தொகுப்புகள்

புதன், 3 ஆகஸ்ட், 2011

டீக்கடைச்சூரியன்



தலைநகரில் இருக்கும் நண்பர் அகஸ்டஸ் அவர்களின் முதல் கவிதைத் தொகுப்பு “டீக்கடைச்சூரியன்”. தன்னுடைய முதல் கவிதைத் தொகுப்பினைத் தனது தந்தைக்கு சமர்ப்பணம் செய்துள்ள அவர் இத் தொகுப்பில் 25 கவிதைகளைத் தொகுத்து அளித்துள்ளார்.

முதல் கவிதை – வார்த்தைப்பாடு. அது இப்படித் தொடங்குகிறது…



ஆதியில் வார்த்தை
ஆண்டவனிடம் இருந்தது
அவன் அதை மனிதனில் விதைக்க
முளைத்தது நாக்கு
கர்ப்பத்தோட்டம் தன்
கதவு திறந்து துரத்த
மாபெரும் வெளியில் நின்று
வார்த்தைகளை
வீசி விதைப்பதும் அறுப்பதும்
சிக்கிமுக்கிக்கற்கள் போலுரசித்
தீயில்
காய்ந்து கொள்வதும்
கரிந்து போவதுமாய்
மனிதன் நகர்ந்தான்
ஆதி வார்த்தையிலிருந்து….

இவரது கவிதைத் தொகுப்பிற்கு முன்னுரை எழுதியிருக்கும் “வெங்கட் சாமிநாதன்” ”அகஸ்டஸ் தனக்கென ஒரு மொழியை உருவாக்கிக் கொண்டுள்ளார். அந்த மொழி நமக்குத் தரும் படிமங்கள் அவரது அனுபவம் தந்த சித்திரத்தின் படிமங்கள்” என்று எழுதி இருக்கிறார்.

இவரது கவிதைகள் உன்னதம், சொல் புதிது, வேர்கள், நவீன விருட்சம், சிருஷ்டி, வடக்கு வாசல் போன்ற இதழ்களில் வெளி வந்துள்ளன. சில கவிதைகள் சற்றே பெரியவை போன்று தோன்றினாலும் படிப்பவரை சிந்திக்கத்தூண்டும் விதமாய் அமைந்திருப்பது இவரின் சிறப்பு.

இந்தக் கவிதைத் தொகுப்பில் எனக்குப் பிடித்த நிறைய கவிதைகள் இருக்கின்றன. அவற்றில் ”சிலைகள் அமைதியிழக்கும் நாட்கள்” என்ற தலைப்பிட்ட கவிதை கீழே:

இடுப்புவரை அலையாடி
விளையாடிக் கிடப்பது
கடல்தானென்றால்
கைகளால் விலக்கிக்
கால்களால் முன்னேறி
வெளிவந்து விடலாம்தான்

கடலல்ல
கருங்கற்பாறை
இடுப்புக்குக்கீழே இறுகிக்கிடக்க
யோசித்தபடியே டீ குடித்து
பீடிப்புகையை முகத்தில் ஊதுகின்ற
சிற்பியையே
வெறித்துக்கொண்டிருந்தது
தலையிலிருந்து
இடுப்புவரை
செதுக்கிவிடப்பட்ட சிலை.

இத்தொகுப்பில் இருக்கும் இன்னுமொரு கவிதை இந்திரப்பிரஸ்தத்தில் இவர் வாங்கிய நண்டு ஒன்று தன் வீடு தேடி தூத்துக்குடி கடல் கேட்டுச் செல்வதைப் பற்றிய “வீடுபேறு” என்ற கவிதை.

வார்த்தைப்பாடு என்ற கவிதையில் துவங்கி, தனது தந்தைக்கான “அஞ்சலி” என்ற கவிதையுடன் முடிகிறது இந்தக் கவிதைத் தொகுப்பு. இந்த நல்ல கவிதைகளை வெளியிட்டது நிலா பதிப்பகம். இந்தப் புத்தகத்தினை அழகாய் அச்சாக்கம் செய்து விற்பனை உரிமை வைத்திருப்பது வடக்கு வாசல் அச்சகம். புத்தகத்தின் விலை ரூபாய் 50 மட்டுமே. புத்தகம் வேண்டுபவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

வடக்கு வாசல்
5A/110032, II Floor,
Gali No.9,
Sat Nagar, Karol Bagh,
New Delhi – 110 005.

35 கருத்துகள்:

  1. பகிர்வுக்கு நன்றி வெங்கட்ஜி. தலைநகரில் தமிழ் ஓங்குகிற தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. pakirvukku nanri... nalla kavithai puththaka arimukaththirkku nanri...vaalththukkal

    பதிலளிநீக்கு
  3. கவிதைகளும் அறிமுகமும் நல்லாயிருக்கு. பாராட்டுக்கள் தங்களுக்கும், கவிஞருக்கும்.


    Voted 3 to 4

    பதிலளிநீக்கு
  4. அந்த சிலைக்கவிதை எனக்கும் ரொம்ப பிடிச்சது.
    கடல்தானென்றால் ... ப்ரச்சனைகளை எல்லாம் இப்படி நினைச்சுப்பார்த்தோம்ன்னா..ம்...

    பதிலளிநீக்கு
  5. @ சேட்டைக்காரன்: தங்களது கருத்திற்கு மிக்க நன்றி சேட்டை. தமிழ் எங்கெங்கும் ஓங்கினால்தானே நமக்கும் சந்தோஷம்...

    பதிலளிநீக்கு
  6. # மதுரை சரவணன்: தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  7. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  8. # முத்துலெட்சுமி: திரு அகஸ்டஸ் அவர்களின் புத்தகத்தில் இருந்த எல்லாக் கவிதைகளும் பிடித்திருந்தது என்றாலும், இக்கவிதை மிகவும் பிடித்திருந்தது எனக்கும்.... பிரச்சனைகளை இப்படியும் பார்த்தால்.... ம்ம்ம்....

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. //”சிலைகள் அமைதியிழக்கும் நாட்கள்”//

    இக்கவிதை குறித்து என்னிடமும் சிலாகித்துக் கூறியிருந்தார் முத்துலெட்சுமி.

    நல்ல பகிர்வு. நன்றி. வாங்கி வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. பகிர்வுக்கு நன்றி வெங்கட்...
    நண்டு தன் வீடு தேடி தூத்துக்குடி கடல் கேட்டுச் செல்வதை...ரசித்தேன்..

    பதிலளிநீக்கு
  11. நல்ல கவிதை தொகுப்பு புத்தகத்தை பரிந்துரைத்தமைக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  12. நல்லதொரு விமரிசனம்.. இரண்டு கவிதைகளுமே பதமாக, புத்தகத்தை வாசிக்கும் ஆர்வத்தை தூண்டுது.. அதிலும், சிலைகள் அமைதியிழக்கும் நாட்கள் ரொம்ப அருமையாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  13. சிலைகள் அமைதியிழக்கும் நாட்கள் கவிதை சூப்பர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, இந்த ஒரு கவிதை போதும் இந்தப் புத்தகத்தின் அறிமுகத்திற்கு. பகிர்வுக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  14. சபாஷ்! ஒரு நல்ல புத்தகமும் கிடைத்தது. அதோடு ஒரு நல்ல புத்தக விமர்சகரும் கிடைத்தார்.

    பதிலளிநீக்கு
  15. @ ராமலக்ஷ்மி: தங்களது முதல் வருகை என்னை மகிழ்வித்தது சகோ. முத்துலெட்சுமி உங்களிடமும் இந்த கவிதை பற்றி சிலாகித்துப் பேசியது பற்றி அறிந்து மகிழ்ச்சி. வாங்கி வாசிக்கிறேன் என்று சொன்னது கவிஞரையும் மகிழச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. தொடர்ந்து வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  16. # Reverie: கவிஞரின் கற்பனை வளம் இந்த நண்டு கவிதையில் தெரிகிறது அல்லவா. தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  17. @ சித்ரா: நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது வருகை இந்தப் பக்கத்தில். மகிழ்ச்சி. விடுமுறை எல்லாம் நல்லபடியாக முடிந்ததா?

    பதிலளிநீக்கு
  18. # அமைதிச்சாரல்: கவிஞர் அகஸ்டஸ் அவர்களின் இப்புத்தகத்தில் எல்லாக் கவிதைகளுமே நன்றாக இருக்கின்றன சகோ. முடிந்தால் படியுங்கள். தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  19. @ ஜிஜி: உங்கள் கருத்து நன்றாக இருக்கிறது சகோ. “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” - அதானே.... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  20. # ஈஸ்வரன்: அட அண்ணாச்சி, இப்படி சொல்லிப்புட்டீங்களே! இது ஒரு அறிமுகமே - விமர்சனம் அல்ல.... தொடர்ந்து வந்து ஊக்குவித்தால் நல்லது அண்ணாச்சி.

    பதிலளிநீக்கு
  21. நீங்க ரசித்தகவிதைகளை எல்லாருடனும் பகிர்ந்து கொண்டது நல்ல விஷயம் நல்லது எங்கிருந்தாலும்
    தேடிப்பிடித்து வாசிப்பது என் பழக்கம்.

    பதிலளிநீக்கு
  22. கடலல்ல
    கருங்கற்பாறை
    இடுப்புக்குக்கீழே இறுகிக்கிடக்க
    யோசித்தபடியே டீ குடித்து
    பீடிப்புகையை முகத்தில் ஊதுகின்ற
    சிற்பியையே
    வெறித்துக்கொண்டிருந்தது
    தலையிலிருந்து
    இடுப்புவரை
    செதுக்கிவிடப்பட்ட சிலை.





    அருமை!!!!!!!!

    பதிலளிநீக்கு
  23. @ லக்ஷ்மி: விடுமுறை கழிந்து வந்ததும் தான் எங்களுக்கு நிம்மதி. எங்கள் பதிவினை நீங்களும் வாசித்து கருத்து சொல்லும்போது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி. வருகைக்கும் நல்ல கருத்திற்கும் நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  24. # DRபாலா: தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பாலா.

    பதிலளிநீக்கு
  25. @ சென்னை பித்தன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  26. கவிதைகள் அருமை! அறிமுகத்திற்கு இனிய நன்றி!

    பதிலளிநீக்கு
  27. # மனோ சாமிநாதன்: தங்களது வருகைக்கும் தொடர்ந்த ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  28. நூலறிமுகத்திற்கு நன்றி தல.. :-)

    பதிலளிநீக்கு
  29. கவிதை தொகுப்பு அறிமுகம் அருமை.கவிதையும் அருமை நன்றி.

    பதிலளிநீக்கு
  30. நல்ல அறிமுகம். பாராட்டுக்கள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
  31. @ RVS: நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது தளத்தில் உங்களது வருகை மைனரே. சற்றே அதிகமாய் வேலைப்பளு இருப்பதால் எந்த வலைத்தளத்திற்கும் அதிகமாய் வர இயலவில்லை.

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  32. # கோமதி அரசு
    @ ராம்வி

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  33. @ மாதேவி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....