அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.
*******
அப்பா, அம்மா வந்தாச்சு வாகனத்தோட. கிளம்புங்க பா. நேரமாச்சு....
(அதெப்படி உக்காந்தா உடனே தியானத்துல போயிடராரு… ஒருவேளை அம்மா வரதப் பாத்துட்டாரோ...)
ஓம் சசாமர ரமாவாணி சவ்ய தக்ஷிண சேவிதாயை நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
ஆமா, எல்லா லோடும் எனக்குத்தானா ரிஷப bro முன்னால ஜாலியா போறான்! வந்ததைவிட இப்ப போகும்போது கனம் ஜாஸ்தியா இருக்கே...
என்ன சிம்மா முணு முணுக்கற? நவராத்திரி கொண்டாடுவது எனக்கா மஹாதேவனுக்கா? அப்ப நீதான் சுமக்கணும்… என்ன? கனம் இப்போ ஜாஸ்தியா? என் பக்தர்கள் ஆசையா சமர்ப்பிச்ச புடவையெல்லாம் அங்கேயே விட்டுட்டு வரமுடியுமா? அவர்கள் பாவம் இல்லையா?
ஆமாமா, அவங்க எல்லாரும் பாவம்தான்.... சுமக்கிறது யாரு..... ஹ்ம்ம்ம்..
ஓம் சிவசக்தியைக்ய ரூபிண்யை நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
ஏம்மா எனக்கு ஊட்டி விட்டுட்டு அப்புறம் இப்படி தக தகன்னு நாம டிரஸ் பண்ணிக்கிட்டிருக்கலாம் இல்ல?
அதனால இப்ப என்ன கணேசா?
ஒண்ணுமில்ல, dress ல இருக்கற கல்லு ஏதாவது லட்டோட சேர்ந்து வாய்க்குள்ள போயிடப் போகுதுன்னு சொன்னேன் (யப்பா முதுகெல்லாம் உறுத்தல் வேற....😟)
ஓம் கணேசாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
********
எனக்கு ஒரு சந்தேகம் மஹாதேவா..
Very Good. கேளு நந்தி, ஆன்மீகம் சம்பந்தமாவா
அத்வைதம் பத்தியா?
அதில்ல மஹா தேவா நீங்க உக்காந்திருக்கீங்க இல்ல புலித் தோல் மேல. அந்தப் புலி போகும்போது முழுச்சுக்கிட்டே போயிருச்சா? இப்பவும் முறைக்கற மாதிரியே இருக்கு? 😟
அதான பாத்தேன்...😏 இப்ப அது ரொம்ம்ம்ப முக்கியம்..... ஹ்ம்ம்.
என்னை கொஞ்சம் நிம்மதியா தியானம் பண்ண விடறியா?
Sure....🤷♀️
ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻
********
ஏம்மா கையை இப்படி வெச்சுக்கச் சொன்ன சரி, அதுல யாரு உன்ன நாமம் போடச் சொன்னது? ஓவரா இருக்கு?
உன் நாமம் எங்கும் பரவணும்னுதான் கிருஷ்ணா...
அது இந்த நாமமில்ல.. அப்புறம் எனக்கு நகை போட்டு விடும்போது இப்பிடி கனமா கிரீடம், காசுமால ஒட்டியாணம் எல்லாம் வேண்டாம் simple ஆ necklace, செயின் போட்டுவிடு போதும், (யப்பா மொத்தம் 200 பவுன் இருக்கும்போல இருக்கு.. எப்படித்தான் சுமக்கறாங்களோ!😕) தலைய அசைக்க முடியல...
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
********
எதுக்குப்பா அம்மா கண்ணைப் பொத்தி கூட்டிக்கிட்டு போறீங்க?
Shhhhhh🤫. ஜவுளிக்கடை நகைக்கடை எல்லாம் வரிசையா வருது. அதைத் தாண்டிட்டோம்னா நாம safe...
(Online ல அம்மா ஏற்கெனவே எல்லார்க்காகவும் ஆர்டர் பண்ணினது அப்பாக்கு இன்னும் சொல்லலையோ...
எப்படியும் வந்தா தெரியப்போகுது! COD தான..)
ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻
*******
என்ன கணேசா கைல? மோதகமா அப்பமா லட்டா? இங்க வந்து உக்காந்து சாப்பிடேன்.. என்ன சொல்லப்போறேன்?
ஏம்மா எப்பவுமே நான் தீனியைத்தான் வெச்சுக்கிட்டிருப்பேனா கைல? உனக்காக பூ பறிச்சுண்டு வந்து surprise ஆ கொடுக்கணும்னு வந்தேன்… எனக்கு நன்னா வேணும்...😒
அச்சச்சோ... என் செல்லமே...கன்னுக்குட்டி... எங்க, ஒரு முத்தா குடு....😘
ஒண்ணும் வேணாம்.... எல்லாத்தையும் சொல்லிட்டு....😏
ஓம் கணேசாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
********
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
1 நவம்பர் 2026








அழகிய படங்கள். ரசனையான வரிகள். ரசித்தேன்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை இன்றைய வாசகமும் நன்றாக உள்ளது.
இன்றைய அழகான படங்களும், அதற்கேற்ற வாசகங்களும் மிக அருமை.
நந்தி தேவனின் டவுட் சிரிப்பை உண்டாக்கியது.
கிருஷ்ணரின் நாமம் பற்றிய அங்கலாய்ப்பு அருமை. ஆம், அவரின் நாமந்தானே நமக்கு வேதம். அவர் கையிலுள்ள நாமத்தை ரசித்தேன். அவர் நாமத்தை வாயாற சொல்லி மகிழ்ந்தேன்.
விநாயகரின் அழகான வருத்தம் புரிந்தது. பூவை தந்ததும் அவரின் செல்ல கோபம் மறைந்திருக்கும். அனைத்தும் அழகான படங்கள். ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.