தொகுப்புகள்

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

விடை தெரியாத கேள்விகள்



நாம் எல்லோருமே தினமும் பலவிதமான மனிதர்களை சந்திக்கிறோம். பல நிகழ்வுகளை காண்கிறோம். அது போன்ற நேரங்களில் நமக்குள் நிறைய கேள்விகள் எழுகின்றன. அவற்றில் பல கேள்விகளுக்கு விடை கிடைப்பதில்லை. அவைகளில் சில இங்கே…

1. வங்கிகள், சினிமா அரங்கம், பேருந்து நிலையம், ரேஷன் கடை போன்ற இடங்களில் வரிசையில் சென்றால் எல்லோருக்கும் முறையான சேவைகள் கிடைக்கும். ஆனால் அதை விடுத்து குறுக்கே செல்வது, ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்வது என இருக்கிறார்கள். பெரும்பாலானவர்களிடம் இது போன்ற குணங்கள் இருப்பதை காண்கிறேன். இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்க்கும்போது எனக்குள்ளும் ஒரு மிருகம் அவ்வப்போது எட்டிப்பார்ப்பது உண்டு. இப்படிப்பட்ட மனிதர்கள் திருந்துவது எப்போது?

2. இயந்திர கதியில் செல்லும் இந்த மாநகர வாழ்க்கையில் “பொறுமை” என்ற வார்த்தை அகராதியில் இருப்பதே நிறைய மனிதர்களுக்கு மறந்து விட்டது போலும். சாலையில் செல்லும் போது வாகன ஓட்டிகள் யார் முதலில் செல்வது என தங்களுக்குள் போட்டி போட்டுக் கொள்வதால் எத்தனையோ சண்டை - சச்சரவுகள், கைக்கலப்புகள் அனுதினமும் நடக்கிறது. “பொறுமையின் பெருமை"யை இவர்களிடம் யார் சொல்வது? எல்லாவற்றிலும் அவசரம் காட்டினால் அவசரமாகவே மேலே போக நேரிடும் என எப்போதுதான் இவர்கள் உணர்வார்கள்?

3. பெரிய கட்டிடங்களில் படிக்கட்டுக்களில் ஏறிச் செல்ல பக்கவாட்டில் அழகான, வழவழப்பான கைப்பிடிகள் இருக்கிறதை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். மேலிருந்து கீழே வரும்போது அந்த கைப்பிடிமேலே உட்கார்ந்து வழுக்கிக்கிட்டே வரணும்னு தோணும் [இந்த உணர்வு இம்சை அரசன் படம் பார்ப்பதற்கு முன்னாடிலேருந்தே இருக்கு]. எனக்கு மட்டும் தான் இது தோணுதா இல்ல எல்லாருக்கும் இதுமாதிரி தோணுமா?

4. தெருவில் நடந்து போகும்போது தாழ்வான மரக்கிளையைப் பார்த்தால் உடனே அதைப் பிடித்துத் கொண்டு தொங்க வேன்டும் என்ற எண்ணம் தோன்றுவது ஏன்? [”குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்” என்ற பாட்டு நியாபகமெல்லாம் வரக்கூடாது சொல்லிட்டேன் அக்காங்!]

 
மீண்டும் சந்திப்போம்!

வெங்கட்.

30 கருத்துகள்:

  1. நல்ல கேள்விகள் வெங்கட். ஆனால் பாருங்க எனக்கும் விடை தெரியலை.

    பதிலளிநீக்கு
  2. 1) உங்களுக்குள்ளிருந்து ஒரு மிருகம் எட்டிப்பார்ப்பது போலவே, ஒரு 10 பேர்களுக்குள்ளிருந்து 10 மிருகங்கள் ஒரே நேரத்தில் பாய்ந்து புறப்படத் தயாராக இருக்கணும். அப்போது தான் க்யூவில் வராத அந்த மிருகமும், பயந்து ஒதுங்கும்.

    2) உடம்பில் ரத்தம் சுண்டும் வரை அல்லது அடிபட்டு தலையோடு கால் கட்டுப்போடப்பட்டு, ஒரு மண்டலமோ அல்லது 108 நாட்களோ எலும்பு முறிவு தீவிர சிகிட்சைப்பிரிவில் இருந்து விட்டு டிஸ்சார்ஜ் ஆகும்வரை, பொறுமை என்றால் வீசை என்னவிலை என்று தான் கேட்பார்கள்.

    3)உங்களைப்போன்ற பயமறியாத இளங்கன்றுகளுக்கு மட்டுமே இதுபோன்ற அழகான வழவழப்பான ஐட்டங்களில், ஏறத்தோன்றும்.

    4) பொதுவான நேரங்களில் உடற்பயிற்சிக்காக இருக்கலாம்.

    பொதுத்தேர்தல் நேரங்களில், பெரிய பெரிய புள்ளிகளெல்லாம் நம்மைத் தொங்கோ தொங்கெனத் தொங்குகிறார்களே, வோட்டுப்போடச்சொல்லி, அதனால் ஏற்படும் விளைவாகவும் இருக்கலாம்.

    ஏதோ வழுவட்டைத்தனமாகத் தோன்றியவற்றை எழுச்சியுடன் எழுதி விட்டேன். அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  3. முதல் இரண்டு கேள்விகளுக்குப் பதில்-நடக்காது நம் நாட்டில்!
    அடுத்த் இரண்டு கேள்விகள்--நம்முள் இருக்கும் குழந்தைத்தனம் எட்டிப் பார்க்கும் நேரங்களவை!

    பதிலளிநீக்கு
  4. முதல் இரண்டு கேள்விகளும் - எரிச்சல் ரகம். அடுத்த இரண்டு கேள்விகளும் குழந்தை மன ரகம்.

    பதிலளிநீக்கு
  5. ஜனநெருக்கடியும் பணநெருக்கடியும் உள்ள தேசத்தில் முதல் ரெண்டு கேள்விகள்.... ஒன்றும் சொல்வதற்கில்லை.
    கடைசி ரெண்டு கேள்விகள் எனக்கும் தான் அப்படித் தோணும் என்று சொன்னால் என்னை சிறுவன் என்று ஏற்றுக்கொள்வீர்களா? ;-))

    பதிலளிநீக்கு
  6. கேள்விகள் விடை கண்டுபிடித்து ஒரு பதிவாக போடுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. //வங்கிகள், சினிமா அரங்கம், பேருந்து நிலையம், ரேஷன் கடை போன்ற இடங்களில் வரிசையில் சென்றால் எல்லோருக்கும் முறையான சேவைகள் கிடைக்கும்.//

    முக்கியமாக 'அரசு மருத்துவமனை'யை குறிப்பிட மறந்து விட்டீர்களே?

    நல்ல கேள்விகள், விடைதான் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  8. மிருக குணமில்லீங்க,நாம்மட்டும் முன்னேறி போயிடலாம் என்கிற சுயநலமுங்க

    பதிலளிநீக்கு
  9. இன்னுமா இதுக்கெல்லாம் விடை தேடிட்டிருக்கீங்க?...

    பதிலளிநீக்கு
  10. முதல்ல கேட்ட கேள்விகளுக்கான எரிச்சலை கடுப்பைக் குறைக்க ஜாலியா எதாச்சும் செய்யலாம்ன்னு தோணுது போல :))

    பதிலளிநீக்கு
  11. ரூம் போட்டு யோசிப்பீங்களோ :))

    பதிலளிநீக்கு
  12. நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாரதி மனமும்

    குழந்தை மனமும் இருக்கு போல உங்களிடம் வெங்கட்.

    குழந்தை மனத்தை தொடர்ந்து கடை பிடியுங்கள்.

    பதிலளிநீக்கு
  13. முதல் ரெண்டு கேள்விகள்... ச்சாய்ஸில் விட்டுட்டேன்.

    அடுத்தது.. இளமையாய் ஃபீல் பண்ணுவதில் தப்பில்லைப்பா :-)))))

    பதிலளிநீக்கு
  14. உடம்பை நல்லா கவனிச்சுக்குங்க வெங்கட்ண்ணா... :)))

    பதிலளிநீக்கு
  15. //உடம்பை நல்லா கவனிச்சுக்குங்க வெங்கட்ண்ணா... :)))/

    whyyyy

    பதிலளிநீக்கு
  16. முதல் இரண்டு கேள்விகளுக்கும் வை கோபாலகிருஷ்ணன் சாரின் பதிலை ரிப்பீட்டுகிறேன்.
    மூன்றாவது அதெல்லாம் தோணலைன்னா நாம நம்ம மனசை ரிலாக்சா வச்சுக்க தெரிஞ்சுக்கணும்னு அர்த்தம்.
    நான்காவது டென்ஷன் வாழ்க்கைலேருந்து இம்மாதிரி நிகழ்வுகள் நம்மை நம் மனம் போல் இருக்க வைக்கக் கூடியது

    பதிலளிநீக்கு
  17. கேள்விகள் அம்சமாய் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  18. ஹாஹாஹா.. எல்லாரும் நம்மள மாதிரித் தானா..

    பதிலளிநீக்கு
  19. 1.இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்க்கும்போது எனக்குள்ளும் ஒரு மிருகம் அவ்வப்போது எட்டிப்பார்ப்பது உண்டு. இப்படிப்பட்ட மனிதர்கள் திருந்துவது எப்போது?/

    அவர்கள் திருந்த மாட்டார்கள் நம்மைச் சோதிக்க வந்தவர்கள்தான் அவர்கள். அவர்களைப் பார்த்து சிரிப்புதான் வரும் எனக்கு...

    கோபம் வந்தால் நாமும் அவர்போல விலங்காகிவிடுவோமே..

    என எண்ணிக்கொள்வேன்

    பதிலளிநீக்கு
  20. இந்த பகிர்வும் நல்லாதான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  21. @@ எல்.கே.: அச்சச்சோ! உங்களுக்கும் தெரியலையா? சரி பார்க்கலாம். நன்றி கார்த்திக்.

    ## வை.கோபாலகிருஷ்ணன்: இப்படி ஒரு விரிவான பதிலைத் தான் நான் எதிர்பார்த்தேன். நன்றி சார்.

    @@ சென்னை பித்தன்: நல்ல பதில்கள். நன்றி சார்.

    ## சித்ரா: நன்றி சித்ரா.

    @@ ஆர்.வி.எஸ்.: ”என்னை சிறுவன் என்று ஏற்றுக் கொள்வீர்களா?” - அதில் என்ன சந்தேகம். மனதளவில் நாம் எல்லோருமே சிறுவர்கள்தானே. நன்றி மைனரே.

    ## இராஜராஜேஸ்வரி: இது நல்ல யோசனையா இருக்கே.. :) நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே.

    @@ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: நன்றி ஆச்சி.

    ## அமைதி அப்பா: சரியாக சொல்லி இருக்கீங்க! அந்த இடம் இன்னும் மோசம். விடை தெரியாத கேள்விகள் தான் நம்மிடம் அதிகம் இருக்கிறது போல! மிக்க நன்றி.

    @@ வலிபோக்கன்: முதல் வருகைக்கு நன்றி நண்பரே. நீங்கள் வழி போக்கனா இல்லை வலி போக்கனா :)

    ## கே.பி. ஜனா: அவ்வப்போது கேள்வி கேட்டுக்கொள்வதுண்டு. :)

    @@ முத்துலெட்சுமி: :) இருக்கலாம். நன்றி முத்துலெட்சுமி.

    ## மோகன் குமார்: ரூம் வேற போட்டு யோசித்தால் இன்னும் நிறைய பதிவு எழுதலாமே :) நன்றி மோகன்.

    @@ கோமதி அரசு: குழந்தை மனதை தொடர்ந்து கடை பிடித்திடுவோம். மிக்க நன்றிம்மா.

    ## அமைதிச்சாரல்: இந்த கேள்வித் தாளில் சாய்ஸ் இல்லை :) மிக்க நன்றி சகோ.

    @@ அன்னு: ”உடம்பை நல்லா கவனிச்சுக்குங்க வெங்கட்ண்ணா!” உடம்பையா இல்லை மனதையா! தில்லியில் வெய்யில் ஜாஸ்தியாகிடுச்சுன்னு சொல்ல வரீங்களா?:) நன்னி ஹை!

    ## எல்.கே: மேலே அன்னுவுக்கு சொன்ன பதில் பாருங்க கார்த்திக்!

    @@ ராஜி: நல்ல பதில்கள். பயணம் எல்லாம் நல்ல படியா இருக்கா! நன்றி.

    ## அமுதா கிருஷ்ணா: நன்றி சகோ.

    @@ விக்னேஷ்வரி: ஹை நம்ம கட்சில ஒரு ஆள் இருக்காங்கப்பா! சந்தோஷமா இருக்கு! நன்றி விக்கி.

    ## புதுகைத் தென்றல்: :)))) நன்றி சகோ.

    @@ முனைவர் இரா. குணசீலன்: நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் பகிர்வில் உங்களது கருத்து. மிக்க நன்றி முனைவரே.

    ## ஆசியா உமர்: நல்லா இருக்கா? நன்றி சகோ.

    இண்ட்லி மற்றும் தமிலிஷ்-ல் வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  22. திரு வெங்கட் அவர்களே,
    தங்கள் கேள்விகளுக்கு ,"நான் , நீ என்று போட்டிபோட்டுக்கொண்டு, சகோதர, சகோதரிகள் பதில் இயம்பிட்ட நிலையில் " எனது பங்களிப்பு சுவாரசியம் குன்றியதாகத்தான் இருக்கும்.ஏதோ எனக்கு தெரிந்ததை கூறுகிறேன்.
    நாம் யாவரும் குணத்தால் மிருகத்திலிருந்து வேறுபட்டு மற்றவரால் இனம்காண உறுதுணையாக இருப்பது, நமக்கு அளிக்கப்பட்டுள்ள பகுத்தறிவு என்ற ஒன்றேயாகும். இதனால் பிறக்கும் பொறுமை, சகிப்புத்தன்மை, எல்லோரையும் நேசிக்கும் குணம் இவற்றோடு விவேகம் கலந்த ஒரு பண்பாடு என்கின்ற இவைகள் யாவும் நம்மை ,தங்கள் கூறிய மற்றும் கூறாமல் விட்ட சந்தர்பங்களில் , சராசரி மனிதனிடமிருந்து நம்மை வேறு படுத்தி காட்டிடும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

    மந்தவெளி நடராஜன்.

    பதிலளிநீக்கு
  23. //தெருவில் நடந்து போகும்போது தாழ்வான மரக்கிளையைப் பார்த்தால் உடனே அதைப் பிடித்துத் கொண்டு தொங்க வேன்டும் என்ற எண்ணம் தோன்றுவது ஏன்//

    You're not alone in this..:) Honestly, when we're kids we dont care about what others would say and do a we wish... when we grow up that spontaneous goes away and all this hestitation takes its place... by the way we lose the little little funs behind it...சும்மாவா சொன்னாங்க... அழகிய பிள்ளை பருவம்னு...:))

    பதிலளிநீக்கு
  24. @@ வி.கே. நடராஜன்: தங்களது தொடர் வருகைக்கும் உற்சாகமளிக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    ## அப்பாவி தங்கமணி: ”அழகிய பிள்ளைப்பருவம்!” - நல்லா சொன்னீங்க அம்மிணி! மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  25. அன்புள்ள திரு.வெங்கட்...
    உங்கள் முதலிரண்டு கேள்விகளில் தொக்கி நிற்கும் ஆதங்கம் எனக்கும் உண்டு. ஏன் க்யூவில் வர மாட்டேன் என்கிறார்கள் என்று சுய வருத்தம் கொள்வதை விட்டு விட்டேன்..பிடிவாதமாய் க்யூவில் வரும் நல்லிதயங்களை வாழ்த்ததொடங்கினேன்....வராதவர்கள் காணாமல் போனார்கள்...முயலுங்கள்...

    பதிலளிநீக்கு
  26. @@ லக்ஷ்மிநாராயணன்: நல்ல யோசனை. முயற்சி செய்கிறேன்…. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  27. திரு. மௌலி நடித்த ஒரு திரைப் படத்தில்
    வித்தியாசமான ஆசையெல்லாம் வரும்.. செய்தும் பார்ப்பார் அவர்.

    பதிலளிநீக்கு
  28. @@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. மௌலி அவர்களது நிறைய நாடகங்களிலும், சினிமாக்களிலும் நல்ல காமெடிக்கள் வைத்திருப்பார். ரசித்திருக்கிறேன்..

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....