தொகுப்புகள்

வியாழன், 31 அக்டோபர், 2024

தீபாவளி வாழ்த்துகள் - இனிப்பும் காரமும்

அன்பின் நண்பர்களுக்கு, 



வணக்கம். இன்று எப்போதும் போல காலையில் ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறேன் (சில நாட்கள் முன்னரே Schedule செய்த பதிவு!) என்றாலும், இன்றைய தீபாவளி சிறப்பு நாளை முன்னிட்டு மீண்டும் ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்கிறேன். நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.  தீபாவளிக்காக இந்த முறை செய்த சில பக்ஷணங்கள்….


தீபாவளி சீரிஸ் - 1




வடக்கொன்றும் தெற்கொன்றுமாக இரண்டு இனிப்பு தயாரிப்புகள்! ரோஸ் ஃப்ளேவரில் கலாகந்தும் பாரம்பரிய இனிப்பாக அம்மா மற்றும் பாட்டியின் நினைவாக திருநெல்வேலி ஸ்பெஷல் உக்காரை!


தீபாவளி சீரிஸ் - 2



மிக்ஸர் இல்லாத தீபாவளியா!! வேறு எந்த சந்தர்ப்பங்களிலும் நான் இதை  செய்வதில்லை! கொஞ்சம் போல பூந்தி தேய்த்து, ஓமப்பொடி பிழிந்து, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, கறிவேப்பிலை, அவல், கார்ன்ஃப்ளேக்ஸ் பொரித்து போட்டு உப்பு காரம் சேர்த்ததும் மிக்ஸர் ரெடியாகி விட்டது! 


எப்போதும் மிக்ஸர் தான் முதலில் தயார் செய்து கொள்வேன்! இந்த வருடம் எனக்கு கிடைத்த நேரத்தை பொறுத்து திட்டம் மாறிவிட்டது! இந்த வருடம் இப்படி...🙂


தீபாவளி சீரிஸ் - 3



மைசூர் பாக் - கடலைமாவுடன் பால்பவுடரும் கொஞ்சம் சேர்த்து செய்திருக்கேன்! 


தீபாவளி சீரிஸ் - 4





முள்ளு தேன்குழலுடன், இஞ்சி, மிளகு, சீரகம், தனியா, ஓமம், கசகசா, கிராம்பு, உலர் திராட்சை இவற்றையெல்லாம் கண் திட்டமாக ஊறவைத்து அரைத்து வெல்லமும் நெய்யும் சேர்த்து கிளறின தீபாவளி மருந்து! இரவு எண்ணெய் மட்டும் காய்ச்சி வைத்தால் ஆச்சு!


கிடைத்த ஒன்றரை நாள் விடுமுறையில் முடிந்தவரை நிறைவாக செய்துவிட்டேன்! இப்போ தான் நிம்மதியாயிருக்கு..:) அதனால் இத்துடன் தீபாவளி சீரிஸ் நிறைவடைகிறது...:) இனி! இதையெல்லாம் நம்ம வீட்டு 'தலை'க்கு கொடுத்தனுப்ப வேண்டும்! சென்ற வருடம் போல் யாரேனும் கிடைத்தால் பரவாயில்லை! பார்க்கலாம்!


உங்கள் வீட்டில் என்ன இனிப்பு/காரம் செய்தீர்கள் சொல்லுங்களேன்!


அனைவருக்கும் எங்கள் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துகள்!


ஆதி வெங்கட்

திருவரங்கம்

31 அக்டோபர் 2024


2 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தங்கள் அனைவருக்கும் என் அன்பான இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஆதி!
    பலகாரங்கள் எல்லாமே அருமை!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....