தொகுப்புகள்

புதன், 17 பிப்ரவரி, 2016

ஓட வைத்த ஆட்டக்காரி…



ஞாயிறன்று தில்லியில் இருக்கும் பிரகதி மைதான் சென்றிருந்தேன். Destination North East எனும் நிகழ்ச்சி மூன்று நாட்களுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்று தான் கடைசி தினம் என்பதால் மதிய உணவினை சாப்பிட்டபிறகு வீட்டிலிருந்து புறப்பட்டேன். நுழைவுக் கட்டணம் 20 ரூபாய் என்றாலும், அதை DONER என அழைக்கப்படும் அமைச்சகமே தந்துவிடுவதால் நமக்குச் செலவில்லை. வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலிருந்தும் வந்து அந்தந்த மாநிலத்தில் கிடைக்கும் பொருட்களை விற்பனைக்கும், காட்சிக்கும் வைத்திருந்தார்கள். 

சென்ற வருடத்தின் மார்ச் மாதத்தில் வடகிழக்கு மாநிலங்களுக்குப் பயணம் சென்று வந்ததால் இந்த நிகழ்ச்சிக்கும் சென்று ரசிக்கும் ஆசையில் தான் அங்கே சென்றேன். ஒவ்வொரு அரங்கமாகச் சுற்றி வந்து சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டேன். வடகிழக்கு மாநிலங்களில் சிக்கிம் தவிர மற்ற மாநிலங்களுக்குப் பயணித்து விட்டதால் சிக்கிம் பயணம் செய்யத் தேவையான குறிப்புகள் அடங்கிய குறிப்புச் சீட்டுகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன். 

நீறூற்றுகளுக்கு அருகே இருந்த அரங்கிலிருந்து அதிர வைக்கும் பாட்டுச் சத்தமும் உற்சாகக் குரல்களும்  கேட்க, அவ்விடத்தினை நோக்கி நகர்ந்தேன். நடனப் போட்டி நடந்து கொண்டிருந்தது. ஹிந்தி சினிமா படப் பாடல்களுக்கு – அதிர வைக்கும் இசையுடன் Fast Beat பாடல்களுக்கு கைகளையும் கால்களையும் சுளுக்கிக் கொள்ளும் முயற்சியில் பல இளைஞர்களும் இளைஞிகளும் ஈடுபட்டிருந்தார்கள்.  சில சிறுமிகளும் ஹிந்தி சினிமா பாடல்களுக்கு நடனமாட அவர்களது நடனத்தினையும் எனது காமிராவில் சேமித்துக் கொண்டேன்.

நடனம் தொடர்ந்து கொண்டிருந்தது. வீட்டிலிருந்து புறப்பட்டு வெகுநேரம் ஆகிவிட்டது. வீடு திரும்புமும் கழிவறைப் பக்கம் போக வேண்டிய சூழல்.  அரங்கத்தின் அருகே இருக்கும் கழிவறையை நோக்கி நகர்ந்தேன்.  தோளில் காமிரா தொங்கியபடியே இருந்தது. ஆண்கள் கழிவறை தானா என ஒன்றுக்கு இருமுறை பார்த்து உறுதி செய்த பிறகு உள்ளே நுழைந்தால் பேரதிர்ச்சி…..  முன் வைத்த காலை முன்னே வைக்காது பதறியடித்துக் கொண்டு ஓட்டமாக ஓடினேன்…..  கழிவறையில் பார்த்த காட்சி என்னை ஓட வைத்தது!

அரை குறை உடை, அதீத ஒப்பனை, தகதகக்கும் ஜிகினாக்கள் என கழிவறைக் கண்ணாடியின் முன் நின்ற பெண்ணைக் கண்டதும், எனக்குள் உதறல் – தப்பித் தவறி பெண்கள் கழிவறைக்குள் புக இருந்தேனோ என்று பயம்.  அதனால் தான் அப்படி ஒரு ஓட்டம் ஓடினேன்.  கொஞ்சம் படபடப்பு அடங்கியதும் ஆண்கள் கழிவறை என்று பார்த்து தானே நுழைந்தேன் – ஆனாலும் எப்படி இந்த தவறு ஏற்பட்டது எனத் தோன்றியது.  மீண்டும் அரங்கத்திற்குள் நுழைந்து கொஞ்சம் ஆஸ்வாஸப் படுத்திக் கொள்ளும் நினைவுடன் அமர்ந்தேன்.

சிறிது நேரம் சுளுக்கு நடனங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், கழிவறையில் புகுந்திருந்தால், அதுவும் கழுத்தில் தொங்கும் காமிராவுடன் புகுந்திருந்தால் என் நிலை என்னவாகி இருக்கும் என்ற நினைவு நெஞ்சுக்குள்ளிருந்து அகல மறுத்தது! ”நல்ல வேளை உள்ளே புகுந்து அடிவாங்காது தப்பித்தோமே!” என்று என்னை நானே பாராட்டியும் கொண்டேன். 

சிறிது நேரத்தில் ஒலிபெருக்கி வழியாக அடுத்த நடனம் பற்றிய அறிவிப்பு வந்தது. India’s Got Talent நிகழ்ச்சியிலும், மேலும் பல தொலைக்காட்சி நடனப்போட்டிகளிலும் பங்கு கொண்டவர் அடுத்ததாய் நம் முன்னே நடனம் ஆடுவார் என்று அறிவுப்பு வந்ததும், அரங்கத்திலிருந்த அனைவரும் பலத்த கரகோஷம் எழுப்ப, நானும் சேர்ந்து கொண்டேன். பிரபலமானவர் போலிருக்கிறது, அவரது நடனத்தினையும் பார்த்து சில புகைப்படங்களை எடுத்தபின் வீடு திரும்பலாம் என காத்திருந்தேன். 

உள்ளே இருந்து வந்தாள் புகழ்பெற்ற அந்த ஆட்டக்காரி…….  பெயர் அலெக்ஸ்! பெண் வேஷமிட்டு ஹிந்தி சினிமாவின் பிரபலமான குத்துப் பாடல்களின் கலவைக்கு குத்தாட்டம் போட்டார் அந்த அலெக்ஸ்…. ஒப்பனை செய்து கொள்ள தகுந்த ஏற்பாடுகளை நிகழ்ச்சியை நடத்துபவர்கள் செய்யாததால் கழிவறையில் ஒப்பனை செய்து கொண்டிருந்த இவரைப் பார்த்து தான் நான் பயந்து ஓடி இருக்கிறேன்…..  என்னமா பல்பு வாங்கி இருக்கிறேன் என்ற எண்ணத்துடன் வீடு நோக்கிப் புறப்பட்டேன் – அரங்கத்திலிருந்து சற்றே தொலைவிலிருந்த கழிவறைக்குச் சென்ற பிறகு!

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

32 கருத்துகள்:

  1. ஹா.... ஹா....
    நான் படிக்கும் போதே, அவர் ஆண்தானோ... மேக்கப் போடுகிறாரோ என்று நினைத்தேன்... சரியாத்தான் இருந்தது அண்ணா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  2. நீங்கள் பயந்ததைவிடுங்கள்...உலகப்புகழ்பெற்ற ஒரு கலைஞன் ஒப்பனைக்கு கழிவறையை ஒதுக்கிய ஏற்பாட்டாளர்களை என்ன செய்வது...ஆனாலும் புகைப்படம் கொஞ்சம் பார்க்கத்தான் வைக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகப் புகழ்பெற்ற! - தொலைக்காட்சியில் புகழ்பெற்ற என்பது சரியாக இருக்கும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. என்னடா கவர்ச்சிப்படமெல்லாம் போட ஆரம்பித்துவிட்டாரே இந்த வெங்கட் என்று நினைத்தேன். உங்கள் படபடப்பைப் படிப்பவருக்கும் கடத்திவிட்டீர்கள்.

    Destination North Eastல Food Counters கிடையாதா.. அல்லது அதில் நேரம் போய்விடக்கூடாது என்று நீங்கள் அங்கு செல்லவில்லயா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Food Counters இருந்தாலும் அங்கே செல்லவில்லை. வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட பிறகு தானே சென்றேன்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. எதிர்வீட்டு மாடியில் தலைமுடியை காயவைக்க நின்ற சர்தாரை ஃபிகர்'ன்னு நினைச்சதும் நீங்கதானே ? ஹா ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சர்தாரை ஃபிகர் என நினைத்தது அறை நண்பர்! :) அது நடந்து பல வருடம் ஆகிவிட்டது மனோ!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

      நீக்கு
  6. சுவையான பதிவு. செய்திகள் படிக்க சுவாரஸ்யமாக இருந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  7. பல்பு வாங்குதல் என்றால் என்ன என்றே புரியாது இத்தனை நாட்களாகத் தவித்து இருந்த எனக்கு,
    பல்பு என்பதன் பொருளை அறியச் செய்தத் தங்கள்
    தமிழ்த் தொண்டுக்கு
    என் சிரம் தாழ்த்தி நன்றி.

    ஹி ..ஹி ...

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல்பு வாங்குவது என்றால் என்ன என்பதை நீங்களும் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

      நீக்கு
  8. அசலைவிட நகல் சிறந்தது என்று நினைக்கிறார்களோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அசலும் நகலும் - இருக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  9. அப்படிப் போடு! ஜஸ்ட் 'மிஸ்' டர் - ஆ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆட்டக்காரி உங்களையும் ரொம்ப நாள் கழிச்சு இங்கே வரவைச்சுட்டா போல!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

      நீக்கு
  10. ஹாஹாஹா ஸூப்பர் பல்பு ஜி தொடர்கிறேன்
    எழுத்தின் பான்ட் மாற்றி விட்டீர்களா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணினி மருத்துவரிடம் சென்று வந்தது. அவர் Microsoft Office 2013 போட்டு கொடுத்திருக்கிறார். அதில் தட்டச்சு செய்து ப்ளாக்கரில் சேர்க்கும் போது இந்த புதிய எழுத்துரு [விஜயா] தான் வருகிறது - ”லதா” விலிருந்து “விஜயா” வுக்கு மாற்றம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  11. சூப்பர் பல்பு!!!

    அடி வாங்கியிருந்திருக்கலாம்....:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா என்னவொரு ஆசை!

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதி!

      நீக்கு
    2. திருமதி ஆதி வெங்கட் ,எனக்கு சந்தேகமாயிருக்கு,கேமராவை செக் பண்ணுங்க ,வேற ஏதேனும் படம் எடுத்து இருக்கிறாரா என்று :)

      நீக்கு
    3. ஆஹா கிளம்பிட்டாங்கய்யா......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  12. ஹாஹா!படிக்கும் போதே இப்படித்தான் இருக்கும் என கடைசி பந்திக்கு வர முன்னரேபுரிந்து விட்டது.சுவாரஷ்யமான அனுபவம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

      நீக்கு
  13. ஹஹாஹா
    நீங்கள் ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்துச் சென்றேன் என்று சொன்னபிறகு இப்படித்தான் ஏதாவது இருக்கும் என்று புரிந்துவிட்டது அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

      நீக்கு
  14. ஹஹஹஹ் ரசித்தோம் பதிவை...ஆனால் நீங்கள் சொல்லிவந்த போதே தெரிந்துவிட்டது அது ஆண் தான் பெண் வேடமிட்டிருப்பது என்று...சில சமயங்களில் இப்படித்தான் ஆணா பெண்ணா என்று தடுமாற்றம் ஏற்படுவதுண்டு...நல்ல காலம் உங்கள் காமெரா தப்பியதே!! சிலர் பிடுங்கிக் கொண்டுவிடுவார்கள். இல்லை ஏன் என்னைப் புகைப்படம் எடுத்தாய் என்று சண்டை போடுவார்கள்..அப்புறம் எங்களுக்கெல்லாம் இப்படி அழகான புகைப்படங்கள் கிடைக்காமல் போய்விடுமே...நல்ல காலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....