அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
சமீபத்தில் (26 அக்டோபர்) மகளின் தேர்வு சம்பந்தமாக ஒரு பேருந்துப் பயணம் - திருச்சி நகரின் புதிய பேருந்து முனையமான - வேறென்ன பெயர் இருக்கப் போகிறது - கலைஞர் பேருந்து முனையம் அமைந்திருக்கும் பஞ்சப்பூர் வரை சென்று அங்கிருந்து பயணப்பட்டேன். மதியமே வீடு திரும்பினோம். இந்தப் பயணத்தில் பார்த்த, கேட்ட விஷயங்கள் - தகவல்களாகவும், நிழற்படங்களாகவும் - முகநூலில் அன்றைய தினமே பகிர்ந்து கொண்டது முகநூலில் இல்லாதவர்கள் வசதிக்காகவும் எனது சேமிப்பாகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன் - ஒரு கதம்பமாக!
*******
காலை உணவு :
இன்றைய காலை உணவு..... பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில்..
எனக்கு மினி tiffin, மகளுக்கு இட்லி.....
இரண்டும் சேர்த்து ரூபாய் 80 மட்டும்..... தரமும் ok தான்....
காத்திருப்பு:
காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கும்......
காத்திருப்பு....
பல சமயங்களில் நமக்கான பேருந்துக்காக......
பந்திகளில், உணவகங்களில் நாம் கேட்ட உணவுக்காக....
மருத்துவமனைகளில் மருத்துவரை பார்க்க நமக்கான அழைப்பு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்புடன்.....
பிள்ளைப்பேறுக்காக மனைவி உள்ளே இருக்க, பதட்டத்துடன் பிரசவ அறை வாயிலில்....
காத்திருப்பில் தான் எத்தனை வகைகள்....
இதோ இன்றைக்கு ஒரு காத்திருப்பு......
பொட்டல் காட்டில் இருக்கும் ஒரு கல்லூரியில் மகளுக்கு தேர்வு..... கல்லூரி வளாகத்தில் பல பெற்றோர்களுடன் நானும்......
வெட்டப்பட்ட மரங்கள் :
உடைந்து போன பிளாஸ்டிக் சேர்கள் இல்லாதபோது வெட்டப்பட்ட மரங்கள் கூட இருக்கையாகலாம்.........
என் மீது அமர்ந்து கொள்ள யார் தயார்? என்று காத்திருக்கும் உடைந்த பிளாஸ்டிக் இருக்கைகள்…
இது என்ன?
இது என்ன என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? முடிந்தால் சொல்லுங்களேன்.....
*******
தில்லை நகரும் சாக்கடையும்:
சென்ற பதிவிலும் இதே தலைப்பு இருந்ததே… ஆமாம் இருந்தது! அன்று வேறு செய்தி… ஆனால் இன்றைக்கு வேறு செய்தி! 🙂
என்னையும் சாக்கடைல தள்ளிடாத......
குடிகாரர்..... தப்பு தப்பு..... மதுபிரியர் ஒருவர் இன்று மாலை எதிரே வந்து கொண்டிருந்தார். எனதருகே, மருத்துவமனையில் பணிபுரியும் பெண், அவரது சீருடையில் (Pant மற்றும் Shirt) தலையைக் குனிந்து தனது அலைபேசியை பார்த்தபடியே நடந்து கொண்டு இருந்தார்...... அலைபேசி மோகம் அப்படி ஆட்டி வைக்கிறது. எதிரே வந்த மதுபிரியரை அவர் கவனிக்கவே இல்லை. முழு சிந்தனையும் கவனமும் அலைபேசியில் மட்டுமே இருந்தது.
தில்லை நகர் பிரதான சாலையின் இரு புறமும் சாக்கடைகள் ஆங்காங்கே திறந்து கிடக்கின்றது. அதையும் அந்தப் பெண் கவனிக்கவில்லை. அல்லது விழுந்து விடமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை அவர் மீதே......
சற்று தூரத்தில் வரும்போதே மதுபிரியரை நான் கவனித்து விட்டதால் முன் ஜாக்கிரதை முத்தண்ணவாக நான் தள்ளியே வந்தேன். இந்தப் பெண்ணோ அலைபேசி மீது கவனம் வைத்திருக்கிறாள், முட்டிக் கொள்ளப் போகிறாள் என்று நினைத்தபடி வந்தேன். எப்படியோ நான் எதிர்பார்த்தது அப்படியே நடந்தது. நேரடியாக அந்தப் பெண் மதுபிரியர் மீது நேருக்கு நேர் மோதினாள்..... சடக்கென்று அப்பெண் நகர, அந்த மதுபிரியர் சொன்னது......
Half அடிச்ச நானே steady -ஆ வரேன் ..... நீ செல் பார்த்துக்கிட்டே வந்து என் மேலே மோதி, நீ சாக்கடையில விழரது மட்டுமில்லாம என்னையும் சாக்கடைல தள்ளி விட்டுடவ போல....... பார்த்து போம்மா..... என்ற படியே சாக்கடை பக்கம் கால் வைத்து, 'பார்த்தியா நான் எவ்வளவு steady ஆ இருக்கேன் என்று என்னிடமும் சொல்லிச் சென்றார்..... நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் என்று நினைத்தபடி நானும் நகர்ந்தேன்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
17 நவம்பர் 2025







வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.
படங்கள் நன்றாக உள்ளது. மினிடிபன் சாப்பிட்டால், வித்தியாசமாக இருக்கும். ஆனால், மதிய உணவுக்கான பசி அவ்வளவாக எடுக்காது. விலையும் குறைவாக உள்ளதே..!! உணவின் தரமும் நன்றாக உள்ளது அறிந்து மகிழ்ச்சி.
காத்திருப்பு கவிதை அருமை. அந்த வெட்டப்பட்ட மரங்கள் உடைந்த நாற்காலிகளுக்குப் போட்டியாக தானும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறோமேயென பெருமைபட்டிருக்கும்.
நீங்கள் பகிர்ந்த படம் கிராமங்களில், கோழிகளை அடைத்து வைக்கும் கூடை போலுள்ளது. அதுவா.?
தடுமாற்றத்துடன் வந்த மதுபிரியர் சொன்னதும் உண்மைதான். அனைவருக்கும் கைப்பேசியின் போதை அதை விட மோசமாக உள்ளதே..! அத்தனை பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இன்றைய வாசகம் அருமை அப்படியே!!!! நான் அடிக்கடி சொல்வதுண்டு இன்னொரு விதத்திலும் நாம் ஒரு அனுபவத்தைச் சொல்லும் போது கேட்பவர் - சும்மா உடான்ஸ் கட்டுக்கதை.., இப்படி எல்லாம் நடக்குமா....என்று பல கேள்விகள் எழுப்புவாங்க அவங்க அதை நேரில் சந்திக்காதவரை என்று சொல்வேன்.
பதிலளிநீக்குகீதா
கோழி கவிழ்க்கும் கூடை போல இருக்கும் அந்தப் படம் ரசிக்கத்தக்கதாய் இருக்கிறது..
பதிலளிநீக்குஎட்டரை மணிக்கு டிபன் சாப்பிட்டேன். இட்லி, மினி டிபன் படம் பசியைத் தூண்டுகிறது.
மசாலா தோசை இல்லாமல் ஒரு மினி டிபனா? அதற்குப்பதிலாகத்தான் உப்புமாவா? இருந்தாலும் 80 ரூ மிகக் குறைவு. சேவையைப் பார்த்ததும் எனக்கும் சேவை சாப்பிடும் ஆசை வந்துவிட்டது.
பதிலளிநீக்குகோழிகளை அடைத்துவைக்கும் கூண்டு போலத் தெரிகிறது
செல்போனைப் பார்த்துக்கொண்டு நடக்கும் பலரை நான் தினமும் சந்திக்கிறேன். அப்படி என்ன முக்கியமான விஷயம் என்று எரிச்சலாக இருக்கும். நடக்கும் பாதையில் சட் என்று அவர்கள் பாதை மாறிவிடுவார்களோ என்று எண்ணிக்கொண்டே நான் அவர்களை முந்துவேன். இதில் வீட்டு வேலைக்கு வருபவர்கள், செக்யூரிட்டிகள் என்று எவரும் விதிவிலக்கல்ல
பதிலளிநீக்குசாப்பாட்டின் விலை குறைவாக இருக்கிறதே.
பதிலளிநீக்குகாத்திருப்பு சுகம். அதுவும் நம் குழந்தைகளுக்காக.....சுகமாக இல்லாமலும் போகலாம் சில சமயம்...அதை சுகமாக மாற்றிக் கொள்ள யோசிக்கலாம் என்றும் சொல்வதுண்டு....இப்போது நீங்கள் எல்லாவற்றையும் கவனித்து எழுதியிருக்கிறீர்கள்...இதுதான்...
உடைந்து போன பிளாஸ்டிக் சேர்கள் இல்லாதபோது வெட்டப்பட்ட மரங்கள் கூட இருக்கையாகலாம்.....//
தென்னை மரம் வெட்டப்பட்டிருப்பதைப் பார்த்ததும், நோய்வாய்ப்பட்ட மரத்தை வெட்டிவிட்டு இப்படி இவற்றை அதன் மேசை போலவும், இருக்கை போலவும் செய்ய நினைத்ததுண்டு எங்கள் வீட்டில்.
அந்தக் கூடை ஆடுகளுக்கானவை போலத் தெரிகிறது. இல்லை என்றால், சமீபத்தில் நான் பார்த்தது. இப்படி ஒரு கூடையைக் கவிழ்த்து குடியிருப்பதையும் பார்த்தேன் கவிழ்த்து வைத்துவிட்டு வெளியில் போகும் போது, அதன் பின் வரும் போது கூடையை நிமிர்த்தி இரு கம்புகள் வைத்து நிமிர்த்தி விட்டு உள்ளே உட்கார்ந்து சமைத்தல், பொருட்கள் எல்லாம் வைத்திருப்பதையும் பார்த்தேன்.
கீதா
மதுப்பிரியர் பரவால்ல குடிச்சிருந்தாலும் போதைல கொஞ்சம் தெளிவா இருந்திருக்கார் போல!!இல்லைனா இப்படி பேச்சு வராதே!! அவர் சொல்றதும் சரியா இருக்குல்ல!! செல் பார்த்துக் கொண்டே போவது எவ்வளவு ஆபத்து!
பதிலளிநீக்குகீதா
பரிசல். முக்கொம்பு பக்கத்திலா?
பதிலளிநீக்குடிபன் விலை ஆச்சர்யம். மினி டிபின் 100 கொடுக்கலாம். 2 இட்லி 30 ரூ கொடுக்கலாம்.
Jayakumar