தொகுப்புகள்

புதன், 3 ஜூலை, 2013

ஜ்யோதிசர் – ரத்த பூமி பகுதி 5

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே.....


ரத்த பூமி தொடரில் நாம் அடுத்ததாகப் பார்க்கப் போகும் இடம் ஜ்யோதிசர்.  இந்த இடம் மஹாபாரத யுத்தத்தில் மிக முக்கிய பங்கு வகித்த ஒரு இடம். மஹாபாரத யுத்தத்தின் போது அர்ஜுனன் போர் புரிய தயங்க, இங்கே தான் ஸ்ரீக்ருஷ்ண பகவான் கர்மா-தர்மா ஆகிய இரண்டிலும் உள்ள வித்தியாசத்தினை அர்ஜுனனுக்கு விளக்கமாய் சொன்ன இடம் – அதாங்க – இந்த இடம் தாங்க கீதோபதேசத்தின் பிறப்பிடம்.



குருக்ஷேத்திரா நகரத்திலிருந்து பெஹோவா கிராமத்திற்குச் செல்லும் வழியில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இடம் தான் இந்த ஜ்யோதிசர். இந்த இடத்தில் ஒரு பெரிய ஆலமரம். அந்த மரத்தின் கீழே தான் கீதோபதேசம் நடைபெற்றதாக நம்பிக்கை. இந்த இடத்தில் பல்வேறு கால கட்டங்களில் பலவித கட்டுமானங்கள் செய்யப்பட்டு இருப்பதாக வரலாறு கூறுகிறது.



காஷ்மீரத்தின் அரசர் இவ்விடத்தில் ஒரு சிவ லிங்கத்தினைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், பீஹார் மாநிலத்தின் தர்பங்கா அரசர் ஆலமரத்தினைச் சுற்றி கற்களைக் கொண்டு பீடம் எழுப்பியதாகவும் இங்கே தகவல் பலகைகள் தெரிவிக்கின்றன. பக்கத்திலேயே ஒரு குளமும் உண்டு. வரும் சுற்றுலாப்பயணிகள் இக்குளத்தில் குளிக்கவும் வசதிகள் இருக்கின்றன.



இப்போது இங்கே இருக்கும் ஆலமரம் சுற்றிலும் கற்கள் பதிக்கப்பட்டு ஆலமரத்தினையும், அங்கே வைத்திருக்கும் சிவலிங்கத்தினையும் வழிபட வசதிகள் செய்து வைத்திருக்கிறார்கள்.  கீதோபதேசம் என்று சொன்னவுடன் உங்களுக்கெல்லாம் தேரின் அருகே நின்று கொண்டு இருக்கும் கிருஷ்ணன் நினைவுக்கு வருவார்.



இந்த இடத்தினைக் கண்டு பிடித்து உலகத்தினருக்கு அறிவித்தது ஆதி சங்கரர் என்றும் இங்கே சொல்கிறார்கள். இந்த இடத்தில் 1964-ஆம் ஆண்டு காஞ்சி மடத்தின் அப்போதையான பீடாதிபதியான மஹா பெரியவர் மார்பிள் கல்களால் அமைக்கச் செய்து கிருஷ்ணோபதேச காட்சியை நமது கண்முன்னே கொண்டு வந்து இருக்கிறார். கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும் இச்சிலையைப் பார்க்கும்போது நாமும் மஹாபாரத காலத்திற்கு மனதளவில் சென்று வருகிறோம்.

பக்கத்திலேயே தங்கும் வசதிகளும் உண்டு. இங்கே இருக்கும் மக்கள் பழமையான பானை வேலைகள், மர வேலைப்பாடுகள், [Dha]தரி என்று சொல்லப்படும் ஜமக்காளம் போன்ற தரைவிரிப்புகள் செய்வது என பல தொழில்களில் ஈடுபட்டுள்ளார்கள். இவை இங்கே விற்பனையும் செய்யப்படுகின்றன. நாங்கள் சென்றபோது அங்கே எப்போதும் போலவே நிறைய சுற்றுலா பயணிகளின் நடமாட்டம். இது காணாது என அங்கே ஏதோ அரசியல் கூட்டமும்.



கூட்டத்திற்கு, மக்களின் கூட்டத்திற்குக் கேட்கவா வேண்டும். வழியெல்லாம் வாகனங்கள், சிறு வியாபாரிகள், அரசியல்வாதிகள் என ஒரே கூட்டம். வெயில் ஆரம்பித்து விட்டதால் குளிர்பான்ங்களும், தண்ணீர் விற்பனையும் அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. கீதோபதேச காட்சியினை 3D படங்களாகப் போட்டு விற்பனை செய்து கொண்டிருந்தான் ஒரு சிறுவன்.

பிளாக்கோமேனியா பிடித்து ஆட்டுவதால், எங்கே சென்றாலும் பதிவுக்கு விஷயம் தேடுவது வழக்கமாகி விட்ட்து. ஜ்யோதிசர் சென்றிருந்தபோது ஒரு பேருந்து நிறைய சுற்றுலா பயணிகள். நிறைய பெண்கள் குறைவாகவே ஆண்கள். அப்படி வந்திருந்த பெண்களில் இருவருக்குள்ளே எதோ பிரச்சனை. கார சாரமாக விவாதம் – எங்கே அடிதடியில் முடியுமோ என்ற நிலை. என்ன தான் சண்டை, அவர்கள் பேசுவது ‘ராஜா காது, கழுதை காதுபகுதிக்கு உதவுமோ என, காதை நீட்டினேன்! சண்டை என மட்டுமே தெரிந்து கொள்ள முடிந்தது – பேசியது ஒரு வார்த்தை புரியவில்லை – அவர்கள் பேசியது அசாமிய மொழி! மொழி புரியாவிட்டாலும் நம் ஊர் குழாயடிச் சண்டைக்கு இவர்கள் ஏற்றவர்கள் என்ற எண்ணம் தோன்றியது.

ஒருவேளை இந்த இடத்தின் ராசியோ....  இங்கே தானே மஹாபாரத யுத்தமே ஆரம்பித்தது! :)

இவங்க சண்டை எங்கே கைகலப்பாக மாறி, கையில் கிடைத்ததை வீசப் போகிறார்களோ என பயந்து அங்கிருந்து விலகினேன். அடுத்து நாம் செல்லப் போவது எங்கே! ரொம்பவே மனசைக் குழப்பிக்கொள்ளாதீங்க! அடுத்த புதன் தெரிந்துவிடப் போகிறது!

மீண்டும் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.
    
     

48 கருத்துகள்:

  1. படங்களுடன் பதிவு அருமை, சுவாரஸ்யம். அசாமி மொழியில் அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்று அப்படியே போட்டிருந்தால் அந்த மொழி தெரிந்த யாரையாவது கேட்டிருக்கலாமே! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொழி புரியாத காரணத்தினால் அவர்கள் பேசுவது அனைத்துமே ”காரே பூரே” என்ற விதத்தில் தான் இருந்தது. அதனால் நினைவில் நிற்கவில்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. \\பிளாக்கோமேனியா பிடித்து ஆட்டுவதால், எங்கே சென்றாலும் பதிவுக்கு விஷயம் தேடுவது வழக்கமாகி விட்ட்து.\\

    சுவாரசியமான விஷயம்தானே. கீதோபதேசத்தின் பிறப்பிடம் பற்றிய தகவல் பகிர்வுக்கும் நேர்த்தியான படங்களுக்கும் நன்றியும் பாராட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சுவாரசியமான விஷயம்தானே..... // :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  3. அருமையான படங்களும் இராமாயண ரத்த பூமியின் தகவலும் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

      இது இராமயணம் அல்ல.... மஹாபாரதம்!

      நீக்கு
  4. //பிளாக்கோமேனியா பிடித்து ஆட்டுவதால், எங்கே சென்றாலும் பதிவுக்கு விஷயம் தேடுவது வழக்கமாகி விட்ட்து.//
    சரியா சொன்னீங்க
    ஜ்யோதீசர் பற்றி இதுவரை அறிந்ததில்லை, பயணம் தொடரட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      பிளாகோமேனியா, எல்லா பதிவர்களுக்கும் பொதுதானே முரளி!

      நீக்கு
  5. படங்களுடன் விளக்கம் அருமை...

    நீங்கள் சொன்னது போல், ஒருவேளை இந்த இடத்தின் ராசியோ என்று எண்ணத் தோன்றுகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. ஒரு பெரிய ஆலமரம். அந்த மரத்தின் கீழே தான் கீதோபதேசம் நடைபெற்றதாக நம்பிக்கை. /

    அங்கே அமர்ந்து விஷ்ணு சகஸ்ர நாமம் சொல்வது ரொம்ப விஷேசம் ..

    கடவுள் கிருஷணன் கேட்க மனிதன் பீஷ்மர் சொன்னதாயிறே..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  7. ஒருவேளை இந்த இடத்தின் ராசியோ.... இங்கே தானே மஹாபாரத யுத்தமே ஆரம்பித்தது! :)
    //இரசித்தேன்! பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி....

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

      நீக்கு
  9. ஹைய்யோ!!!!

    அருமையான படங்கள்.


    எனக்கும் கொசுவத்தி பத்திக்கிச்சு:-)

    ஆனால் எழுதமாட்டேன். ஏனாம்? முந்தியே எழுதிட்டொமே:-)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடைய குருக்ஷேத்திர பதிவுகளை படித்த நினைவில்லை..... படித்து விட வேண்டும்.... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  10. பிளாக்கோமேனியா பிடித்து ஆட்டுவதால், எங்கே சென்றாலும் பதிவுக்கு விஷயம் தேடுவது வழக்கமாகி விட்ட்து.
    >>
    நாமலாம் பிரபல பதிவர்கள் சகோ! அதனால அப்படிதான்.. இதுக்கு எதாவது வைத்தியம் இருக்கான்னு பார்க்கனும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரே வைத்தியம் கணினி பக்கம் போகாமல் இருப்பது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  11. அருமையான படங்கள், தகவலுக்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கருண்.

      நீக்கு
  12. படங்களும், பயணமும் சுவாரஸ்யம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கவி.

      நீக்கு
  13. இராமாயண பூமிக்கு சென்று வந்தது போல் மகிழ்வைக் கொடுத்தது உங்கள் பகிர்வு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

      நீக்கு
  14. யுத்தம் நடந்த இடத்தில் மறுபடியும் யுத்தமா?.. இடத்துக்குன்னு ஒரு ராசி இருக்கில்லே :-))

    குளமும் மரமுமா இருக்கற படம் ரொம்ப அழகாயிருக்கு. இடது மூலையில் தெரியும் சிவப்பு கவனச்சிதறலை உண்டு செய்யறதால் அந்தப்பக்கத்தை லைட்டா க்ராப் செஞ்சா இன்னும் அசத்தலா இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ராப் செய்ய நினைத்தேன். சில விஷயங்களில் கவனம் எடுப்பதில்லை! அதன் விளைவே அப்படியே போட்டு விட்டது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

      நீக்கு
  15. பிளாக்கோமேனியா பிடித்து ஆட்டுவதால், எங்கே சென்றாலும் பதிவுக்கு விஷயம் தேடுவது வழக்கமாகி விட்ட்து....

    இந்த கொடிய மேனியா நோய் இருப்பதனால் தான் நாங்களும் பல செய்திகள் பற்றி அறிந்து கொள்கிறோம்...

    மிக்க நன்றி... அருமையான படங்கள் மற்றும் விளக்கங்கள் சிறப்பு... தொடருங்கள்... தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இரவின் புன்னகை.

      நீக்கு
  16. படங்களும் பகிர்வும் அருமை. அறியாத தகவல்கள். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  17. படநகளையும் செய்திகளையும் ரசித்தோம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  18. நான்கு வருடங்களுக்கு முன் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமியுடன் சுமார் 3500 பேர் இங்கெல்லாம் போய்விட்டு வந்தோம். இந்த ஆலமரத்தினடியில் உட்கார்ந்து அத்தனை பேரும் கீதையின் 18 அத்தியாங்களின் ஸ்லோகங்களையும் பாராயணம் செய்தது மறக்க முடியாத ஒரு நிகழ்வு.
    துளசி போலவே எனக்கும் கொசுவத்தி!
    அருமையான பகிர்வு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பகிர்வு உங்கள் நினைவுகளையும் மீட்டெடுத்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

      நீக்கு
  19. கீதோபதேச காட்சியினை 3D படங்களாகப் போட்டு விற்பனை செய்து கொண்டிருந்தான் ஒரு சிறுவன்.//

    குளத்தில் அருகே கீதோபதேச காட்சி,, (விஷ்வரூப காட்சி) பீஷ்மருக்கு அருச்சுணன் கங்கையை வரவ்ழைத்து கொடுப்பது எல்லாம் இரவு ஒலி, ஒளி காட்சியாக காட்டுவார்களே பார்க்க வில்லையா?

    //காஞ்சி மடத்தின் அப்போதையான பீடாதிபதியான மஹா பெரியவர் மார்பிள் கல்களால் அமைக்கச் செய்து கிருஷ்ணோபதேச காட்சியை நமது கண்முன்னே கொண்டு வந்து இருக்கிறார்.//

    தேரை சுற்றி முன்பு பாதுகாப்பு அரண் எல்லாம் கிடையாது நாங்கள் பார்த்த போது. இப்போது தான் அது அமைத்து இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலையிலேயே தில்லி திரும்ப வேண்டியிருந்ததால் எங்களால் ஒலி ஒளி காட்சி பார்க்க முடியவில்லை.

      தேரைச் சுற்றி பாதுகாப்பு அரண் - வரும் மக்கள் சும்மா இருந்தால் தானே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  20. ரஞ்ஜனிக்காகவும், மற்ற அன்பர்களுக்காகவும் ஒரு சுட்டி.

    வெங்கட் உங்களுக்காகவும்தான். கோச்சுக்காதீங்க.'

    http://thulasidhalam.blogspot.co.nz/2010/11/blog-post_17.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்காகவும் தான்.... இதில் கோபம் எங்கிருந்து வரும்! நானே தேட வேண்டும் என நினைத்திருந்தேன். நீங்களே கொடுத்து விட்டீர்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  21. பதில்கள்
    1. சமீபத்தில் கூட அவரது இன்னுமொரு பயணத்திற்கான அழைப்பு வந்திருக்கிறது.... நிறைய பேரை அழைத்துச் சென்று அங்கே ப்ரசங்கம், பாராயணம் என நடத்துகிறார்கள்.

      விவரங்கள் இங்கே கிடைக்கலாம் - www.kinchit.org.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

      நீக்கு
  22. குருக்ஷேத்ரம். துளசிதளத்தில் ஏற்கனவே படித்திருந்தாலும் உங்களது கோணமும் வேறுவிதத்தில் அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

      நீக்கு
  23. ரஞ்சனி நீங்களும் போயிருந்தீர்களா. என் தம்பி மனைவியும் இந்தப் பயண்ம் போய் வந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது நண்பர் ஒருவரின் உறவினர்களும் சென்றிருந்தார்கள் வல்லிம்மா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  24. கீதோபதேச காட்சியும் நடைபெற்ற இடமும் கண்டுகொண்டோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....