தொகுப்புகள்

புதன், 29 பிப்ரவரி, 2012

உடைந்த சாவி – எஸ். ரா. சொன்ன கதை


[பட உதவி:  கூகிள்]

ஒரு பிரபல அமெரிக்க வங்கியின் மேலதிகாரிஅவருக்குத் தேவையான எல்லாப் பொருளையும், வசதிகளையும் காசு கொடுத்து வாங்காது அட்டையைத் தேய்த்து வாங்கும் பணக்காரர்வசதி இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் கொண்டவர்

ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பின் எண்பதாவது மாடியில் குடியிருக்கும் அவர் ஒரு நாள் தனது குடியிருப்பிலிருந்து வெளியே வர சாவி போட்டுத் திறக்க முயற்சிக்கும்போது சாவி உள்ளே மாட்டி உடைந்து விட, உடனே அலைபேசியில் உதவியாளரை அழைத்து பூட்டைத் திறக்க ஆள் அனுப்புமாறு சொன்னார்பூட்டினை மாற்றுச் சாவி செய்து திறக்க வந்த ஆள் சொன்னார், “பூட்டினை திறக்க பத்து டாலர் கதவின் கீழ் வழியே தள்ளுங்கள்”.

அந்த அதிகாரிதான் காசே வைத்துக்கொள்ளாத ஆளாயிற்றே… ”நீ கதவைத் திற நான் அட்டையைத் தேய்த்து உனது பணிக்கான கூலியைத் தருகிறேன்என்றாராம்இல்லை ஐயாவேலை முடிந்த பின் பலர் கூலி தராததால்வேலையை ஆரம்பிப்பதற்கு முன்னரே கூலி வாங்குவது என எங்கள் சங்கத்தில்  முடிவு செய்துவிட்டோம்என்று அந்த நபர் சொல்ல, வந்ததே  அதிகாரிக்குக் கோபம், "நீ இல்லையென்றால் என்ன, நான் வேறு யாரையாவது வைத்து கதவினைத் திறந்து கொள்கிறேன்!" என்று கூறி அவரை திட்டி அனுப்பினார்.   அந்த நபர், "நான் சங்கத்தில் உங்களைப் பற்றி ஒரு புகார் எழுதி விடுகிறேன்எங்கள் சங்கத்து ஆட்கள் யாரும் உங்கள் பூட்டினைத் திறக்க மாட்டார்கள்" என சொல்லிச் சென்றார்.

அதிகாரி உடனே தனது கீழே வேலை செய்யும் நபரை அழைத்து, நீ வந்து மாற்று சாவி போட்டு எனது வீட்டைத் திற எனச் சொல்ல, “சார் நீங்க இரண்டு நாளுக்கு முன்னாடி நான் அலுவலக நேரத்தில் வெளியே செல்ல அனுமதி கேட்டபோது, அலுவலகம் முடிந்த பின் செல்லச் சொன்னீர்கள், அது போல, இதுவும் அலுவலகம் சாரா விஷயம் அதனால் அலுவலகம் முடிந்தபின் வந்து கதவினைத் திறக்கிறேன்எனச் சொல்ல, அவரையும் திட்டினார்உடனே அவரது உதவியாளர், எனக்கு இது நல்ல வாய்ப்பு, என்னைத் திட்டியது பற்றி மேலதிகாரிகளுக்குப் புகார் அளிக்கிறேன் என சொன்னார்.

அடுத்து அந்த வங்கி அதிகாரி, தனது அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியை அழைத்து, தான் வீட்டினுள் மாட்டிக்கொண்டதாகவும், மாற்றுச் சாவி வைத்து திறக்கும்படி சொல்ல, காவலாளி சொன்னாராம் – “எத்தனை முறை என்னை சட்ட திட்டங்கள் சொல்லி மிரட்டுவீர்கள், இப்போது நீங்களேவீட்டின் உரிமையாளர் வீட்டிலிருக்கும்போது, காவலாளி மாற்று சாவி போட்டுத் திறக்கக்கூடாதுஎன்ற சட்டத்தினை மீறச்சொல்கிறீர்களே…  என்னால் முடியாது என்று அவரும் மறுத்து விட்டார்.

அடுத்தது அவர் அழைத்தது யாரை  என நினைக்கிறீர்கள்….  இவர்கள் எல்லோரும் வெளி ஆட்கள்என் காதலி என்னை நிச்சயம் கைவிட மாட்டாள் என அவளை தொலைபேசியில் அழைக்க, அவளோ , “என்னை எத்தனை முறை வரச்சொல்லிவிட்டு, அலுவல் வேலையில் மூழ்கி நீங்கள் வாராது என்னைக் காத்திருக்க வைத்திருக்கிறீர்கள்!, அதனால் இரவு வரை காத்திருங்கள்என்று சொல்லி அலைபேசியை அணைத்தாளாம்.

இத்தனை பேரும் உதவ மறுக்க, வங்கி அதிகாரி இத்தனை நேரம் தனக்கு நடந்த அனைத்தையும் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தாராம்இத்தனை நாட்களாக, பணம், வசதி இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம் என நினைத்தோமே, சக மனிதர்களை மதிக்காது, அவமதித்து விட்டோமே, அனைவரோடும் பாரபட்சமின்றி பழகி நட்போடு இருந்திருந்தால் இன்று இப்படி ஆகியிருக்காதேஎன்று வருந்தினாராம்.

[பட உதவி:  கூகிள்]


இத்தனை காலம் எவ்வளவு தவறு செய்து விட்டோம் என அவர் உணர்ந்து வருந்திக்கொண்டிருந்த போது, ”என்னதான் இருந்தாலும் பாவம் ஒரு நாள் முழுவதும் வீட்டில் அடைந்திருப்பது கடினம் என எண்ணி”, ஒரே சமயத்தில் அவர் வீட்டின் கதவுகளைத் திறக்க வந்து சேர்ந்தார்கள்பூட்டு-சாவி பழுது பார்ப்பவர், உதவியாளர், காவலாளி மற்றும் காதலி ஆகியோர்.

திறந்து வீட்டினுள் வந்த அனைவரையும் பார்த்து அந்த அதிகாரி சொன்னார் – “இத்தனை நாட்களாக மூடனாக இருந்த என்னைத் திருந்த வாய்ப்பளித்த இந்த உடைந்த சாவிக்கு நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும்உங்கள் அனைவருக்கும் இதில் ஒரு பங்கு இருக்கிறதுஉங்களுக்கும் எனது நன்றிகள் எனச் சொன்னாராம்.

உடைந்த சாவியே உனக்கு எனது நன்றிகள்….

நாமும் சாவி உடையும் வரை காத்திருக்காது கதையின் கருத்தினைப் புரிந்து கொள்வோம்.

மீண்டும் சந்திப்போம்

நட்புடன்
வெங்கட்.




திங்கள், 27 பிப்ரவரி, 2012

கதை வழி நடந்தேன் - எஸ் ராமகிருஷ்ணன் உரையாடல்


[பட உதவி:  உயிர்மை பதிப்பகம் இணைய தளம்]

நேற்று [26.02.2012] மாலை 05.30 மணிக்கு தில்லி தமிழ் சங்கத்தில், பிரபல எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுடைய “கதை வழி நடந்தேன்” நிகழ்ச்சி இருந்தது.    சரியாக 05.30 மணிக்கு விழா துவங்கியது. சங்கச் செயலரின் வரவேற்பு உரைக்குப்பின் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றினார்.


பல சமயங்களில் தில்லிக்கு இவர் வந்திருந்தாலும், இவரின் நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டது இதுவே முதன் முறை.  கதைகள் எவ்வளவு முக்கியம், அவைகள் நமக்குக் கற்றுக் கொடுப்பது எத்தனை எத்தனை விஷயங்கள் என்பதையெல்லாம் சொன்னார்.  தன்னை அவர் ஒரு எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்வதை விட ”கதை சொல்லி”, என்றுதான் சொல்லிக்கொள்ள  விரும்புவதாகத் தெரிவித்தார்.

அவர் பேசியதிலிருந்து சில துளிகள் உங்களோடு பகிர்கிறேன்.

·         விழித்துக் கொண்டே கனவு காண்பது தான் கதை…  [இது எத்தனை உண்மை!].
·         ஒரு வரிக் கதைகளில் மிகப் பிரசித்தி பெற்ற ஒரு கதை “ஒரு ஊர்ல ஒரு நரி, அதோட அது கதை சரி!”
·        கடவுளாகவே இருந்தாலும், அவர் மற்றவர்கள் வீட்டிற்குச் செல்லும்போது ஏதாவது வாங்கிக் கொண்டு செல்ல  வேண்டும்.
·         இப்போதெல்லாம் யாராவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தால் அவரைப்  பார்க்க யாரும் செல்வதில்லை – ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விடுகிறார்கள்...
·         கதைகளில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நாம் தினம் தினம் சந்திக்கும் நபர்களில் இருக்கிறார்கள்...
·         தில்லிக்கு வந்தபின் தானே நமது தமிழின் அருமை நமக்குப் புரிகிறது [சரியாகச் சொன்னார்!].
·         நம்மில் பலர் சாப்பிடும் உணவின் பெயர் கூடத் தெரியாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.
·         இன்றைய இளைஞர்கள் அரிசி வாங்கக் கூட தெரியாதவர்களாக, “இருப்பதிலேயே விலை உயர்ந்த அரிசி தான் நல்ல அரிசி” என எண்ணுபவர்களாக இருக்கிறார்கள்!

நிறைய குட்டிக் குட்டிக் கதைகள் சொல்லி தனது உரையினை அழகாய் நகர்த்திச் சென்றார்.  அவர் சொன்னதில் சில கதைகளை அடுத்த பகிர்வுகளில் சொல்கிறேன் [இன்னும் சில பதிவுகள் தேற்றுகிறேன் என எண்ண வேண்டாம், பதிவின் நீளம் கருதியே இந்த முடிவு]. 

விழா சரியான நேரத்தில் ஆரம்பித்தாலும், 06.00 மணிக்கு மேல் தான் அரங்கம் நிரம்ப ஆரம்பித்தது.  அதுவரை நிரம்பாத அரங்கத்திற்குக் காரணம் உண்டு – 06.30 மணிக்குத்தான் இந்த வார சிறப்புப் படமாக “மௌன குரு”  திரையிடுவதாக இருந்திருக்கிறார்கள்…  அதற்குத்தான் மக்கள் வர ஆரம்பித்தார்கள் 06.15-லிருந்தே எங்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்தவர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள்… “ஆறரைக்குப் படம்னு சொன்னாங்க! இன்னும் இவரு பேசிட்டு இருக்காரு…  இவரு எப்ப முடிக்கிறது, படம் எப்பப் போடறது...”


[திரு எஸ். ரா அவர்களுடன் நானும், சக தில்லி பதிவர்கள் முத்துலெட்சுமி மற்றும் ஜிஜி அவர்களும்] 

திரு ராமகிருஷ்ணன் அவர்களும் சரியாக 06.45 மணி அளவில் அவரது உரையை முடித்துக் கொண்டார்.  நன்றியுரையுடன் விழா இனிதே முடிந்தது. தில்லி வலைப்பூ நண்பர்கள், திரு எஸ்.ரா அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.  நேற்று காலை வலைப்பூ நண்பர்களுடன் தில்லியில் நடக்கும் உலகப் புத்தகக் கண்காட்சிக்கும் சென்று வந்தோம்…  இனிதே கழிந்தது இந்நாள்.  புத்தகக் கண்காட்சி அனுபவங்கள் பற்றி பிறகு எழுதுகிறேன்.

மீண்டும் சந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வியாழன், 23 பிப்ரவரி, 2012

கண்கள் இருண்டால்…





”கண்கள் இருண்டால்” என எழுதியிருப்பதைப் பார்த்துவிட்டு, சுப்ரமணியபுரம் படத்தில் வந்த பாடலைத் தப்பாக எழுதி இருப்பதாக நினைக்க வேண்டாம் நண்பர்களே.  கண்கள் இருண்டால் நம்மால் எந்த காட்சிகளையும் பார்க்க முடியாது அல்லவா…  நல்ல கண் பார்வை கொண்ட நமக்கு எப்போதாவது கண்வலியோ அல்லது ”மெட்ராஸ் ஐ” எனும் Conjuctivities வந்தாலோ எவ்வளவு திண்டாடிவிடுகிறோம்.  எப்போதாவது என்றாலே இப்படியென்றால் நிரந்தரமாக கண் தெரியாதவர்களாய் இருந்தால் எவ்வளவு கடினம் என்பதை யோசித்துப் பாருங்கள்.

கடந்த 19.02.2012 அன்று அப்படி ஒரு சில குழந்தைகளைப் பார்க்க முடிந்தது.  புது தில்லி “கோல் மார்க்கெட்” பகுதியில் உள்ள ”ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்த்ஸங்க”த்தின் 24-ஆவது ஆண்டு விழா ஃபிப்ரவரி மாதம் 18-19 தேதிகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.  அதன் ஒரு பகுதியாக தில்லி பஞ்ச்குயான் சாலையில் உள்ள Institution for Blind என்ற இடத்தில் இருக்கும் கண் பார்வையற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்க ஸத்ஸங்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.  காலை 07.30 மணி அளவில் நானும் நண்பர் திரு விஜயராகவன் அவர்களும் அந்த இடத்திற்குச் சென்றோம்.

அப்போது காலை உணவாக ஆலு பராட்டா மற்றும் தேநீர் தயாராகிக் கொண்டு இருந்தது.  இரு பணியாளர்கள் இருந்தனர்.  ஒருவர் பராட்டா தேய்த்துக் கொடுத்தபடியே தேநீர் தயாரிக்க மற்றவர் பெரிய இரும்புக்கல்லில் ஒரு  குழந்தைக்கு இரண்டு பராட்டா வீதம் பராட்டாவினை தயாரித்துக் கொண்டிருந்தார்.  

சுமார் ஐம்பது குழந்தைகள் இங்கே தங்கி படிக்கின்றனர்.  நாங்கள் சென்றவுடன், “மணி அடிக்கலாமா?” என்று கேட்டார் பராட்டா தயாரித்தவர்.  மணி அடித்தவுடன் ஒவ்வொரு குழந்தையாக படியேறி உணவுக்கூடத்திற்கு வந்து வரிசையாக அமர்ந்தனர்.  வரும்போதே “[Cha]சாச்[Cha]சா பராட்டா தேதோ, [Cha]சாய் தேதோ” என்று கேட்டபடியே வந்தனர். 

ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தட்டில் போட்டு வைத்திருந்த பராட்டாக்களையும், ஒரு பிஸ்கெட் பாக்கெட்டினையும், தேநீரையும் நாங்களே கொடுத்தோம். மனது முழுக்க ஒரு வித அழுத்தம் அவர்கள் உணவு உட்கொள்ளும்போது.  தேவையோ இல்லையோ, தட்டில் வாங்கிக்கொண்டு வீணாக்கும் சிலரைப் போல இல்லாமல், சில குழந்தைகள் தாங்களாகவே சாப்பிடும் முன்னரே, ஒரு பராட்டா போதும், இன்னொன்றை எடுத்து விடுங்கள் எனச் சொன்னது அச்சிலரை சம்மட்டியால் அடிப்பது போல இருந்தது. 

அத்தனை குழந்தைகளும் காலை உணவு உட்கொள்ளும் வரை இருந்துவிட்டு பிறகு அந்த இடத்திலிருந்து கிளம்பினோம். அவ்வப்போது இங்கு வந்து குழந்தைகளுக்கு உணவோ, மற்ற உதவிகளோ செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்போது மனதில் ஆழமாகப் பதிந்தது.  வீட்டில் வந்து சொன்னபோது அதையே எனது துணைவியும் சொன்னார் – மகளின் ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் அவர்களுக்கு உணவு கொடுக்கலாம் என.

கண் இருந்தும் குருடர்களாய் நடமாடும் மக்கள் மத்தியில் இருந்திருந்து நாமும் பல விஷயங்களை உணர மறுக்கிறோம்.  கண் தானம் பற்றி முன்பொரு முறை பார்த்த காணொளியும் நினைவுக்கு வருகிறது. வார்த்தைகள் சொல்லாததை இந்த காணொளி மிக அழகாய் சொல்லிப் போகிறது.  நீங்களும் பாருங்களேன்…



இந்த காணொளியைத் தேடும்போது இன்னும் சில காணொளிகளும் கிடைத்தது.  அவற்றையும் பாருங்களேன்.




இந்த காணொளி சற்றே மங்கலாக இருந்தாலும் பாருங்கள்.


மீண்டும் சந்திப்போம்….


நட்புடன்


வெங்கட்
புதுதில்லி.