தொகுப்புகள்

செவ்வாய், 8 மார்ச், 2016

சாப்பிட வாங்க: மட்டர் பூரி…..



பூரி மசாலா யாருக்குத்தான் பிடிக்காது! உங்கள் வீட்டிலும் மாதத்துக்கு ஒரு முறையாவது பூரி மசாலா செய்து சாப்பிடுவதுண்டு தானே!  சில வீடுகளில் இரண்டு முறை கூட!  எப்பப் பாரு ஒரே மாதிரியே பூரி மசாலா செஞ்சு கொடுத்தா யார் சாப்பிடறதுன்னு புலம்பியபடி சாப்பிடும் ஆண்களும், குழந்தைகளும் உண்டு! அப்படி இருப்பவர்களுக்கு இப்படி மாற்று விதத்தில் பூரி செய்து தரலாம்!  நாம் இன்று பார்க்கப் போகும் சமையல் மட்டர் பூரி!

பெங்காலிகளின் உணவு வகைகளில் ஒன்று இந்த மட்டர் பூரி. என்னுடைய பெங்காலி நண்பரிடமிருந்து ஒரு மதியம் அலைபேசியில் அழைப்பு வந்தது.  ”இன்று இரவு எங்கள் வீட்டிற்கு வர வேண்டும்”, என்று அவர் சொல்ல, அலுவலகத்தில் வேலையில் மூழ்கி இருந்த நான், வீட்டிற்குச் சென்று சாப்பிட்டு வருகிறேன் என்று சொன்னேன்.  அவரோ, எனது வீட்டிற்கு அழைப்பதே சாப்பிடத்தான்….  இன்று ஒரு ஸ்பெஷல் சமையல் – நீ வீட்டுக்கு வந்து சாப்பிட வேண்டும் என்று சொல்லி விட்டார்.  அது என்ன ஸ்பெஷல் சாப்பாடு என்று பார்ப்பதற்காகவே அன்றைக்கு அவர் வீட்டிற்குச் சென்றேன்.  அங்கே சாப்பிட்டது தான் இந்த மட்டர் பூரி. 

எனக்கு சுடச் சுட மட்டர் பூரி கொடுத்து அதற்கு தொட்டுக்கொள்ள Baby Potato கொண்டு செய்யப்பட்ட ஒரு சப்ஜியும் கொடுத்தார்கள்.  ஸ்வீட் இல்லாமல் பெங்காலி உணவா?  அதுவும் உண்டு.  இரண்டு மூன்று பூரிகள் சாப்பிடுவதற்குள், நண்பருடைய வேறு மூன்று பெங்காலி நண்பர்கள் அவருடைய வீட்டிற்கு வந்து விட்டனர்.  எனது கையில் தட்டு வைத்துக் கொண்டு மட்டர் பூரியை ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிந்தேன். தெரியாதவர்களுக்கு முன்னர் இப்படிச் சாப்பிடுவது கொஞ்சம் சங்கடமான விஷயம்.  போதும் என்று சொன்னாலும் கேட்காமல் இன்னும் சில பூரிகளைக் கொடுத்து சாப்பிட வைத்தார்கள்.

பெங்காலிகளுக்கு ஒரு பழக்கம்.  எப்போதுமே சத்தமாகத் தான் பேசுவார்கள். போலவே பெங்காலி மொழியிலேயே பேசிக் கொள்வார்கள் – அவர்கள் நடுவே பெங்காலி தெரியாத நண்பர்கள் இருந்தாலும், அவர்களைப் பற்றிய கவலை இல்லாது தொடர்ந்து பெங்காலியில் பேசுவார்கள். அதே நிலை தான் அன்று எனக்கும்!  என்னைச் சுற்றி ஐந்து பெங்காலிகள் தங்களுக்குள் பேசிக் கொள்ள நான் அங்கே அனைவருடைய முகத்தையும் மாறி மாறி பார்த்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். கொஞ்சம் கொஞ்சம் பெங்காலி எனக்கும் புரியும் என்றாலும் இப்படி ஒரே சமயத்தில் ஐந்து பேர் வேகவேகமாக அவர்கள் மொழியில் பேசினால் எங்கே புரியப் போகிறது!  எப்போது சாப்பிட்டு முடிப்போம், வீட்டுக்குக் கிளம்புவோம் என்று ஆகிவிட்டது!

இருந்தாலும், அந்த மட்டர் பூரி எனக்கும் பிடித்துவிட, நண்பரின் மனைவியிடம் அதன் செய்முறை கேட்டு வைத்துக் கொண்டேன்.  அதன் பிறகு வீட்டில் இரண்டு மூன்று முறை செய்து சாப்பிட்டேன்!  இன்றைக்கு அந்த மட்டர் பூரி எப்படி செய்வது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!

தேவையான பொருட்கள்:

கோதுமை [அல்லது] மைதா - 2 கப்
ரவை – ஒரு ஸ்பூன்
பச்சைப் பட்டாணி – 1 கப்
கொத்தமல்லி தழை – கொஞ்சம்
உப்பு – தேவைக்கேற்ப
ஓமம் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப
பெருங்காயம் – சிறிதளவு
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
சமையல் எண்ணை – பொரிக்க….

எப்படி செய்யணும் மாமு:

பச்சைப்பட்டாணி, ஓமம், இஞ்சி, கொத்தமல்லி தழை, பெருங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ள வேண்டும். மைதா/கோதுமை  மாவினை, தேவையான உப்பு, இரண்டு ஸ்பூன் எண்ணை, ஒரு ஸ்பூன் ரவை [பூரி மொறுமொறுவென இருக்க] ஆகியவற்றை தேவையான அளவு வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு பிசைந்து கொள்ளவும்.  அரைத்து வைத்த விழுதினை மாவிலேயே போட்டு பிசைந்து கொண்டாலும் சரி, இல்லை எனில் தனியாக வைத்துக் கொண்டு பூரிகளை இட்டு, பின் ஸ்டஃப் செய்தாலும் சரி – அது உங்கள் இஷ்டம்.  நான் மாவிலேயே கலந்து விடுவேன் – அது தான் எனக்கு வசதி!  மாவு தயார் செய்து சிறிது நேரம் அப்படியே வைத்துவிடுங்கள்.  பூரிக்குத் தொட்டுக்கொள்ள ஏதாவது சப்ஜி செய்ய தயார் செய்து கொள்ளுங்கள்.  பொதுவாக மட்டர் பூரியோடு உருளைக் கிழங்கு சப்ஜி தான் சாப்பிடுவார்கள் என்றாலும், சப்ஜி உங்கள் இஷ்டம்.

பூரி செய்ய மாவு தயாராக இருக்கிறது.  சிறிய சிறிய உருண்டைகளாக்கி, அவற்றை  [b]பேலன் [Famous பூரிக் கட்டையைத் தான் ஹிந்தியில் [b]பேலன் என்று அழைக்கிறார்கள்!] கொண்டு சிறிய சிறிய பூரிகளாக இட்டுக் கொள்ளுங்கள்.  கனமான அடி கொண்ட வாணலியில் எண்ணையைச் சூடாக்கி பூரிகளைப் பொரித்து எடுங்கள்.  சுடச் சுட பூரியும், தொட்டுக்கொள்ள Baby Potato சப்ஜியும் நன்றாக இருக்கும்.  நீங்களும் செய்து, சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லுங்கள் – உங்கள் அனுபவங்களை!

மீண்டும் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

42 கருத்துகள்:

  1. சப்பாத்தி செய்யும்போது மாவில் இப்படி இஷ்டம்போல கலந்து செய்ததுண்டு. பூரியில் முயற்சித்ததில்லை. ஒருமுறை செய்து விடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்து பாருங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. மட்டர் பூரி தங்களின் படமே சாப்பிடத் தூண்டுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. இந்த பூரியினை - இங்கே குவைத்தில் சாப்பிட்டிருக்கின்றேன்..

    செய்முறையுடன் பதிவும் - பூரியும் அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  4. மட்டர் பூரி செய்முறை சுலபமாகத்தான் இருக்கு. இப்போ சப்ஜி பதிவு எங்க இருக்குன்னு பார்க்கணும். இரண்டும் சேர்ந்து சுலபமாக செய்யமுடியுமா என்றும் யோசிக்கணும். படத்தைப் பார்த்தால் ஸ்டஃப்டு மட்டர் பூரி மாதிரித்தான் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. இப்பவே சாப்பிடனும் அப்படின்னு தோனுது....செய்து பார்க்கிறேன் சகோ நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

      நீக்கு
  6. ஹலோ..போதும் ..படமும் வரியும் ரொம்ப பசிய தூண்டுதுங்க..
    ம்ம்..இங்க அதிகபட்சம் மசாலா பூரிதான் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார்....

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

      நீக்கு
  8. இங்கு வரும் போது செய்து தருவீர்கள் என்று நம்புகிறேன்...:)) சாப்பிட ஆவலுடன் காத்திருக்கிறோம்...:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சரி!

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதி வெங்கட்.

      நீக்கு
    2. ஹஹ்ஹஹ ஆதி இது நல்லாருக்கே!!! அப்படியே பிட்டைப் போட்டுட்டீங்க ஆதி...

      கீதா

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  9. வீட்டுல பூரியில் எண்ணெய் ஒட்டாமல் பண்ணி தருவாங்க, இங்கே அதுக்கெல்லாம் நேரமில்லை...!

    பெண்கள் தினமும் அதுவுமா ஸ்பெஷல் பதிவு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

      நீக்கு
  10. எப்படி இருக்கும் என்று ஓரளவு யூகிக்க முடிகிறது பெங்காலிகள் கடுகு எண்ணைதானே உபயோகிப்பார்கள் அது பிடிக்காது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெங்காலிகள் மட்டுமல்ல, வட இந்தியர்களும் கடுகு எண்ணை தான் பயன்படுத்துவார்கள். பழகி விட்டது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  11. ஆதி வெங்கட், போட்டாங்களே ஒரு போடு! ஹாஹாஹாஹா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  12. இந்த மடர் பூரி மாதிரியே எல்லாப் பருப்புக்களிலும் செய்வாங்க ராஜஸ்தானிலே தால் பூரி என்று சொல்வார்கள். அதிகம் பாசிப்பருப்புப் பயன்படுத்துவாங்க! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  13. சாப்பிடக் கூப்பிட்டதும் உடனே வந்துட்டேன். மத்தது இனிமேல் தான் பார்க்கணும். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  14. படமும் பதிவும் பசியை தூண்டுகின்றன.
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

      நீக்கு
  15. புகைப்படமே அழகாக இருக்கின்றது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  16. மட்டர் பூரி மிக அருமை. படம் சூப்பர். இங்க குழந்தைகளுக்குச் செய்து தருகிறேன் மிக நன்றி.
    வெங்கட். எல்லா ஊர்க்காரர்களும் இப்படித்தான். நம் அண்டை மானிலத்தவர்கள் அதற்கு ரொம்ப புகழ் பெற்றவர்கள். குட்டனும் மோளேயுமாக சிரிப்பலை ஓட இனிய உலகம் அவர்களது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா..

      நீக்கு
  17. துளசி: பூரிகள் எல்லாம் வீட்டில் செய்வது ரொம்ம்ம்ம்ம்ம்ப அபூர்வம். வீட்டில் கேரள உணவுதான். .ம்ம் நன்றாக இருக்கும் போல் உள்ளது

    கீதா: வெங்கட் ஜி இதை பெங்காலி கச்சோரி என்றும் சொல்லுவதாக நெட்டில் பார்த்த நினைவு. வீட்டில் செய்வதுண்டு ஸ்டஃப் செய்துதான். உருளைக் கிழங்கு சப்ஜிதான்....நீங்கள் செய்வது போல் கலந்து செய்து பார்க்க வேண்டும். உருளைக் கிழங்கை வேகவைத்து மாவுடன் கலந்து செய்ததுண்டு. அது போல காரட் துருவிச் சேர்த்து, கொத்தமல்லி, ஜீரகம், புதினா என்று மாவில் கலந்து செய்ததுண்டு. வெது வெதுப்பான நீரில் பிசைந்தது இல்லை. உங்கள் குறிப்பையும் நோட் செய்து கொண்டேன் ஜி..
    அன்று இங்கு சென்னையில் ஒரு பார்ட்டி குஜராத்தி உணவகத்தில். அங்கு ஆலு பூரி என்று இருந்தது தாலி மெனுவில்....எல்லோரும் அது வித்தியாசமாக உருளைக்கிழங்கு கலந்து இருக்கும் என்று நினைத்தார்கள். பின்னர் பார்த்தால் பூரியுடன் ஆலு சப்ஜி. இவர்கள் சப்ஜியிலும் ஸ்வீட் போடுவார்களே...தால் எல்லாமே அப்படித்தான் இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  18. பட்டாணி பூரியை நிச்சயம் வீட்டில் செய் சொல்லி சாப்பிட்டுப்பார்த்திட வேண்டியதுதான். தகவலுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  19. மட்டர் பூரி பார்க்கும் போதே சாப்பிடணும்ன்னு தோணுதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....