தொகுப்புகள்

ஞாயிறு, 21 ஜூன், 2026

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி எழுபத்தி ஆறு - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.  


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.


*******



கன்னுக்குட்டி செல்லம் நான் வெண்ணெய்ப் பானையை இங்க கொண்டு வந்ததை அம்மாட்ட மூச்சு விடாத என்ன? சமத்து...🥰


(ஹ்ம்ம் தப்புக்கு துணை போறது தப்பில்லையா?😕)


தப்பை தப்புத் தப்பா யோசிச்சா தப்பாத்தான் போகும்… விடு.... உனக்கு மாலை எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா??


(ஏதோ தப்பா இருக்கே??🤔விசு கிட்ட training எடுத்திருப்பானோ☹️)


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******



என்ன நாதா அப்படிப் பாக்கறீங்க?


இல்ல தேவி உன் கிரீடம் வித்தியாசமா இருக்கேன்னுதான்..


அதுவா, இத வெச்சுக்கிட்டா 

கூந்தல் வளைந்து சுருட்டையாக ஆகிவிடுமாம்...


ஓஹோ சரி சரி ( அப்ப இயற்கையாகவே உன் முடி சுருட்டை இல்லையான்னு  கேக்க மாட்டேன், அப்புறம் திரும்ப ஒரு debate க்குப் போகணும், நெத்திக் கண்ணைத் திறக்கணும்.. எதுக்கு தேவையில்லாத strain?..) 


ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻


*******



வேல் சரி, உன் வலது பக்கம் இருக்கறது என்ன வேலவா ஏதோ பரணி மாதிரி.உள்ள என்ன?


உனக்கு ஒண்ணும் இல்ல மயில் bro, காலிங் bell தான். என் photo shoot முடிஞ்சதும் இதை அடிப்பேன் அம்மா வந்து தூக்கிண்டு போய் சாதம் ஊட்டுவா...


(நாம அதை வேடிக்க பாக்கணும்..ஹ்ம்ம்😏)


ஓம் சரவண பவாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******



இந்த தேவி பண்ணின வேலை, எனக்கு நகையெல்லாம் போட்டுவிட்டு கோவில் முன்னால உக்காரச் சொல்லி snaps எடுக்கறா… Instagram status ஓ என்னவோ ஏதோ ஒரு கண்றாவி… சே.... தியானத்துல லயிக்கவே முடியலையே… இந்த பாரத்தை எல்லாம் இறக்கி வெச்சாத்தான் நிம்மதி....


முதல்ல அதப் பண்ணுங்க மஹாதேவா… உங்க necklace க்கு நடுவுல நான் 🐍 மாட்டிக்கிட்டு free யா move பண்ணக்கூட முடியல😧(நான் இருக்கற இடத்துல இதுகளா 😕)


ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻


*******



சண்முகனைப் போல நீயும் எனக்கு ஏதாவது உபதேசம் பண்ணப் போறியா கணேசா?


இல்லப்பா, அந்த ஓம்கார வடிவே நான்தானாமே.. அதைச் சொல்ல வந்தேன்...


ஆமா கணேசா… இப்போ ஆங்காரத்தோட கோவிச்சுக்கிட்டு முகத்தைத் திருப்பிக்கிட்டு இருக்கற மூஞ்சூருக்கு லட்டு கொடுத்துடு.. பசிக்குது போல இருக்கு....



ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻


*******



பின்னாடி கைலாயம் நல்லா தெரியறமாதிரி எடு கிருஷ்ணா...


அப்படியே மொபைலை கொஞ்சம் இறக்கி நான் படம் 🐍 எடுக்கிறதயும்  படம் எடுங்க....🙂


Confuse பண்ணாத snakidha,  இப்ப படம் நாங்க எடுக்கணுமா நீயா....


ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻

ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******



அம்மா அங்க பாத்து சிரி photo எடுக்கறாங்க இல்ல?


சரி சரி போதும், போய் விளையாடு கிருஷ்ணா..


சரிம்மா நீ சொல்லி எதை நான் தட்டியிருக்கேன்??? (வெண்ணை அதுக்குள்ள எடுத்து முடிச்சுடுவா... அப்ப வந்துக்கலாம்)


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

21 ஜூன் 2026


2 கருத்துகள்:

  1. முதல் படம் அந்தக் கன்றுக்குட்டி அதன் கண்கள் innocence சூப்பராக இருக்கு...கவர்கிறது

    தப்பே இல்லை!!! வீட்டில் வெண்ணை தயிர் எல்லாம் யாருக்கு கிச்சா குழந்தைக்குத்தானே!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. வலப்பக்கம் காலிங் பெல் - ஹாஹாஹா நல்ல கற்பனை.

    நான் நினைச்சேன் முருகனும், கிச்சாமாதிரி வீட்டிலிருந்து ஏதோ கொண்டு வந்து அதைக் கிண்ணம் போட்டு கவிழ்த்தி மறைச்சு வைச்சிருக்கார் போலன்னு!!

    என்னாச்சு கிச்சா குழந்தைனா சிவனையும் குழந்தையாக்கிட்டாங்களே

    படங்களும் வரிகளும் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....