணியின் ஒலி.


கையில் மாப்புடன் கதவைத் திறந்து வாசலில் நின்று கொண்டிருந்தவரிடம், தம்பி ஒரு கேன் கொண்டு வாப்பா! என்று சொல்லி விட்டு துடைத்துக் கொண்டிருந்தேன்!


அந்த தம்பி நகரவில்லை!!! ஏதோ சொல்லவே, என்ன தம்பி என்றேன். ஏசி மெக்கானிக்கை வர சொல்லியிருந்தாங்க!!! என்று பெயர் சொல்லவே தான்! ஓஹோ!!! இங்க இல்ல தம்பி! பக்கத்து வீடு! என்று சொன்னதும்..சாரி மேடம்! என்று சென்றார் 🙂

 

வழக்கமாக தண்ணீர் கேன் கொண்டு வருபவரையே சிலநேரம் 'எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு! யார்னு ஞாபகம் வரலையேன்னு முழிப்பேன் 🙂 அப்பாவுக்கும் மகளுக்கும் என்னை கலாய்க்க ஒரு மேட்டர் கிடைத்து விட்டது 🙂


தம்பி இன்னும் டீ வரல! தம்பி இன்னும் சாதம் வரல! என்று கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்...:)) ஹா..ஹா..ஹா..


******


அம்மாவும் பெரியம்மாவும் - 8 ஜூன் 2021:


எனக்கு செய்யணும்னு உனக்கு தலையெழுத்து!!

அதெல்லாம் ஒண்ணுமில்ல... எங்கம்மா இப்போ இருந்திருந்தா செய்ய மாட்டேன்னு சொல்வேனா பெரியம்மா! 


23 வயதில் திருமணம், 27 வயதில் குழந்தை, 50 வயதில் கடமைகளை நிறைவேற்றிய திருப்தியில் சிறகடித்து பறந்து விட்டாள் என் அம்மா.


இந்த உலகை விட்டு சுதந்திரமாக பறந்த நாள் இன்று. 17 வருடங்களாச்சு.


இந்த வருடம் அம்மாவின் ஆன்மா மகிழ்ந்திருக்கும்னு நினைக்கிறேன். 


அம்மா இப்போ இருந்திருந்தாலும் 'நன்னா கவனிச்சுக்கோடி! அவா ஆசிர்வாதம் உன்ன நன்னா வெச்சுருக்கும்'னு தான் சொல்வாள்.


******


நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை...


நட்புடன்



ஆதி வெங்கட்


20 கருத்துகள்:

  1. கதம்பம் சுவாரஸ்யம்.  நல்லவேளையாக  இரண்டாவது அலை தீவிரமாகும் முன் நான் தலையை சுத்தப்படுத்தி இருந்ததால்  'தல' யின் சிரமம் எனக்கில்லை!

    பெரியம்மாவின் அன்பும் ஆசீர்வாதமும் உங்களுக்கு உண்டு.  நன்றாக  பார்த்துக் கொள்கிறீர்கள் அவரை என்று தெரிகிறது.  அம்மாவின் நினைவு நாள் - அம்மா போல வருமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”தல”யின் சிரமம் - :) இன்னமும் சிரமம் தீரவில்லை இங்கே!

      கதம்பம் பதிவின் பகுதிகள் குறித்த உங்களுடைய கருத்துரை - நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சுவாரஸ்யம் முன்னோர்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரி

    கதம்பம் அனைத்தும் சுவாரஸ்யமாக இருக்கிறது. வாசகம் அருமை.

    லாக்டவுன் பரிதாபங்கள் படம் நன்றாக உள்ளது. உங்கள் வீட்டில் நடைப்பெற்ற உரையாடலும் சிரிப்பை வரவழைக்கிறது. இப்போது எல்லோர் வீட்டிலும் இதே குற்றச்சாட்டுகள்தான்.. தலைமுடி இப்போது எல்லோருக்கும் கொட்டுகிறது. இப்போதுள்ள கால கட்டங்களில் சிந்தனைகள் நிறைய வந்து விட்டன.

    இரண்டு மில்க் ஷேக்கும் நன்றாக உள்ளது. ரோஷ்ணியின் ஓவியம் அழகாக உள்ளது. குழந்தைக்கு வாழ்த்துக்கள்.

    வீட்டுப் பெரியவர்களை அன்புடன் அக்கறையுடன் பார்த்துக் கொள்ளும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். அம்மாவின் நினைவு என்றுமே நமக்குள் இருக்கும். அவர்களின் ஆசிர்வாதங்கள் என்றும் கிடைக்கும் என்ற நம்பிக்கையே ஒரு புத்துணர்ச்சிதான். கதம்பம் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி

      கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பதிவு குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  4. ரசனையான நகைச்சுவையான கதம்பம்... அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  5. கதம்பம் அருமை. முகநூலில் படித்து விட்டேன்.

    பெரியம்மாவை நன்றாக கவனித்துக் கொள்வது மகிழ்ச்சி. பெரியம்மாவின் ஆசீர்வாதம் உங்கள் எல்லோருக்கும் உண்டு.

    //அம்மா இப்போ இருந்திருந்தாலும் 'நன்னா கவனிச்சுக்கோடி! அவா ஆசிர்வாதம் உன்ன நன்னா வெச்சுருக்கும்'னு தான் சொல்வாள்.//

    அம்மா நீங்கள் பெரியம்மாவை பார்த்துக் கொள்வதை அறிந்து அம்மா உங்களை வாழ்த்தி ஆசீர்வாதம் செய்து கொண்டு இருப்பார். என்றும் அம்மா, அப்பா ஆசீர்வாதம் உண்டு உங்கள் எல்லோருக்கும்.
    ரோஷ்ணியின் மண்டலா ஆர்ட் மிக அழகாய் இருக்கிறது, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் குறித்த உங்கள் கருத்துரை பகிர்ந்தமைக்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. கண் முன்னாடி விழற முடிய யாரோ டி.ஆர் மாதிரி அப்பப்போ கோதி விட்டுக்கறார் 🙂 ஹெட்பேண்ட் வேற போட்டுக்கறார் ஒருத்தர் 🙂 அது யாரு 🙂//

    ஹாஹாஹாஹாஹ ஹையோ ஆதி சிரிச்சு முடிலைப்பா.....வெங்கட்ஜிய அப்படி முடியோடு நினைத்துப் பார்த்தேன் ஆஆஆஆஆஆ!!!!!!!!!

    எல்லார் வீட்டிலும் இந்த முடி உதிர்தல் பிரச்சனை பேச்சுகள் வீட்டுக்கு வீடு வாசப்படி!!!

    ஸ்மூதி அங்கேயே பார்த்துவிட்டேன் என்று நினைக்கிறேன்.

    மண்டலா ஆர்ட் வாவ்! செமையா இருக்கு. பாராட்டுகள் ரோஷினிக்கு. பெளெயின் பெட்ஷீட் கிடைத்தால் வாங்கி அதில் ஃபேப்ரிக் கொண்டு செய்யலாம் முடிஞ்சா செய்யச் சொல்லுங்க. நல்ல டிசைன்.

    அல்லது மேசை விரிப்பு, என் வால் ஹேங்கிங்கா கூடச் செய்யலாமே துணியில். செய்து ஃப்ரேம் செய்திடலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்ஜியை அப்படி நினைத்துப் பார்த்தேன் - ஹாஹா... எனக்கே என்னைப் பார்த்த பயமாதான் இருக்கு கீதா ஜி! ஹாஹா.

      கதம்பம் பதிவின் பகுதிகள் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. நகைச்சுவைக் கதம்பம் - நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. நல்ல நகைச்சுவைப் பதிவு ஆதி.:)
    இந்த முடிப்பிரச்சினை எங்கும் தலைவிரித்தாடுகிறது.
    எங்க மருமகளிடம் நாலைந்து நாட்கள்
    நல்ல உதவிகள் செய்தால் முடி வெட்டப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

    இங்கு மாப்பிள்ளை பசங்களுக்கு சூப்பர் ஹேர்கட் செய்து விடுகிறார்.
    இந்தத் தொற்றுக்காலம் எல்லாத்திறமைகளையும் வெளிக் கொணர்கிறது!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைவிரித்தாடும் முடிப் பிரச்சனை - ஹாஹா. உண்மை தான்.

      எல்லா திறமைகளையும் வெளிக்கொணரும் தொற்றுக்காலம் - நிஜம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  9. வாசல் தம்பி ஜோக் சூப்பர்!!!
    குழந்தையின் கைவண்ணம் கண்ணைப் பறிக்கிறது. அருமையாக எழுதுகிறீர்கள்
    ஆதி வாழ்த்துகள். டி. ராஜேந்தர் மாதிரியா... நம்ம வெங்கட்டா?????
    ஹைய்யோ.ஹஹஹ்ஹா/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் - டி. ராஜேந்தர் மாதிரி - ஹாஹா... நினைக்கும்போதே டெரரா இருக்குல்ல வல்லிம்மா!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....