தொகுப்புகள்

புதன், 14 ஆகஸ்ட், 2013

சொல்லாதது வறுமை – இரு குறும்படங்கள்


சென்ற மார்ச் மாதத்தில் சென்சார் மற்றும் லஞ்சம் இரு குறும்படங்கள் என்ற பதிவில் சில குறும்படங்களைப் பார்த்து, அவ்வப்போது அவற்றைப் பற்றி எழுதுவதாகச் சொல்லியிருந்தேன்....  அது காற்றோடு போன வாக்காயிற்று! சென்ற ஐந்து மாதங்களில் குறும்படங்கள் பற்றிய ஒரு பகிர்வும் எழுதவில்லை. 

 

இதோ இன்று, இரண்டு குறும்படங்கள் இன்றைய பகிர்வாக.  முதல் குறும்படம் – ஹிந்தி [கவலைப்படாதீர்கள் – ஆங்கிலத்தில் SUB-TITLE கொடுத்திருக்கிறார்கள்]. குறும்படத்தின் கதை: மீனு சாட்டர்ஜி, இயக்கம்: சாம்ராட் தாஸ்குப்தா; ஸ்வாதி தல்தார் மற்றும் ஃபிரோசா கான் நடிப்பில்.  இதோ குறும்படம் உங்கள் பார்வைக்கு..... குறும்படத்தின் தலைப்பு: UNKAHI....  [அன் கஹி] அதாவது சொல்லாதது

 

ஒரு மசாஜ் நிலையம். அங்கே வரும் பெண் வாடிக்கையாளருக்கும் மசாஜ் செய்யும் பெண்ணுக்கும் இடையே நடக்கும் சம்பாஷணைகளில் தொடங்குகிறது கதை. தனது கணவர் தன் மீது காட்டும் அன்பு பற்றி மசாஜ் செய்யும் பெண்ணிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறார் – ஐநூறு ரூபாய் டிப் கொடுத்துச் செல்லும் அந்த நாள் அவரது திருமண நாள். அன்று என்ன நடந்தது என அடுத்த முறை வரும்போது சொல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறாள் மசாஜ் செய்யும் பெண். பிறகு.... படத்தினைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்! மனதைத் தொட்ட குறும்படம்.

 

 

இரண்டாவது குறும்படம் “வறுமை”.  படத்தில் நடித்திருக்கும் பெரியவரின் நடிப்பு பிரமாதம். நான்கு இளைஞர்கள் உணவகத்தில் சாப்பிடுகிறார்கள். பாதி சாப்பிட்டு மீதியை அப்படியே வைத்துச் செல்கிறார்கள்....  அடுத்து என்ன நடந்தது? பெரியவர் செய்தது என்ன?  பெரியவர் படம் பார்க்கும் நமது மனதில் நிச்சயம் மாற்றத்தினை உண்டுசெய்வார் என நம்புகிறேன்.....
 

 

 

குறும்படங்களைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்தினைச் சொல்லுங்களேன்.

மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

40 கருத்துகள்:

  1. இரண்டாவது குறும்படம் வறுமையை அழகாக சுருக்கமா படம் பிடித்து காட்டியது ஆனால்பசியால் வாடுபவராக ஒரு குண்டானவரை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்று புரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதியோர் இல்லத்தில் இருக்கும் பெரியவர் என நினைக்கிறேன். கொஞ்சம் ஒல்லியான ஆளைப் போட்டிருக்கலாம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  2. பெரியவர் படம் பார்க்கும் நமது மனதில் நிச்சயம் மாற்றத்தினை உண்டுசெய்வார்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  3. முதல் படம் நெஞ்சை தொட்டு சென்றது. அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஙக்ளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத்தமிழன்.

      நீக்கு
  4. வெங்கட்..

    எப்போதும் உங்க பதிவில் எதுனா புதியது இருக்கும் கண்டிப்பா.. இதுவரை யோசிக்காதது.. இதுவரை செய்யாதது... இதுவரை இந்த கோணத்தில் சிந்திக்காதது என்பது போல்...

    இந்த இரண்டு படங்களின் சாரிப்பா குறும்படங்களைப்பற்றி நீங்க சஸ்பென்ஸா விட்ட கதை...

    ஆபிசுல இருப்பதால் கண்டிப்பா வீட்டுக்கு போனதும் பார்த்துட்டு கருத்து சொல்றேன்பா...

    அன்பு நன்றிகள் வெங்கட் இந்த முயற்சிக்கு என் அன்பு வாழ்த்துகள்பா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி..... முடிந்த போது பாருங்கள்...... உங்களுக்கும் பிடிக்குமென நினைக்கிறேன்.



      நீக்கு
  5. முதற்படம் மனத்தைக் கவர்ந்து சென்றது ! பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

      நீக்கு
  6. இரண்டாவது படம் நெஞ்சைச் சுட்டது. முதல் படம் கண்ணீர் விடவைத்தது. நன்றி வெங்கட். இன்னும் இது போலப் படங்களைப் பதிவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  7. குறும்படங்கள் சீனுவுக்கும் ரொம்ப இஷ்டம். ரசித்துப் பார்ப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. படம் இன்னும் பார்க்கலை. பார்த்துட்டுச் சொல்றேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  9. பெரியவர் அழுவதைப் பார்த்தப்போ அவருக்கு ஏதோ ஃப்ளாஷ்பேக் சொல்லப் போறாங்கன்னு பார்த்தேன். ஆனா முடிவு சட்டுன்னு வந்து ஒருவித ஏமாத்தத்த குடுத்திருச்சி. அந்த பசங்க ஏன் அத சாப்டாம விட்டுட்டுப்போய்ட்டாங்கன்னும் சொல்லலை. பெரியவரோட நடிப்பு நல்லா இருந்துது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவு வீணாக்கி விட்டுச் செல்கிற இளைஞர்கள்.... தனது வறுமையை நினைத்து அழும் பெரியவர்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி.

      நீக்கு
  10. குறும் படங்கள் நெகிழ வைத்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்.

      நீக்கு
  13. பார்த்தேன் ,ரசித்தேன் .திருமண விருந்தில் மீதும் உணவுகளை கூட வாங்க மறுக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.

      நீக்கு
  14. Dear kittu,

    Irandavadhu kurumbadam parthapiragu yenakku netraya sambavam gnabagam varugiradhu. Netrudhan Karthikidam
    Sappattuporutkalai waste seiyakkoodadhu yenbadhupatri advice seiden. Aduthanale inda kurumbadam parkanerittadhu.
    Unavin magathuvathai unara vaitha kurumbadam.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  15. இரண்டு படங்களும் மனதை நெகிழ வைத்தன.
    பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

      நீக்கு
  16. இரண்டு படங்களுமே நெஞ்சைத்தொட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  17. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்துல்.....

      நீக்கு
  18. குறும்படங்கள் இரண்டுமே மிக அருமை. இரண்டாவது படத்தில் கொஞ்சம் ஒல்லியான ஆளைப் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
    வாழ்த்துக்கள்
    விஜய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு
  19. சொல்லாதது வறுமை படம் அழ வைத்த ஒன்று என்றால் இதை நான் இங்கே திருச்சி தில்லை நகரின் ஒரு பிரபல பேக்கரியில் நேரிலேயே பார்க்க நேர்ந்தது.(பேக்கரி பெயரும் வேண்டாம்.) நல்ல பிரதானச் சாலையில் உள்ள அந்த பேக்கரியில் அமர்ந்து உண்ணுபவர்களும் உண்டு. அவர்களில் சிலர் இப்படித் தான் உணவை வீணாக்கித் தூக்கிப் போடுகின்றனர். அதை எல்லாம் அங்கே வேலை செய்யும் ஒருத்தர் (அவரிடம் விசாரித்ததில் நாடு, பெயர் எல்லாமும் சொன்னார் என்றாலும் இங்கே வேண்டாம் எனக் குறிப்பிடவில்லை; ஆனால் தமிழ் பேசுபவரே) அவற்றை வாங்கி வைத்துக் கொண்டார். சிலர் முழுதும் எச்சில் செய்யாமல் அவரிடம் நேரடியாகக் கொடுத்தவற்றை உண்டார். மற்றவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று பகிர்வார் எனத் தெரிந்து கொண்டேன். அன்றைய தினம் இந்த நிகழ்ச்சி நிச்சயம் ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது எனக்கு. என் கணவர் கவனிக்கவில்லை. அப்புறமா நான் அவருக்கு இதைச் சொன்னதும் இருவருக்குமே மனம் வேதனையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  20. இன்னொண்ணை அப்புறமா வந்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்க கீதாம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....