[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 2
பயணங்கள் செய்வது எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்பது எனது பதிவுகளைப்
படித்து வரும் உங்கள் அனைவருக்கும் தெரிந்தது. அதிலும் ரயில் பயணத்தினை விட
பேருந்திலோ, வேறு வாகனத்திலோ நீண்ட நெடுஞ்சாலைகளிலும் கிராமத்து சாலைகளிலும்
பயணிப்பது மிகவும் பிடித்தமான ஒன்று. எனது விருப்பத்திற்கு நேர் எதிர் விருப்பம்
எனது மனைவிக்கும் மகளுக்கும் – அவர்களுக்கு ரயில் பயணம் தான் மிகவும் பிடித்தது –
காரணம் எதுவாக இருந்தாலும்... :)
அதனால் பொதுவாக நான் தனியாகவோ, நண்பர்களோடோ பயணம் செல்வதென்றால் சாலைப்
பயணத்தினைத் தான் தேர்ந்தெடுப்பேன். அதுவும் இரவு நேரப் பயணம் என்றால் மிகவும்
பிடிக்கும். இரவில் நிசப்தமான சாலையில்
அந்த நிசப்தத்தினைக் கிழித்தபடி செல்லும் சாலைப் பயணம் முழுவதும் நான் உறங்காது
விழித்திருக்க முயற்சிப்பேன்.
எந்த ஒரு ஊரின் அழகையும் ரசிக்க வேண்டுமானால் அந்த ஊரை இரவில் பார்க்க
வேண்டும். வண்ணமிகு விளக்குகள், சுற்றிலும் ஒரு அமைதி, மிகவும் குறைவான மனித
நடமாட்டம் - உங்களையும் தெருவில் சுற்றித் திரியும் சில நாய்களையும் தவிர வேறு
யாரும் உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள்.
பெரும்பாலும் ஊரின் பேருந்து நிலையம், ரயில் நிலையம், சினிமா அரங்குகள்
தவிர மற்ற இடங்களெல்லாம் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்.
அப்படி உறங்கும் ஊரில் பலமுறை தன்னந்தனியே நடந்து சென்று, நடைபாதைகளில்
ஆங்காங்கே உறங்கிக்கொண்டிருக்கும் மனிதர்களை மிதித்து விடாது கடந்து சென்று, ”சண்டைக்கு வரவா, கடித்து விடவா” என மிரட்டும் பார்வை பார்க்கும் தெரு நாய்களை கடந்து மெதுவாக நடந்து
சென்றதுண்டு. இது போன்ற இரவு பயணத்தில் தனிமையில் நடக்கும் நேரத்தில் கிடைக்கும்
மகிழ்ச்சியை எழுத்தில் கொண்டு வருவது கடினம். நீங்களும் உணர்ந்து பார்க்க
வேண்டும். அப்போது தான் உங்களுக்கும் அதன் தாக்கம் புரியும்.
இப்படி இரவிலே பேருந்தில் பயணம் செய்யும் ஆசை தொடர்ந்து கொண்டே இருப்பதால்
தான் சபரிமலை செல்வதற்கும் திருச்சியிலிருந்து திருவனந்தபுரம் இரவு நேர பேருந்தில்
முன்பதிவு செய்திருந்தேன். சென்ற பதிவில் சொன்னது போல ஒரு மணி
நேரத்திற்குப் பிறகு திருச்சியின் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து
கிளம்பிற்று.
திருச்சியிலிருந்து மதுரை வரை செல்லும் சாலையின் நடுவே அரளிப் பூச்செடிகள்
பூத்துக் குலுங்க, வழியிலுள்ள விராலிமலை போன்ற இடங்களில் எங்கும் நிற்காது
பேருந்து மிகவும் விரைவாகக் கடந்து சென்றது. பேருந்தில் ஜன்னல் ஓர சீட்டு தான்
வேண்டுமென முன்பதிவு செய்திருந்ததால் முகத்தில் எதிர்காற்று அடிக்க, கைகளால்
முடியைக் கோதியபடி விரைவாக நகர்ந்து செல்லும் இரவுக் காட்சிகளை ரசித்தபடியே
அமர்ந்திருந்தேன்.
பேருந்தின் ஓட்டுனர் மிகவும் லாவகமாகவும், வேகமாகவும் பேருந்தினைச்
செலுத்தினார். புதிய பேருந்து என்பதால் வண்டியும்
அவரது எல்லாவித வித்தைகளையும் ரசித்து விரைவாகச் சென்றது. திருச்சியிலிருந்து
மதுரை வரையான 135 கிலோ மீட்டரை இரண்டு மணி நேரத்தில் கடந்து தூங்கா நகரமான
மதுரையின் “மாட்டுத்தாவணி” பேருந்து நிலையத்தினை
வந்தடைந்தது.
பேருந்து நிலையத்தினுள் நுழையும் போதே ”மதுரை மல்லி, மதுரை மல்லி” எனப் பாசத்தோடு அழைக்கும்
குரலும், சுடச் சுட வெந்து கொண்டிருக்கும் இட்லியின் ஆவியும் மனதுக்குள் ரம்மியமாக
நுழைந்தது. “வண்டி ஒரு பத்து நிமிஷம்
நிக்கும் சார்” என்ற குரல் கேட்டு எழுந்த
பலரும் இயற்கை உபாதைகளை முடித்துக் கொண்டு திரும்பினார்கள். எல்லா பேருந்து நிலையத்தினைப் போலவே மதுரையிலும்
இதற்கான இடம் மகா மோசமாக இருந்தது நமது நாட்டின் சாபக்கேடு..... அடிக்கும் நாற்றத்தில் மூச்சை சில நிமிடங்களுக்கு
நிறுத்தி வைக்க வேண்டியிருந்தது.
அந்த இரவு நேரத்திலும், சில தைரியசாலி பெண்கள் தனியே
பேருந்து நிலையத்தில் தங்களது ஊருக்குச் செல்லும் பேருந்திற்காகக் காத்திருக்க, பல
ஆண்களின் கண்கள் அவர்களை ஊடுருவிக் கொண்டிருந்தது. பெண்கள் தனியாக செல்லவேண்டிய
நிர்ப்பந்தங்கள் இருந்தாலும் அதை தவிர்க்க நினைக்காது தைரியமாக வருவது சந்தோஷமான
விஷயம் என்றாலும் அதில் இருக்கும் ஆபத்துகளை நினைத்தால் தான் மனதிற்குள் ஒரு பயம்
வந்து போகிறது.
இப்படி மதுரையின் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது
காலியாக இருந்த எனது பக்கத்து இருக்கையில் ஒரு பெரியவர் வந்து உட்கார்ந்தார். அவரைப்
பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லிப் போவது அவ்வளவு நன்றாக இருக்காது. அதனால் அவர்
பற்றி அடுத்த பகிர்வில் விரிவாகப் பார்க்கலாம்!
மீண்டும் அடுத்த பகுதியில் சந்திக்கும் வரை......
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
suvaraasyam...
பதிலளிநீக்குsollunga anne...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.
நீக்குஅருமையான பயணப்பகிர்வுகள்..!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குஇரவு நேர பேருந்துப்பயணம் கேட்கவே இனிமையாக உள்ளது. சுவாரஸ்யமாகத் தொடருங்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்கு//அவர்களுக்கு ரயில் பயணம் தான் மிகவும் பிடித்தது – காரணம் எதுவாக இருந்தாலும்... :)//
பதிலளிநீக்குஎனக்கும், எனக்கும். :)))) ரயில் பயணமே செளகரியம், சுகம், ஆநந்தம், அமைதி எல்லாமும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..
நீக்குஇது எப்போப் போனீங்க?
பதிலளிநீக்குஇம்முறை தமிழகம் வந்ததும் சென்றேன் கீதாம்மா....
நீக்குஆவலுடன் பெரியவரைப் பற்றி அறிய தொடர்கிறேன்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்கு
பதிலளிநீக்குவித்தியாசமான ரசனை. எந்த முறையில் பயணிப்பதானாலும் பகல் நேரத்தில்தான் எதையும் தெரிந்து கொள்ளமுடியும். இரவு நேரப் பயணத்தில் கண்டு ரசிக்க என்ன இருக்கிறது.இருட்டைத்தவிர. மேலும் இரவு நேரப் பேரூந்துப் பயணத்தில் இயற்கை உபாதைகளைத் தீர்க்க........ பெரும்பாலும் பெண்கள் அதனால்தான் இரவு நேரத்திலோ பகலிலோ பேரூந்துப் பயணத்தை விரும்புவதில்லை.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா....
நீக்குஅருமை! அருமை! உங்களின் ரசனை மிகுந்த எழுத்து, உங்களுடன் கூடவே பயணம் செய்தது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியது!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி!
நீக்குஅதனால் பொதுவாக நான் தனியாகவோ, நண்பர்களோடோ பயணம் செல்வதென்றால் சாலைப் பயணத்தினைத் தான் தேர்ந்தெடுப்பேன். அதுவும் இரவு நேரப் பயணம் என்றால் மிகவும் பிடிக்கும். //
பதிலளிநீக்குநான் உங்களுக்கு நேர் எதிர். சாலைப் பயணம் பிடிக்கவே பிடிக்காது. அதிலும் இரவு பயணம் என்றால் அறவே பிடிக்காது. நமக்குல்லாம் தூங்கணும்னா கால நீட்டி தூங்கணும்.
ஆனால் இருபது வருசத்துக்கு முன்னால அதையேத்தான் நம்பி இருந்துருக்கேன். இப்ப இருக்கறா மாதிரி ட்ரெயினுக்கு நெட்ல புக் பண்ற வசதி அப்ப இல்லையே அதான் மெய்ன் ரீசன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி!
நீக்குஎல்லா பேருந்து நிலையத்தினைப் போலவே மதுரையிலும் இதற்கான இடம் மகா மோசமாக இருந்தது நமது நாட்டின் சாபக்கேடு..... அடிக்கும் நாற்றத்தில் மூச்சை சில நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டியிருந்தது.
பதிலளிநீக்குநன்றாக சொன்னீர்கள் கட்டண கழிப்பிடம் கூட மிகவும் மட்டம்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
நீக்குஇரவோ பகலோ பயணம் பயணம்தான் :-)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.
நீக்குபயணிக்கிறோம் கூடவே. தொடருங்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஇரவுப் பயணம் நல்ல சுவாரஸ்யம்தான். நானும் என் இருபதுகளில் கணவருடன் சென்றிருக்கிறேன். அப்போது பயமெல்லாம் கிடையாது. பஸ்ஸை விட்டு எந்தக் காரணத்துக்காகவும் இறங்கியதில்லை.
பதிலளிநீக்குஇருந்தும் ரயிலே பிடித்தது!!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....
நீக்குசுவாரசியம்! தொடருங்கள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்கு//இரவு நேரப் பயணம் என்றால் மிகவும் பிடிக்கும். இரவில் நிசப்தமான சாலையில் அந்த நிசப்தத்தினைக் கிழித்தபடி செல்லும் சாலைப் பயணம் முழுவதும் நான் உறங்காது விழித்திருக்க முயற்சிப்பேன். //
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குநைனா அருமைய்யா. மதுரைஐ பற்றி சூப்பரா கலக்கிட்டப்பா.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
விஜய்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!
நீக்குDear Kittu,
பதிலளிநீக்குPeriya aria patri therindhukolla Aduta padhivukku avaludan kathirukkiren.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குDear Kittu,
பதிலளிநீக்குPeriya aria patri therindhukolla Aduta padhivirku avaludan kathirukkiren.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்கு#”மதுரை மல்லி, மதுரை மல்லி”#
பதிலளிநீக்கு# நாற்றத்தில் மூச்சை சில நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டியிருந்தது.#
பூவின் மனத்திலும்.மூத்திரத்தின் நாற்றததிலும்என் கவிதை பிறக்கும் என்றான் போப்லோ நெரூடா... மதுரையில் கவிஞர்கள் நிறைய பேர் இருக்கும் காரணம் இப்பொழுதாவது புரிகிறதா வெங்கட் நாகராஜ் ஜி ?
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குநம்ம ச்சாய்ஸ் எப்பவுமே ரயிலுதான். ஆனால் பயணிக்கத்தான் கிடைப்பதில்லை:(
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
நீக்குஇன்னும் சுவாரஸ்யம் கூடுகிறது. அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....
நீக்குபயணங்கள் இனிமையானவை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குஎனக்கும் உங்களைப் போல் பஸ் பயணம்தான் பிடிக்கும். நினைத்த நேரத்தில் கிளம்பி கிடைக்கிற பஸ்ஸில் பயணம் செய்வேன். ரெயிலுக்காக காத்து கிடப்பது பிடிக்காது. மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலைய சூழலை நன்றாகச் சொன்னீர்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!
நீக்குகாத்திருப்புக்குப் பின் பேருந்து விரைவாகச் சென்றது ஓரளவு நிம்மதியளித்தது! நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.
நீக்கு