அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.
*******
பாத்தியா தேவி உனக்கு அலங்காரம் பண்ணிவிட நாங்க எத்தன பேரு இருக்கோம்? என்னிக்காவது எனக்கு விபூதி டப்பாவையாவது யாராவது எடுத்துக் குடுத்திருக்கீங்களா...
ஆமா, கழுத்துல சதா அந்த வழ வழ necklace, போதாக்குறைக்கு தலல ஒரு பக்கம் கீர்ற மாதிரி பிறை கிளிப், இன்னொரு பக்கம் தொப்பலா நனைக்கிற மாதிரி அருவி… இதுல அலங்காரம் பண்ணிவிடலன்னு குறை வேற.....
நாங்கல்லாம் அலங்காரம் இல்லாமயே அசத்துவோமில்ல.. (சே தெரியாம வாய விட்டுட்டேன்....😟)
ஓம் ஶ்ரீ வசுதாயை நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
சாயங்காலம் ஆயிடுச்சு, அம்மா, வீடு எங்கன்னு கேட்டா, இன்னும் கொஞ்ச தூரம் னு சொல்லியே காலேலேர்ந்து நடத்தி கூட்டிக்கிட்டு போறா தேவி, ஹ்ம்ம்… எப்போ வீட்டுக்கு போய் எப்போ சாப்பிடறது...
என்ன சிம்மா சொன்ன?
ஒண்ணுமில்ல தேவி, உங்க முகமும் அந்தி வானமும் ஒரே நிறமா இருக்குன்னேன்… (நம்ம Mind voice வெளில கேக்குதா என்ன...🫢)
ஓம் ஶ்ரீ கடாக்ஷ கிங்கரி பூத கமலா கோடி சேவிதாயை நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
புலிக் கண்ணா, இதே மாதிரி சமத்தா ஒழுங்கா அமைதியா இருக்கணும் எப்பவும் என்ன?
சரி தேவி, நீங்க சொன்னா
மீறுவேனா? உங்களோட இருக்கும்போது மட்டும்தான?
(போட்ற condition ஐப் பார்த்தா நான் vegan diet குத்தான் மாறணும் போல இருக்கு...😟)
ஓம் சசாமர ரமாவாணி சவ்ய தக்ஷிண சேவிதாயை நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
ஐ என்னை அழகா அலங்காரம் பண்ணிக் கூட்டிட்டுப் போறியே நவராத்திரி பூஜைக்குத்தான? Thanks மா 🥰
இல்ல, அப்பாட்டதான் விட்டுட்டு போகப்போறேன். அங்க வந்தா உன்னோட வாகனம் பண்ற லூட்டி தாங்கல. பிரசாதத்துல எல்லாம் பூந்து hide & seek விளையாடிட்டு இருக்கு...
(அதுக்கு இந்த அலங்காரமெல்லாம் பண்ணியிருக்கவே வேண்டாம்… ஒட்டியாணம், தலல செம்பருத்திப் பூ எல்லாம் waste....😒)
ஓம் சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
அம்மா அந்த யானையில்ல? என்ன தன்னோட குட்டின்னு நெனச்சுண்டு தூக்கிண்டு போகப் பாத்துது.. அப்புறம் நான் அதை ஓங்கி குத்தினேனா அது குனிஞ்சுது, உடனே குதிச்சு ஓடி வந்துட்டேன்...
சரிடா செல்லம்.. நாளைக்கு மீதி கதையைச் சொல்லு. இப்ப வீட்டுக்குப் போகலாம் என்ன?
ஓம் ஶ்ரீ விநாயகாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
காது பக்கத்துல க்ளிங் க்ளிங் னு காசு விழற சத்தம் விடாம கேட்டுகிட்டே இருக்கு. பக்கத்துல ஆந்தை வேற முழுச்சுக்கிட்டு! நான் வேணா அந்த பக்கம் அன்ன பக்ஷி பக்கத்துல போய் உக்காந்துக்கட்டுமா தேவி?
உன் plan என்னன்னு தெரியும். பேசாம இங்கயே உக்காரு சிம்மா...
(நடை கத்துக்கலாம்னு கேட்டா..... தப்பாத்தான் படுது.... சே நம்ம ராசி அப்படி...😒)
ஓம் ஶ்ரீ துர்கா, லக்ஷ்மி, சரஸ்வத்யை நமஹ🙏🏻🙏🏻🙏🏻
ஓம் ஶ்ரீ லலிதாம்பிகாயை நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
*******
அப்பாடா, எப்போ உன்னைப் பார்ப்போம்னு ஆயிடுத்து மா. இந்த அப்பா இயற்கை உணவு, ஆர்கானிக், hygene ன்னு எல்லாம் சொல்லி ரொம்ப படுத்திட்டார். நாக்கு மரத்தே போயிடுத்து. இன்னிக்கு நன்னா உப்பொரப்பா வத்தக்கொழம்பு, கீரை மசியல், வடாம் பண்ணிப் போடு மா please😘
சரிடா செல்லம் 😘(அப்படி வா வழிக்கு - என் சமையல்ல எத்தன நொட்ட நொள்ள சொல்லுவீங்க??? )
ஓம் தேவ்யை நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் (g)கம் கணபதயே நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
28 டிசம்பர் 2025








//"சரிடா செல்லம்.. நாளைக்கு மீதிக்கு கதையை சொல்லு.. இப்போ வீட்டுக்கு போகலாம்"//
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா...
படங்களை அழகு. வரிகள் ரசனை.
// படங்களை அழகு //
நீக்கு^ படங்கள் அழகு.
இன்றைய வாசகம் ரொம்பவே சரி!!!
பதிலளிநீக்குகீதா
முதல் படத்துக்கான வரிகளை வாசித்து சிரித்துவிட்டேன்!!!
பதிலளிநீக்குகீதா
ஒவ்வொரு படத்தின் வரிகளையும் வாசிச்சு சிரிச்சு முடிலைடா சாமி.....அதுவும் யானைக்குட்டின்னு நினைச்சு கதை....
பதிலளிநீக்குகடைசிப் படமும் வரிகளும், அந்த படம் - //இல்ல, அப்பாட்டதான் விட்டுட்டு போகப்போறேன். அங்க வந்தா உன்னோட வாகனம் பண்ற லூட்டி தாங்கல. பிரசாதத்துல எல்லாம் பூந்து hide & seek விளையாடிட்டு இருக்கு...//
இதுக்குப் பிறகு ரொம்ப ஆப்ட்!!!!
கீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. இன்றைய அழகிய படங்களும், அதற்கேற்ற வரிகளையும் பார்த்துப் படித்து ரசித்தேன்.
/காது பக்கத்துல க்ளிங் க்ளிங் னு காசு விழற சத்தம் விடாம கேட்டுகிட்டே இருக்கு. பக்கத்துல ஆந்தை வேற முழுச்சுக்கிட்டு! நான் வேணா அந்த பக்கம் அன்ன பக்ஷி பக்கத்துல போய் உக்காந்துக்கட்டுமா தேவி?
உன் plan என்னன்னு தெரியும். பேசாம இங்கயே உக்காரு சிம்மா...
(நடை கத்துக்கலாம்னு கேட்டா..... தப்பாத்தான் படுது.... சே நம்ம ராசி அப்படி...😒)/
ஹா ஹா ஹா மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முதல் படம் வரிகளும் அழகு
பதிலளிநீக்கு