இரயில் பயணங்களில் – 6
சென்ற வாரத்தில் “படுத்துக் கொண்டே சாப்பிடுவது எப்படி?” என்ற பதிவில் தில்லியிலிருந்து சென்னை வரும்போது கிடைத்த ஒரு அனுபவத்தினைப் பகிர்ந்து
கொண்டிருந்தேன்.
அதே பயணத்தில் கிடைத்த வேறொரு அனுபவம் இன்றைய பதிவில்
உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
பொதுவாகவே கணவன் – மனைவி இருவரும் வீட்டிற்குள் எப்படி
இருக்கிறார்களோ அதே போலவே பயணத்திலும் அதிலும் Public Transport என்று சொல்லப்படும் ரயில், பேருந்து பயணங்களில் கொஞ்சமாவது தங்களை
மாற்றிக் கொள்வது தான் நாகரீகம் இல்லையா? என்ன தான் வீட்டில் பூரிக்கட்டை பறந்தாலும்
வெளியே வரும்போதுமா இப்படி?
பூரிக்கட்டை மட்டும் தான் பறக்கவில்லை. மற்றபடி உருட்டல்களும், மிரட்டல்களும் அதிகமாகவே இருந்தது.
இரயில் புறப்பட்ட
நேரத்திலிருந்தே கணவன் தான் மனைவிக்குத் தேவையான ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச்
செய்ய வேண்டியிருந்தது. அப்படிச் செய்தும் அவ்வப்போது திட்டும் முறைப்பும் பரிசாக அவருக்குக் கிடைத்தது. காலையில் ஒரு ஸ்பூன் ரவா உப்புமாவும், இரண்டு ஸ்பூன் கேசரியும், இரண்டு ப்ரெட் துண்டுகள், தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் [பாக்கெட்டில்], வெண்ணை என வர, ஒவ்வொன்றாய் பிரித்துக் கொடுத்து, சாப்பிட வைத்தும், “வெண்ணை [ஒரு வேளை கணவனைத் திட்டினாரோ :)!] சரியா தடவல என்று ஒரு புகாருடன் உண்டார்.
இப்படியே தொடர்ந்து
திட்டு வாங்கினாலும், அவரது கடமையை செய்துகொண்டே தான் இருந்தார். ஒரு வேளை வீட்டுக்குப் போனதும் மண்டகப்படி அதிகமாயிடும்
என்ற கவலையோ என்னமோ? இப்படியாக பயணம் முழுவதும் “சொன்னபடி” எல்லாம் ஆடிக் கொண்டிருந்தார் அவர்!
என்னதான் கணவன்
மனைவி என்றாலும், பொது இடங்களில் வரும்போது, கணவன் மனைவியையோ, அல்லது மனைவி தனது கணவனையோ இப்படி நடத்த எண்ணுவதே இழுக்கல்லவா? எண்ணுவதே இழுக்கு எனும் போது நடத்துவது
இன்னமும் கொடுமை.
சமீபத்தில் முகப்புத்தகத்தில்
ஒரு வாசகம் படித்தேன்.
ஆண்களைப் படைத்த ஆண்டவன், ”இந்த பூமியின் எல்லா மூலைகளிலும் நல்ல, அடக்கமான பெண்கள் இருப்பார்கள். அவர்களில் ஒருவரை நீங்கள் மனைவியாகப்
பெற முடியும்” என்று அவர்களுக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்தாராம்! அதன் பின்னர் பூமியை வட்ட வடிவில் படைத்த அவர் இன்னமும்
சிரித்துக் கொண்டே இருக்கிறார்” எனும் வாசகம் தான். ஆங்கிலத்தில் இருந்த அவ்வாசகம் கீழே.
And God promised men that good and obedient wives would be found in all
corners of the world. Then he made the earth round…. and laughed and laughed
and laughed.
சமீபத்தில் ஆரம்பித்த Swachh Bharat காரணமாகவோ என்னமோ
ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் சுத்தம் செய்ய ஒரு ஆளை நியமித்திருந்தார்கள். அவரும் கர்ம ஸ்ரத்தையாக சுத்தம் செய்தபடியே
இருந்தார்.
சமீபத்தில் இப்படி சுத்தமாக இரயில் பெட்டிகளைப் பார்த்ததில்லை. ஆனாலும் எலிகள் சில சுதந்திரமாக நடமாடிக்
கொண்டிருந்தன.
ஒருவேளை சுத்தம் அவற்றுக்கும் பிடித்து விட்டதோ என்னமோ?
ஒரு வழியாக இரண்டு
மணி நேரம் தாமதமாக சென்னைக்கு சென்ட்ரலுக்கு வந்து சேர்ந்தது ராஜ்தானி விரைவு வண்டி! நான் திருச்சி செல்ல முன்பதிவு செய்திருந்த
மலைக்கோட்டை விரைவு வண்டி எழும்பூரிலிருந்து செல்வது. அது புறப்பட ஏழு நிமிடங்களே இருந்த நிலையில் என்ன தான் நடைமேடையிலிருந்து ஓட்டமாக
ஓடி, மெட்ரோ ரயில்காரர்கள் தோண்டிப் புதைத்து
வைத்திருக்கும் தடைகளைத் தாண்டி ஆட்டோ பிடித்தாலும் மலைக்கோட்டைப் பிடிக்க கனவுக் கோட்டை
மட்டுமே கட்ட முடிந்தது.
நான் எனது உடைமைகளை
எடுத்துக் கொண்டு வெளியே வர எனக்கு முன்னால் அந்தப் பெண்மணி தனது தோள்பையினை மாட்டிக்
கொண்டு முன்னால் செல்ல, பவ்யமாக ஒரு பெரிய சூட்கேஸ், பிரம்மாண்டமான ஒரு பேக், அதைத் தவிர ஒரு முதுகை மூட்டை
[Back-pack!] ஆகியவற்றைத் தூக்க முடியாது தூக்கியபடி
அவர் பின்னர் நடந்து வந்தார் அவரது கணவர். அதே சமயத்தில் எங்கிருந்தோ ஒரு பாடல் கேட்டது – “சொன்னபடி கேளு! மக்கர் பண்ணாத!” ஒரு வேளை எனக்குத் தான் பாடல் கேட்ட பிரமையோ!
மலைக்கோட்டை ரயிலைப்
பிடிக்க முடியாததால் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து திருவரங்கம்
செல்ல வேண்டிய நிலை.
அங்கு சென்ற போது கிடைத்ததும் கசப்பான அனுபவம் தான்! அது சொல்ல ஆரம்பித்தால் இப்பதிவு இன்னும்
நீண்டு விடும் அபாயம் இருப்பதால் பிறிதொரு சமயத்தில் அது பற்றி எழுதுகிறேன்.
என்ன நண்பர்களே, இன்றைய பதிவினை ரசித்தீர்களா? மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்…..
நட்புடன்
வெங்கட்
திருவரங்கத்திலிருந்து….
பொது இடங்களில் நடந்துகொள்வது தொடர்பாக பலர் இன்னும் பக்குவப்படவேண்டிய நிலையில் உள்ளார்கள். பகிர்வுக்கு நன்றி. கோயம்பேடு சென்ற அனுபவத்தை எதிர்பார்க்கிறோம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
பயண அனுபவத்தை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்..அதிலும் பல கஷ்டங்கள்... வருவது வழகம்... ஐயா.பகிர்வுக்கு நன்றி த.ம2
என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்போடு
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குஹூம், கஷ்டம் தான். கூச்சநாச்சமில்லாமல் வெளியிடங்களில் கூட இப்படியா? :(
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நீக்குபொது இடத்தில் மற்றவர்கள் தங்களை கவனிக்கிறார்களே என்ற எண்ணமே இல்லாமல் பலர் இவ்வாறு நடந்துகொள்வதை எப்போது நிறுத்துவார்களோ? இதுபோல பயணிக்கும்போது கைபேசியில் எல்லாவற்றையும் விலாவாரியாக சத்தம் போட்டு மற்றவர்களின் முக சுளிப்பையும் பெறுவதும் நட்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. பதிவை இரசித்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குஎங்கிருந்தோ பாடல்கள் கேட்க ஆரம்பித்து விட்டதா...? நல்லது... ஹிஹி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குபடித்து ரசித்தேன்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
நீக்குஅந்நோந்நியமா புருஷன் பொண்டாடி சண்டை போட்டுட்டு வந்தா அதை இப்படியா வைச்ச கண் வாங்கமா பார்த்துட்டு வருவது. அப்படி அந்நோந்நியமா வந்தது யாருமில்லா சாட்சாத் இந்த மதுரைத்தமிழந்தான் சார். நீங்கதான் வெங்கஹட் என்பது எனக்கு தெரியுமாதலால் நான் பேசமா வந்தேன் அது நீங்க மட்டுமில்லாமல் வேறு யாராவது இருந்திருந்தால் பெரிய ரகளை யாகிருக்கும்
பதிலளிநீக்குஇதை... இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
அந்த தம்பதிகள் ஈருடல் ஒருயிரா வாழ்றது உங்களுக்கு பொறுக்கலையா :)
பதிலளிநீக்குத ம 4
உனக்கேன்யா போறாம! என்று கேட்பது போல இருக்கு! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
பக்கத்துல இருக்கிறவரு, நம்மளை பத்தி வலைப்பூவுல எழுதிடுவாருன்னு அந்த பெண்மணிக்கு தெரியலை. ஒருவேளை உங்களைப் பத்தி தெரிஞ்சிருந்தா இந்த மாதிரி நடந்திருக்க மாட்டாங்களோ என்னவோ!!
பதிலளிநீக்குஆமா அந்த பாட்டு கரெக்ட்டா எப்படிங்க உங்க காதுல கேக்குது...
அதான் எனக்கும் ஒரு சந்தேகம்.... என் காதுல மட்டும் ஏன் கேட்டுது! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
பேக் எதையும் சுமக்காட்டாலும் அந்தக் கணவனாகப்பட்டவன் முதுகு வளைஞ்சு அடிமைப்பெண் வாத்யார் மாதிரி தான் நடப்பாரோங்கறது என்னோட யூகம். ஹா... ஹா.. ஹா..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.
நீக்குபேக் சுமந்ததே அவர் தானே....
மக்கர் பண்ணாம இருந்தால் 'உடம்புக்கு' நல்லதுன்னு இருக்காரோ !
பதிலளிநீக்குஇருக்கலாம்... உடம்பு நல்லா இருக்கணும் இல்லையா!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
Mugappuththaga vasam arumai
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குகொடுத்து வைத்த தம்பதியினர்..
பதிலளிநீக்குநல்வாழ்த்துக்கள்!..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.
நீக்குஉலகம் ஒரு பாடசாலை.அய்யனும் ஆத்தாவும் ஒரு கணவன் எப்படி இருக்க வேண்டும் என்றும் ஒரு மனைவி வெளியில் எப்படி இருக்கக் கூடாது என்றும் பாடம் நடத்தி இருக்கலாமோ!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்குஹஹஹ்ஹ் நல்ல தம்பதியர்! உடன் பயணிப்பவர்களுக்குத்தான் தர்மசங்கடமாக இருக்கும் இது போன்றக் காட்சிகளைக் கண்டு பயணிக்க...இது போல பல தம்பதியர், பொது இடங்களையும் வீடு போன்று கருதி நடந்து கொள்வது...அநாகரீகம் தான்....
பதிலளிநீக்குகார்னரே இல்லாத உலகத்தில் ஹஹஹ் நல்ல வாசகம்...
கார்னரே இல்லாத உலகம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்.
ரசித்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குபயண அனுபவங்களை வைத்து தொடர் கதை எழுதுங்க. நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குகதை, கவிதை, தொடர்கவிதை எல்லாம் நமக்கு வராதுங்க! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா....
பயண ஆரம்பம் .எத்தனை உற்சாகமாக இருந்திருக்கும். மழைக் கோட்டையைத் தவற விட்டது சலிப்பாக இருந்திருக்கும். கோயம்பேட்டில் என்ன நடந்ததோ/சீக்கிரம் சொல்லுங்கள் வெங்கட்,
பதிலளிநீக்குபேருந்து விஷயமும் சீக்கிரம் சொல்றேம்மா....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா..
இதுபோலத்தான் பலரும் இருக்கின்றனர்! பொது இடத்தில் கணவனின் முகவாயில் இடித்த பெண்மணிகளையும் நான் பார்த்திருக்கிறேன்!
பதிலளிநீக்குமுகவாயில் இடித்த பெண்கள் - அட டெரரா இருக்கே....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
ஒருவேளை அவர் வீட்ல எலி வெளியே புலியோ?....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.
நீக்குஅநாகரீகமான தம்பதிகள் எல்லா இடங்களில் இருக்கிறார்கள் சார் வேதனையே....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குநல்ல அனுபவம்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.
நீக்குத ம 7
பதிலளிநீக்குதமிழ் மணம் ஏழாம் வாக்கிற்கு மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.
நீக்குநமக்கு கூச்சமாக இருக்கும், இவர்கள் போடும் சண்டை! எனக்குக் கூட இந்த மாதிரி அனுபவங்கள் உண்டு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...
நீக்குசொன்னபடி கேளு... மக்கர் பண்ணாதே.... ஹா.... ஹா...
பதிலளிநீக்குஅருமை அண்ணா...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்குநல்ல அனுபவம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.
நீக்குஇப்படியும் சில பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
நீக்கு